Pages

Thursday, September 10, 2020

10 th std samacheer kalvi tamil (lesson4 to 6) -new syllabus

 செயற்கை நுண்ணறிவு

  1. 1980 தனிநபர் கணிணி வளர்ச்சி
  2. Natural language generation software(இயல்பான மொழிநடையை உருவாக்குதல்) இதற்கு வேர்டுஸ்மித் (எழுத்தாளி) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
  3. தகவல் கொடுத்தால் போதும் வேர்டுஸ்மித் அழகான கட்டுரையை சில நொடிகளில் உருவாக்கிவிடும்
  4. செயற்கை நுண்ணறிவு என்பது ஓரு மென்பொருள் அல்லது கணிணி செயல்திட்ட வரைவு(computer program) எனலாம்
  5. செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்துக்கொள்ளவும் முடியும்.
  6. மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு
  7. ”இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்”  - பாரதியார்
  8. கானொலிகளை தொகுக்கும் மென்பொருள்களில் (video editing) இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.இதன் மூலம் நேரம் வீணாவது தவிக்கப்படுகிறது
  9. இந்தியாவின் பெரிய வங்கி ஆகிய state bank of india (ELA-ELECTRONIC LIVE ASSISTANT) என்னும் உரையாடு மென்பொருளை(chatbot) உருவாக்கியிருகிறது
  10. 1விநாடிக்கு 10,000  வாடிக்கையாளர்களுடன் உரையாடும்
  11. செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் தரவு அறிவியலாளர்களின்(data scientists) இயந்திர கற்றல் வல்லுநர்கள் முதலான பல தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவையும் பெருகி வருகிறது
  12. கல்வி அறிவுடன் மின்னனு கல்வியறிவையும் (digital literacy) மின்னனு சந்தைப்படுத்துதலையும் (digital marketing)அறிந்து இருப்பது வணிகத்துல் வெற்றியடைய உதவுகிறது
  13. 2016 ஆம் ஆண்டு IBM நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணிணி (வாட்சன்) சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுப்பிடித்தது
  14. சினாவில் 50க்கும் மேற்ப்பட்ட மருத்துவமனைகள் இயந்திர மனிதர்களை பணிக்கு அமர்த்தியுள்ளன
  15. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர் (மூன்று வகை ரோப்போக்கள் வீட்டுக்கு, வணிகத்துக்கு,படிப்புக்கு)
  16. சீன நாட்டில் காண்டன் நகருக்கு 500 கல் வடக்கே சூவன்செள என்னும் துறைமுக நகர் உள்ளது.அக்காலத்தில் தமிழர்கள் வணிகம் செய்தனர்.எனவே சிவன் கோயில் கட்டப்பட்டது.(சீன பேரரசரான (குப்லாய்சான்).சோழர்கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  17. Book Back
  18. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது? இலா

பெருமாள் திருமொழி

பொருள்

  1. சுடினும்- சுட்டாலும்,மாளாத- தீராத
  2. மாயம் – விளையாட்டு

notes

  1. வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது
  2. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப்பாடுகிறார்
  3. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்விய பிரப்ந்தத்தில் 5 ஆம் திருமொழியாக உள்ளது
  4. 105 பாடல்கள் உள்ளன.
  5. இதனை பாடியவர் குலசேகராழ்வார்
  6. காலம் 8 ஆம் நூற்றாண்டு
  7. குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழியில் உவமை அணி பயின்று வந்துள்ளது
Book Back
1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது? இறைவனிடம் குலசேகராழ்வார்

பரிபாடல்

பொருள்

  1. விசும்பு _ வானம்
  2.  ஊழி _ யகம்  - ஊழ _ முறை 
  3. தண்பெயல் _ குளிர்ந்த மழை
  4. ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கி கிடந்த
  5. பீடு- சிறப்பு
  6. ஈண்டி – செறிந்து திரண்டு

