Pages

Wednesday, February 17, 2021

மாநில அரசு

 

தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன

பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் பற்றியது

ஆளுநர்

  • மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர்
  • நிர்வாக சூழலின் காரணமாக இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட மாநிலங்களின் ஆளுநகராகவும் நியமிக்கப்படலாம்
  • சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறுகிறது

ஆளுநர் நியமனம்

  • ஆளுநர் குடியரசு தலவரால் நியமிக்கப்படுகிறார்
  • பதவிக்காலம் 5 ஆண்டுகள்
  • ஒருவர் தன் சொந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படமாட்டார்
  • தனது பணிதுறப்பு கடிதத்தை குடியரசு தலைவரிடம் கொடுக்க வேண்டும்
  • மாநில சட்டமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஆளுநரின் பணி நீக்கத்தில் பங்கு பெற முடியாது
  • சட்டபிரிவு 158 (3A) படி ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படும் போது அவரது ஊதியம் பகிர்ந்து அளிக்க குடியரசு தலைவர் ஆணை பிறப்பிக்கலாம்

தகுதிகள்

  • சட்டபிரிவு 157 மற்றும் 158 ஆளுநர் பதவிக்கு தேவையான தகுதிகளை கூறுகிறது
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
  • ஆளுநர் மாநில பல்கலைகழங்களின் தலைவர்  
  • ஆளுநர் மாநில பல்கலைகழங்களின் துணை தலைவர்களை நியமிக்கிறார்
  • அவசர நிலை பிரகடனத்தின் போது குடியரசு தலைவர் பெயரில் நேரடியாக் இவரே ஆட்சி செய்கிறார்

அதிகாரங்கள்

  • ஆளுநர் சட்டமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும், கலைக்கவும் அதிகாரம் உண்டு
  • ஆங்கிலோ இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒருவரை மாநில சட்டமன்றத்திற்கு நியமிக்கலாம்
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றபடும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும்
  • சட்டபிரிவு 213 ந் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தை பிறப்பிக்கலாம்
  • ஆளுநரின் முன் அனுமதியுடன் தான் பண மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
  • மாவட்ட நீதிபதிகளை நியமிக்கிறார் ஆளுநர்
  • கருணை மனு அடிப்படையில் குற்றாவாளிகளை மன்னிக்கலாம்(மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளை தவிர)
  • மாநில அரசை கலக்க அதிகாரம் (சட்டபிரிவு 356)உள்ளது
  • ஆளுநருக்கு சட்டபிரிவு 356(1)சிறப்புரிமைகள் வழங்கியுள்ளது-> ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றசாட்டுகளை சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிற்பிக்க முடியாது

முதலமைச்சர்

  • முதலமைச்சர் என்பவர் அரசாங்கத்தின் தலைவர்
  • சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் போது இவர் பதவியை இழப்பார்
  • பதவிக்காலம் 5 ஆண்டுகள்
  • சட்டபிரிவு 163 (1)  படி முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு உதவி செய்யவும், ஆலோசனை வழங்கவும் வேண்டும்
  • சட்டபிரிவு 164(1) ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதை  கூறுகிறது
  • முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 % தாண்டக்கூடாது என சட்டபிரிவு 164(1A)

மாநில சட்டமன்றம்

  • பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா ஈரவை சட்டமன்றங்களை கொண்டுள்ளன
  • கீழவை -> மாநில மக்களின் பிரதிநிதிகளை கொண்டது
  • மேலவை-> ஆசிரியர்கள், பட்டதாரிகள், உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆகியோர்களை பிரதிநிதிகளாக கொண்டது
  • தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம்
  • சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500க்கு மிகாமலும் குறைந்த பட்சம்  60 க்கு குறையாமலும் இருக்க வேண்டும்
  • சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். இருப்பினும் 5 ஆண்டுகள் முடியும் முன்னரே  சட்டமன்ற்ம் கலைக்கப்படலாம்
  • சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3 இல் ஒரு பங்கு மிகாமல் இருக்க வேண்டும்(ஆனால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமல் இருக்க வேண்டும்
  • தமிழக சட்டமன்றம் 235 உறுப்பினர்களை கொண்டது(234 உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், 1 ஆங்கிலோ இந்தியன் ஆளுநரால் நியமன்ம் செய்யப்படுகிறார்
  • சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் 14 நாட்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு சபாநாயகரை பதவி நீக்கம் செய்யலாம்
  • சட்டமன்றம் கலைக்கப்படும் போது சபாநாயகர் தனது பதவியை இழக்க மாட்டார்
  • சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது
  • 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது
  • பதவிக்காலம் 6 ஆண்டுகள்(1/3 பங்கு இரண்டாண்டிற்கு ஒரு முறை ஒய்வு பெறுவர்)
  • தகுதி-> 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும், அம்மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்
  • 1986  சட்டமேலவை மசோதா மூலம் தமிழ் நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது

சட்டமேலவை தேர்தல்

  • 1/3 பங்கு உறுப்பினர்கள் - உள்ளாட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்
  • 1/12 பங்கு உறுப்பினர்கள் - பட்டதாரிகளால்      தேர்ந்தெடுக்கின்றனர்
  • 1/12 பங்கு உறுப்பினர்கள்- பட்டதாரி ஆசிரியர்களால்      தேர்ந்தெடுக்கின்றனர்
  • 1/3 பங்கு உறுப்பினர்கள்- சட்ட பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கின்றனர்
  • 1/6 பங்கு உறுப்பினர்கள்- ஆளுநர் நியமிக்கிறார்(கலை, இலக்கியம், அறிவியல் சிறந்து விளங்குபவர்கள்)
  • சட்ட மேலவை உருவாக்கம் மற்றும் நீக்கம் 169 சட்டபிரிவு விவரிக்கிறது
  • எந்த துறையிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம். ஆனால் அதே சட்டம் நடுவண் அரசு கொண்டுவந்தால் இந்த சட்டம் செல்லாது
  • பண மசோதா கீழவையில் மட்டுமே கொண்டு வர முடியும். கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை கொண்டு வர முடியாது

மாநில நீதித்துறை

1862 ல் உயர் நீதிமன்றங்கள் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடித்தின் மூலம்  தோற்றுவிக்கப்பட்டன

