Pages

Tuesday, November 3, 2020

9 th std samacheer kalvi tamil (lesson7 to 9) -new syllabus

 

இந்திய தேசிய  இராணுவத்தில் தமிழர் பங்கு

  1. இந்திய தேசிய  இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு
  2. 1942 பிப்ரவரி 15 (இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய படைகளை மலேயாவில் ஜப்பானியர்களிடம் சரணடைந்தனர். இதில் இந்திய வீரர்களும் இருந்தனர்
  3. சரணடைந்த வீரர்களை கொண்டு மோகன்சிங் என்பவர் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்,ஏ) என்ற படையை உருவாக்கினார்
  4. மலேயா, பர்மா போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்ற தமிழர்கள்  இதில் இணைந்தனர்
  5. ஆங்கிலேய இராணுவத்தை அறிய ஐ.என்.ஏ அமைப்பின் ஒற்றர் படையை நீர்முழ்கிகப்பலால் குஜராத்திற்க்கும், கேர்ளாவிற்க்கும் அனுப்பினர்
  6. சிலர் தரைவழியாக பர்மா காடுகள் வழியாக வந்தனர்
  7. நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் இந்திய தேசிய இராணுவத்திற்க்கு தலைமை ஏற்க 91 நாள் கப்பல் பயணமாக ஜெர்மணியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தனர்
  8. 1943 ஜூலை 9 நாள் மாபெரும் கூட்டத்தில் “ டெல்லியை நோக்கி செல்லுங்கள்  என்றார்
  9. இந்திய தேசிய இராணுவத்திற்க்கு தமொழகத்தில் இருந்து வலு சேர்த்தவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்
  10. இந்திய தேசிய இராணுவப்படைத்தலைவராக இருந்த தில்லான் “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும்  ஆத்மாவும் தமிழர்கள் தான்” என்றார்
  11. ஜான்சிராணியின் பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் dr. லட்சுமி இதில் தலைசிறந்தவர்கள் ஜானகி, இராஜாமணி
  12. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்
  13. 43 இளைஞர்களை நேதாஜி டோக்கியோ அனுப்பினார். பெரும்பாலனோர் தமிழர்கள் அதில் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன். பின்பு இவர் சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டு தூதுவராக பணியாற்றினார்
  14. ஆங்கில பிரதமர் சர்ச்சில் “மலேயாவில் உள்ள தமிழர்கள் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டுயாக உள்ளது” என்றார்
  15. நேதாஜி ‘ இந்த தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்” என்றார்
  16. இரண்டாம் உலகப்போரில் பர்மாவில் நடந்த போர் “மிகவும் கொடூரமானதாகும்”
  17. 1944 மார்ச் 18 “ மணிப்பூர் பகுதியில் ‘மொய்ராங்’ இடத்தில் இந்திய தேசிய இராணுவம் வெற்றி பெற்று மூவர்ணக்கொடியை ஏற்றியது ஆனால் அது நிலைக்கவில்லை. ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் இணைந்து போராடி வெற்றி பெற்றனர். இதில் லட்சக்கணக்காக இந்தியர்களும், ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர்
  18.  1944 “இராமு” தூக்கிலிடப்பட்டார் அவரது 18 வது  வயதில்
  19. இராமு- “நான் என் உயிரை கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” என்று கூறினார்
  20. அப்துல்காதர் “ வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுவினை போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்தி தான்
  21. நேதாஜி “ நான் மறுபடடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டுமென்று கூறினார்” என்று பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்
  22. இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படை தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி பெறுவதற்காக ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
  23. பயிற்சி பிரிவின் பெயர் டோக்கியோ கேடட்ஸ். இவர்கள் ஜப்பானின் “கியூசு” தீவை அடைந்தனர்
  24. ”இந்திய தேசிய இராணுவம் தமிழர் பங்கு”  என்ற நூலுக்கான தமிழக அரசின் பரிசுபெற்ற்வர் பேராசிரியர் மா.சு. அண்ணாமலை
  25. இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றன

நேதாஜியின் பொன்மொழி

  1. அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும்
  2. நீங்கள் நல்வாழ்வை தந்தே ஆக வேண்டும் என்பது தான் காலத்தால் மறையாத சட்டமாகும்
  3. எந்த விலைக் கொடுத்தாவது சமத்துவத்திற்கு போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்
  4. மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறை பொழுது வேண்டும் அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக்கற்றுக்கொள்
  5. விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்

 

