இயந்திரங்களும், இணைய வழி பயன்பாடும்
மின்னனு இயந்திரங்கள்(பயணச்சீட்டு,
உணவு கட்டணச்சீட்டு)
- கணிணி பயன்பாடு
- 1.
சமயல்
எரிவாயு பதிவு
- 2.
மின்
கட்டணம் செலுத்துவது
- 3.
பயணத்திற்கு
முன் பதிவு செய்வது
- 4.
அங்காடி
சென்று பொருட்களை வாங்குவது
- ஒளிப்படி இயந்திரம்(photo copier or Xerox)
1948 இல் கந்தகம் தடவிய துத்தநாக தட்டை கொண்டு, செஸ்டர் கார்ல்சன் முதன் முதலாக ஒளிப்படியை எடுத்தார்
சிரோகிராஃபி(xerography)
கிரேக்க மொழியில் உலர் எழுத்து முறை (dry writing)
செஸ்டர் கார்ல்சன்
-1959 இல் Xerox இயந்திரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்
தொலைநகல்
இயந்திரம்(fax)
- கோப்புகளையும் ஒளிப்படங்களையும் ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்ப பயன்படுகிறது
- 1846- ஸ்காட்லாந்து -> அலெக்ஸாண்டர் பெயின் -> மின்னாற்றல் உதவியுடன் அச்சிடும் கருவியை கண்டுபிடித்துள்ளார்
- 1846- இத்தாலி-> ஜியோவான்னிகாசில்லி-> பான்டெலிகிராஃப் என்ற தொலை நகல் கருவியை உருவாக்கினார்
- 1865-பாரிஸ்-> லியோன்(தொலை நகல் சேவை தொடங்கப்பட்டது)
- 1985- அமெரிக்கா-> ஹாங்க்மாக்னஸ்கி->கணிணி மூலம் தொலை நகல் எடுக்கும் (காமா ஃபேக்ஸ்) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்
தானியங்கி
பண இயந்திரம்(automated teller machine)
- 1967- இன்ஹ்கிலாந்து-> ஜான் ஷெப்பர்டு பாரன்) தானியங்கி கருவியை (பார்க்லேஸ் வங்கிகாக இலண்டனில்) கண்டுபிடித்தார்
- காசோலையில் உள்ள குறியீடுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் பொல் பணம் வரும்
அட்டை தேய்ப்பி
இயந்திரம்(swiping machine)
- கட்டணம் செலுத்தும் கருவி, விற்பனைக் கருவி தற்காலத்தில் பயன்படுத்தபடும் அட்டைகளில் சில்லு(chip)பயன்படுத்தப்படுகிறது
- தமிழக அரசின் நியாய விலை கடை திறனட்டைக்கருவி(TNEPDS)
- திறன் அட்டைகள்(smart cards) வருடப்படுகிறது(scanning)விற்பனை செய்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (sms) அனுப்பபடுகிறது
ஆளறி சோதனைக்
கருவி(biometric device)
- கைரேகை, முகம், விழித்திரை ஆகியவற்றில் ஒன்றையோ, அனைத்தையுமோ பதிவு செய்து மறுபடி ஆளை அறியவும் பயன்படும்(ex. Adhar card)
- அரசு நிறுவனங்களிலும் , வருகை பதிவுக்காகவும், வெளியேறுகை பதிவுக்காகவும் பயன்படுகிறது
இணைய வணிகம்
- 1979- இங்கிலாந்து->மைக்கேல் ஆல்ட்ரிச்->இணைய வணிகத்தை கண்டுபிடித்தார்
- 1989- அமெரிக்கா->இணையவழி மளிகை கடை தொடங்கப்பட்டது
- 1991- பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது
- இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணைய வழி பதிவு(IRCTC)
- 2002-அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது சராசரியாக ஒரு நாளைக்கு 29 பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டன
- 2015-ஏப்ரல் 1 -> ஒரு நாளில் 13 இலட்சம் பயணசீட்டுகள் பதிவு செய்யப்பட்டது
- தற்பொழுது-> ஒரு நிமிடத்திற்கு -> 1500 பயணசீட்டுகள் பதிவு செய்யும் வகையிலும், 3 இலட்சம் பயணாளர்கள் ஒரே நேரத்தில் சேவையை பயன்படுத்தமுடியும்
இணையப் பயன்பாடு
பிறப்பு சான்றிதழ்,
வருமான வரி சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன
கல்வி உதவித்தொகை
- 10 வகுப்புக்கு பின்->தேசிய திறனறித் தேர்வு
- 8 வகுப்புக்கு பின் -> தேசிய திறனறித் தேர்வு மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு
- கிராமபுற 9 வகுப்பு-> ஊரக திறனறித் தேர்வு