1956 ஆம் ஆண்டு 7 வது திருத்தசட்டம், இரண்டு அல்லது இரண்டுக்கு  மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு நீதுமன்றம் நிறுவலாம்

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்(யூனியன் பிரதேசம்) அகிய பகுதிகளுக்கு சண்டிகரிலுள்ள உயர் நீதிமன்றம் பொதுவாகும்

அஸ்ஸாம், நாகலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் அகிய பகுதிகளுக்கு கவுகாத்தியில் உள்ள உயர் நீதிமன்றம் பொதுவாகும்

இந்தியாவில் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன(2019 தோற்றுவிக்கப்பட்ட அமராவதியில் – ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றத்தையும் சேர்த்து)

சென்னை, மும்பை, கொல்கத்தா தனக்கேயுரிய நீதிவரையறை பெற்றுள்ளன( மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும்)

சட்டபிரிவு 32ன் படி உரிமைகள் மீற்ப்பட்டால் நீதிபேராணைகளை உச்சநீதிமனறம் விதிக்கிறது. இதே போல் இயர் நீதிமன்றமும் விதிக்கலாம

 இது மட்டும் இல்லாமல் சட்டபிரிவு 226ன் படி மற்ற நோக்கங்களுக்காவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கு உள்ளது

உலகிலேயே மெட்ராஸ் உடர் நீதிமன்றம் இரண்டாவது பெரிய நீதிமன்றம் ஆகும் (லண்டனில் உள்ளது முதலாவது)

உயர் நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது. (நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பதிவு செய்யபடுகின்றன)

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் சம நீதி கண்ட சோழன் சிலை உள்ளது

கலைச்சொற்கள்

  1. அரசியலமைப்பு- Constitution
  2. அமைச்சரவை- Cabinet
  3. சட்டமன்றம்-Legislature
  4. தீர்ப்பாயம்-Trribunal
  5. தீர்மானம்-Resolution

Book Back

சரியன விடையை தேர்ந்தெடுக்கவும்

  1. மாநில ஆளுநரை நியமிப்பவர் குடியரசு தலைவர்
  2. மாநில சபாநாயகர் ஒரு
  3. மாநிலத்தலைவர்,அரசின் தலைவர், குடியசு தலைவரின் முகவர், மேற்கண்ட ஏதுவுமில்லை
  4. எந்த ஒன்று ஆளுநரின அதிகாரம் இல்லை தூதரகம்
  5. ஆங்கிலோ இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்? ஆளுநர்
  6. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை? உயர் நீதிமன்ற நீதிபதிகள்
  7. அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சர்
  8. சட்ட மேலவை என்பது நிரந்தர  அவை ஆகும்
  9. மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது 30 வயது
  10. கீழ்காணும்  மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருக்கவில்லை தமிழ்நாடு
  11. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடஙகப்பட்ட இடங்கள் கல்கத்தா, பம்பாய், சென்னை
  12. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தை பெற்றுள்ளன? பஞ்சாப் மற்றும் ஹரியானா

கோடிட்ட இடத்தை நிரப்புக

  1. ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர்  இடம் கொடுக்கிறார்
  2. சட்ட மன்ற உறுப்பினர்கள்  (MLA) மக்களால்  ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
  3.  ஆளுநர்  மாநிலங்களில் உள்ள பல்கலை கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்
  4. அரசு பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர்  மற்றும் உறுப்பினர்கள்      ஆல் ஆளுநர்  மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்

பொருத்துக

  1. ஆளுநர்- மாநில அரசின் தலைவர்
  2. முதலமைச்சர்- அரசாங்கத்தின் தலைவர்
  3.  அமைச்சரவை- சட்டமன்றத்திற்கு பொறுப்பானவர்கள்
  4. மேலவை உறுப்பினர்- மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது
  5. ஆயுதப் படையினர்- தீர்ப்பாயங்கள்

சரியான கூற்றினை தேர்வு செய்க

கூற்று: மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு

காரணம்: குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநில பட்டியலிலுள்ள சில மசோதாக்களை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்

கூற்று சரி காரணம் தவறு

Monday, February 15, 2021

மத்திய அரசு

 

மத்திய அரசு (10th)

  • இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு நடுவண் அரசு
  • தலைமையகம் புதுடெல்லி
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி V ல் 52 முதல் 78 வரையிலான சட்டபிரிவுகள் நடுவண் அரசு பற்றி குறிப்பிடுகின்றன
  • நடுவண் அரசு மூன்று அம்சங்களை கொண்டது(நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை)
  • நிர்வாகம்-> இந்திய குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், பிரதம் அமைச்சர், அமைச்சரவை குழு, இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
  • சட்டமன்றம்(நாடாளுமன்றம்)-> மாநிலங்களவை (ராஜ்ய சபா), மக்களவை (லோக் சபா)
  • மாநிலங்களவை (ராஜ்ய சபா)->238 உறுப்பினர்கள் (இந்தியாவின் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்), 12 உறுப்பினர்கள்(குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்
  • மக்களவை(லோக் சபா)-> 543 உறுப்பினர்கள்(மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்), 2 உறுப்பினர்கள் (குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஆங்கிலோ- இந்தியர்கள்)
  • நீதித்துறை->இந்திய உச்சநீதிமன்றம், இந்திய தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள்

குடியரசு தலைவர்

  • நிர்வாக தலைவர்
  • இந்தியாவின் முதல் குடிமகன்
  • முப்படைகளின் தலைமை தளபதி(53(2) சட்டபிரிவு)
  • சட்டபிரிவு 52ன் படி நேரடியாகவோ அல்லது அலுவலர் மூலமாகவோ அதிகாரங்களாஇ அமல்படுத்துவார்
  • முதல் குடியரசு தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத்

போட்டியிடுவதற்கான தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
  •  35 வயது பூர்த்தி ஆனவராக இருக்க வேண்டும்
  • அரசு ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்க கூடாது
  • வாக்காளர் குமத்தில் உள்ள 10 வாக்காளர்கள் அவரது  பெயரை முன்மொழியவும், 10 வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும்
  • குடியரசு தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினரகவோ இருக்க கூடாது

அவருடைய இல்லம் மற்றும் அலுவலகம் ஒரே கட்டிடத்தில் உள்ளது(புதுடெல்லி – ராஷ்டிரபதி).

