group-4 மூதுரை
“மன்னனும்
மாசற்க் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின்
கற்றோன் சிறப்புடையந் மன்னற்குத்
தந்தேசம்
அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு
கண்ட
இடமெல்லாம் சிறப்பு” ஒளவையார்
பொருள்
- மாசற- குறை இல்லாமல்
- சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம்- நாடு
ஆசிரியர்
குறிப்பு
- ஒளவையார்
- நூல்- ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி
- மூதுரை- மூத்தோர் கூறும் அறிவுரை
- 31 பாடல்கள் உள்ளன
Book Back
- மாணவர்கள் நூல்களை மாசற கற்க வேண்டும்
- இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இடம் + எல்லாம்
- மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மாசு + அற
- குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் குற்றமில்லாதவர்
- சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் சிறப்புடையார்
group-4 துன்பம் வெல்லும் கல்வி
”ஏட்டில்
படித்த்தோடு இருந்துவிடாதே- நீ
ஏன்
படித்தோம் என்பதையும் மறந்துவிடாதெ” – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பொருள்
- தூற்றும்படி- இகழும்படி
- மாற்றார்- மற்றவர்
- நெறி- வழி
- மூத்தோர்- பெரியோர்
- மேதைகள்- அறிஞர்கள்
- வற்றாமல்- அழியாமல்
ஆசிரியர்
குறிப்பு
எளிய
தமிழில் சமூக சீர்த்திருத்த கருத்துகளை வலியுறுத்தி பாடியவர் பட்டுகோட்டை கல்யாண் சுந்தரம்
(மக்கள் கவிஞர்)
Book Back
- மாணவர்கள் பிறர் தூற்றும்படி நடக்க கூடாது
- நாம் மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்
- கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கை + பொருள்
- மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் மானம்மில்லா
group-4 கல்வி கண் திறந்தவர்(காமராஜர்)
- 1 மைல் தூரத்தில் ஆரம்ப பள்ளியும், 3 மைல் தூரத்தில் நடுநிலை பள்ளியும், 5 மைல் தூரத்தில் உயர் நிலை பள்ளியும் இருக்க வேண்டும் என்றார்
- ஆடு மேய்க்கும் சிறுவர்களை பள்ளிகூடம் செல்ல வழி செய்தவர்
- குழந்தைகள் பள்ளி செல்வதற்காக நீண்ட தூரம் நடக்க கூடாது என்று எண்ணியவர்
- பள்ளிக்குக் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர்
- கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளி கூடங்களை திறக்க செய்தவர்
- தந்தை பெரியாரால் “ கல்வி கண் திறந்தவர்” என பாரட்ட பெற்றவர்
- சிறப்பு பெயர்- பெருந்தலைவர், கருப்புகாந்தி, படிக்காத மேதை, ஏழைப்பங்காளர், கர்மவீரர், தலைவர்களை உருவாக்குபவர்
சிறப்பு
- இலவச கட்டாய கல்வி
- மத்திய உணவு
- சீருடை
- பள்ளி சீரமைப்பு மாநாடு
- பல கிளை நூலகங்கள்
- புதிதாக பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கினார்
- கல்வி புரட்சிக்கு வித்திட்டவர்
- காமரசருக்கு அரசு செய்த சிறப்பு
- மதுரை பல்கலைகழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது
- நடுவண் அரசு 1976 இல் பாரதரத்னா விருது வழங்கியது
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விஎஉதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
- சென்னையி உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.200 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
- பள்ளிகூடம்
செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ஊரில் பள்ளிகூடம் இல்லை
- பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பசி + இன்றி
- படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது படிப்பு+அறிவு
- காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் காட்டாறு
நூலகம் நோக்கி
- ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம்
- முதலாவது சீனாவில் உள்ளது
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- தரைத் தளம் மற்றும் எட்டு அடுக்குகளை கொண்டது
- மொத்த பரப்பு 8 ஏக்கர்
- தரை தளம்- சொந்த நூல் பதிப்பகம்,பிரெய்லி நூல்கள்
- முதல் தளம்- குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
- இரண்டாவது தளம்- தமிழ் நூல்கள்
- மூன்றாவது தளம்- கணிணி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
- நான்காவது தளம்- பொருளியல், சட்டம்,வணிகவியல், கல்வி
- ஐந்தாவது தளம்- கணிதம், அறிவியல், மருத்துவம்
- ஆறாவது தளம்- பொறியியல்,வேளாண்மை, திரைப்பட கலை
- ஏழாவது தளம்- வரலாறு, சுற்றுலா
- எட்டாவது தளம்- நூலகத்தின் நிர்வாக பிரிவு
- ”இந்திய நூலக அறிவியலின் தந்தை” இரா. அரங்கநாதன்(நூலக விதிகளை உருவாக்கியவர்)
- நூலகத்தில் படித்து உயர்ந்தவர்கள் –அறிஞர் அண்ணா, நேரு, அம்பேத்கார், காரல் மார்க்ஸ்