இலக்கணக்குறிப்பு

  1. ஊழ் ஊழ் – அடுக்குத்தொடர்
  2. வளர்வானம் – வினைத்தொகை
  3. செந்தீ-   பண்புத்தொகை
  4. வாரர் – ஈறுகெட்ட எதிர் மறை பெயரெச்சம்

notes

  1. அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள்  உள்ளன என நிருபித்தார்
  2. 1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இதை கூறி இருக்கிறார்                                                                                                           “அண்ட பகுதியின் உண்டைப் பிறக்கம்                                                               சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”
  3. பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
  4. “விசும்பில் ஊழி ஊழ் செல்லக்  ………” – கீரந்தையார்
  5. ஓங்கு பரிபாடல் என்னும் புகழுடையது
  6. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூலாகும்
  7. உரையாசிரியர்கள் இதில் 70 பாடல்கள் உள்ளதாக கூறியுள்ளனர்.ஆனால் 24 பாடல்களே கிடைத்துள்ளன
  8. 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின்  வாழ்க்கை முறை,சமூக உறவு, அறிவாற்றல் இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை சங்க இலக்கியம் மூலம் அறியலாம்

விண்ணை தாண்டிய தன்னம்பிக்கை

  1. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
  2. 10 காட்சி கூடங்கள் உள்ளன
  3. பரிணாம வளர்ச்சி பூங்கா , புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா உள்ளன
  4. இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்கு தான் உள்ளது
  5. 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த கோளரங்கம்
  6. மாற்றத்திற்க்கு ஏற்பத் தகவமைத்துக்                                                            கொள்ளும் திறனே புத்திகூர்மை”—ஸ்டீபன் ஹாக்கிங்
  7. “அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல.அது அறிவின் மாயையே” - ஸ்டீபன் ஹாக்கிங்
  8. தற்கால ஐன்ஸ்டைன் ஸ்டீபன் ஹாக்கிங்
  9. ஸ்டீபன் ஹாக்கிங் ஆராய்ச்சி முடிவு “ஹாக்கிங் கதிர்வீச்சு” என்று அழைக்கப்படுகிறது
  10. ஐன்ஸ்டைன்,நியுட்டன் ஸ்டீபன் ஹாக்கிங் கின் முன்னோடிகள்
  11. நியூட்டன் -> கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ->கணக்கியல் துறையின் “லூகாசியன் பேராசிரியர்” என்ற மதிப்பு மிக்க பதவி வகித்தார்
  12. ஸ்டீபன் ஹாக்கிங் கும் அதே பதவி வகித்திருக்கிறார்
  13. ஐன்ஸ்டன் ஈர்பலைகள் கோட்பாடு E=MC2
  14. ஸ்டீபன் ஹாக்கிங் கோட்பாடாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டார். பொதுமக்களுக்கும் புரியும் வண்ணம் இருந்தது
  15. ஸ்டீபன் ஹாக்கிங் விருதுகள்                                                                   1.அமெரிக்கவின் உயரிய விருது அதிபர் விருது(presidential medal of freedom)       2. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது                                                                                         3.உல்ஃப் விருது(wolf foundation prize)                                                                                 4.காப்ளி பதக்கம்(Copley medal)                                                                                        5.அடிப்படை இயற்பியல் பரிசு(fundamental physics prize)
  16. 2012->பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தொடக்க விழா  நாயகர் என்ற சிறப்பை பெற்றார்
  17. அடுத்த தலைமுறை (The next generation),பெருவெடிப்பு கொள்கை (The bigbang theory) உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார்
  18. தனது 60 வது பிறந்த நாளை சூடான காற்று நிரம்பிய பலூனில் பறந்து கொண்டாடினார்
  19. போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்
  20. அறிவியல் உலகில் மட்டுமின்றி சமூக உளவியல் அடிப்படையிலும் தன்ன்ம்பிக்கையின் சிகரமாக விளங்கினார் ஸ்டீபன் ஹாக்கிங்
  21. அறிவுத் தேடலில் உடலில் உள்ள தடைகளை தகிர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்
  22. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் 40 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
  23. 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை பற்றி கூறியுள்ளார்
  24. ஒரு  கோடி படிகளுக்கு மேல் விற்பனையானது
  25. இப்பேரண்டம் பெருவெடிப்புக் கொள்கை மூலம் உருவானது என்பதை கணிதத்தின் மூலமாக விளக்கினார்
  26. கடவுள் ஒன்று இல்லை என்று கூறினார்
  27. ஜான்வீலர் என்பவர் தான் முதன் முதலில் கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் குறிப்பிட்டார்
  28. ஸ்டீபன் ஹாக்கிங்-கலிலியோ வின் நினைவு நாளில் பிறந்தார்
  29. ஸ்டீபன் ஹாக்கிங்- ஐன்ஸ்டைனின் பிறந்த  நாளில் மறைந்தார்
  30. “தலவிதி தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என நம்புபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு வ்ருகிறது” ஸ்டீபன் ஹாக்கிங்
  31. ”கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை                                                                 திரு மா வியல் நகர்க் கருவூர் முந்துறை” அகநானூறு                                             (கரூர் மாவட்டத்தின் கருவூர்(கரூர்)

