Pages

Thursday, October 15, 2020

9 th std samacheer kalvi tamil (lesson1 to3) -new syllabus

திராவிட மொழிக்குடும்பம்

  1. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது தமிழ்
  2. தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும்
  3. தம் எண்ணங்களை மெய்பாடுகள், சைகைகள்,ஒலிகள், ஓவியங்கள் முதலியவற்றின் மூலமாக பிறருக்கு தெரிவிக்க முயன்றனர்
  4. உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் பல மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன
  5. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது
  6. நான்கு மொழிக்குடும்பங்கள்                                                                           இந்தோ- ஆசிய மொழிகள்,திராவிட மொழிகள்,ஆஸ்திரோ ஆசிய மொழிகள்,சீன –திபத்திய மொழிகள்
  7. இந்தியா மொழிகளின் காட்சிசாலையாக திகழ்கிறது என்று ச.அகத்தியலிங்கம் கூறுகிறார்
  8. திராவிடர் பேசிய மொழி திராவிடம்
  9. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் குமரிலப்பட்டர்
  10. ஹீராஸ் பாரதியார் (தமிழ்->தமிழா->தமிலா->டிரமிலா->ட்ரமிலா-> திராவிடா->திராவிட) என மாறியதாக கூறுகிறார்
  11. அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராயெது மற்ற ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புடயது என்றார்
  12. முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) ஆராய்ந்து தனி ஒரு மொழிக்குடும்பத்தை (தென்னிந்திய மொழிகள்) சார்ந்து என்றார்
  13. ஹோக்கன் என்பார் இம்மொழிகளை  இணைத்து தமிழியன் என பெயரிட்டார்.இவை அறிய மொழிகளில் இருந்து மாறுப்பட்டவை என்றார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தை கொண்டிருந்தார்
  14. 1856 கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  என்னும் நூலை எழுதினார்
  15. திராவிட மொழிகள்                                                                                                 தென் திராவிட மொழிகள்(தமிழ்,கன்னடம்,மலையாளம், குடுகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா)                                                    நடுத்திராவிட மொழிகள்தெலுங்கு, கூயி, கூவி(குவி), கோண்டா, கோலாமி, நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா)      வடத்திராவிட மொழிகள்(குரூக், மால்கோ, பிராகுயி)
  16. இதை தவிர அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா சேர்த்து திராவிட மொழிகள் மொத்தம் 28 என கூறுவர்
  17. திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொற்களை கொண்டவை

திராவிட மொழிகள்

அடிச்சொல்

தமிழ்

கண்

மலையாளம், கன்னடம்

கண்ணு

தெலுங்கு, குடகு

கன்னு

குருக்

ஃகன்

பர்ஜி

கெண்

தோடா

கொண்

            18. எண்ணுப்பெயர்கள்

தமிழ்

மூன்று

மலையாளம்

மூணு

தெலுங்கு

மூடு

கன்னடம்

மூரு

துளு

மூஜி

19. வடமொழியில் கைவிரல்கள் பெண்பால் என்றும், கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுகின்றன(இது ஜெர்மன் மொழியிலும் உள்ளது)

20. ஆங்கிலத்தில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே  தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுப்பாட்டை காட்டுவதில்லை.ஆனால் திராவிட மொழிகள் வினைச்சொற்களை காட்டுகின்றன(வந்தான் -> உயர்தினை, ஆண்பால், படர்க்கை, ஒருமை)

21.தமிழ்

சங்க இலக்கியம்(பொ.ஆ.மு 5 -2 ஆம் நூற்றாண்டு)

தொல்காப்பியம்(பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டு அளவில்)

இதற்கான சான்று தமிழ் இலக்கிய வரலாறு சாகத்திய அகாதெமி

22.கன்னடம்

கவிராஜ மார்க்கம் (இலக்கியம்)- பொ.ஆ.மு 9 ஆம் நூற்றாண்டு

கவிராஜ மார்க்கம் (இலக்கணம்)- பொ.ஆ.மு 9 ஆம் நூற்றாண்டு

இதற்கான சான்று  இந்திய இலக்கிய கொள்கைகளின் பின்னனியில் தமிழ் இலக்கணம் செ.வை.சண்முகம்