மேலும் இரண்டு இடங்கள் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை சென்று அலுவலக பணிகளை மேற்கொள்வார்(சிம்லா- ரிட்ரீட் கட்டடம்,ஹைதராபாத- ராஷ்டிரபதி)

குடியரசு தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

குடியரசு தலைவர்க்கு உச்சந்நிதிமன்ற தலைமை நீதிபதி பதவி உறுதி மொழி செய்து வைக்கிறார்

இவரின் பதவி காலம் 5 ஆண்டுகள் (மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உள்ளது)

அதிகாரங்கள்

சட்டபிரிவு 77 ன் படி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் இவரது பெயராலேயே மேற்கொள்ளப்படுகிறது

பதவி நியமணம் செய்கிறார்-> பிரதம அமைச்சர், மற்ற அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இதர நீதிபதிகள், அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமை  கணக்கு தணிக்கையாளர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள், பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், மற்ற உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதர்கள்

பிரதம் அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்

சட்ட மன்ற அதிகாரங்கள்

  • ஆண்டடின் முதல் கூட்டதொடர் இவருடைய உரையுடன் தொடங்குகிறது
  • ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்
  • இவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன
  • இவரின் ஒப்புதல் இல்லாமல் நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது
  • மக்களவையின் ஐந்து ஆண்டு காலம் முடியும் முன்னரே அதனை கலைக்கும் அதிகாரம் உண்டு

நிதி அதிகாரங்கள்

  • இவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது
  • இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம்  இவருக்கு உண்டு
  • ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்

நீதி அதிகாரங்கள்

  • சட்டபிரிவு 72ன் படி நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவருக்கு தண்டனையை குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையில் இருந்து விடுவிக்கவும் , மன்னிப்பு வழங்கவும் அதிகாரம் உள்ளது
  • வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசு தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன
  • நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் 352 சட்டபிரிவிலும், மாநில அரசை கலைக்கும் அதிகாரம் 356 வது சட்டப்பிரிவிலும், நிதி நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம் 360 வது சட்டபிரிவிலும் உள்ளது
  • கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றுள்ளது

குடியரசு தலைவர் நீக்கம்

  • தன்னுடைய பணித்துறப்பு கடிதத்தினை துணை குடியரசு தலைவரிடம் வழங்கலாம்
  • சட்டபிரிவு 61ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிருபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம்(இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்)
  • பதவிக்காலம் முடிந்தாலும் தனக்கு பின்னர் ஒருவர் வரும் வரை அப்பதவியை தொடரலாம்

துணைக் குடியரசு தலைவர்

  • 63வது சட்டபிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிக்கிறார்
  • இப்பதவி அமெரிக்க துணை குடியரசு தலைவர் பதவியை போன்றது
  • முதல் துணை குடியரசு தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன

போட்டியிடுவதற்கான தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
  •  35 வயது பூர்த்தி ஆனவராக இருக்க வேண்டும்
  • அரசு ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்க கூடாது
  • துணை குடியரசு தலைவர்  66(1) சட்டபடி மறைமுக வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
  • இவரின் பதவி காலம் 5 ஆண்டுகள் (மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உள்ளது)
  • புதிய துணை குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணை தலைவர் துணை குடியரசு தலைவரின் பணிகளை செய்வார்

பதவி நீக்கம்

மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் பதவி விலக்கலாம். 14 நாட்களுக்கு முன்னரே அவருக்கு அறிவிப்பு வழங்க வேண்டும்

மாநிலங்களவையின் தலைவராக செயல்படுகிறார்

குடியரசு தலைவர் நாட்டில் இல்லாத போதும், அவருக்கு உடல்நிலை சரியில்லாத போதும் இவர் அவரது பணிகளை(அதிகபட்சமாக 6 மாத காலம்) மேற்கொள்வார் 

 குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவ்ர் பதவி ஓரே சமயத்தில் காலியாக இருக்கும் போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிமதி  குடியரசு தலைவர் பதவிகளை செய்வார்(1969- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிமதி  M.ஹிதயதுல்லா குடியரசு தலைவராக பதவி வகித்தார்)

மாநிலங்களவையின் சட்ட மசோதாவின் வாக்கெடுப்பின் போத் சமநிலையில் இருந்தால் 100 சட்டபிரிவின் படி துணை குடியரசு தலைவர் வாக்கு அளிக்கலாம். அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை

பிரதம அமைச்சர்

  • சட்டபிரிவு 74(1) குடியரசு தலைவருக்கு உதவிட , அறிவுரை வழங்க இவரை தலவராக கொண்ட குழு இருக்கும்
  • இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்மினிஸ்டர் அரசிலமைப்பு சார்ந்தது
  • இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ளதால் அவர்களின்  நாடாளுமன்றம் முறை வெஸ்ட்மின்ஸ்டர் முறை எனப்படுகிறது
  • நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்
  • சட்டபிரிவு   78 பிரதம அமைச்சரின் கடமைகளை குறிக்கிறது
  • பிரதம அமைச்சர் குடியரசு தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்
  • நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக பிரதமர் பங்கு கொள்கிறார்
  • ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினராக (பிரதமர் உட்பட ) இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது
  • நடுவண் அமைச்சர்கள்-> காபினெட் (ஆட்சிக்குழு அமைச்சர்கள்), இராசாங்க அமைச்சர்கள், இணை அமைச்சர்கள்
  • காபினெட் (ஆட்சிக்குழு அமைச்சர்கள்)->மூத்த அமைச்சர்களின் முறை சாரா அமைப்பு காபினெட் ஆகும். பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக்கொள்கை, உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகள் எடுக்கிறது
  • இராசாங்க அமைச்சர்கள்-> தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால அழைப்பு விடுத்தால் மட்டுமே இவ்ர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்
  • இணை அமைச்சர்கள்-> காபினெட் அமைச்சர்கள் , இராசாங்க அமைச்சர்கள் கடமைகளை செய்ய இவர்கள உதவி செய்கின்றனர்

இந்திய நாடாளுமன்றம்

மத்திய அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது

மூன்று பகுதிகள்-> குடியரசு தலைவர், ராஜ்ய சபா, லோக்சபா

நாடாளுமன்றம் ஈரவை சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது

   மாநிலங்களவை (ராஜ்ய சபா)(250)->238 உறுப்பினர்கள் (இந்தியாவின் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்), 12 உறுப்பினர்கள்(குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்