  மொழிபெயர்ப்பு கல்வி

  1. “ஒரு மொழியில் உண்ர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு “ மணவை முஸ்தபா
  2. “உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்க்கும் மொழிப்பெயர்ப்பும் ஒரு காரணமாகும்” மு.கு.ஜகந்நாதர்
  3. “மொழிப்பெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்”
  4. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் ,மதுராபுரிச் சங்கம் வைத்தும்” – சின்னமனூர் செப்பேட்டு குறிப்பு
  5. வில்லிபாரதம், சிவகசிந்தாமணி,கம்பராமயணம் வடமொழி கதைகளை தழுவி படைக்கப்பட்டவை
  6. ஆங்கிலேய ஆட்சியில்  மொழிப்பெயர்ப்பு சாகத்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம்(NBT),தென்னிந்திய புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.
  7. ஜப்பான் (மொகு சாஸ்டு) என்பதன் பொருள் விடைத்தர அவகாசம் வேண்டும்
  8. ஜெர்மன் மொழியில் மொழிப்பெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர் . அந்நாட்டு படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்
  9. 18ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல  மொழிப்பெயர்க்கப்பட்டன
  10. ஆங்கிலேய வருகைக்கு பின் ஆங்கில நூல்களும் பிற ஐரோப்பிய நூல்களும் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டன
  11. தமிழ் நூல்களும் பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டன (திருக்குறள்)
  12. ரவிந்திரநாத் தாகூர் தன் கவிதை தொகுப்பான கீதாஞ்சலியை தானே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது
  13. ஒரு நாட்டின் மொழிப்பெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையை கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும், அறிவையும் மதிப்பிடுவார்கள்
  14. ஜெர்மனியில் ஒர்  ஆண்டில் பிற மொழிகளில் இருந்து 5000 நூல்கள் வரை மொழிப்பெயர்க்கப்படுகின்றன
  15. தமிழ் நூல்கள் அதிகமாக பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுகின்றன (முதலில் ஆங்கிலம்,பின்பு மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்ய மொழி, வங்காளம், மராத்தி)
  16. சாகித்திய அகாதெமி நிறுவனமும், தேசிய புத்தக நிறுவனமும் பல மொழிகளில் இருந்து நல்ல படைப்புகளை எல்லா இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்த்துள்ளனர்
  17. “”காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்                                          கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி                                                           பேசி மகிழ் நிலை வேண்டும்”—குலோத்துங்கன்
  18. “சென்றீடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” - - பாரதி
  19. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”—பாரதி
  20. ராகுல் சாங்கிருத்யாயன் 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையில் இருந்து பொழுது “ வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை எழுதினார்
    1949- இந்நூலை கணமுத்தையா தமிழில் மொழிப்பெயர்த்தார்
    2016- Dr.N.ஸ்ரீதர் மொழிப்பெயர்ப்பு
    2016- முத்து மீனாட்சி மொழிப்பெயர்ப்பு
     2018- யூமா வாசுகி மொழிப்பெயர்ப்பு