23. தெலுங்கு

பாரதம்(இலக்கியம்)- பொ.ஆ.மு 11 ஆம் நூற்றாண்டு

ஆந்திர பாஷா பூஷணம்(இலக்கணம்)- பொ.ஆ.மு 12 ஆம் நூற்றாண்டு

இதற்கான சான்று  இந்திய இலக்கிய கொள்கைகளின் பின்னனியில் தமிழ் இலக்கணம்

24.மலையாளம்

ராமசரிதம்(இலக்கியம்)- பொ.ஆ.மு 12 ஆம் நூற்றாண்டு

லீலா திலகம்(இலக்கணம்)- பொ.ஆ.மு 15 ஆம் நூற்றாண்டு

இதற்கான சான்று மலையாள இலக்கிய வரலாறு சாகத்திய அகாதெமி

25. தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ் மொழியாகும்

26. இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜத்தீவு, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரிலேயா , கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் மொழி தமிழ்மொழி

27.இலங்கை, மொரிசியஸ் நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது

28.இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன

29.தமிழ் பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்கு பெருந்துணையாக அமைந்துள்ளது

தமிழ்

மலையாளம்

தெலுங்கு

கன்னடம்

துளு

கூர்க்

மரம்

மரம்

மானு

மரம்

மர

மர

ஒன்று

ஒண்ணு

ஒகடி

ஒந்து

ஒஞ்சி

 

நூறு

நூறு

நூரு

நூரு

நூது

 

நீ

நீ

நீவு

நீன்

நின்

இரண்டு

ஈர்ரெண்டு

ஈர்ரெண்டு

எரடு

ரட்டு

 

நான்கு

நால்,நாங்கு

நாலுகு

நாலு

நாலு

 

ஐந்து

அஞ்சு

ஐது

ஐது

ஐனு

 

                                  தமிழோவியம்

                                                             ஈரோடு தமிழன்பன்

  1. இக்கவிதை குறித்து முன்னுரையில் “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்
  2. இவரது படைப்புகள்- புதுக்கவிதை, சிறுகதை
  3. கவிதை நூல்கள் – ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ
  4.  வணக்கம் வள்ளுவ” என்னும் கவிதை நூலுக்கு 2004 ஆம் ஆண்டு சாகத்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது
  5. தமிழன்பன் கவிதைகள்” தமிழக அரசின் பரிசுப்பெற்ற நூல்
  6. இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம்,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன
  7. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடு  இலங்கை, சிங்கப்பூர்
  8. உலக தாய்மொழி நாள் பிப்ரவரி  21
  9. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்- பிங்கல் நிகண்டு
  10. “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்                                    இனிதாவது எங்கும் காணோம்”- பாரதியார்

தமிழ்விடு தூது

பொருள்

  1. குறம், பள்ளு- சிற்றிலக்கிய வகைகள்
  2. மூன்றினம்-துறை, தாழிசை, விருத்தம்
  3. திறமெல்லாம்-சிறப்பெல்லாம்
  4. சிந்தாமணி-சிதறாத மணி, சிவக சிந்தாமணி
  5. சிந்து- ஒரு வகை இசைப்பாடல்
  6. முக்குணம்- அமைதி,மேன்மை ஆகியவற்றை சுட்டும் குணம்
  7. இராசசம்-போர் தீவிரமான செயல்களை  குறிக்கும் குணம்
  8. தாமசம்- சோம்பல், தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம்
  9. பத்துகுணம்- செறிவ்ய், சமநிலை முதலிய பத்துகுண அணிகள்
  10. வண்ணங்கள் ஐந்து-  வெள்1லை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை
  11. வண்ணம் நூறு- குறில், அகவல், தூங்கிசை, வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு
  12. ஊனரசம்- குறையுடைய சுவை
  13. நவரசம்- வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
  14. வனப்பு- அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு
  15. கண்ணி- தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால்  தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்

நூல்குறிப்பு

  1. சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தூது
  2. இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் எனும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது
  3. “மாலை வாங்கி வருமாறு” அன்னம் முதல் வண்டு ஈறாக பத்தையும் தூது விடுவது
  4. இது கலிவெண்பாவால் இயற்றப்படுவதாகும்
  5. தமிழ்விடுதூது- மதுரை சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண் ஒருத்தி தமிழை தூது விடுவதாகும்
  6. 268 கண்ணிகளை கொண்டது இந்நூல்
  7. 1930 உ.வே.சா   முதன் முதலில் பதிப்பித்தார்