சீவக சிந்தாமணி

பொருள்

  1. தெங்கு- தேங்காய்
  2. இசை- பகழ்
  3. வருக்கை- பலாப்பழம்
  4. நெற்றி- உச்சி
  5. மருப்பு- கொம்பு
  6. வெறி-மணம்
  7. கழனி- வயல்
  8. செறி- சிறந்த
  9. இரிய- ஓட
  10. மால்வரை-பெரிய மலை
  11. மடுத்து- பாய்ந்து
  12. கொழந்தி- திரண்ட நிதி
  13. சூல்- கரு
  14. அடிசில்- சோறு
  15. மடுவு- சோம்பல்
  16. கொடியனார்- மகளிர்
  17. நற்றவம்- பெருந்தவம்
  18. வட்டம்-எல்லை
  19. வெற்றம்- வெற்றி

நூல்குறிப்பு

  1. சீவக சிந்தாமணி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்று
  2. இது விருதப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
  3. இலம்பகம்” என்னும் உட் பிரிவு கொண்டது
  4. 13 இலம்பகம் கொண்டது
  5. மணநூல் எனவும் அழைக்கப்படுகிறது
ஆசிரியர் குறிப்பு
  1. திருத்தக்கதேவர்
  2. சமண சமயத்தை சேர்ந்தவர்
  3. 9 ஆம் நூற்றாண்டு
  4. சீவக சிந்தாமணி முன்னோட்டமாக  நரிவிருத்தம் என்னும் நூலை இயற்றினார்

முத்தொள்ளாயிரம்

பொருள்

  1. அள்ளல்- சேறு
  2. பழமை- நீர்மிக்க வயல்
  3. வெரி இ- அஞ்சி
  4. பார்ப்பு- குஞ்சு
  5. நாவலோ- நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
  6. இசைத்தால்- ஆரவாரத்தோடு கூவுதல்
  7.  நந்து- சங்கு
  8. கழுகு- பாக்கு
  9. முத்தம்- முத்து

நூல்குறிப்பு

  1. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்
  2. சேர, சோழ, பாண்டிய மன்னர்களை பற்றி பாடிய 900 பாடல்கள் கொண்டது
  3. நூல் முழுமையாக கிடைக்கவில்லை
  4. புறதிரட்டு என்னும் நூலிலிருந்து 108 பாடல்கள் கிடைத்துள்ளன

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

  1. சேரநாடு- ஆச்சமில்லாத நாடு
  2. சோழநாடு- ஏர்க்கள சிறப்பும், போர்கள சிறப்பும்
  3. பாண்டிய நாடு- முத்துடை நாடாகவும் கூறப்படுகிறது

மதுரைக்காஞ்சி

பொருள்

  1. புரிசை- மதில்
  2. அணங்கு- தெய்வம்
  3. சில்காற்று- தென்றல்
  4. புழை- சாளரம்
  5. ஓவு- ஓவியம்
  6. மாகால்- பெருங்காற்று
  7. முந்நீர்- கடல்
  8. பணை- முரசு
  9. கயம்- நீர்நிலை
  10. நியமம்- அங்காடி

நூல்குறிப்பு

  1. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
  2. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்
  3. மதுரையின் சிறப்புகளை பாடுவதாலும், நிலையாமையை பற்றி கூறுவதாலும் மதுரைக் காஞ்சி எனப்பட்டது
  4. 782 அடிகள் கொண்டது(354 அடிகள் மதுரையை மட்டுமே சிறப்பித்து கூறுகிறது)
  5. இதை ‘ பெருகுவள மதுரைக்காஞ்சி’ என்பர்
  6. இதன் பாட்டுடை தலைவர் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

ஆசிரியர் குறிப்பு

  1. மாங்குடி மருதனார்
  2. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்
  3. எட்டுதொகையில் 13 பாடல்கள் பாடியுள்ளார்

சந்தை

  1. மால்- பல் அங்காடியகம்
  2. நாளாங்காடி- பகலில் செயல்படும் கடைவீதி
  3. அல்லங்காடி- இரவில் செயல்படும் கடைவீதி
  4. கிராமசந்தை- சிறு வணிக செயல்பாடு
  5. மாட்டுதாவணி- மாட்டு சந்தை
  6. சந்தைக்கு பேர் போனது
  7.  மணப்பாறை- மாட்டு சந்தை
  8. அரியலூர்- ஆட்டு சந்தை
  9. ஒட்டன் சத்திரம்- காய்கறி சந்தை
  10. நாகர்கோவில் தோவாளை- பூச்சந்தை
  11. ஈரோடு- ஜவுளி சந்தை
  12. கடலூர்(காராமணி குப்பம்)- கருவாட்டு சந்தை
  13. நாகப்பட்டினம்- மீன் சந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்ச்ம்பள்ளிசந்தை, 108 ஏக்கர் பரப்பில் 8000 கடைகளுடன் இன்றும் ஞாயிற்று கிழமைகளில் கூடுகிறது