- “நான் இங்கிலாந்திலோ,
உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கி பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு வழியை
சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது. அங்கு
சாக்லேட் இங்கு பணம்”- ஜான் ஷெப்பர்டு பாரன்
- ஆரம்பத்தில் பெட்ரோல் தருவதற்கு பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது
- 1962- இங்கிலாந்து-> ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைஅக்கு காப்புரிமை பெற்றிருந்தார்
- 1990- டிம் பெர்னெர்ஸ்லீ-> வையக விரிவு வலை(www-server)வழங்கினார்.
- “இணையத்தில் இது இல்லை எனில் உலகத்தில் அது நடைபெறவேயில்லை”- டிம் பெர்னெர்ஸ்லீ
ஓ என் சமகாலத்தோழர்களே!
ஆசிரியர்
- வைரமுத்து
- ஊர்-தேனி->மெட்டூர்
- பத்மபூஷன் விருதைப்பெற்றவர்
- கள்ளிக்காட்டு இதிக்காசத்திற்காக 2003 ஆம் ஆண்டு சாகத்திய அகாதெமி விருது பெற்றவர்
- சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது 7 முறையும், மாநில விருது6 முறையும் பெற்றுள்ளார்
- இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பெயர்கப்பட்டுள்ளன.
“புலவர் பாடும்
புகழுடையேன் விசும்பின்
வலவன் ஏவா
வான ஊர்தி” புறநானூறு
“அந்தரத்
தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத்தால்
தம நூல்கரை கண்டவன்
வெந்திற லான்,
பெருந் தச்சனைக் கூவி, ஓர்
எந்திர வூர்தீஇ
யற்றுமின், என்றான் ”- சீவகசிந்தாமணி
உயிர் வகை
- ஒரறிவு- உணர்வு->புல், மரம்
- ஈரறிவு- உணர்வு,சுவை-> சிப்பி, நத்தை
- மூவறிவு- உணர்வு,சுவை, நுகர்வு->கரையான், எறும்பு
- நான்கறிவு- உணர்வு,சுவை, நுகர்வு,காணல்->நண்டு, தும்பி
- ஐந்தறிவு- உணர்வு,சுவை, நுகர்வு,காணல்,கேட்டல்->பறவை, விலங்கு
- ஆறறிவு- உணர்வு,சுவை, நுகர்வு,காணல்,பகுத்தறிதல்(மனம்)->மனிதன்
தொல்காப்பியம்
- தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்
- பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது
- எழுத்து, சொல், பொருள் என 3 அதிகாரம், 27 இயல்களையும் கொண்டுள்ளது
- எழுத்து, சொல் அதிகாரம்-> மொழி இலக்கணம்
- பொருள் அதிகாரம்->தமிழரின் அகம்,புறம் வாழ்வியல் நெறிகளை விளக்குகிறது
- இந்நூலில் பல அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன
- பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்
விண்ணையும் சாடுவோம்
சிவன்
- இஸ்ரோவின் 9 வது தலைவர்.இந்த பதவியை ஏற்கும் மதல் தமிழர்
- 2015- விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்தார்
- பிறந்த ஊர்- நாகர்கோவில்-> சரக்கல்விளை கிராமம்
- வல்லங்குமாரவிளையிலுள்ள அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தார்
- அப்பா-> கைலாச வடிவு(மாங்காய் வியாபாரம்)
- கணிணி அறிவியலில் சேர்ந்தார், பின்பு ஆசிரியரின் அறிவுரைப்படி M.I.Tல் Aeronatical engg படித்தார், ME படித்தார். விகரம் சாராபாய் நிறுவனத்தில் பொறியாளராக சேர்ந்தார்
- 1983- PSLV திட்டத்தை தொடங்கினார்
- சித்தாரா செயலியை உருவாக்கினார்( SITARA-Software for Integrated Trajectory Analysis with Real time Application)
- இந்த software உருவாக்கியதால் அப்துல்கலாம் இவரை எப்பொழுதும் “மென் பொறியாளர்” என்றே அழைப்பார்
- 1957-ஆம் ஆண்டு முதலே இரஷ்யா உட்பட பல நாடுகள் ஏவுகணையை இராணுவத்திற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்
- ஆனால் விக்கிரம் சாராபாய் மட்டுமே இந்த தொழில் நுட்பத்தை மக்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்தித்தார்
