Wednesday, December 2, 2020

8 th std samacheer kalvi tamil Term 3-new syllabus

                   படை வேழம்(கலிங்கத்துபரணி)

“எதுகொல் இது மாயை ஒன்றுகொல்

எரிகொல் மறலிகொள் ஊழி யிகடை”

பொருள்

  1. மறலி- காலன்
  2. கரி- யானை
  3. தூறு- புதர்
  4. அருவர்- தமிழர்
  5. உடன்றன- சினந்து எழுந்தன
  6. வழிவர்- நழுவி ஓடுவர்
  7. பிலம்- மலைக்குகை
  8. மண்டுதல்- நெருங்குதல்
  9. இறைஞ்சினர்- வணங்கினர்
  10. முழை- மலைக்குகை

ஆசிரியர்குறிப்பு

  1. ஜெயங்கொண்டார்
  2. ஊர்- தீபங்குடி
  3. முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்கள புலவராக திகழ்ந்தவர்
  4. பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என்று பலப்பட்டை சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்

நூல்குறிப்பு

  1. 96 வகை சிற்றிலிங்கியங்களில் ஒன்று(பரணி வகை)
  2. தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் இதுவே ஆகும்
  3. இது முதலாம் குலோத்துங்க சோழன் அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பற்றி பேசுகிறது
  4. இந்நூலை தெந்தமிழ் தெய்வ பரணி என்று ஓட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்
  5. கலிங்கத்து பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது
  6. 599  தாழிசைகள் கொண்டது
  7. போர்முனையில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றி கொண்ட வீரரை புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்

book back

  1. சிங்கம் முழை யில் வாழும்
  2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு அச்சம் 
  3. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  வெம்மை + கரி
  4. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது   என்று + இருள்
  5.  ‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் போலுடன்றன

விடிதலைத் திருநாள்

பொருள்

  1. சிவன் – உயிர்
  2. சத்தியம்- உண்மை
  3. ஆனந்த தரிசனம்- மகிழ்வான காட்சி
  4. வையம்- உலகம்
  5. சபதம்-சூளுரை
  6. மோகித்து- விரும்பி

ஆசிரியர் குறிப்பு

  1. மீ. இராசேந்திரன்(மீரா)
  2. கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர்
  3. அன்னம் விடுதூது என்னும் இதழை நடத்தியவர்
  4. ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்த பக்கம், கோடையும் வசந்தமும் பல நூல்கள் எழுதியுள்ளார்

BOOK BACK

  1. வானில் முழுநிலவு அழகாக தரிசனம் அளித்தது.
  2. இந்த வையம் முழுவதும் போற்றும் படி வாழ்வதே சிறந்த வாழ்வு
  3.  ‘சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  சீவன் + இல்லாமல்
  4.  ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விலங்கு + ஒடித்து 
  5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  காட்டையெரித்து
  6.  இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இதந்தரும்

 

பாரத ரத்னா எம்.ஜி.இராமசந்திரன்

  1. தமிழ்நாட்டின் முதலைமைச்சராக  இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் காமராசர் திட்டமான மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றினார்
  2. தமது நடிப்பாற்றலால் நாடகக் குழுவின் முதன்மை நடிகராக உயர்ந்தார்
  3.  பின் திரைப்படத் துறையில் நுழைந்தார்
  4. மக்கள் இவரை புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று பாராட்டினார்
  5. திறைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கினார்
  6. இந்திய அரசு பாரத் பட்டம் வழங்கியது(மிகச் சிறந்த நடிகருக்கான பட்டம்)
  7. பள்ளி குழைந்தைகளுக்கு காலனி வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது
  8. பொன்மன செம்மல் என மக்கள் அழைக்கின்றனர்
  9. திட்டங்கள்- உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம், ஆதரவற்ற மகளிருக்கு திருமண உதவித் திட்டம், தாய் சேய் நல இல்லங்கள், பற்பொடி வழங்கும் திட்டம், பாடநூல் வழங்கும் திட்டம், முதியோர்க்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
  10. மதுரை மாநகரில் 5 உலக் தமிழ் மாநாட்டை நடத்தினார்
  11. தஞ்சையில் 1000 ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகம் தோற்றுவித்தார்

பிறப்பு

  1.  கேரளாவில் இருந்து குடிபெயர்ந்து இலங்கை- கண்டிக்கு சென்றனர் எம்.ஜி.அர் ரின் பெற்றோர்(கோபாலந் சத்தியபாமா)
  2. இவர் 5 வது குழந்தையாக 1917 ஆம் ஆண்டு பிறந்தார்
  3. தன் தந்தையை இளமையிலேயே இழந்தார். இதனால் தமிழகத்தில் கும்பகோணத்திற்கு குடிப்பெயர்ந்தார்

