Monday, August 31, 2020

10 th std samacheer kalvi tamil part 2(இலக்கணம்) -new syllabus

https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html

 திணை ,வழு

திணை

உயர்திணை- ஆறறிவுடைய  மக்கள்

அஃறினை-மற்ற உயிரினங்கள்,உயிரற்ற பொருள்

பால்(திணையின் உட்பிரிவு)

 உயர்திணை

ஆண்பால்(எ.கா.வீரன்)

பெண்பால்(எ.கா.அரசி)

பலர்பால்(எ.கா.பெண்கள்)

அஃறினை

                        ஒன்றன்பால்(எ.கா.யானை)

                        பலவின்பால்(எ.கா.பசுக்கள்)

மூவிடம்

தன்மை,முன்னிலை,படர்க்கை

தன்மை

தன்மைபெயர்கள்(எ.கா. நான்,நாம்)

தன்மைவினைகள்(எ.கா.வந்தேன்,வந்தோம்)

முன்னிலை

முன்னிலை பெயர்கள்(எ.கா.நீ,நீர்)

முன்னிலைவினைகள்(எ.கா.வந்தீர்கள்,சென்றீர்கள்)

படர்க்கை

படர்க்கை பெயர்கள்(எ.கா.அவன்,அவள்,அவை)

படர்க்கைவினைகள்(எ.கா.வந்தான்,பேசினார்கள்,பறந்தது)

வழு,வழாநிலை,வழுவமைதி

வழாநிலை

இலக்கண முறைப்படி பிழையின்றி பேசுவதும்,எழுதுவதும் வழாநிலை (எ.கா.செழியன் வந்தான்)

வழு

இலக்கண முறையின்றி பேசுவதும்,எழுதுவதும் வழு எனப்படும் (எ.கா.செழியன் வந்தது)

 

வழு

வழாநிலை

திணை

செழியன் வந்தது

செழியன் வந்தான்

பால்

கண்ணகி உண்டான்

கண்ணகி உண்டாள்

இடம்

நீ வந்தேன்

நீ வந்தாய்

காலம்

நேற்று வருவான்

நேற்று வந்தான்

வினா

ஒரு விரலை காட்டி சிறியதோ? பெரியதொ? என்று கேட்டல்

இரு விரலை காட்டி சிறியதோ? பெரியதொ? என்று கேட்டல்

விடை

கண்ணன் எங்கெ?

கண்ணாடி பைக்குள் இருக்கிறது

கண்ணன் எங்கெ?

கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார்

 மரபு

தென்னந்தோட்டம் என்று கூறுவது

தென்னந்தோப்பு என்று கூறுவது


 வழுவமைதி

இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என எற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதி

திணை வழுவமைதி

என் அம்மா வந்தாள் என்று மாட்டை பார்த்து கூறுவது

பால் வழுவமைதி

வாடா  இராசா , வாடா கண்ணா” என்று தன் மகளை பார்த்து கூறுவது

இட வழுவமைதி

இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்”(கூறமாட்டேன்) என்று தன்னை பற்றி பிறரிடம் கூறுவது

கால வழுவமைதி

குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார்”(வருவார்)

மரபு வழுவமைதி

கத்துங் குயிலோசை(கூவும்)

வழுவமைதி வகைகளை காண்க

  1. அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்(கால வழுவமைதி)
  2. ”இந்த கண்ணன் ஒன்றை செய்தான்  என்றான் அதை அனைவரும் ஏற்பர்”என்று கூறினான்(இட வழுவமைதி
book back
  1. சிறிய வயதில் இந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்(கால வழுவமைதி)
  2. செல்வன் இளவேலன் இந்தச்சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்திருக்கிறார்(பால் வழுவமைதி)

கலைச்சொல்

  1. Nanotechnology- நுண்தொழில்நுட்பம்
  2. Biotechnology-உயிரித்தொழில்நுட்பம்
  3. Ultraviolet rays-புற ஊதா கதிர்கள்
  4. Space technology-விண்வெளித்தொழில்நுட்பம்
  5. Cosmic rays-விண்வெளிக் கதிர்கள்
  6. Infrared rays-அகச்சிவப்புக் கதிர்கள்

வினா,விடை வகைகள்,பொருள்கோள்

 வினா வகைகள்(6வகை)

1.அறிவைனா

            தான் விடை அறிந்திருந்தும் அவ்விடை பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது(”இந்த கவிதையின் பொருள் யாது” மாணவனிடம் ஆசிரியர் கேட்பது)

2.அறியாவினா

            தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்க்காக வினவுவது(”இந்த கவிதையின் பொருள் யாது” ஆசிரியரிடம் மாணவன்ர் கேட்பது)

3.ஐய வினா

            ஐயம் நீங்கித் தெளிவு பெருவதற்காக கேட்கப்படுவது(”இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?)