- இஸ்ரோவின் முக்கிய நோக்கம் இந்த தொழில் நுடப்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் மக்களுக்கு தரமான சேவைகளை கொடுப்பது தான்
- Navic->என்ற செயலி பொருத்தப்பட்ட கருவி, கடல் எல்லை தாண்டினால் எச்சரிக்கும், மீன்கள் அதிகம் உள்ள பகுதியை காட்டும்
- விண்வெளித்துறையில் மூன்று வகையான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன 1. செயற்கை கோளை ஏவுவதற்கான தொழில் நுட்பம் 2. செயற்கை கோளை ஏற்றி செல்லும் ஏவு ஊர்தி 3. ஏவு ஊர்தியிலிருந்து விடுப்பட்ட செயற்கைகோள் தரும் செய்திகளை பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருதல்
- இந்த மூன்றையுமே இந்தியாவிலேயே உருவாக்கியிருக்கின்றோம்
- G.S.L.V மார்க்-2 ஏவுகணை 2.25 டன்களிலிருந்து , 3.25 டன்கள் சுமக்கும் திறன் கொண்டதாக மாற்றப்படும்
- G.S.L.V மார்க்-2 ஏவுகனை சுமக்கும் திறன் 3 டன்களிலிருந்து , 6 டன்களாக அதிகரிக்கப்ப்டும்
- சந்திராயன் 1 -நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாக கொண்டது
- சந்திராயன் 2 – ஆய்வுப்பயண ஊர்தி இறங்குதலை நிலவின் மேற்பரப்பில் செயல்படுத்தப்படும்
- இஸ்ரோவின் மூன்று வகையான திட்டங்கள் 3 ஆண்டுகள், 7 ஆண்டுகள், 15ஆண்டுகள்
விக்ரம்சாராபாய்
- இவர் “இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை”
- முதல் செயற்கைகோள் ஆர்யப்பட்டா ஏவுதலுக்கு காரணமாக இருந்தவர்
- 24,000 கிராமங்களில் உள்ள 5 லட்சம் மக்களுக்கு க்ல்வியை ந்டுத்து செல்ல உதவினார்
- இவரது பெயரில் விண்வெளி மையம் திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது
- இங்கு (Avionics, Aeronautics, Composites IT) ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன
- இவரது முயற்சியால் தான் இஸ்ரோ தொடங்கப்பட்டது
அப்துல்கலாம்
- இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்
- இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்
- இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்ற்ப்பட்டவர்
- பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்
- பாரத ரத்னா விருது பெற்றவர்
- இவர் பள்ளி கல்வியை தமிழில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
வளர்மதி
- அரியலூர் மாவட்டம்
- 2015-> தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிஞர்
- 1984-> முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்
- 2012->உள் நாட்டிலேயே உருவான “ரேடார் இமேஜிங் செயற்கைகோள்”(RISAT-1)இயக்குநர்
- இவர் இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குனாராகா பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்
அருணன் சுப்பையா
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளரும், திட்ட இயக்குனரும் ஆவார்
- ஊர்-> திருநெல்வேலி -> ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி
- 1984->திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்
- தற்பொழுது->பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் பணிபுரிகிறார்
- 2013-> மங்கள்யான் செயற்கோளை இருவாக்கிய “இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன்” திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கிறார்
மயில்சாமி
அண்ணாதுரை
- இளைய கலாம் என அழைக்கப்படுகிறார்
- ஊர்->கோவை-> பொள்ளாச்சி-> கோதவாடி ஊர்
- பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் பயின்றவர்