ஆசிரியர் யார் என தெரியவில்லை

வளரும் செல்வம்

  1. Laptop-மடிக்கணிணி
  2. Software-மென்பொருள்
  3. Browser-உலவி
  4. Crop-செதுக்கி
  5. Cursor-ஏவி(சுட்டி)
  6. Cyberspace-இணையவெளி
  7. Server-வையக விரிவுவலை வழங்கி
  8. Folder-உறை

பெயர்

எண் அளவு

முந்திரி

1/320

அரைக்காணி

1/160

அரைக்காணி முந்திரி

3/320

காணி

1/80

கால்விசம்

1/32

அரைமா

1/40

அரைவிசம்

1/32

முக்காணி

3/80

முக்கால் விசம்

3/64

ஒருமா

1/20

மாகாணி

1/16

இருமா

1/10

அரைக்கால்

1/8

மூன்றுமா

3/20

மூன்றுவிசம்

3/16

நாலுமா

1/5

 

  1. கடற்கலன்கள்- நாவாய், வங்கம், தோணி, கலம்
  2. தமிழில் நாவாய் என்பதே ஆங்கிலத்தில் நேவி எனப்படுகிறது
  3. உலகின் தொன்மையான மொழியாகவும், செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும்
  4. கிரேக்க மொழியில் தமிழ்மொழி                                                                                       எறுதிரான் -எறுதிரை                                                                                                       கலயுகோய் – கலன்                                                                                                 நீரியோஸ், நீரிய- நீர்                                                                                                       நாயு- நாவாய்                                                                                                                     தோணீஸ்- தோணி
  5. தமிழில் பா என்பது போல் கிரேக்கத்தில் அப்போலோ என்னும் கடவுணளுக்கு பாடப்படுவது பா ஆகும். கிரேக்க காப்பியம் (கி.மு. 8 ஆம் நூற்றாண்டு) இலியாத்தில் பாய்யியோனா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
  6. பா வகைகளில் ஒன்று வெண்பா. வெண்பாவி  ஒசை செப்பலோசை. கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் சாப்போ  எனப்படும்.ஆங்கிலத்தில் சேப்பிக் ஸ்டேன்சா எனப்படும்
  7. துன்ப சுவையுடைய பாடல்கள்  தமிழில் இளிவரல் எனப்படும். கிரேக்கத்தில் துன்ப சுவையுடைய பாடல்கள்  தமிழில் இளகியா எனப்படும்
  8. எளிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் என்னும் கிரேக்க நூலில்  கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்க்கு கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்ற குறிப்பு உள்ளது
  9. எளிதிரேசியன்-எறிதிரை-கடலை சார்ந்த பெரிய புலம் (புத்தகத்தின் பெயரிலும் தமிழ் எழுத்து உள்ளது)

நீரின்றி அமையாது உலகு

  1. உலக சுற்றுசூழல் நாள்- ஜூன் 5
  2. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்”- இளங்கோவடிகள்
  3. “நீரின்று அமையாது உலகம்”- திருவள்ளுவர்
  4. ”மழை உழவுக்கு உதவுகிறது.விதைத்த விதை ஆயிராமாக பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ  வேண்டும்”- மாங்குடி மருதனார்
  5. பாண்டி மண்டலத்தில் ஏரியை கண்மாய் என்பார்(கம்மாய் என்பது வட்டார வழக்கு)
  6. மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணற்றுக்கு-உறைக்கிணறு
  7. மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு-ஊருணி
  8. விரிவான பாசன திட்டம்- கல்லனை
  9. கல்லனையின் நீளம்- 1080 அடி
  10. கல்லனையின் அகலம்- 40 – 60 அடி
  11. கல்லனையின் உயரம்-15-18 அடி
  12. “நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன”-தொ.பரமசிவன்
  13. குளித்தல்- உடம்பினை தூய்மை செய்தல்(அழுக்கு நீக்குதல்)
  14. “குள்ள குளிரக் குடைந்து நீராடி”- ஆண்டாள்
  15. தெய்வச்சிலைகளை குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்
  16. சிற்றிலக்கியமாகிய பிள்ளைதமிழில் நீராடல் பருவம் என்ற ஒரு பருவம் உண்டு
  17. திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாக கடலாடுதல் என்பதை மேற்கொள்ளும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது
  18. சனி நீராடு-ஒளவையின் வாக்கு
  19. இந்திய நீர் பாசனத்தின் தந்தை- சர். ஆர்தர் காட்டன்
  20.   கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயர் சூட்டினார் சர். ஆர்தர் காட்டன்
  21. கல்லனையின் யுத்தியை பயன்படுத்தி 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்
  22. முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னி குவிக். பயன்பெறும் மாவட்டங்கள்(தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம்)
  23. மேற்கு தொடர்ச்சிமலையில் இருந்து வரும் நீர் பெரியாரில் ஓடி வீணாக கடலில் கலப்பதால் அங்கு ஓர் அணைக்கட்டினார். ஜான் பென்னி குவிக் தன் சொத்தை விற்று கட்டினார்
  24. நீர்நிலைகள் copy& paste