4.கொளல் வினா

            தான் ஒரு பொருளை வாங்கி கொள்ளும் பொருட்டு வினவுவது(”ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என நூலகரிடம் கேட்பது)

5.கொடை வினா

            பிறருக்கு ஒரு பொருளை கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது(என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு உள்ளன.உன்னிடம் இருக்கிறதா? என்று கொடுப்பதற்க்காக கேட்பது)

6.ஏவல் வினா

            ஒரு செயலை செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது(வீட்டில் தக்காளி இல்லை.நீ கடைக்கு செல்கிறாயா?)

விடை வகைகள்(8 வகைப்படும்)

முதல் மூன்று வகையும்(சுட்டு,மறை,நேர்) நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள்  எனவும்,அடுத்த ஐந்தும் (ஏவல்,வினா எதிர் வினாதல்,உற்றது உறைத்தல்,உறுவது கூறல்,இனமொழி) குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனப்படும்

1.சுட்டு விடை

            சுட்டி கூறும் விடை

கடைத்தெரு எங்குள்ளது?

வலப்பக்கத்தில் உள்ளது

2.மறை விடை

            மருத்து கூறும் விடை

            கடைக்கு போவாயா?

போகமாட்டேன்

3.நேர் விடை

            உடன்பட்டு கூறும் விடை

            கடைக்கு போவாயா?

போவேன்

4.ஏவல் விடை

            மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறுவது

            இது செய்வாயா?

            நீயே  செய்

5.வினா எதிர் வினாதல் விடை

            வினாவிற்கு விடையாக இன்னோரு வினாவை கேட்பது

            என்னுடன் ஊருக்கு வருவாயா?

            வராமல் இருப்பேனா?

6.உற்றது உறைத்தல் விடை

            வினாவிற்க்கு விடையாக எற்கனவே நேர்ந்ததை கூறல்

            நீ விளையாடவில்லையா?

            கால் வலிக்கிறது

7.உறுவது கூறல் விடை

வினாவிற்க்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல்

            நீ விளையாடவில்லையா?

            கால் வலிக்கும்

8.இனமொழி விடை

            வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை கூறுவது

            உனக்கு கதை எழுத தெரியுமா?

            கட்டுரை  எழுத தெரியும்

பொருள்கோள்

செய்யுளில்  சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொல்லும் முறைக்கு பொருள்கோள்

பொருள்கோள் வகைகள்(8)

  1. ஆற்றுநீர் பொருள்கோள்
  2. மொழிமாற்று பொருள்கோள்
  3. நிரல் நிறை பொருள்கோள்
  4.  விற்பூட்டு பொருள்கோள்
  5. தாப்பிசை பொருள்கோள்
  6. அளைமறிமாப்பு பொருள்கோள்
  7. கொண்டுகூட்டு பொருள்கோள்
  8. அடிமறிமாற்று பொருள்கோள்

ஆற்றுநீர் பொருள்கோள்

            பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கை போல் நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் ஆற்றுநீர் பொருள்கோள்

”சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்

மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”(சீவகசிந்தாமணி)

நிரல் நிறை பொருள்கோள்

ஒரு  செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல் நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது நிரல் நிறை பொருள்கோள்

1முறை நிரல் நிறை பொருள்கோள்

2.எதிர் நிரல் நிறை பொருள்கோள்

முறை நிரல் நிறை பொருள்கோள்

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்சொற்களை அல்லது வினைசொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிற்த்தி பொருள் கொள்ளுதல் முறை நிரல் நிறை பொருள்கோள்

”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது” (திருக்குறள்)

அன்புக்கு பயனிலைகளாக பண்பும்.