- இது வரை 5 முனைவர் பட்டம் பெற்றுள்ளார்
- 1982-> இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்
- தற்போது இயக்குநராக பணிபுரிகிறார்
- சந்திராயன் 1- திட்ட இயக்குநராக இருந்தார்
- சந்திராயன் 2 விலும் பணிபுரிகிறார்
- சர்.சி.வி.ராமன் விருது பெற்றுள்ளார்
- தமது அறிவியல் அனுபவங்களை “கையருகே நிலா” என்னும் நூலாக எழுதியுள்ளார்
கல்வியில் சிறந்த பெண்கள்
- சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்-> ஒளவையார், ஓக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார்,பொன்முடியார், அள்ளுர் நன் முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்
- சமண மதமும், புத்த மதமும் வளர்ந்த காலத்திலே மணிமேகலை, மாதவி மகள் கல்வி கற்ற பெண்ணாக இருந்தார்
- பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் கல்வி கற்றவர்கள்
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி
முத்துலெட்சுமி(1886- 1968)
- இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
- சட்ட மேலவைக்கு தேர்ந்த்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
- தேவதாசிமுறை ஒழிப்புச்சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம், ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்
- அடையாறில் 1930 இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்
- சட்டசபை உறுப்பினர், மகளிருக்கெதிரான கொடுமைகளை எதிர்ப்பு, மனிதகுல மாணிக்கமாக திகழ்ந்தார்
மூவலூர் இராமாமிர்தம்
அம்மையார்(1883-1962)
- சமூக சேவகி
- தமிழகத்தின் சமூகசீர்திருத்தவாதி
- தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற துணைநின்றவர்
- தமிழக அரசு, 8 ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது
“முடியாது
பெண்ணாலே என்கின்ற
மாயையினை
முடக்க எழுந்த்வர்”-யார்?- தந்தை பெரியார்
“விடியாது
பெண்ணாலே என்கின்ற
கேலியினை
மதித்து துவைத்தார்”-யார்?- பாரதியார்
“பெண்ணடிமை
தீரும்வரை மண்ணடிமை
தீருமோ வென
இடிமுழக்கம் செய்தவர்:-யார்?- பாரதிதாசன்
1882ல் ஹண்டர்
குழு முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரைத்தது. இதனால் மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ்
பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார்கள்
இன்றைய காலக்கட்டத்தில்
80 ஆயிரம் குழந்தைகள் கல்விபெற உதவியாக இருந்தவர் கைலாஷ் சத்யார்த்தி . 2014 ல் நோபல்
பரிசு வாங்கினார்
பண்டித
ரமாபாய்(1858-1922)
- இவர் சமூக தன் ஆர்வலர்
- தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதராகியவர்
- பெண்களின் உயர்வுக்கு துணை நின்றவர்
- ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்(1870-1960)
- வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்
சாவித்ரிபாய்
பூலே(1831-1897)
- 1848 இல் பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்
- இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்
மலாலா
பாகிஸ்தானில்
பெண்கல்வி வேண்டுமென போராட்டக் களத்தில் இறங்கிய போது மலாலாவின் வயது பன்னிரண்டு(1997)
நீலாம்பிகை
அம்மையார்(1903-1943)
- மறைமலை அடிகளின் மகள்
- தனித்தமிழ் கட்டுரை, வடச்சொல்- தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள்
- தனித்தமிழ் பற்றுடையவர்
ஈ.த.இராஜேஸ்வரி
அம்மையார்(1906-1955)
- தமிழ் இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்