Book Back

1.நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது? புலரி 

2. பொருத்தமான விடையைத் தேர்க.

அ) நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது யாக்கை – ஒளவையார்
இ) மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

பட்ட மரம்

பொருள்

  1. குந்த- உட்கார
  2. கந்தம்- மணம்
  3. மிசை- மேல்
  4. விசனம்- கவலை

ஆசிரியர்

  1. கவியர் தமிழ் ஓளி(புதுவை மாவட்டம்)
  2. பாரதியின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்
  3. நூல்கள்- நிலைப்பெற்ற சிலை, வீராயி, கவியனின் காதல், மே தினமே வருக , கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழ் சமுதாயம், மாதவி காவியம்
BOOK BANK
1.‘மிசை’ – என்பதன் எதிர்ச்சொல் என்ன?கீழே

பெரியபுராணம்

பொருள்

  1. மா- வண்டு
  2. மது- தேன்
  3. வாவி- பொய்கை
  4. வளர்முதல்- நெற்பெயர்
  5. தரளம்- முத்து
  6. பணிலம்- சங்கு
  7. வரம்பு- வரப்பு
  8. கழை- கரும்பு
  9. கா-சோலை
  10. குழை-சிறுகிளை
  11. சூடு- நெல் அரிக்கட்டு
  12. சுரிவளை- சங்கு
  13. வேரி- தேன்
  14. பகடு- எருமைக்கடா
  15. பாண்டில்- வட்டம்
  16. சிமயம்- மலைஉச்சி
  17. சந்து- சந்தன மரம்
  18. நாகம்- நாகமரம்
  19. காஞ்சி- ஆற்றுப்பூவரசு
  20. அரும்பு- மலர், மொட்டு
  21. மாடு- பக்கம்
  22. நெருங்குவளை- நெருங்குகின்ற சங்குகள்
  23. கோடு- குளக்கரை
  24. ஆடும்- நீராடும்
  25. மேதி- எருமை
  26. துதைந்து எழும்- கலங்கி எழும்
  27. கன்னி வளை- இளமையான வாளை மீன்
  28. நாளிகேரம்- தென்னை
  29. கோளி- அரச மரம்
  30. சாலம்- ஆச்சா மரம்
  31. தமாலம்- பச்சிலை மரம்
  32. இரும்போந்து- பருத்த பனைமரம்

நூற்குறிப்பு

  1. சுந்தரர் எழுதிய -திருத்தொண்டத்தொகை”- அடியார்களின் பெருமையை கூறுகிறது
  2. நம்பியாண்டார் நம்பி- திருத்தொண்டர் திருவந்தாதி”-ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பை கூறுகிறது
  3. இதனை அடிப்படையாக கொண்டு சேக்கிழார் ஒவ்வொரு புராணத்திற்கு ஒரு அடியார் என 63 அடியார்களை பற்றி பாடுவது “திருத்தொண்டர் புராணம்”
  4. இந்நூலின் பெருமைக் காரணமாக “பெரிய புராணம்” என்று அழைக்கப்படுகிறது
  5. சேக்கிழார் கி.பி.12 ஆம் நூற்றாணடை சேர்ந்தவர்
  6. சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கனின் அவையில் முதலமைச்சராக இருந்தார்
  7. “பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ”- என சேக்கிழாரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டினார்