 பிரான்சு தேசிய நூற்கூடத்தில் (Biliothque nationale) ஏறக்குறைய 1000 பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன.இந்தியாவில் இல்லாதவை கூட இங்கு இருக்கின்றன(இன்னும் அச்சிடப்படாத “ மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்,சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்)

  1. Rail sleeper- தொடர்வண்டியின் தண்டவாளத்தில் உள்ள குறுக்குகட்டை
  2. Camel- வடம்(கயிறு),ஒட்டகம்
  3. Underground drainage- புதைசாக்கடை
  4.  Tele- தொலை
  5. Telegraph- தொலைvஅரி
  6. Television- தொலைக்காட்சி
  7. Telephone- தொலைபேசி
  8. Telescope- தொலைநோக்கி
  9. Telemetry- தொலைஅளவியல்
  10. Transcribe-படியெடுத்தல்
  11. Transfer- மாறுதல்    
  12. Transform- உருமாற்றுதல்
  13. Transact- செயல்படுத்துதல்

பாரதியின் மொழிப்பெயர்ப்பு

  1. Exhibition- காட்சி,பொருட்காட்சி
  2. East indian railways- இருப்புப் பாதை
  3. Revolution- புரட்சி
  4. Strike- வேலை நிறுத்தம், தொழில் நிறுத்தம்
Book Back
1.‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி  சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

நிதிவெண்பா

பொருள்

  1. திருத்தி- சீராக்கி
  2. மருளை- மயக்கம்
  3. தெருளை – தெளிவு

ஆசிரியர் குறிப்பு

  1. சதவதானத்தில் சிறத்து விளங்கிய செய்குதம்பி பாவலர்
  2. சதவதானம்-(ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே ஆகும்)
  3. காலம்- 1874-1950
  4. ஊர்- கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊர்
  5. சிறப்பு- 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்
  6.  சிறாபுராணத்திற்க்கு உரை எழுதியுள்ளார்
  7. (1970 மார்ச் 10 – சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவனி” என்று பாராட்டப் பெற்றார்
  8. இவரது நினைவில் இடலாக்குடியில் மணிமண்டபமும், பள்ளியிம் உள்ளது
  9. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
Book Back
1. அருந்துணை என்பதைப் பிரித்தால் அருமை + துணை
2. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
– என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது? கல்வி

திருவிளையாடற் புராணம்

  1. அரசுக்குறிய முரசு கட்டிலில் கண்ணயட்ந்தார் – மோசிகீரனார்
  2. கவரி விசிய மன்னன் – பெருஞ்சேரல் இரும்பொறை
  3. மாசற வசித்த வார்புறு வள்பின்” என்று பா மழை பொழிந்தார் மோசிகீரனார்
  4. திருவிளையாடற் புராணம் சிலப்பதிகாரம் காலம் தொட்டு இயற்றப்பட்டு வந்தாலும் பரஞ்ஜோதி முனிவர் இயற்றியதே சிறப்பு
  5. இந்நூல் காண்டங்களை கொண்டது(மதுரைக்காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய் காண்டம்), 64 படலங்கள் கொண்டது
  6. பரஞ்ஜோதி முனிவர் திருமறைக்காட்டில் வேதாரண்யத்தில் பிறந்தார்(17 ஆம் நூற்றாண்டு)
  7. பரஞ்ஜோதி முனிவர் சிவபக்தி மிக்கவர்
  8. நூல்கள்- வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
Book Back
1. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் மன்னன்  இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் இறைவன்

 

புதிய நம்பிக்கை

  1. அமெரிக்க கறுப்பின பெண்மணி “ மேரி மெக்ஸியோட்அ பெத்யூன்” இவரின் வாழ்க்கையே “உனக்கு படிக்க தெரியாது” என்ற தலைப்பில் நூலாக படைத்துள்ளார்
  2. கமலாலயன் – இயற்பெயர் ( வே.குணசேகரன்)
  3. வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்