- தொல்காப்பியம், கைவல்யம், திருமந்திரம் போன்ற நூல்களில் அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார்
- இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார்
- சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்
திட்டங்கள்
- பட்டமேற்படிப்பு- ஈ.வே.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம்
- கல்வி, திருமண உதவித்தொகை- சிவகாமி அம்மையார் கல்வி உதவி திட்டம்
- குழந்தை திருமண தடுப்பு சட்டம் -1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம்
1964 ஆம்
ஆண்டு கோத்தாரி கல்விக்குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்துகிறது
குடும்ப விளக்கு
பொருள்
- களர்நிலம்- பண்படாத நிலம்
- நவிலல்- சொல்லல்
- வையம்- உலகம்
- மாக்கடல்- பெரிய கடல்
- இயற்றுக- செய்க
- மின்னாளை- மின்னலைப் போன்றவளை
- மின்னாள்- ஒளிரமாட்டாள்
- தணல்- நெருப்பு
- தாழி- சமைக்கும் கலன்
- அணித்து- அருகில்
- தவிர்க்க ஒணா- தவிர்க்க இயலாத
- யாண்டும்- எப்பொழுதும்
நூல் குறிப்பு
- குடும்பவிளக்கு(குடும்ப உறவுகள் அன்பு என்பதால் பிணைந்துள்ளது என்பதை உணர்த்துகிறது)
- இந்நூல் ஐந்து பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்
குறிப்பு
- பாரதிதாசன்(இயற்பெயர்-கனக சுப்புரத்தினம்)
- படைப்புகள்-பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்
- கவிதைகள்-”பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்”
- பிசிராந்தையார் நாடக நூலுக்கு சாகத்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது
“பட்டங்கள்
ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில்
பெண்கள் நடத்த வந்தோம்”- பாரதி
“மங்கையராய்
பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல்
வேண்டுமம்மா”- கவிமணி
“பெண் எனில்
பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில்
இருக்கும் வரைக்கும்
உருப்படல்
என்பது சரிப்படாது”- பாவேந்தர்
சிறுபஞ்சமூலம்
“பூவாது காய்க்கும்
மரம் உள, நன்று அறிவார்
மூவாது மூத்தவர்,
நூல் வல்லார், தாவா”- எடுத்துக்காட்டு உவமையணி
பொருள்
- மூவாது- முதுமை அடையாமல்
- நாறுவ- முளைப்ப
- தாவா- கெடாதிருத்தல்
நூல் குறிப்பு
- சிறுபஞ்சமூலம் – பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று
- சிறுபஞ்சமூலம்-கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
- இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன
ஆசிரியர்
குறிப்பு
- காரியாசன்(இயற்பெயர்- காரி)
- மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்
- ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்
- மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரை சிறப்பிக்கிறது
சாதனைக்கு
வயதுக்கு தடையன்று
- 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்
- 11 வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி’ பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்
- 15வது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ
- 16வது வயதிலேயே தமது தந்தையின் போர் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்ஸாண்டர்
- 17 வது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ
வீட்டிற்கோர் புத்தகசாலை
- “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை ச்ந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” – ஆபிரகாம்லிங்கன்