புறநானூறு

  1. ”வான்  உட்கும் வடிநீண் மதில்                                                                               மல்லல் மூதூர் வய வேந்தெ”(பாண்டியன் நெடுஞ்செழியனை பற்றி பாடியது)
  2. திணை-பொதுவியல், துறை(முதுமொழிக்காஞ்சி)
  3. பொதுவியல்- வெட்சி முதல் புறத்தினைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும், முன்னர் சொல்லப்படாத செய்திகளை பற்றி கூறுவது
  4. முதுமொழிக்காஞ்சி துறை-அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையை கூறுதல்

பொருள்

  1. யாக்கை- உடம்பு
  2. புணரியோர்- தந்தவர்
  3. புன்புலம்- புல்லிய நிலம்
  4. தாட்கு- முயற்சி, ஆளுமை

நூல்குறிப்பு

  1. எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
  2. பண்பாட்டு கருவூலமாக விளங்குகிறது
  3. “குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து                                         உளம்தொட்டு உழுவயல் ஆக்கி-வளம்தொட்டுப்                                                 பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தினான்                               ஏகும் சொர்க்கத்து இனிது”- சிறுபஞ்சமூலம்
Book Bank
1. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன? வளம்

தண்ணீர்

ஆசிரியர்

  1. கந்தர்வன்(இயற்பெயர்- நாகலிங்கம்)
  2. இரமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்
  3. தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்கு துறையில் பணியாற்றியவர்
  4. சிறுகதைகள்-சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்

வளர்க்க தேவையான தண்ணீர்

  1. 1 கிலோ ஆப்பிள்- 22 லிட்டர் தண்ணீர்
  2. 1 கிலோ சர்க்கரை- 1780 லிட்டர்
  3. 1 கிலோ அரிசி- 2500  லிட்ட்ர்
  4. 1 கிலோ காப்பிக்கொட்டை- 18,900 லிட்டர்

ஏறு தழுவுதல்

  1. கலித்தொகையில் ஏறு தழுவுதல் ப்ற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
  2. “நீறு எடுப்பவை நிலம் சாடுபவை                                                                             மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்                                துளங்கு இமில் நல் ஏற்றினம் பல களம்புகும்                                                    மள்ளர் வனப்பு  ஒத்தன”- கலித்தொகை
  3. ஏறுகோள் பற்றி- சிலப்பதிகாரம்(புறப்பொருள் வெண்பாமாலை)
  4. ஏறுதழுவுதல்-பள்ளு இலக்கியம்
  5. எருதுகட்டி(அல்லது)மாடுதழுவுதல்-கண்ணுடையம்மன் பள்ளு
  6. “கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே                                                                              எருது விளையாடிப்பட்டான் சங்கன் மகன்                                                                    பெரிய பயலு நட்டகல்லு”-எருது பொருதார்கல்(நடுகல்)
  7. கரிக்கையூரில் கோத்தகிரி என்னும் இடத்தில் மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் உள்ளது
  8. மேட்டுபட்டியில் கல்லூத்து-> காளையை ஒருவர் அடக்கவது போன்ற ஓவியம்
  9. தேனி மாவட்டம்->மயிலாடும் பாறை->சித்திரக்கல் புடவில்-> காளை ஒவியம் உள்ளது
  10. சிந்துவெளி->கல்முத்திரை->தமிழர்களின் ஏறு தழுவதலை குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்
  11. ஜல்லிகட்டு->1. சல்லி(மாட்டின் கழுத்தில் கட்டபடும் வளையம்,2. பண முடிச்சு(சல்லி நாணயங்கள்)
  12. காளை சண்டை- ஸ்பெயின் நாடு-ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன
  13. ஏறுகோள் – எருதுகட்டி
  14. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  15. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