நிகழ்கலை

கரகாட்டம்

  1. பித்தளை சொம்பு அல்லது சிறிய குடத்தை தலையில் வைத்து மண் அல்லது பச்சரிசி நிறப்பி நடுவில் கிளி பொம்மை வைத்துஆடுவது
  2. “நீரற வறியாக் கரகத்து”- புறநானூறு
  3. சிலப்பதிகாரத்தில்  மாதவி  ஆடிய 11 வகை ஆடலில் குடக்கூத்து ஒன்று . இதுவே கரகாட்டத்திற்க்கு அடிப்படை
  4. தமிழகத்தில் மதுரை,திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

மயிலாட்டம்

  1. நையாண்டி மேளம் இசைக்க மயில் வடிவில் உள்ள கூட்டுக்குள் உருவர் ஆடுவது
  2. இது கரகாட்டத்தின் துனையாட்டமாகும்

காவடியாட்டம்

  1. கா- பாரம்தாங்கும் கோல்
  2. காவடியின் அமைப்புக்கு ஏற்ப மச்சக்காவடி,சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்காவடி, பறவைக்காவடி என்று அவற்றை அழைக்கின்றனர்
  3. இலங்கை. மலேசியா உட்பட தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் காவடி ஆடப்படுகிறது

ஒயிலாட்டம்

  1. பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதெ வழக்கில் உள்ளது
  2. ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளையர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு
  3. இந்த ஆட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம்,தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன

தேவராட்டம்

  1. வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என்று பொருள் கொள்ளப்படுகிறது
  2. ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது
  3. உறுமி என்று அழைக்கப்படும்
  4. தேவதுந்துபி இந்த ஆட்டத்திற்க்குரிய இசைக்கருவி
  5. 8 -13 கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்

சேர்வையாட்டம்

ஆட்டக்கலைஞர்கள் சேவைபலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்து கொண்டே ஆடுகின்றனர்

பொய்க்கால் குதிரையாட்டம்

  1. போல செய்தல் பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலைகளில் இதுவும் ஒன்று
  2. காலில் கட்டை கட்டி குதிரை போன்று கூட்டை உடம்பில் அணிந்து அரசன், அரசி போன்று வேடம் இட்டு ஆடுவது
  3. இது மராட்டியர் காலத்தில் தமிழகத்திற்க்கு வந்ததாக கூறப்படுகிறது
  4. இதற்கு பாடல்கள் இல்லை. நையாண்டி மேளமும், நாதசுரமும் இசைக்கப்படுகின்றன
  5. இராஜஸ்தானில் கச்சிக்கொடி என்றும், கேரளத்தில் குதிரைக்கிளி என்றும் அழைக்கப்படுகிறது

தப்பு ஆட்டம்

  1. தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள தோற்கருவி
  2. தப்பு இசைத்து கொண்டே இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்
  3. இவ்வாட்டம் தப்பாட்டம்,தப்பட்டை,தப்பு என்று அழைக்கப்படுகிறது
  4. கோவில் திருவிழா,திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சியில் ஆடப்படுகிறது
  5. இதனை  பறை என்றும் அழைப்பர்

”தகக தகதகக தந்தத்த  தந்தகக

 என்று தாளம்

 பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக” – திருப்புகழ்(அருணகிரிநாதர்)

புலி ஆட்டம்

  1. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலை
  2. பாட்டும் வசனமும் இல்லை
  3. தப்பு மேளத்திற்கு ஏற்ப ஒருவரோ அல்லது இருவரோ ஆடுவர்

தெருக்கூத்து

  1. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்படும் கலை
  2. இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்
  3. திரெளபதி அம்மன் வழிப்பாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது
  4. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படும் கூத்து
  5. இதனை கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன

தோற்பாவைக்கூத்து

  1. தோலால் ஆன பாவையை கொண்டு நிகழ்த்தும் கலை
  2. தோலில் செய்த வரைப்படங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி கதைக்கேற்ப மேலும், கீழும், பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது
  3. இதில் இசை, ஒவியம், நடனம், நாடகம். பலக்குரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன
  4. சங்ககாலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை பாவை பற்றின குறிப்பு தமிழ் இலக்கியங்களில் உள்ளது
  5. திருக்குறளில் மரப்பாவை பற்றிய குறிப்பு உள்ளது
  6. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக்கூத்து இடம் பெற்றுள்ளன
  7.   தோற்பாவைக்கூத்து கையுறைப்பாவைக்கூத்து . பொம்மலாட்டம் என்பனவாக மாற்றம் பெற்றுள்ளது