125 ஆண்டிகள் பழமை வாய்ந்தது

“பொதியை ஏத்தி வண்டியிலே

பொள்ளாச்சி சந்தியிலே

விருதுநகர் வியாபாரிக்கு- செல்லக்கண்ணு

நீயும் வித்துபோட்டு பணத்த எண்ணு

செல்லகண்ணு”-மருதகாசி

பெரியாரின் சிந்தனைகள்

  1. சிறப்பு பெயர்-  வெந்தாடி வேந்தர், பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், ஈரோடு சிங்கம்,தெற்காசியாவின் சாக்ரடீசு, புத்தலகத் தொலை நோக்காளர், பெண்ணின்ப் போர்முரசு, சுய மரியாதை சுடர்
  2. “மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைபடுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? “- பெரியார்
  3. சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் அவரின் சிந்தனை எழுச்சி பெற்றது
  4. சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும்
  5. “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்கிறது. மற்றவர்களின் உரிமைகளை பறிக்கிறது.மனிதர்களை இழிவுப்படுத்துகிறது.இந்த சாதி எனற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்றார்
  6. சமூக வளர்ச்சிக்கு கல்வியை மிக சிறந்த கருவியாக பெரியார் கருதினார்
  7. ”அறிவியலுக்கு புறம்பான செய்திகளையும், மூடபழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது. தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியினை கற்றுதர வேண்டும்” என்றார்
  8. மனப்பாடத்திற்க்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்
  9. ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது. இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும் . இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்” என்று கூறினார்
  10. மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு  மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்: என்றார்
  11. திருக்குறளை மதிப்புமிக்க நூலாக் பெரியார் கருதினார். இதை ஊன்றி படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார்
  12. மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்- அவ்வபோது கண்டிபிடித்து கைக்கொள்ள வேண்டும்- என்றார்
  13. உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதை ‘அய்’ எனவும்,’ஒள’ என்பதனை ‘அவ்’ எனவும் சிரமைத்தார்(ஐயா- அய்யா, ஒளவை-அவ்வை)
  14. கால வளர்ச்சிக்கு  இத்தகு மொழி வடிவமைப்பு தேவை என்று கருதினார். 1978 ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது
  15. நாட்டு விடுதலையை விட, பெண் விடுதலையே முதன்மையானது” என்றார்
  16. ”வேலைவாய்ப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்கு தரப்பட வேண்டும்” என்றார்

பெரியாரின் வேண்டுகோள்

  1. இளம் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.
  2. கைபெண்களும் மறுமணம் செய்ய வேண்டும்.
  3.  குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.
  4.  சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும்.
  5. குடும்ப பணிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்
  6. “பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது கட்டாயம்” என்றார்
  7. தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு கருத்துகளை பரப்புரை செய்தார்
  8. “பெரியாரின் சிந்தனைகள் அறிவுலகின் திறவுகோல், பகுத்தறிவு பாதைக்கு வழிக்காட்டி, மனித நேயத்தின் அழைப்பு மணி ஆதிக்க சக்திகளுக்கு எச்சரிக்கை ஓலி சமூக சீர்கேடுகளை களைவதற்கு மாமருந்து” என்று அறிஞர்கள் மதிப்பிடுவர்

பெரியார் எதிர்த்தவை

  1. இந்தி திணிப்பு
  2. குலக்கல்வி திட்டம்   
  3. தேவதாசி முறை
  4. கள்ளுண்ணல்
  5. குழந்தை திருமணம்
  6. மணக்கொடை
  7. பெரியார் விதைத்த விதைகள்
  8. கல்வியிலும், வேலைவய்பிலும் இட ஒதுக்கீடு
  9. பெண்களுக்கான  இட ஒதுக்கீடு
  10. பெண்களுக்கான சொத்துரிமை
  11. குடும்ப நலத் திட்டம்
  12. கலப்பு திருமணம்
  13. சீர்த்திருத்த திருமணம் ஏற்பு

1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா வுக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது

27.06.1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை  பெரியாரை ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்தது