அறனுக்கு பயனிலைகளாக பயனும்

எதிர் நிரல் நிறை பொருள்கோள்

செய்யுளில் எழுவாய்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராக கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல் நிறை பொருள்கோள்

”விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்”  (குறள்)

கற்றார் மக்கள் என்றும்,கல்லாதவர் விலங்குகள் என்றும் பொருள் கொள்ள வேண்டும்

கொண்டுகூட்டு பொருள்கோள்

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டி பொருள் கொள்வது கொண்டுகூட்டு பொருள்கோள்

”ஆலத்து மேல குவளை குளத்துள

வாலின் நெடிய குரங்கு” (மயில்நாதர் உரை)

ஆலத்து மேல குரங்கு ,குளத்துள குவளை  என்று பொருள் கொள்ள வேண்டும்

Book back

வினா விடை காண்க

1.காமராசர் நகர் எங்கே இருக்கிறது ? இந்த வழியாக செல்லுங்கள்

காமராசர் நகர் எங்கே இருக்கிறது ?- அறியா வினா

 இந்த வழியாக செல்லுங்கள் – சுட்டு விடை

2.எனக்கு எழுதி தருகிறாயா? என்பதற்கு எனக்கு யார் எழுதி தருவார்கள்

எனக்கு எழுதி தருகிறாயா? – ஏவல் வினா

எனக்கு யார் எழுதி தருவார்கள்- வினா எதிர் வினாதல் விடை

உரையாடல்

பாமகள்: ஏதோ எழுதுகிறீர்கள்  போலிருக்கிறதே?(அறியா வினா)

ஆதிரை: ஆமாம்.கவியரங்கத்துக்கு கவிதை எழுதி கொண்டிருக்கிறேன்(நேர் விடை)

 பாமகள்:அப்படியா! என்ன தலைப்பு?( அறியா வினா)

ஆதிரை:கல்வியில் சிறக்கும் தமிழர்!(நேர் விடை).நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ?மாட்டீர்களோ?(ஐய வினா)

பாமகள்:ஏன் வராமல்?(வினா எதிர் வினாதல் விடை)

ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்கள்

  1. Lute music-யாழிசை
  2. Chamber-அறை
  3. To look up –எட்டி பார்த்தல்
  4. Grand daughter- பேத்தி
  5. Rote –நெட்டுரு
  6. Didactic compilation –நீதி நூல் திரட்டு                           

 கலைச்சொல்

  1. Emblem-சின்னம்
  2. Thesis-ஆய்வேடு
  3. Intellectual-அறிவாளர்
  4. Symbolism-குறியீட்டியல்

அகப்பொருள் இலக்கணம்

பொருள் என்பது ஒழுக்கமுறை

தமிழர்கள் வாழ்வியலை அகம்,புறம் என பிரித்தார்கள்

தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளை கூறுவது அகத்திணை

அகத்திணை 7 வகைப்படும்

    குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை,பெருந்திணை

அன்பின் ஐந்தினைகள்(குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை)

முதற்பொருள்,கருப்பொருள்,உரிப்பொருள் ஐந்தினைகளுக்கும் உடையது

ஐவகை நிலைகள்

  1. குறிஞ்சி- மலையும் மலை சார்ந்த இடமும்
  2. முல்லை- காடும் காடு சார்ந்த இடமும்
  3. மருதம்- வயலும் வயல் சார்ந்த இடமும்
  4. நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும்
  5. பாலை- சுரமும் சுரம் சார்ந்த இடமும்

பொழுது

    பெரும்பொழுது,சிறுபொழுது

பெரும்பொழுது(ஒரு ஆண்டின் ஆறு கூறுகள்)

  1. கார்காலம் – ஆவணி,புரட்டாசி
  2. குளிர்காலம் – ஐப்பசி,கார்த்திகை
  3. முன்பனிக் காலம் – மார்கழி,தை
  4. பின்பனிக் காலம் – மாசி,பங்குனி
  5. இளவேனிற் காலம் – சித்திரை,வைகாசி
  6. முதுவேனிற் காலம் – ஆனி,ஆடி

சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)