- உணவு, உடை அடிப்படை தேவை- அந்த தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்-அண்ணா
அறிஞர்
அண்ணா
- 2009 ஆம் ஆண்டு அண்ணா உருவம் பதித்த நாணயம் வெளியிடப்பட்டது
- 2010 தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது
அண்ணாவின்
பொன்மொழிகள்
நூல்குறிப்பு
- வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
- “தென்னகத்து பெர்னாட்ஷா” என அழைக்கப்பட்டார்
- தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர்
- “தம்முடைய திராவிட சீர்த்திருத்த கருத்துகளை நாடகங்கள் , திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர்
- சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு(1935) பணியாற்றினார்
- ஹோம்ரூல்,ஹோம்லேண்ட்,நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்
- முதலமைச்சராக பொறுப்பை ஏற்றதும் இருமொழி சட்டத்தை உருவாக்கினார்
- சென்னை மாகாணத்தை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றியவர்
புகழுக்குறிய
நூலகம்
- ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
- உலக அளவில் தமிழ் நூலல்கள் அதிக உள்ள நூலகம் (கன்னிமாரா நூலகம்- சென்னை எழும்பூரில் )உள்ளது
- இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் –திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
- இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் -தேசிய நூலகம்(கொல்கத்தா-1836) இது ஆவணக் காப்பக நூலகம்
உலகின் மிகப்பெரிய
நூலகம்-லைப்ரரி ஆப் காங்கிரஸ்(அமெரிக்கா)
தேசிய நூலக
நாள்(ஆகஸ்ட் 9)-சீர்காழி இரா.அரங்கநாதன் பிறந்த நாள்)
“உலகில் சாகவரம்
பெற்ற பொருள்கள் புத்தகங்களே”-கதே
சிற்பக்கலை
சிற்பங்களை
அவற்றின் உருவ அமைப்பு அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள் புடைப்பு(முன்
பகுதி மட்டும் தெரியும் படி இருப்பது) சிற்பங்கள் இரண்டாக பிரிக்கலாம்
நான்கு நிலைகள்(உலோகத்தினாலும்,
கல்லினாலும் செய்யப்படுகின்றன)
- தெய்வ உருவங்கள்
- இயற்கை உருவங்கள்
- கற்பனை உருவங்கள்
- முழுவடிவ உருவங்கள்
சிற்பிகளை
‘கற்க்விஞர்கள்’ என்று சிறப்பிக்கின்றனர்
தூண்களில்
யாளி, சிங்கம்,தாமரை, மலர் இடம் பெறும்
பல்லவர்
- பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கற்றூன்கள், கோவில் கட்டடங்கள், சுற்றுசுவர்கள் நுழைவுவாயில்கள் சிற்பங்கள் உள்ளன
- பல்லவர் கால சிற்பகலைக்கு மாமல்லபுர சிற்பங்கள் சிறந்த சான்றாகும்
- சிற்பங்களின் கலைக்கூடம்- காஞ்சி கைலாசநாதர் கோவில் (சுற்றுசுவர் முழுவதும்)
- காஞ்சி வைகுந்த பெருமாள் கோவில்-கோவிலின் உட்புற சுவரில் தெய்வ உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன
- குடைவரை கோவில்கள்-நுழைவாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று உள்ளது
- மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை இடங்களில் பல்லவர் கால சிற்பங்கள் சிறந்த கலை நுட்பத்துடன் அமைந்துள்ளன
பாண்டியர்காலம்
- திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம். பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோவில்கள், கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டு வான் கோவில் அமைந்துள்ள சிற்பங்களும் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்கு சான்றாகும்
சோழர்கால
சிற்பம்
- முதலாம் இராசராசன் – தஞ்சை பெரியகோவில்
- முதலாம் இராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