- சிறந்த நூலகர்களுக்கு எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது
பாடறிந்து ஓழுகுதல்
ஆசாரக் கோவை
நன்றியறிதல்
பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத
எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு
ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்
தாரோடு நட்டல்- இவையெட்டும்
சொல்லிய
ஆசார வித்து”
பொருள்
- நன்றியரிதல்- பிறர் செய்த உதவியை மறவாமை
- ஒப்புரவு- பிறருக்கு உதவி செய்தல்
- நட்டல்- நட்பு கொள்ளுதல்
ஆசிரியர்
குறிப்பு
- ஆசார கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
- ஊர்- கயத்தூர்
- ஆசாரகோவை- பொருள்- நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
- பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று
- 100 வெண்பாக்களை கொண்டது
Book Back
- பிறரிடம் நான் இன்சொல் பேசுவேன்
- பிறர்
நமக்கு செய்யும் தீங்கை பொறுத்து கொள்வது பொறை
- அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அறிவுடைமை
- இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இவையெட்டும்
- நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நன்றி அறிதல்
- பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பொறை + உடைமை
கண்மணியே கண்ணுரங்கு
பொருள்
- நந்தவனம்- பூஞ்சோலை
- பார்- உலகம்
- பண்- இசை
- இழைத்து-செய்து
- தாலாட்டு- வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று
- தால்- பொருள்-நாக்கு
தமிழர்
பெருவிழா
- பொங்கல்-தமிழர் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது
- அக்காலத்தில் போகி பண்டிகை இந்திர விழாவாக கொண்டாடப்பட்டது
- தை முதல் நாள்- திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது
- திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட நடப்பாண்டுடன் 31 ஐ கூட்டிகொள்ள வேண்டும்
- தை இரண்டாம் நாள்- திருவள்ளுவர் தினம்
- மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கி தழுவும் வீர விளையாட்டு , மாடுபிடித்தல்,ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது
அறுவடை
திருநாள்
- ஆந்திரா, கர்நாடகா,மகாராட்டிரா,உத்திரபிரதேசம்- மகாசங்கராந்தி எனவும்,
- பஞ்சாப்- லோரி எனவும்,
- குஜராத், இராஜஸ்தான் – உத்த்ராயன் எனவும் கொண்டாடப்படுகிறது
Book Back
- கதிர் முற்றியதும் அறுவடை செய்வர்
- விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் தோரணம் கட்டுவர்
- பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பொங்கலன்ற
- போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது போகி + பண்டிகை
- பழையன கழிதலும் புதியனபுகுதலும்.
- பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண துன்பம் தரும்.
மனம் கவரும் மாமல்லபுரம்
- நரசிம்மவர்மன்(வேறு பெயர் மாமல்லன்) – மற்போரில் சிறந்தவன்
- 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்
- தந்தை- மகேந்திரவர்ம பல்லவர்
- ஒரே பாறையில் செதுக்கி செய்யப்பட்ட கோவில் – இரத கோவில்
- ஐந்து இரதங்கள் உள்ளதால் பஞ்சபாண்டவர் இரதம் என்று பெயர்
- 4 தலைமுறைகளாக நடைப்பெற்றது இந்த சிற்ப பணி
- அர்சுனன தபசு – அர்சுனன் தவம் செய்யும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது
- பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை புடைப்புசிற்பங்கள் ஆகும்
சிற்பகலை
நான்கு வகைப்படும்
- குடைவரைக் கோயிகள்
- கட்டுமானக் கோயிகள்
- புடைப்பு சிற்பங்கள்
- ஒற்றைக் கல் கோயில்கள்
மாமல்லபுரத்தில்
காணவேண்டிய இடங்கள்
- அர்ச்சுனன தபசு
- கடற்கரைக் கோவில்
- பஞ்சபாண்டவர் ரதம்
- ஒற்றைக்கல் யானை
- குகைக்கோவில்
- புலிக்குகை
- திருக்கடல் மல்லை
- கிருஷ்ணரின் வெண்ணைய்ப் பந்து
- கலங்கரை விளக்கம்
group-4 நானிலம் படைத்தவன்
பொருள்
- மல்லெடுத்த- வலிமை பெற்ற
- சமர்- போர்
- நல்கும்- தரும்
- கழனி- வயல்
- மறம்- வீரம்
- எக்களிப்பு- பெருமகிழ்ச்சி
- கலம்- கப்பல்
- ஆழி- கடல்
நூல்குறிப்பு
- முடியரசன்
- இயற்பெயர்- துரைராசு
- நூல்கள்- பாங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை,
- திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டபெற்றவர்
Book Back
- போர்களத்தில் வெளிப்படும் குணம்- வீரம்
- கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கல் + எடுத்து
- நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நான்கு + நிலம்
- நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நாடென்ற
- கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் கலமேறி
கடலோடு விளையாடு