  1. காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை
  2. நண்பகல்­­­-காலை 10 மணி முதல் 2 மணி வரை
  3. எற்பாடு- பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை 
  4. மாலை-மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
  5. யாமம்- இரவு 10 மணி  முதல் இரவு 2 மணி வரை
  6. வைகறை- இரவு 2 மணி  முதல் காலை 6 மணி வரை

* எற்பாடு=எல்+பாடு(எல்=ஞாயிறு,பாடு=மறையும்)

*ஒவ்வொரு நிலத்திற்கும்,பெரும்பொழுதும்,சிருபொழுதும் ஒன்று போல் வரா


திணை

பெரும்பொழுது

சிறுபொழுது

குறிஞ்சி

குளிர்காலம், முன்பனிக் காலம்

யாமம்

முல்லை

கார்காலம்

மாலை

மருதம்

ஆறு பெரும்பொழுதுகள்

வைகறை

நெய்தல்

ஆறு பெரும்பொழுதுகள்

எற்பாடு

பாலை

இளவேனிற் காலம், முதுவேனிற் காலம், பின்பனிக் காலம்

நண்பகல்

ஒரு நிலத்தின் தெய்வம்,மக்கள்,தொழில்,விலங்கு இவையெல்லாம் கருப்பொருள் 

           குறிஞ்சி,முல்லை,மருதம்                      

கருப்பொருள்

குறிஞ்சி

முல்லை

மருதம்

தெய்வம்

முருகன்

திருமால்

இந்திரன்

மக்கள்

வெற்பன், குறவர், குற்த்தியர்

தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்

ஊரன்,உழவர், உழத்தியர்

உணவு

மலைநெல், தினை

வரகு, சாமை

செந்நெல், வெண்ணெல்

பூ

குறிஞ்சி, காந்தள்

முல்லை, தோன்றி

செங்கழுநீர், தாமரை

மரம்

அகில், வேங்கை

கொன்றை, காயா

காஞ்சி, மருதம்

பறவை

கிளி,மயில்

காட்டுக்கோழி, மயில்

நாரை, நீர்க்கோழி, அன்னம்

ஊர்

சிறுகுடி

பாடி,சேரி

பேரூர்,மூதூர்

நீர்

அருவிநீர், சுனைநீர்

காட்டாறு

மனைக்கிணறு, பொய்கை

பறை

தொண்டகம்

ஏறு கோட்பறை

மணமுழா, நெல்லரிகிணை

யாழ்

குறிஞ்சி யாழ்

முல்லை யாழ்

மருத யாழ்

பண்

குறிஞ்சிப்பண்

முல்லைப்பண்

மருதப்பண்

தொழில்

தேனெடுத்தல்,கிழங்கு எடுத்தல்

ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்

நெல்லரிதல் ,களை பறித்தல்

                         

நெய்தல்.பாலை          

கருப்பொருள்

நெய்தல்

பாலை

தெய்வம்

வருணன்

கொற்றவை

மக்கள்

சேர்ப்பன், பரதன், பரத்தியர்

எயினர், எயிற்றியர்

உணவு

மீன்,உப்புக்கு பெற்ற பொருள்

சூரையாடலால் வரும் பொருள்

பூ

தாழை, நெய்தல்

குரவம், பாதிரி

மரம்

புன்னை, ஞாழல்

இலுப்பை ,பாலை

பறவை

கடற்காகம்

புறா,பருந்து

ஊர்

பட்டினம், பாக்கம்

குறும்பு

நீர்

மணற்கிணறு, உவர்க்கழி

வற்றியசுனை, கிணறு

பறை

மீன் கோட்பறை

துடி

யாழ்

விளரி யாழ்

பாலை யாழ்

பண்

செவ்வழிப்பண்

பஞ்சுரப்பண்

தொழில்

மீன் பிடித்தல்,உப்பு விளைத்தல்

வழிப்பறி,நிரை கவர்தல்


கலைச்சொல்

  1. Aesthetics –அழகியல்,முருகியல்
  2. Artifacts –கலைப்படைப்புகள்
  3. Terminology-கலைச்சொல்
  4. Myth – தொன்மம்                                                          https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html