  பெரியார் இயக்கமும், இதழ்களும்

  1. தோற்றுவித்த இயக்கம்- சுயமரியாதை இயக்கம்
  2. தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1925

நடத்திய இதழ்கள்- குஇயரசு, விடுதலை, உண்மை, திவோல்ட்(ஆங்கில இதழ்)

“தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டை சுரப்பை உலகுதொழும்

மனக்குகையில் சிற்த்தை எழும்

அவர்தாம் பெரியார்- பார்

அவர்தாம் பெரியார்-பாரதிதாசன்

தமிழ் மொழி வடிவம் 

ஒளியின் அழைப்பு

பொருள்

  1. விண்-வானம்
  2. ரவி-கதிரவன்
  3. கமுகு- பாக்கு

நூல்குறிப்பு

  1. புதிய படைப்பு சூழலில் மரபுகவிதையின் யாப்பு பிடியிலிருந்து விடிப்பட்ட கவிதகள் புதுக்கவிதை என்ப்பட்டன
  2. பாரதியாரின் வசன கவிதையை தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுப்பட்டார்
  3. புதுக்கவிதையின் தந்தை எனப்படுகிறார்
  4. புதுக்கவிதையை இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள்  இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காத கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்

ஆசிரியர் குறிப்பு

  1. ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்கறிஞராகவும், பின்னர் இந்து சமய அறநிலைய பாதுக்காப்பு துறை அலுவலராகவும் பணியாற்றினார்
  2. ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார்
  3. இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைகளை படைத்தவர்
  4. இவரின் முதல் சிறுகதை-”ஸயன்ஸூக்கு பலி
  5. 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார்
  6. பிஷி, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்

தாவோ தெ ஜிங்

நூல்குறிப்பு

  1. ஆசிரியர்- லாவோட்சு, சீனாவில் பொ.ஆ.மு 2 ஆம் நூற்றண்டிற்க்கு முன் வாழ்ந்தவர்
  2. சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர்(சீனாவின் பொற்காலம்)
  3. லாவோட்சு “ தாவோவியம்” என்ற சிந்தனை பிரிவை சார்ந்தவர்
  4. பாடலை மொழிப் பெயர்த்தவர் சி.மணி

யசோதர காவியம்

பொருள்

  1. அறம்- நற்செயல்
  2. வெகுளி- சினம்
  3. ஞானம்- அறிவு
  4. விரதம்- மேற்கொண்ட நன்னெறி

நூல்குறிப்பு

  1. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று யசோதர காவியம்
  2. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  3. வடமொழியிலிருந்து தமிழில் எழுதப்பட்டது
  4. சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்
  5. யசோதர காவியம் “ யசோதரன்” என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றை கூறுகிறது
  6. 5 சருக்கங்களை கொண்டது
  7. பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும், 330  எனவும் கருதுவர்

மகனுக்கு எழுதிய கடிதம்

  1. தாகூர், நேரு, டி.கே.சி, வல்லிக்கண்ணன், பேரறிஞர் அண்ணா, மு.வரதராசனார், கு.அழகிரிசாமி, கி.இராஜ நாராயணன் முதலானோர் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்

விரிவாகும் ஆளுமை

  1. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”- கணியன்
  2. ”யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு”- குறள்
  3. “நான் மனிதன் மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று”-இலத்தின் புலவர் தெறென்ஸ்
  4. “முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள்  இன்றியமையாதவை”- கோர்டன் ஆல்போர்ட்
  5. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம்(பூட்கையில்லோன் யாக்கை போல)- புலவர் ஆலந்தூர்கிழார்
  6. சீனநாட்டில் பொ.ஆ.மு 604 ஆம் ஆண்டில் பிறந்த லாவோட்சும், பொ.ஆ.மு (551-479) பிற்ந்த கன்பூசியசும் பிறர் நலன் கொள்கையை வலியுறுத்தி உள்ளனர்
  7. ஒழுக்க வியலை நன்கறிந்து எழுதிய உலக மேதை ஆல்பர்ட் சுவைட்சர். திருக்குறளை பற்றி கூறும் போது”இத்தகைய உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது
  8. படுதிரை வையம் பாத்திய பண்பே- தொல்காப்பியம்
  9. “இம்மை செய்த்து மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆம் அலன்”- புறநானூறு
  10. இத்தாலிய நாட்டில் உரோமையர் ‘        “(அறிவுடையோன்) எனப்படும் இலட்சிய புருஷனை போற்றி வந்தனர்
  11. பிசிராந்தையர் கோப்பெருஞ்சோழனுக்கு கூறியது
  12. போல தமிழ் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தரும்
  13. ஸ்டாயிக் வாதிகள் உலகில் ஒற்றுமை உண்டு என்றும், மக்கள் அனைவரும் ஓரே குலத்தவர் என்றும், எல்லா உயிகளும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளனஎன்றும் கற்பித்தனர்
  14. செனக்கா என்னும் தத்துவ ஞானி “ எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல்” வேண்டும்
  15. மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் திருக்குறள்
  16. ஜி.யூ.போப் திருவள்ளுவரை “ உலகப் புலவர்” என்று போற்றினார்
  17. “உள்ளற்க உள்ளம் சிறுகுவ”,”உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்”- திருக்குறள் 