மணிமேகலை

பொருள்

  1. சமயக் கணக்கர்- சமயத் தத்துவவாதிகள்
  2. படைமாக்கள்- பல மொழிபேசும் மக்கள்
  3. குழீஇ- ஒன்றுகூடி
  4. தோம்- குற்றம்
  5. கோட்டி- மன்றம்
  6. பொலம்- பொன்
  7. வேதிகை- திண்ணை
  8. தூணம்- தூண்
  9. தாமம்- மாலை
  10. கதலிகை கொடி- சிறு சிறு கொடியாக பல கொடிகள்
  11. காமூன்று கொடி- கொம்புகளில் கட்டும் கொடி
  12. வசி-மழை
  13. செற்றம்-சினம்
  14. கலாம்- போர்
  15. துருத்தி-ஆற்றிடைக்குறை
  16. ஐம்பெருங்குழு- அமைச்சர், சடங்கு செய்விப்போர், படைத்தலைவர்,தூதர், சாரணர்(ஒற்றர்)
  17. எண்பேராயம்-கரணத்தியலவர், கரும விதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர்,படைத்தலைவர், யானை வீரர், இவுளி மறவர்

நூல் குறிப்பு

  1.  மணிமேகலை துறவு என்னும் வேறு பெயர் உண்டு
  2. தமிழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலங்கள் மணிமேகலை, சிலப்பதிகாரம்
  3. பெண்மையை முதன்மை படுத்தும் புரட்சிக்காப்பியம்
  4. பெளத்த சமய சார்புடையது
  5. 30 காதைகள் உள்ளன – முதல் காதை விழாவறை காதை

ஆசிரியர் குறிப்பு

  1. கூலவாணிகன் சித்தலை சாத்தனார்(இயற்பெயர்- சாத்தன்)
  2. திருச்சிராப்பள்ளீ->சித்தலை பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
  3. கூலவாணிகம் செய்தவர்(கூலம்- தானியம்)
  4. இளங்கோவடிகள் சமகாலத்தவர்
  5. தண்டமிழ் ஆசான், சாத்தன் , நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரை பாராட்டியுள்ளார்

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இது கேள் மன்னுயிக்கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்”- மணிமேகலை

அகழ்வாய்வுகள்

  1. 1863 இல் இராபர்ட் புரூஸ்ட்->பல்லாவரத்தில் எலும்பையும், கற்கருவியும் கண்டு பிடித்தார்(இந்த க்ற்கருவியே இந்தியாவில் கண்டு எடுக்கப்பட்ட முதல் கற்கருவி)
  2. இதற்கு முன்பு கோவையில் ரோமானியர்களின் பழங்காசுகள் கிடைத்தன
  3. அரிக்கமேடு அகழ்வாய்வில் ரோமானிய மண்பாண்டங்கள் கிடைத்தன
  4. 1914->ஆதிச்சநல்லூரில்-முதுமக்கள் தாழிகள் கிடைத்தன
  5. “பழையன கழிதலும் புதியன புகுதலும்                                                            வழுவல கால வகையினானே”- பவணந்தி முனிவர்
  6.  மதுரை அருகில் உள்ள கிழடியில் தோண்ட தோண்ட தமிழர்களின் நாகரிகம் தெரிகிறது.(தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், நீர் சேகரிக்கும் பெரிய மட்கலன்கள், சிறிய குடுவைகள், உறைக்கிண்றுகள், சுடுமண் கூரை ஓடுகள்)2300 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டவை
  7. பட்டிமண்டபம் என்பதே சரியான வார்த்தை
  8. “மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்                                                     பகைப்புறத்துக்கொடுத்த பட்டிமண்டபம்”- சிலப்பதிகாரம்
  9. “பட்டிமண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்”-மணிமேகலை
  10. “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை எட்டினோடு இரண்டு அறியேனையே”-திருவாசகம்
  11. ”பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்”-கம்பராமாயணம்(பாலக்காண்டம், நகரப்படலம்)

திருக்குறள்

  1. உலக பண்பாட்டிற்க்கு தமிழ் இனத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்
  2. உலக பொதுமறை
  3. சிறப்பு-முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், தமிழ் மறை, முதுமொழி, பொருளுரை
  4. உரை எழுதியவர்கள்- தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், தருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் (10 நபர்கள்)
  5. பரிமேலழகர் உரையே சிறந்தது
  6. பதினென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று
  7. திருக்குறளை போற்றும் நூல் திருவள்ளுவமாலை
  8. தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல் இந்நூல்
  9. சிறப்பு பெயர்- நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வபுலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாதப்போதார், பெருநாவலர்


No comments:

Post a Comment