Sunday, August 30, 2020

10 th std samacheer kalvi tamil part 1(இலக்கணம்) -new syllabus

https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html 

எழுத்து,சொல்

சார்பெழுத்து

உயிர்மெய்,ஆயுதம்,உயிரளபடை,ஒற்றளபடை,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்கறுக்கம்,மகரக்குறுக்கம்,ஆயுதக்குறுக்கம்

அளபெடுத்தல்

பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்து பேசும் போது உணர்வுக்கும் இனிய ஒசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது

அளபெடுத்தல் வகை

1.உயிரளபடை    2. ஒற்றளபடை

உயிரளபடை

  1. செய்யுளில் ஓசை குறையும் போது அதை நிறைவு செய்ய அளபெடுக்கும்
  2. சொலில் முதலிலும்,இடையிலும்,கடையிலும் வரும்
  3. நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும்

உயிரளபடை மூன்று வகைப்படும்

1. செய்யுளிசை அளபெடை 2.இன்னிசை அளபெடை

3. சொல்லிசை அளபெடை                                

  செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஒசை குறையும் போது நிறைவு செய்ய  நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும்(எ.கா. ஓஒதல்,உறாஅர்க்கு,படாஅ)

இன்னிசை அளபெடை

செய்யுளில் ஒசை குறையாத போதும் இனிய ஒசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது (எ.கா. கெடுப்பதூஉம்,எடுப்பதூஉம்)

சொல்லிசை அளபெடை

செயுள்ளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாக திரிந்து அளபெடுப்பது (எ.கா. உரனசைஇ,வரனசைஇ)

ஒற்றளபடை

செய்யுளில் ஒசை குறையும் போது நிறைவு செய்ய மெய்யெழுத்துக்கள் பத்தும்  (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள்), ஆயுத எழுத்தும்(ஃ) அளபெடுப்பது (எ.கா. எங்ங்கிறைவன்)

சொல்

ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது (எ.கா. பூ மலர்ந்தது,மாடு புல் தின்றது)

மொழி முன்று வகை

தனிமொழி,தொடர்மொழி,பொதுமொழி

தனிமொழி

ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது(எ.கா. கண்,படி,கண்ணன்)

தொடர்மொழி

இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து  வந்து பொருள் தருவது (எ.கா. கண்ணன் வந்தான்,மலர் வீட்டுக்குச் சென்றாள்)

பொதுமொழி

ஒரு சொல் தனித்து நின்று ஒரு  பொருளளையும்,பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது (எ.கா. எட்டு,வேங்கை)

தொழிற்பெயர்

ஒரு வினை அல்லது செயலை குறிக்கும் பெயரானது எண்,இடம்,காலம்,பால் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது (எ.கா. ஈதல், நடத்தல்)

விகுதி  பெற்ற தொழிற்பெயர்

வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும்  தொழிற்பெயர் விகுதி  பெற்ற தொழிற்பெயர் (எ.கா. நட+தல்=நடத்தல்)

எதிர்மறை தொழிற்பெயர்

எதிர்மறை பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் (எ.கா. நடவாமை, கொல்லாமை)

முதனிலைத் தொழிற்பெயர்

விகுதி பெறாமல் வினை பகுதியே தொழிற்பெயெராதல் முதனிலைத் தொழிற்பெயர் (தட்டு,உரை)

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் (எ.கா. பேறு)

தொழிற்பெயர்

 

முதனிலை தொழிற்பெயர்

 

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

 

கெடுதல்

கெடு

கேடு

சுடுதல்

சுடு

சூடு

வினையாலணையும் பெயர்

ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையை கொண்டு முடிவது வினையாலணையும் பெயர்(எ.கா. வந்தவர் அவர்தான்)

Book back

வினை அடியை  விகுதிகளுடன் இணைத்து தொழிற்பெயர்களை உருவாக்குக

  1. காண்-காணுதல்,காணல்,காட்சி
  2. சிரி-சிரித்தல்,சிரிப்பு,சிரிக்கும்
  3. படி-படித்தல்,படிப்பு,படித்து
  4. தடு-தடுத்தல்,தடுத்து

மலை என்னை அடிக்கடி அழைக்கும்.மலை மீது ஏறுவேன்.ஓரிடத்தில் அமர்வேன்.மேலும் கீழும் பார்ப்பேன்.சுற்றும்முற்றும் பார்ப்பேன்.மனம் அமைதி எய்தும்