சிறப்பு

  1. சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது
  2. தமிழக அரசு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் நிறுவியுள்ளது
  3. இந்திய அரசு 1988 ல் பாரத ரத்னா விருது வழங்கியது
  4. எம்.ஜி.ஆர் 100 ஆண்டு நினைவாக சென்னையிலும், மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
book back

  1. எம்.ஜி.ஆர் கும்பகோணம் என்னும் ஊரில் கல்வி பயின்றார்
  2. எம்.ஜி.ஆர் படிப்பை தொடர முடியாமைக்கு காரணம் குடும்ப வறுமை
  3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான பாரத் என்னும் பட்டத்தை எம்.ஜி.ஆர் க்கு வழங்கியது  
  4. ஐந்தாம் உலக தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் மதுரை
  5. எம்.ஜி.ஆர் க்கு  அழியாத புகழை தேடிதந்த திட்டம் மத்திய உணவுத் திட்டம்
  6. தமிழக முதலமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
    Answer:
    Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் 1
    Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் 2

அறிவுசால் ஒளவையார்

“ சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத்து அடக்கச்

சாதல் நீங்க எமக்கீற்  தனையே”- ஒளவையார்

“இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்த நெய்யணிந்து

கடியுடை லியன்நகரவ்வே அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுறுதி சிதைந்து

கொல்துறை குற்றில் மாதோ என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல் எம் கோமான் வைற்று வேலே-அதியமானின் சிறப்பு பற்றி தொண்டைமானிடம் ஒளவையார் கூறியது

ஒன்றே குலம்

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”- திருமூலர்

பொருள்

  1. நமன் – எமன்
  2. சித்தம்- உள்ளம்
  3. நம்பர்- அடியார்
  4. நாணமே-கூசாமல்
  5. உய்ம்மின் – ஈடேறுங்கள்
  6. ஈயில்- வழங்கினால்
  7. படமாடக் கோயில்- படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

நூல் குறிப்பு

  1. திருமூலர்
  2. 63 நாயன்மார்களில் ஒருவர்
  3. 18 சித்தர்களுள் ஒருவர்
  4. திருமந்திரம் மூவாயிரம் பாடல்களை கொண்டது.இது தமிழ் மூவாயிரம் எனப்படும்
  5. 12 திருமுறைகளுள் 10 வது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது

book back

  1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரை கவர வரும் நமனை கண்டு அஞ்சமாட்டார்கள்
  2. ஒன்றே குலம் என்று கருதி வாழ்வதே மனித பண்பு 
  3. ‘நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நமன் + இல்லை
  4.   நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்   நம்பர்க்கங்கு

மெய்ஞானஓளி

“கற்றக் கருத்துகளைக் கேட்டோடு அறுத்தவருக்கு

உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே”

பொருள்

  1. பகராய்- தருவாய்
  2. ஆனந்த வெள்ளம்- இன்பப்பெருக்கு
  3. பராபரம்- மேலான பொருள்
  4. அறுத்தவருக்கு- நீக்கியவர்க்கு

நூல்குறிப்பு

  1. குணங்குடி மஸ்தான் சாகிபு
  2. இயற்பெயர்(சுல்தான் அப்துல் காதர்)
  3. இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர்
  4. சதுரகிரி, புறாமலை, நாகமலை, தவம் இயற்றி ஞானம் பெற்றார்
  5. எக்காளக்கண்ணி, மனோன்மணிக் கண்ணி,நந்திசுவரக் கண்ணி நூல்கள் இயற்றியுள்ளார்
  6. இப்பாடல் இடம் பெற்ற தொகுப்பு “குணங்குடியார் பாடற்கோவை

book back

  1. மனிதர்கள் தம் ஐம்பொறிகளை தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்
  2.  ஞானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்தனர் 
  3. ‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  ஆனந்தம் + வெள்ளம் 
  4. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் உள்ளிருக்கும்