உறுப்பினராக தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
  • 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்
  • அரசாங்க ஊதியம் பெறும் பதவியில் இருக்க கூடாது
  • மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி தர முடியாதவரகவோ இருக்க கூடாது
  • மக்களவையிலோ எந்தவொரு சட்டமன்றத்தொலோ உறுப்பினராக இருத்தல் கூடாது

பதவிக்காலம் 6 ஆண்டுகள். 1/3 பங்கு உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகின்றனர்

மாநிலங்களவையின் துணை தலைவர் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

மாநிலங்களவை உறுப்பினர்கள் (மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்MLA )மூலம் மறைமுகமாக(ஒற்றை மாற்று வாக்கு) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

மக்களவை

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 552 உறுப்பினர்கள் கொண்டது.530 (மாநிலங்களில் இருந்து),13 (யூனியன் பிரதேசங்களில் இருந்து), 2(ஆங்கிலோ- இந்தியன்),

 தற்பொழுது 545 உறுப்பினர்களை கொண்டது

மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
  • 25 வயதுக்கு குறைவாக இருக்க கூடாது
  • அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்
  • அரசாங்க ஊதியம் பெறும் பதவியில் இருக்க கூடாது
  • மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி தர முடியாதவரகவோ இருக்க கூடாது

பதவிக்காலம்- 5 ஆண்டுகள்

பிரதம அமைச்சரின் அலோசனையின் பேரில் குடியரசு தலைவர் மக்களவையை கலைக்கலாம்

மக்களவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவொரு கட்சிக்கோ பெரும்பான்மை இல்லையெனில் மக்களவையை குடியரசு த்லைவர் கலைக்கலாம்

மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதில் “ வயது வந்தோர் வாக்குரிமை” பின்பற்றப்படுகிறது

மக்களவை தேர்தலுக்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்கிறது

மக்களவையின் செயல்பாடுகள்

  • அனைத்து மசோதாக்களை அறிமுகப்படுத்தவும், நிறிவேற்றவும் செய்யமுடியும்
  • குடியரசு தலைவர் , உச்சநீதிமன்றம் நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்கம் விவகாரங்களில் அதிகாரம் உள்ளது
  • குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது
  • நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்
  • நிதி மசோதா மக்களவையில் மட்டுமே அறிமுக படுத்த முடியும். இதை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை ஒப்புதலுடன் சட்டமாக மாறும். ஆனால் மாநிலங்களவையால் நிதி மசோதாவை நிராகரிக்க அதிகாரம் இல்லை
  • தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவை- 18 உறுப்பினர்கள்,  மக்களவை-39 உறுப்பினர்கள்

சபாநாயகர்

  • மக்களவையை தலைமை ஏற்று நடத்துபவர். மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கபடுகிறார்
  • மக்களவை கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் வரும் வரை  இவர் பதவி வகிப்பார்
  •  சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போதும் அல்லது வருகை புரியாத போதும் துணை சபாநாயகர் தலை வகிப்பார்

நாடாளுமன்ற கூட்டு தொடர்

  • பட்ஜெட் கூட்டத் தொடர்- பிப்ரவரி முதல் மே வரை
  • மழை காலக் கூட்டத் தொடர்- ஜீலை முதல் செப்டம்பர் வரை
  • குளிர் கால கூட்டத்தொடர்- நவம்பர் மற்றும் டிசம்பர்

மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றதிற்கே அதிகாரம் உண்டு

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

  • சட்டபிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது
  • நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி. உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும்
  • இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை உண்டு.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்ககூடிய அனைத்து சலுகைகளையும் சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்

நீதித்துறை

குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது

உச்சநீதிமன்றம்

1950 ஜனவரி 28 ஆம் நாள் உச்சநீதிமன்றம் துவங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தை தொடர்ந்து உருவாக்கப்பட்டது

தொடக்கத்தில் 8 நீதிபதிகள்(தலைமை நீதிபதி உட்பட). தற்பொழுது 34 நீதிபதிகள்(தலைமை நீதிபதி உட்பட).

தகுதிகள்

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்

5 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருக்க வேண்டும்

10 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருக்க வேண்டும்

65 வயது வரை பதவியில் வகிப்பார்

பதவி  விலகல்(குடியரசு தலைவரிடம் கடிதம் கொடுத்து)

பதவி நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது

பணிகள்

தனக்கேயுரிய நீதி வரையறை

உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள்

மேல்முறையீட்டு நீதிவரையறை

உயர் நீதிமன்றங்களின் உரிமையியல், குற்றவியல் , அரசியலமைப்பு வழக்குகள் மேல்முறையீட்டிற்கு செல்லலாம்(சட்ட விளக்கம் தேவையென உயர் நீதி மன்றத்தின் சான்றிதழ் வேண்டும்)

ஆலோசனை நீதிவரையறை

எந்தவொரு சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை பெற குடியரசு தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது

இதர நீதிவரையறை

உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்து பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுபடுத்தும்

நீதிப்புனராய்வு(நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்)

ஒரு சட்டத்தினை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது

கலைச்சொற்கள்

  1. முடிவுக்கு கொண்டு வருதல்- Terminate
  2. எதிர்பாரா செலவு நிதி- Contingency Fund
  3. பொதுமன்னிப்பு- Pardon
  4. தண்டனை குறைப்பு- Remission
  5. முன்னுரிமை- Precedence
  6. பதவியின் நிமித்தமாக- Ex officio

Book Back

சரியான விடையை தேர்ந்தெடு

  1. நடுவண் அரசின் அரசியலமைப்பு தலைவர் குடியரசு தலைவர் ஆவார்
  2. ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என sabanayakar  தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்
  3. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக  இதற்கு பொறுப்புடையவர்களாவர் மாநிலங்களவை
  4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது 30 
  5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/ பெற்ற அமைப்பு நாடாளுமன்றம்
  6. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசு தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார் 360
  7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் குடியரசு தலைவர்

கோடிட்ட இடங்களை நிரப்புக

நிதி  மசோதா குடியரசுதலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது

  

 

 

 

இந்திய அரசியலமைப்பு

 

இந்திய அரசியலமைப்பு(10 th)

  • ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்
  • அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (USA) தோன்றியது
  • 1946 ஆம் ஆண்டு அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது
  • அரசியல் நிர்ணசபையில் 292  மாகாணப் பிரதிநிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள்,பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் , மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர்  என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர்
  • அரசியல் நிர்ணசபையின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் நடைப்பெற்றது. தற்காலிக தலைவர் டாக்டர் சச்சிதானந்த சின்கா
  • டாக்டர் சச்சிதானந்த சின்கா மறைவுக்கு பின் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகவும், H.Cமுகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணை தலைவர்க்ளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
  • இக்கூட்டம் 11 அமர்வுகளாக 166 நாட்கள நடைபெற்றது இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன
  • இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர்  டாக்டர் B.Rஅம்பேத்கர்
  • இந்திய அரசியலமைப்பின் தந்தை” டாக்டர் B.Rஅம்பேத்கர்
  • இந்திய அரசியலமைப்பு 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள், 8 அட்டவணைகள் கொண்டது
  • இந்திய அரசியலமைப்பு 1949 ஆம் ஆண்டு நவம்பர்  26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  • 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது(குடியரசு தினம்)
  • பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்பு சட்டம் இத்தாலிய பாணியில், அவரது கைப்பட எழுதப்பட்டது
இந்திய அரசியலமைப்பு சிறப்புகள்:
  • உலகில் உள்ள அனைத்தி அரசியலமைப்புகளை விட நீளமானது
  • கூட்டாட்சி முறை(மத்திய அரசு, மாநில அரசு)
  • பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை
  • சுதந்திரமான நீதித்துறை. 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை
முகவுரை

  • முகவுரை(preamble)என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதாகும்
  • முகவுரை-> அரசியலமைப்பின் கொள்கைகள், நோக்கங்கள், இலட்சியங்கள் உள்ளடக்கியது
  • முகவுரை-> “ அரசியலமைப்பின் திறவுகோல்” எனப்படுகிறது
  • ஜவகர்லால் நேரு அவர்களின் “ குறிக்கோள் தீர்மானத்தின்” அடிப்படையில் முகவுரை அமைந்துள்ளது
  • முகவுரையானது 1976 ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு சட்டத் திருத்ததின் படி திருத்தப்பட்டது.(சமதர்மம், சமயச்சார்பினமை, ஒருமைப்பாடு மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன)
  • “ இந்திய மக்களாகிய நாம்” என்ற சொற்களுடன் முகவுரை தொடங்குகிறது
  • 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன் முக்கிய முழக்கங்களாயின

குடியிரிமை

  • சிட்டிசன் என்னும் சொல் சிவிஸ் என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்
  • இதன் பொருள் “ நகர அரசில் வசிப்பவர்
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி 2 சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையை பற்றி விளக்குகின்றன
  • குடியுரிமை சட்டம்(1955)( குடியுரிமை பெறுதல், குடியுரிமை இழத்தல்). இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ள்து

குடியுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறுதல்:

  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்கள ஆவர்
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவர் , அவரது தந்தை இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வம்சாவளி மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்
  • இயல்புரிமை மூலம் இந்திய குடியுரிமை பெறலாம்
  • பிற நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்படும் பொழுது அந்நாட்டு மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

குடியுரிமையை இழத்தல்:

  • ஒரு குடிமகன் தாமாக முன் வந்து துறத்தல்
  • வேறு நாட்டின் குடியுரிமை பெறும் பொழுது தானாகவே குடியுரிமையை இழத்தல்
  • இயல்புரிமை மூலம் குடியுரிமை பெற்றவர் தவறான வழியில் பெற்று இருந்தால் அவரது குடியுரிமையை இழக்க நேரிடும்

அடிப்படை உரிமை

  • இந்திய  அரசியலமைப்பு சட்டம் பகுதி(III) 12 ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உரிமையின் தாக்கத்தால் உருவாக்க்ப்பட்டது
  • முதலில் 7 அடிப்படை உரிமைகள் இருந்தது. தற்பொழுது 6 மட்டுமே உள்ளது
  • இந்தியாவின் மகாசாசனம்” எனப்படுகிறது

சமத்துவ உரிமை(14-18)

  • பிரிவு 14- சட்டத்தின் முன் அனைவரும் சமம்
  •  பிரிவு15- மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடைசெய்தல்
  • பிரிவு16- பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பளித்தல்
  • பிரிவு 17- தீண்டாமையை ஒழித்தல்
  • பிரிவு 18- இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்

சுதந்திர உரிமை(19-22)

  • பிரிவு 19- பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை
  • பிரிவு 20- குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டைனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
  • பிரிவு 21- வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை
  • பிரிவு 21 A- தொடக்கக்கல்வி பெறும் உரிமை
  • பிரிவு 22- சில வழக்குகளில் கைது செய்து, தடுப்பு காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை

சுரண்டலுக்கெதிரான உரிமை(23-24)

  • பிரிவு 23- கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தை தடுத்தல்
  • பிரிவு 24- தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல்

சமயச்சார்பு  உரிமை(25-28)

  • பிரிவு 25- எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை
  • பிரிவு 26- சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
  • பிரிவு 27- எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்
  • பிரிவு28- மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை

கல்வி, கலாச்சார உரிமை(29-30)

  • பிரிவு 29- சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு
  • பிரிவு 30- சிற்பான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமை

அரசியமலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

பிரிவு 32- தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகி உரிமையை பெறுதல்

 அரசியமலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

  • நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும். (சில சட்டங்கள் நிரைவேறாமல் தடுப்பதற்க்காக )
  • இந்த ஆணையை உச்ச நீதிமன்றம், மற்றும் உயர் நீதிமன்றம் 5 வகையான நீதிப்பேரானை  வழங்கலாம்

 உச்சநீதிமன்றம் “ அரசியலமைப்பின் பாதுகாவலன” எனப்படுகிறது

அம்பேத்கரின் கூற்று படி சட்டபிரிவு 32 இந்திய அரசியலமைப்பின் “ இதயம் மற்றும் ஆன்மா” ஆகும்

நீதிப்பேரானை:

ஆட்கொணர்வு நீதிப்பேராணை(habeas corpus)

சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது

கட்டளையுறுத்தும் நீதிபேராணை(mandamus)

மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினை சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றி கொள்ள முடியும்

தடையுறுத்தும் நீதிப்பேராணை(prohibition)