ஆசிரியர்

  1. கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு
  2. நாடக கலையை மீட்டெடுப்பதே  தமது குறிக்கோளாக கருதினார்
  3. தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக்கினார்
  4. இந்திய அரசின் தாமரைத்திரு  விருதையும், தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்
  5. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில் “இராச சோழன் தெரு”  என்பது இன்றும் உள்ளது
Book Back
1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

பூத்தொடுத்தல்

”இந்த பூவை தொடுப்பது எப்படி?........”

ஆசிரியர்

  1. கவிஞர் உமாமகேஸ்வரி-மதுரை மாவட்டம்
  2. கவிதை, சிறுகதை, புதினம் என பல படைத்துள்ளார்
Book Back
1. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?தளரப் பிணைத்தால்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

பொருள்

  1. பண்டி-வயிறு
  2. அசும்பிய – ஒளிவிசுகிற
  3. முச்சி- தலையுச்சிக்கொண்டை

செங்கீரைப்பருவம்

செங்கீரை காற்றில் ஆடுவது போன்று 5-6 மாதங்களில் குழந்தையின் தலை மென்மையாக ஆடும்

ஆசிரியர்

  1. குமரகுருபரர்
  2. காலம்- 17 ஆம் நூற்றாண்டு
  3. அறிந்த மொழிகள்- தமிழ், வடமொழி, இந்துஸ்தானி
  4. நூல்கள்- கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலா  வல்லிமாலை, நிதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று

பிள்ளைத்தமிழ் -இறைவனையோ,தலைவனையோ, அரசனையோ பாட்டுடை  தலைவராக கொண்டு அவரை குழந்தையாக கருதி பாடுவர்

பத்து பருவங்கள், பருவத்திற்க்கு பத்து பாடல்கள் என 100 பாடல்கள் கொண்டது

ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகை உண்டு

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு,செங்கீரை, தால், சப்பானி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு,செங்கீரை, தால், சப்பானி, முத்தம், வருகை, அம்புலி,கழங்கு, அம்மானை, ஊசல்

கம்பராமாயணம்

ஆசிரியர்

  1. கம்பர்
  2. இந்நூலுக்கு “இராமவதாரம்” என பெயர் இட்டார்
  3. 6 காண்டங்களை உடையது
  4. புகழ்- கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுகட்டுத்தறியும் கவிபாடும் , விருத்தம் என்னும் ஒண்பாவிற்க்கு உயர் கம்பன்
  5. ஊர்- சோழநாடு- திருவழந்தூர்
  6. சிறப்பு- திருவெண்ணைய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்
  7. நூல்கள்- சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர் எழுபது, சிலை எழுபது
Book Back
1. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? அங்கு வறுமை இல்லாததால்

பாயச்சல்

நூல்குறிப்பு

“தக்கையின் மீது நான்கு கண்கள்” சிறுகதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது

ஆசிரியர்

  1. சா.கந்தசாமி
  2. மயிலாடுதுறை நாகப்பட்டின மாவட்டம்
  3. சாயாவனம்- புதினம் மூலம் புகழ் பெற்றார்
  4. விசாரனை கமிஷன் புதினம்(சாகத்திய அகாதெமி விருது)
  5. சுடுமண் சிலைகள் குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்
  6. 150 மேற்ப்பட்ட  சிறுகதைகள்(தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி),11 மேற்ப்பட்ட புதினங்கள் எழுதியுள்ளார்
  7. “ஓங்கு இரும் பரப்பின்                                                                                                               வங்க ஈட்டத்து தொண்டியோர்”—சிலப்பதிகாரம்                         (இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி)

No comments:

Post a Comment