“இமயத்துக்

கோடு உயர்தனன் தம் இசை நட்டுத்

தீது இல் யாக்கையொடு மாய்தல்

தவத்தலையே”- புறநானூறு

“இமயத் தீண்டி இன்குறல் பயிற்றிக்

கொண்டல் மாமழை பொழிந்த

நுண்பல் துளியினும் வாழிய பலவே”- புறநானூறு

உலக தமிழர் மாநாடுகள்

  1. மலேசியா- 1966- கோலாலம்பூர்
  2. 1968- இந்தியா- சென்னை
  3. 1970- பிரான்சு- பாரீசு
  4. 1974- இலங்கை- யாழ்ப்பானம்
  5. 1981- இந்தியா- மதுரை
  6. 1987- மலேசியா- கோலாலம்பூர்
  7. 1989- மொரீசியசு- மொரீசியசு  
  8.   1995- இந்தியா- தஞ்சாவூர்
  9. 2010- செம்மொழி மாநாடு- கோவை
  10. தமிழுக்கு தொண்டாற்றிய கிறித்துவ பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்
  11. அகில உலக தமிழாய்வு மன்றம் உருவாகவும், உலக் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தார்
  12. இவர் தொடங்கிய தமிழ் பண்பாடு என்ற இதழ் இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கிறது

அக்கறை

நூல்குறிப்பு

  1. கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம்
  2. சிற்கதை, கவிதை, கட்டுரை, புதினம் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்
  3. வண்ணதாசன் எனற பெயரில் கதை இலக்கியத்திலும் எழுதியுள்ளார்
  4. புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்களுள் சில
  5. பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ”சில சிறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது
  6. கலைக்க  முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் உயர பறத்தல், ஒளியிலே தெரிவது இவரது சிறுகதை தொகுப்புகள்
  7. ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான சாகத்திய அகாதெமி விருது வழங்கப்பட்டட்து

“இந்த காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்?- அமுதோன்

“பிம்பங்களற்ற தனிமையில்

ஒன்றிலொன்று முகம் பார்த்தன

சலூன் கண்ணாடிகள்”-நா.முத்துகுமார்

“வெட்டுகிளியின் சப்தத்தில்

மலையின் மெளனம்

ஒரு கணம் அசைந்து திரும்புகிறது” ஜப்பானிய கவிஞர் பாஷோ

குறுந்தொகை

பொருள்

  1. நசை- விருப்பம்
  2. நல்கல்- வழங்குதல்
  3. பிடி- பெண்யானை
  4. வேழம்- ஆண்யானை
  5. யா- ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
  6. பொரிக்கும்- உரிக்கும்
  7. ஆறு- வழி

நூல்குறிப்பு

  1. எட்டுதொகை  நூல்களில் ஒன்று குறுந்தொகை
  2. கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் கொண்டது
  3. 4 அடி சிற்ற்ல்லையும் 8 அடி பேரல்லையும் கொண்டது
  4. 1915 செளரி பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலை பதிப்பித்தார்

ஆசிரியர்

  1. பாலை பாடிய பெருங்கடுங்கோ
  2. சேர மரபை சேர்ந்தவர்
  3. கலித்தொகையில் பாலை திணையை பாடியதால் “பாலை பாடிய பெருங்கடுங்கோ” என அழைப்பர்

தாய்மைக்கு வறட்சி இல்லை

நூல்குறிப்பு

  1. சு.சமுத்திரம் திருநெல்வேலி மவட்டம்
  2. 300க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்
  3. வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு இவரின் சிறுகதைகள்
  4. வேரில் பழுத்த பலா” புதினம் சாகத்திய அகாதெமி விருதையும் ‘குற்றம் பார்க்கில்’ சிறுகதை தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன

No comments:

Post a Comment