ஒரு கீழ் நீதிமன்றம் தனது, சட்ட எல்லையை தாண்டி செயல்படுவதை தடுக்கிறது

ஆவண கேட்பு பேராணை(certiorari)

உயர்நீதிமனறம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்ப செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்

தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை(quo – warranto)

சட்டத்திற்கு புறம்பாக தகாத முறையில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுவதை தடை செய்கிறது

1978 ஆம் ஆண்டு 44வது அரசியலமைப்பு சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31 ) நீக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி XII  , பிரிவு 300A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது

அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல்

  • சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுதலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படுல் பொழுது, சட்டப்பிரிவு 19(சுதந்திர உரிமை)  நிறுத்தப்படுகிறது
  • மற்ற உரிமைகளையும் தடை செய்ய குடியரசுதலைவருக்கு அதிகாரம் உண்டு. இது நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்

அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்:

  • இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி IV சட்டபிரிவு 36 ல் இருந்து 51 வரை
  • பொருளடக்கம், மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது(சமதர்ம, காந்திய, தாராள அறிவு சார்ந்தவை)
  • இந்த கொள்கைகளை நீதிமன்றாத்தால் வழுக்கட்டாயமாக செயற்படுத்த முடியாது
  • சமுதாய நலனை மக்களுக்கு தருவதே இதன் நோக்கமாகும்
  • இவை அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை
  • இதனை இந்திய அரசியலமைப்பின் “ புதுமையான சிறப்பம்சம்” என்கிறார் அம்பேத்கர்
  • 2002 ஆம் அண்டு 86 வது அரசியலமைப்பு சட்டத்திருத்ததின் படி பிரிவு 45 திருத்தப்பட்டு பிரிவு 21 A கீழ் தொடக்க கல்வி அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டுள்ளது(Early Childhood care and Education-ECCE). 6 வயது வரை )

அடிப்படை கடமைகள்

முன்னால் சோவியத் யூனியன் (ussr)அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்

1976  ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42 வது சட்டதிருத்தம் (சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி) குடிமக்களின் பொறுப்புகளை சேர்த்தது

இந்த சட்டதிருத்தம் பகுதிIV A  என்ற ஒரு புதிய பகுதியை சேர்த்தது. இந்த புதிய பகுதி 51A என்ற ஒரெயொரு பிரிவை மட்டும் கொண்டது

  • 1.      ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசியலமைப்பு அதன் கொள்கைகள், நிறுவனங்கள், தேசியகீதம் , தேசிய கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல்
  • 2.      சுதந்திர போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களை போற்றி வளர்த்தல்
  • 3.      இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, இவற்றை பேணிப் பாதுகாத்தல்
  • 4.      தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தாயாராயிருத்தல்
  • 5.      சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தை காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்த்ய்வத்தை வளர்தல்
  • 6.      நமது உயர்ந்த பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து  பாதுகாத்தல்
  • 7.      காடுகள், ஏரிகள், ஆறுகள் வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுசூழலை பாதுக்காத்து மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்
  • 8.      அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை  மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்
  • 9.      வன்முறையை கைவிட்டு பொது சொத்துகளை பாதுக்காத்தல்
  • 10.  தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு தேசத்தின் நிலையான உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்
  • 11.  இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல்(86 வது திருத்த சட்டம் 2002 இன் படி 51 (A) கீழ் 11 வது அடிப்படை கடமை அரிமுகப்படுத்தப்பட்டுள்ளது)

மத்திய மாநில உறவுகள்

  •   இந்திய நாடாளுமன்றம் இந்தியா முழுவதும்(மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்) சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது
  • இந்திய அரசிலமைப்பின் ஏழாவது அட்டவணை மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வினை பற்றி கூறுகிறது
  • அவை மத்திய பட்டியல்(97),மாநில பட்டியல்(66), பொதுப்பட்டியல்(47) என்று அதிகாரம் வழங்கியுள்ளது
  • மத்திய பட்டியல் சட்டமியற்றும் அதிகாரம் (நாடாளுமன்றம்)
  • மாநில பட்டியல் சாமியற்றும் அதிகாரம்(மாநில சட்டமன்றம்)
  • பொது பட்டியல்(  நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் இரண்டிற்க்கும் அதிகாரம் உண்டு. ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசு இயற்றும் சட்டமே இறுதியானது)
  • தற்பொழுது மத்திய அரசு பட்டியலில் 100 துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள், பொது பட்டியலில் 52 துறைகள் உள்ளது
  • 1976 ஆம் ஆண்டு 42 ஆவது சட்டத்திருத்ததின் படி  5 துறைகள் மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.(கல்வி,காடுகள், எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு,பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம்(உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தவிர)
  • மத்திய அரசு அதிகாரம்- நாடாளுமன்றம்  தொடர்பான விஷயங்களில் சட்டங்களை இயற்ற சிறப்பு அதிகாரம்.மாநில அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி XII சட்டப்பிரிவு 268 ல் இருந்து 293 வரை உள்ள பிரிவுகள் மத்திய மாநில அரசுகளின் நிதிசார்ந்தது
  • இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவு 280 ந் கீழ் குடியரசுதலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துறையின் அடிப்படையில் மத்திய அரசால் சில வரிகள் விதிக்கப்பட்டு மத்திய அரசாலும் மாநில அரசாலும் பிரித்துக் கொள்ளப்படுகிறது
  • 1969 இல் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு டாக்டர் P.V. இராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது
  • அரசியலமைப்பு சட்டப் பிரிவு XVII இல் 343 லிருந்து 351 வரையுள்ள சட்டபிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன
  • தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டது. தற்பொழுது 22 மொழிகள் உள்ளன
  • 2004 ஆம் ஆண்டு முதல் செம்மொழிக்கு தகுதி பெற்ற மொழிகள்(தமிழ்-2004, சமஸ்கிருதம்- 2005, தெலுங்கு- 2008, கன்னடம்- 2008, மலையாளம்- 2013, ஒடியா- 2014)
  • குடியரசு தலைவரால் 352 ன் பிரிவின் கீழ் அவசரநிலை பிரகடணம் அறிவிக்கலாம்.(வெளிப்புற அவசரநிலை- வெளிநாட்டினர் ஆக்கரமிப்பு காரணமாக, உள்நாட்டு அவசரநிலை- ஆயுதமேந்திய கிளர்ச்சி)(1962, 1971, 1975 ஆண்டு அவசரநிலை பிரகடணம் அறிவிக்கப்பட்டது)
  • மாநில அரசால் கட்டுபடுத்தாத சூழல் ஏற்படும் போது அளுநர் அறிக்கை அளிக்கும் போது குடியரசு தலைவர்  356  கீழ் அவசர நிலை பிரகடணம் செய்யலாம்.
  • இது மூன்று ஆண்டுகள் வரை தொடரலாம்(சட்டபிரிவு  352 நடைமுறையி இருந்தாலும், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று சான்றளித்தாலும் மட்டுமே ஓராண்டுக்கு மேல் தொடர முடியும்)
  • 1951 ல் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது

நிதி சார்ந்த அவசரநிலை

  • நிதிநிலை தன்மை, இந்தியாவின் கடன் தன்மை, இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் 360 கீழ் நிதி சார்ந்த அவசரநிலை பிறப்பிக்கலாம்
  • இந்த நிலையில் மத்திய மாநில அரசு ஊழியர்களின் ஊதியம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் நீதிபதிகைன் ஊதியம் குறைக்கப்படும்
  • இந்த நிதி சார்ந்த அவசரநிலை இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை

அரசியலமைப்பின் சட்ட  பகுதி XX ல் 368 வது சட்டபிரிவு அமெண்ட்மெண்ட் ”amendment” ->சட்டதிருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் பற்றி கூறுகிறது

மசோதா நாடாளுமன்றத்தில் 2/3 பங்கு வாக்களித்தால் மட்டுமே குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டதிருத்தம் கொண்டு வர முடியும். மாநில சட்ட மன்றத்தால் சட்டதிருத்தம் கொண்டு வர முடியாது

 368 வது சட்டதிருத்தம் மூன்று வழிகளில் நடைபெறுகிறது

  • நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதி பெரும்பானமை
  • நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதி பெரும்பானமை
  • நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதி பெரும்பானமையுடன் பாதிக்கும் மேற்ப்ட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலை பெறுவதன் மூலம்

அரசியலமைப்பின் 42 வது சட்டத்திருத்தம் “ குறு அரசியலமைப்பு” என அறியப்படுகிறது

அரசியலமைப்பு சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் M.N.வெங்கடாசலய்யா தலைமையில் குழு அமைத்தது

2007 ஆம் ஆண்டு M.M பூஞ்சி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது

கலை சொற்கள்

  • முகவுரை- Preamble
  • சமய சார்பற்ற அரசு- Secular State
  • பாகுபாடு- Discrimination
  • நீதிப்பேராணை- Writ
  • இறையாண்மை- Sovereignty
  • பாரம்பரியம்- Heritage
  • தன்னாட்சி- Autonomy
  • பிரகடனம்- Proclamation

Book Back

சரியான விடையை தேர்ந்தெடு

  1. 1. கீழ்காணும் வரிசையில் “ முகவுரை” பற்றிய சரியான் தொடர் எது ?இறையாண்மை, சமதர்ம , சமயச் சார்பற்ற ஜனநாயக குடியரசு
  2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது ?ஒரு முறை
  3. இந்திய அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது? ஒற்றை குடியுரிமை
  4. ஒரு வெளிநாட்டவர், கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும்? இயல்புரிமை
  5. மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி (சமத்துவ உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சொத்துரிமை, கல்வி மற்றும் கலாச்சார உரிமை)
  6. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை பெற்றோர்களின் பூர்விக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லுதல்
  7. இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் இந்திய உச்சநீதிமன்றம் அணுகி தங்களது அடிப்படை உரிமைகளை பெறலாம்
  8. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் அம்பேத்கர் அவர்களால் ‘ இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது? அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
  9. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்? தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் அணையினால்
  10. நமது அடிப்படை கடமைகளை ரஷ்யா அரசியலமைப்பு இடமிருந்து பெற்றோம்
  11. எந்த பிரிவின் கீழ் நிதி நிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்? சட்டபிரிவு 360
  12. எந்த குழுக்கள்/ கமிஷன்கள் மத்திய மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன? சர்க்காரியா குழு, இராஜமன்னார் குழு

கோடிட்ட இடங்களை நிரப்புக

  • முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது
  • அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்கா    தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்  நவம்பர் 26 மற்றும் ஆண்டு  1949
  •   நீதி பேராணைகள் சட்டப்பிரிவு 32ல் குறிப்பிடப்படுகின்றன
  • இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள்   பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன

பொருத்துக

  1. குடியுரிமை சட்டம்-1955
  2. முகவுரை-ஜவஹர்லால் நேரு
  3. குறு அரசியலமைப்பு-42 வது அரசியலமைப்பு சட்டதிருத்தம்
  4. செம்மொழி-தமிழ்
  5. தேசிய அவசர நிலை-1962

 

 

 


Sunday, February 14, 2021

காந்தவியல்

                                      காந்தவியல் (6 th term 3)