(வினை முற்றை தொழிற்பெயராக மாற்றுக)

  1. அழைக்கும்-அழைத்தல்
  2. ஏறுவேன் –ஏறுதல்
  3. அமர்வேன் –அமர்தல்
  4. பார்ப்பேன் –பார்த்தல்
  5. எய்தும் –ஏய்தல்

தொழிற்பெயர்களை எழுதுக

  1. கட்டு-முதனிலைத் தொழிற்பெயர்
  2. சொட்டு- முதனிலைத் தொழிற்பெயர்
  3. வழிபாடு – முதனிலைத் தொழிற்பெயர்
  4. கேடு- முதனிலைத்கூ திரிந்த தொழிற்பெயர்
  5. கோறல்- முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

கூட்டு பெயர்கள்

  1. கல்-குவியல்
  2. பழம்-குலை
  3. புல்-கட்டு
  4. ஆடு-மந்தை

வினைமுற்றை வினயாலணையும் பெயராக மாற்றி எழுதுக

  • கலையரங்கத்தில்  என்க்காக காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்
  • கலையரங்கத்தில்  என்க்காக காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்
  • ஊட்டமிகு உணவு உண்டார்.அவர்  நீண்ட வாழ்நாள் பெற்றார்.
  • ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
  • நேற்று என்னை சந்தித்தார்.அவர் என் நண்பர்
  • நேற்று என்னை சந்தித்தவர் என் நண்பர்
  • பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்
  • பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்

கலைச்சொல்

Vowel-உயிரெழுத்து

Consonant-மெய்யெழுத்து

Homograph-ஒப்பெழுத்து

Monolingual-ஒரு மொழி

Conversation-உரையாடல்

Discussion-கலந்துரையாடல்

தொகைநிலை தொடர்கள்

தொடர்

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும் (எ.கா. நீர் பருகினான்)

தொகைநிலை தொடர்

பெயர்ச்சொல்லோடு வினைசொல்லும் பெயர்சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை,பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து இரண்டு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அது தொகைநிலை தொடர்(எ.கா. கரும்பு தின்றான்- கரும்பை தின்றான், ஐ மறைந்து வந்துள்ளது)

தொகைநிலை தொடர் வகை

வேற்றுமைத்தொகை,வினைத்தொகை,பண்புத்தொகை,உவமைத்தொகை, உம்மைத்தொகை,அன்மொழித்தொகை

வேற்றுமைத்தொகை

ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள்(ஐ,ஆல்,கு,இன்,அது,கண்) ஏதேனும் ஒன்று மறைந்து வந்து பொருள் உணத்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்(எ.கா. மதுரை சென்றார்- மதுரைக்குச் சென்றார்)

உருபும் பயனும் உடன் தொக்கதொகை

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்கதொகை எனப்படும்(எ.கா. தேர்ப்பாகன்- தேரை ஓட்டும் பாகன்)

வினைத்தொகை

காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க  வினைபகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லை போல் நடப்பது வினைத்தொகை எனப்படும்(எ.கா. வீசுதென்றல்-வீசிய காற்று,வீசுகின்ற காற்று,வீசும் காற்று)

பண்புத்தொகை

நிறம்,வடிவம்,சுவை அளவு முதலான்வற்றை உணர்த்தும் பண்புபெயருக்கும் அது  தழுவி நிற்கும் பெயர்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும்  ஆகிய,ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்(எ.கா. செங்காந்தள்-செம்மையாகிய காந்தள்)

இருபெயரொட்டு பண்புத்தொகை

சிறப்பு பெயர் முன்னும் பொது பெயர் பின்னும் நின்று இடையில் ”ஆகிய”  என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டு பண்புத்தொகை(எ.கா. மார்கழித்திங்கள்- மார்கழி ஆகிய திங்கள்(திங்கள் என்பது பொதுப்பெயர்)),சாரைப்பாம்பு)

உவமைத் தொகை

உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மரைந்து வருவது உவமைத் தொகை (எ.கா. மலர்க்கை-மலர் போன்ற கை)

உம்மைத்தொகை

இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் “உம்” என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை (எ.கா. அண்ணன் தம்பி- அண்ணனும் தம்பியும்)