”விடிவெள்ளி
நம்விளக்கு-ஐலசா
விரிகடலே
பள்ளிக்கூடம்- ஐலசா
அடிக்கும்
அலை நம்தோழன் –ஐலசா”
பொருள்
- கதிச்சுடர்- கதிரவனின் ஓளி
- மின்னல்வரி- மின்னல் கோடுகள்
- அரிச்சுவடி- அகரவரிசை எழுத்துக்கள்
நெய்தல்
திணை
- நிலம்- கடலும் கடல் சார்ந்த இடமும்
- மக்கள்- பரதர், பரத்தியர்,எயினர், எயிற்றியர்
- தொழில்-மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
- பூ-தாழம்பூ
நூல்குறிப்பு
- நாட்டுபுறப்பாடல்(வாய்மொழி இலக்கியம்)
- ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு, தொழில் பாடல்கள், விளையாட்டு பாடல்கள், தாலாட்டு பாடல்கள்- நாட்டுபுற பாடல்களில் அடங்கும்
- சு. சக்திவேல் தொகுத்த நாட்டுபுற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது
பொருத்துக
- விடிவெள்ளி-விளக்கு
- மணல்- பஞ்சுமெத்தை
- புயல்- ஊஞ்சல்
- பனிமூட்டம்- போர்வை
Book Back
- கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கதிர் + சுடர்
- மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மூச்சு + அடக்கி
- பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பெருவானம்
வளரும் வணிகம்
- பொருள்களை விற்பவர் வணிகர்
- பொருள்களை வாங்குபவர் நுகர்வோர்
- நம்மிடம் இருக்கும் பொருளை கொடுத்து தேவையான பொருளை வாங்குவது பண்டமாற்று வணிகம்(நெல்- உப்பு, ஆட்டுபால்- தானியம்)
- வணிகத்தின் வகைகள்- தரைவழி வணிகம், நீர்வழி வணிகம்
- தரைவழி வணிகம் – பொருள்களை எடுத்து செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகள் , வண்டிகள் பயன்படுத்தப்பட்டன
- வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்கு செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகசாத்து என்பர்
- நீர்வழி வணிகம்- கடல்வழியாக கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும், வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும்
- கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும்
- துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டுள்ளன
- தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக பூம்புகார் விளங்கியது
- வணிகத்தை தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம்
- தனிநபர் வணிகம்- தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம்
- நிறுவன வணிகம்- ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது
- சிறுவணிகம்- பால், கீரை, காய்கறிகள் விற்பனை செய்பவர்கள் நுகர்வோரிடம் நேரடி தொடர்பு உடையவர்கள்
- பெருவணிகம்- பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மொத்தமாக கொள்முதல் செய்வர். அவற்றை சிறு வணிகர்களுக்கு விற்பனை செய்வர். இவர்களுக்கு நுகர்வோருடன் நேரடி தொடர்ப்பு இல்லை
- ஏற்றுமதி- தேக்கு, மயில்தோகை,அரிசி, சந்தனம்,இஞ்சி, மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டன
- இறக்குமதி- கண்ணாடி, பட்டு, கற்பூரம் இறக்குமதி செய்யப்பட்டன
- அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன
- “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்”- குறள்
- “நடுவு நின்ற நன்னெஞ்ரினோர்” – பட்டினப்பாலை
- இணைய வழி வணிகம்- “இணையதளம் மூலம் பொருள்கள் பெறலாம்
- வணிகத்தின் வளர்ச்சி- பண்டமாற்று முறை->பணத்தை பயன்படுத்தும் முறை->மின்னனு பரிமாற்று முறை
- “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி ------ உமணர் போகலும்”- நற்றினை
- ”பாலாடு வந்து கூழொடு பெயரும்”- குறுந்தொகை
- “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”- அகநானூறு
- “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது”- பட்டினப்பாலை
- “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொரும்பால் கோடாமை சான்றோர்க்கு அணி”- திருக்குறள்
Book Back
- வீட்டு பயன்பாட்டுற்க்காக பொருள் வாங்குபவர்- நுகர்வோர்
- வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் வணிகச்சாத்து
- பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பண்டமாற்ற
- வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வண்ணம்+ படங்கள்
- விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விரிவு+அடைந்த
ஆங்கல
சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
- கரன்சிநோட்- பணத்தாள்
- பேங்க்- வங்கி
- செக்- காசோலை
- டிமாண்ட் டிராப்ட்- வரைவோலை
- டிஜிட்டல்- மின்னனு மயம்
- டெபிட் கார்டு- பற்று அட்டை
- கிரெடிட் கார்டு- கடன் அட்டை
- ஆன்லைன் ஷாப்பிங்- இணையதள வணிகம்
- ஈ காமர்ஸ்- மின்னனு வணிகம்
No comments:
Post a Comment