  • காந்தம் மேக்னஸ் என்ற சிறுவன் கண்டறிந்ததால் மேக்னட் அல்லது மேக்னடைட் எனப்படுகிறது
  • இது கண்டறியப்பட்ட மெக்னீசியா என்ற ஊரினாலும் வந்திருக்கலாம் என்று கூறுவர்
  • காந்த தன்மையுடைய தாது மேக்னடைட்(இயற்கை காந்தம்) எனப்படும். இவை திசைகளை அறிய பயன்படுவதால் வழிகாட்டும் கற்கள் எனப்படும்
  • இரும்பினால் செய்யப்பட்ட காந்தம் செயற்கை காந்தம் (சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம், காந்த ஊசி),நீளகோள வடிவம், வட்ட வடிவம், உருளை வடிவம்
  • காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பொருள்கள் காந்ததன்மையுள்ள பொருள்கள் எனப்படுகின்றன(இரும்பு, கோபால்ட், நிக்கல்)
  • காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் காந்த தன்மையற்ற பொருள்கள் எனப்படும்(காகிதம், நெகிழி)
  • காந்தத்தின் ஈர்ப்புவிசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது. இந்த இரு முனைகளையும் காந்தத்தின் துருவங்கள் என அழைக்கிறோம்
  • தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் வடக்கு- தெற்கு திசையிலேயே ஒய்வு நிலைக்கு வரும்
  • சீனர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பே காந்த கற்களை பயன்படுத்தி திசையை கண்டுபிடித்தனர்
  • காந்த திசைகாட்டும் கருவி என்பது திசையறிய உதவும் ஒரு காந்த ஊசிப்பெட்டி ஆகும்
  • காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் (S-N,N-S) ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்த துருவங்கள் (N-N, S-S) ஒன்றையொன்று விலக்குகின்றன
  • வெப்பப்படுத்தும் போது உயரத்திலிருந்து கீழே போடும்பொழுது, சுத்தியால் தட்டும் பொழுது(கைபேசி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிக்கு அருகில் காந்தங்கள் வைத்தால்) காந்தங்கள் அதன் காந்த தன்மையை இழந்துவிடும்
  • மின்காந்த தொடர் வண்டி(maglev train-magnetic levitation train)  
  • காந்த ஈர்ப்பு விசையும் , விலக்கு விசையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி தொடர்வண்டி முன் செலுத்தப்படுகிறது. மின்சாரத்தினால் இது கட்டுபடுத்தப்படுகிறது
  • சிறப்பு-உராய்வு இல்லை, உயர் வேகம், இரைச்சல் இல்லை
  • சீனா , ஜப்பான தென் கொரியா இதை பயன்படுத்துகின்றன
  • இந்தியாவில்- மும்பை- டெல்லி, மும்பை-நாக்பூர், சென்னை- பெங்களுரு- மைசூரு போன்ற வழித்தடங்கள் மின்காந்த தொடர்வண்டிகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசிலிக்கப்பட்டு வருகின்றன

 Book back

1. பொருத்த்மான விடையளி

  1. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்  ஊசி
  2. மாலுமி திசைக்காட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் சீனர்கள்
  3. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே வடக்கு- தெற்கு திசையில் தான் நிற்கும்
  4. காந்தங்கள் தன் காந்ததன்மையை இழக்க காரணம் சுத்தியால் தட்டுவதால்
  5. காந்த ஊசிபெட்டியை பயன்படுத்தி திசையை அறிந்து கொள்ள முடியும்

2. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. செயற்கை காந்தங்கள் சட்டம்,லாடம்,வளையம் ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன
  2. காந்தத்தால் ஈர்க்க்ப்படும் பொருள்கள் காந்தத்தன்மை உடைய பொருள்கள்  எனப்படுகின்றன
  3. காகிதம் காந்தப் பொருளல்ல
  4. பழங்கால மாலுமிகள், திசையை கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய காந்தகற்களைக் கட்டித் தொங்க விட்டிருந்தனர்
  5. ஒரு காந்தத்திற்க்கு எப்பொழுதும் இரண்டு துருவங்கள்  இருக்கும்

3. சரியா? தவறா?

  1. உருளை வடிவ காந்த்த்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு (தவறு)
  2. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும் (சரி)
  3. காந்தத்தின் இரும்புதூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக் கொள்கின்றன (தவறு)
  4. காந்த ஊசியினை பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை    அறிந்து கொள்ளமுடியும் (சரி)
  5. இரப்பர் ஒரு காந்த பொருள் (அல்ல)(சரி)

4. பொருத்துக

  1. காந்த திசைக்காட்டி- காந்த ஊசி
  2. ஈர்ப்பு- எதிரெதிர் துருவங்கள்
  3. விலக்குதல்- ஒத்த துருவங்கள்
  4. காந்த துருவங்கள்- அதிக காந்த வலிமை

5. பொருத்தமில்லாததை வட்டமிட்டு காரணம் கூறுக

  1. இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர் குழாய், ஊசி
  2. மின் தூக்கி, தானியங்கி படிக்கட்டு, மின்காந்த இரயில் , மின்பல்பு
  3. கவர்தல், விலக்குதல், திசைக்காட்டுதல், ஒளியூட்டுதல்

6. பின்வரும் படங்களில் இரு சட்டக்காந்தங்கள் அருகருகே காட்டப்பட்டுள்ளன. பின்வரும் வார்த்தைகளை பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் என்ன நிகழும் என கூறு

(ஈர்க்கும், விலக்கும், திரும்ப ஒட்டிக் கொள்ளும்)


A.     எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்

B.      ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்

C.     எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்

D.     ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ள சட்டக் காந்தம் திரும்பி ஒட்டிக் கொள்ளும்

E.      ஒத்த துருவங்கள்  ஒன்றையொன்று விலக்கும்

F.      ஒன்ருக்கொன்று செங்குத்தாக உள்ள சட்டக்காந்தம் திரும்பி ஒட்டிக் கொள்ளும்

7. உயர்சிந்தனை வினாக்களுக்கு விடையளி

உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புதூளும் தரப்படுகிறது இதனைக் கொண்டு

அ. காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?

காந்தத்தினை ஒரு நூலில் கட்டி தொங்க விடவும் . காந்தம் ஓய்வு நிலைக்கு வந்தவுடன் வடக்கு தெற்கு துருவங்களை குறிக்கவும்

ஆ.காந்தத்தின் எந்த பகுதியில் அதிக அளவு இரும்பு தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன? ஏன்?

துருவப் பகுதியில் அதிக அளவில் ஒட்டிக் கொள்கின்றன.ட்துருவப் பகுதி அதிக அளவு வலிமையுடன் காணப்படுவதால்

8. படம் அ மற்றும் ஆ ஆகியவை இரு சட்டக்காந்தங்களை குறிக்கின்றன

அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன. எனில், சட்டகாந்தம் ‘ஆ’ வின் துருவங்களை கண்டறிந்து குறிக்கவும்



படம் –’அ’ வில் தெற்கு மற்றும் வட துருவங்கள் உள்ளன. படம் – ‘ஆ’ விற்கு அருகில் உள்ள முனை படம்-’ஆ’ வின் தென் துருவம். அடுத்து காணப்படுவது வட துருவம். ஏனெனில் எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும் தன்மையுடையது

9. ஒரு கண்ணாடி குவளை|முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?

  ஒரு சட்ட காந்தத்தை எடுத்து நூலில் கட்டி கொள்ளவும். பின்பு நீர் உள்ள குவளையில் காந்தத்தினை போடவும். குண்டூசி காந்த்ததில் ஒட்டி கொள்ளும். பின்பு குண்டூசியினை காந்தத்தில் இருந்து பிரித்து எடுக்கவும்