- இரண்டாம் இராசராசன் – தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்
- மூன்றாம் குலோத்துங்கசோழன் – திரிபுவன வீரேசுவரம் கோவில்
- இரண்டாம் பராந்தகன் – மூவர் கோவில்(புதுக்கோட்டை)
- சிறப்பு- தஞ்சை பெரியகோவில் – 14 அடி உயரமுள்ள வாயில்காவலர் உருவங்களும், மிகப்பெரிய நந்தியும் சிறப்பு
- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை(நடன முத்திரைகளுடன் சிற்பங்கள்)
- சோழர் காலத்தில் மிகுதியான செப்பு திருமேனிகள் உருவமைக்கப்பட்டன
- சோழர்காலம் செப்புதிருமேனிகளின் பொற்காலம்
விஜயநகர மன்னர்
சிற்பம்
- உயர்வான கோபுரங்கள், அக்கோபுரங்களில் சிதைகளாலான சிற்பங்கள்
- தெலுங்கு, கன்னட பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் அதன் தாக்கம் உள்ளது
- குதிரையின் உருவங்களை சிற்பங்களில் இடம் பெற செய்தனர்
- வீரர்கள் அமர்ந்த நிலையில் குதிரைகள் முன்கால்களை தூக்கி நிற்பது போன்று சிற்பங்கள் மண்டப தூண்களில் அமைந்தனர்
நாயக்கர்
கால சிற்பங்கள்
- ஆயிரம் கால் மண்டபங்கள் அமைந்தனர்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இராமேசுவரம் பெருங்கோவில், திரிநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில், திண்டுக்கல் பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோவில்களில் கலைநயம் மிக்க சிற்பங்கள்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபட் தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி சிற்பங்கள் உள்ளன
- அரிசந்திரன், சந்திரமதி ஆடை ஆபரணங்களுடன் கலை நயத்துடன் காணப்படுகின்றன
- இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் உள்ளது
- பேரூர் சிவன் கோவில்(நாயக்கர் கால சிற்பகலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு) – கோவை அருகில் உள்ளது
- கிருஷ்ணாபுரம்- வேங்கடாசலபதி கோவில்
பெளத்த –
சமண சிற்பங்கள்
- புத்தரின் உருவத்தை அமர்ந்த, நின்ற, படுத்த நிலைகளில் சிற்பங்களாக வழிப்பட்டனர்
- சமண மதத்தினர்- அருக கடவுள் , 24 தீர்த்தங்காரார் உருவங்களையும் சிற்பங்களாக ஆக்கியுள்ளனர்
- இதில் சில சிற்பங்கள் அளவுக்கு மீறிய உயரமும், பருமனும் உடையது(விழுப்புரம் மாவட்டம்-> செஞ்சி->திருநாதர்குன்று)
- 24 தீர்த்தங்காரர் உருவம் புடைப்பு சிற்பங்களாக ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ளன
தொல்காப்பியத்தில்
சிற்பக்கலை பற்றி குறிப்பு உள்ளது
சிலப்பதிகாரத்தில்
கண்ணகிக்கு சிலை வடித்துள்ளனர்
மணிமேகலை->சுண்ணாம்பு
கலவை(சுதை சிற்பங்கள்) இடம் பெற்றுள்ளது
தமிழ்நாடு->மாமல்லபுரத்தில்
->சிற்பகலைக் கல்லூரி நடத்தி வருகிறது
சென்னையிலும்,
கும்பகோணத்திலும் அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பகலை பயிலலாம்
தமிழ்நாடு-தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் “ சிற்பச்செந்நூல்” என்ற நூலை வெளியிட்டுள்ளது
இராவண காவியம்
பொருள்
- மைவனம்-மலைநெல்
- முருகியம்- குறிஞ்சிப்பறை
- பூஞ்சினை- பூக்களை உடைய கிளை
- சாந்தம்- சந்தனம்
- பூவை- நாகண்வாய் பறவை
- பொலம்- அழகு
- கடறு- காடு
- முக்குழல்-கன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
- பொலி-தானியக்குவியல்
- உழை- ஒரு வகை மான்
- வாய்வெரீஇ- சோர்வால் வாய் குழறுதல்
- குருளை- குட்டி
- இணைந்து- துன்புறுதல்
- உயங்குதல்-வருந்துதல்
- படிக்கு உற- நிலத்தில் விழ
- கோடு- கொம்பு
- கல்-மலை
- முருகு- தேன், மணம், அழகு
- மல்லல்- வளம்
- செறு- வயல்
- கரிக்குருத்து- யானைத்தந்தம்