அன்மொழித்தொகை

வேற்றுமை,வினை,பண்பு,உவமை,உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாது வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை(எ.கா. சிவப்புச் சட்டை பேசினார்)

 Book back

தொகைச் சொற்களை கண்டறிக

  1. இன்சொல்-பண்புத்தொகை(இனிமையான சொல்)
  2. எழுகதிர்-வினைத் தொகை(எழுந்த கதிர்)
  3. கீரிபாம்பு –உம்மைத்தொகை(கீரியும் பாம்பும்)
  4. பூங்குழல் வந்தாள் –அன்மொழித்தொடர்
  5. மலை வாழ்வார் –வேற்றுமைத்தொடர்(மலையில் வாழ்வார்)
  6. முத்துப்பல் –உவமைத்தொகை(முத்துப்போன்றபல்)
  7. இரவு பகல் – உம்மைத்தொகை(இரவும் பகலும்)

விடுகதை

  1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.   (நறுமணம்)
  2. பழமைக்கு எதிரானது.எழுதுகொலில் பயன்படும்  (புதுமை)
  3. இருக்கும் போது உருவம் இல்லை.இல்லாமல் உயிரினம் இல்லை   (காற்று)
  4. நாலெழுத்தில் கண் சிமிட்டும்.கடையிரண்டில் நீந்திச் செல்லும்  (விண்மீன்)
  5. ஓரெழுத்தில் சோலை  .இரண்டெழுத்தில் வனம்  (காடு)

கலைச்சொல்

  1. Storm –புயல்
  2. Tornado – சூறவாளி
  3. Tempest – பெருங்காற்று
  4. Land breeze –நிலக்காற்று
  5. Sea breeze – கடற்காற்று
  6. Whirlwind – சுழல்காற்று

தொகா நிலை தொடர்கள்

தொகா நிலை தொடர்

ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது தொகா நிலை தொடர்(எ.கா. காற்று வீசியது)

தொகா நிலை தொடர் வகைகள்

  1. எழுவாய்த்தொடர்
  2. விளித்தொடர்
  3. வினைமுற்றுத்தொடர்
  4. பெயரெச்சத்தொடர்
  5. வினையெச்சத்தொடர்
  6. வேற்றுமைத்தொடர்
  7. இடைச்சொல்தொடர்
  8. உரிச்சொல் தொடர்
  9. அடுக்குத்தொடர்

 எழுவாய்த்தொடர்

எழுவாயுடன் பெயர்,வினை,வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர்(எ.கா. இனியன் கவிஞர்-பெயர்,காவிரி பாய்ந்தது-வினை,பேருந்து வருமா?-வினா)

விளித்தொடர்

விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர்(எ.கா.நண்பா எழுது!)

வினைமுற்றுத்தொடர்

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்ற்த்தொடர்     (எ.கா. பாடினாள் கண்ணகி)

பெயரெச்சத்தொடர்

முற்றுப்  பெறாத வினை,பெயர்சொல்லை கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர்(எ.கா.  கேட்ட பாடல்)

வினையெச்சத்தொடர்

முற்றுப்  பெறாத வினை,வினைசொல்லை கொண்டு முடிவது வினையெச்சத்தொடர்(எ.கா. பாடி மகிழ்ந்தனர்)

வேற்றுமைத்தொடர்

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்

(எ.கா. கட்டுரையைப் படித்தாள்)

இடைச்சொல்தொடர்

இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது இடைச்சொல்தொடர்

(எ.கா. மற்றொன்று

உரிச்சொல் தொடர்

உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர்

(எ.கா. சாலச் சிற்ந்தது)

அடுக்குத்தொடர்

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித்தொடர்வது அடுக்குத்தொடர்

(எ.கா. வருக! வருக! வருக!)

Book back

 கலைச்சொல்

  1. Classical literature –செவ்விலக்கியம்
  2. Epic literature –காப்பிய  இலக்கியம்
  3. Devotional literature –பக்தி இலக்கியம்
  4. Ancient literature –பண்டைய இலக்கியம்
  5. Regional literature-வட்டார இலக்கியம்
  6. Folk literature –நாட்டுப்புற இலக்கியம்
  7. Modern literature-நவீன இலக்கியம்

                                                                                                            https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...