- போர்- வைக்ககோற்போர்
- புரைதப-குற்றமின்றி
- தும்பி- ஒரு வகை வண்டு
- துவரை- பவளம்
- மரை- தாமரை மலர்
- விசும்பு- வானம்
- மதியம்- நிலவு
நூல்குறிப்பு
- 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ் பெருங்காப்பியம்
- 5 காண்டங்களையும்(தமிழ் காண்டம், இலங்கை காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்காண்டம்), 3100 பாடல்களையும் கொண்டது
ஆசிரியர்
குறிப்பு
- புலவர் குழந்தை
- தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
- யாப்பதிகாரம்,தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களை படைத்துள்ளார்
- இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்
- “இராவணக் காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சி பொறி-உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”- பேரற்ஞர் அண்ணா
- கோர்வை/ கோவை- கோ என்பது வேர்சொல்
- கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி(எ.கா ஆசாரக்கோவை(ஊசியில் நூலை கோத்தான்))
நாச்சியார் திருமொழி
பொருள்
- தீபம்- விளக்கு
- சதிர்- நடனம்
- தாமம்- மாலை
நூல்குறிப்பு
- ஆழ்வார்கள் 12, இதில் ஆண்டாள் மட்டுமே பெண்
- ”சூடிக் கொடுத்த சுடர் கொடி” என அழைக்கபெற்றார்
- பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
- ஆழ்வார்கள் பாடிய தொகுப்பு “ நாலாயிர திவ்விய பிரபந்தம்”-இத்தொகுப்பில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி (143 பாடல்கள்) இரு தொகுதிகள் உள்ளன
செய்தி(சிறுகதை)
சாகத்திய
அகாதெமி விருது பெற்ற தமிழ் சிறுகதை எழுத்தாளர்கள்
- 1970- அன்பளிப்பு(கு.அழகிரி சாமி)
- 1979- சக்தி வைத்தியம்(தி ஜானகி ராமன்)
- 1987- முதலில் இரவு வரும்(ஆத்வன்)
- 1996-அப்பாவின் சிநேகிதர்-(அசோகமித்ரன்)
- 2008-மின்சாரப்பூ(மேலாண்மை பொன்னுசாமி)
- 2010-சூடிய பூ சூடற்க (நாஞ்சில் நாடன்)
- 2016-ஒரு சிறு இசை(வண்ணதாசன்)
தி.ஜானகிராமன்
- தி.ஜானகிராமன் (ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசிமித்ரன் வார இதழில் எழுதினார்(1976இல் நூலாக வெளிவந்தது
- ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை கரிங்கடலும், கலைக்கடலும் என்னும் நூலாக(1974) வெளியிட்டார்
- காவிரிக்கரை வழியான பயணத்தை “நடந்தை வாழி காவேரி”நூலாக வெளியிட்டார்
- இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்
- ஜானகிராமநன் -உயர்நிலை ஆசிரியராகவும், வானொலியில் கல்வி ஒலிப்பரப்ப்ய் அமைப்பாளராகவும் பணியாற்றினார்
- இவரது கதைகள் இதழ்களில் வெளிவந்தன(மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசிமித்திரன், ஆன்ந்த விகடன், கல்கி
- “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்ற கோட்பாட்டை கொண்டவர் இவர்
- செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
- தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மெளனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா, தாஸ், தஞ்சாவூர் கவிராயர் ஆகியோர்
நாகசுரக்கருவி
- 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது
- 13ஆம் நூற்றாண்டிற்க்கு பின் ஏற்பட்டிருக்கலாம் என்று கூற்ப்படுகிறது
- நாகசுரக்கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது
- நாகசுரம் என்பதே சரியானது
- நாகசுரத்தில் மேற்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது
- சீவாளி நாணல் என்ற புல்வகையைக் கொண்டு செய்யப்படுகிறது

No comments:
Post a Comment