அயோத்திதாசர் சிந்தனைகள்

  1. 19 நூற்றாண்டின் இறுதியிலும், 20 நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்
  2. சமத்துவம், பகுத்தறிவு மக்களிடம் பரப்பியவர்கள்  (அம்பேத்கார், பெரியார்). இவர்களின் முன்னோடி அயோதிதாசர்
  3. தென்னிந்திய சமூக சீர்த்திருத்ததின் தந்தை”-சிறப்பு
  4. 1845 மே 24ல் சென்னையில் பிறந்தார்
  5. இயற்பெயர்(காத்தவராயன்)
  6. அயோத்திதாசர் என்பவரிடம் கல்வியும், சித்தமருத்துவமும் பயின்றார்.ஆசிரியர் மீது கொண்ட அன்பினால் அவரது பெயரை சூட்டிக்கொண்டார்
  7. திருமணத்திற்க்கு பிறகு பர்மா சென்றார். அங்கு கூலித்தொழிலாலியான தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டார்
  8. தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்றார்
  9. இல்க்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்துவம் பல்துறை நூல்களை கற்றார்
  10. 1907- சென்னையில் ஒரு பைசா தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்
  11. ஒரு ஆண்டிற்க்கு பின் தமிழன் என்று இதழுக்கு பெயர் மாற்றினார்
  12. மனிதனுக்கு கல்வி அறிவு அவசியம் என்றார்
  13. கல்வியோடு, கைத்தொழில். வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல் கற்க வேண்டும் என்றார்
  14. “மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கவையாக இருக்கவேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி அமைய வேண்டும். அவர் மக்களுள் மாமனிதராக , அறிவாற்றல் பெற்றவராக , நன்னெறியை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவரை வணக்கத்திற்க்கு உரியவராக மக்கள் ஏற்பார்கள் கடவுளென துதிப்பார்கள்”- என்பது அயோத்திதாசர் கருத்து
  15. “வானம் பொய்ப்பதற்க்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமைக்கு காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும் அறிவாளிகள் இல்லாமைக்கு காரணம் ஆட்சிதிறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே அத்தகைய அரசர்கள் இல்லாமைக்கு காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியன உடைய குடிகள் இல்லாமையே என்று கூறுவதன் மூலம் நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது”என்கிறார் அயோத்திதாசர்
  16. 1892- திராவிட மகாஜன சங்கம் உருவாக்கினார்
  17. “சுயராஜ்ஜியத்தின் நோக்கம், அதிகாரத்தை கைப்பற்றுவதாக மட்டும் இருக்க கூடாது.மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமைய வேண்டும். மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய நாடு முன்னேற முடியாது”
  18. பதிப்பித்த நூல்கள்- போகர் ஏழுநூறு, அகத்தியர் இருநூறு,சிமட்டு இரத்தின சுருக்கம், பாலவாகடம்
  19. எழுதிய நூல்கள்- புத்தரது ஆதிவேதம், இந்திர தேச சரித்திரம்,விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா
  20. “என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்க்கும், சீர்த்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோதிதாசரும், தங்கவயல் அப்பதுரையாரும் ஆவார்கள்” தந்தை பெரியார்
  21. திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பெளத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்
  22. சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோதிதாச பண்டிதர்  மருத்துவமணை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது

book back

  1. அயோதிதாசர் தென்னிந்திய சமூக சீர்த்திருத்ததின்  தந்தை என்று போற்றப்படுகிறார்
  2. அயோதிதாசர் நடத்திய இதழ் ஒருபைசா தமிழன்
  3. கல்வியோடு கைத்தொழிலும் கற்க வேண்டும் என்பது அயோதிதாசர் கருத்து
  4. அயோதிதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது ஆழ்ந்த படிப்பு
  5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது மழை

மனித யந்திரம்(சிறு கதை)

நூல்குறிப்பு

  1. சிறுகதை மன்னன் எனப்படும் புதுமைப்பித்தன்
  2. இயற்பெயர் சொ.விருத்தாசலம்
  3. 100க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளை படைத்துள்ளார்
  4. சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடலும் எழுதியுள்ளார்
  5. கடவுளும் கந்த சாமிபிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒருநாள் கழித்து போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ் பெற்றவை

உயிர்க்குணங்கள்

பொருள்

  1. நிறை- மேன்மை
  2. பொறை- பொறுமை
  3. பொச்சப்பு- சோர்வு
  4. மையல்- விருப்பம்
  5. ஓர்ப்பு- ஆராய்ந்து தெளிதல்
  6. அழுக்காறு- பொறாமை
  7. மதம்- கொள்கை
  8. இகல்- பகை
  9. மன்னும்- நிலைப்பெற்ற

நூல்குறிப்பு

  1. பாவை நோன்பு-மார்கழி திங்களில் நீராடி தோழிகளுடன் இறைவனை வழிபடுவது
  2. திருமாலை வழிப்படச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை
  3. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக மாணிக்கவாசகர் இயற்றிய நூலே திருவெம்பாவை

ஆசிரியர் குறிப்பு

  1. இறையரசன்
  2. இயற்பெயர்(சே.சேசுராசா)
  3. கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர்
  4. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை இயற்றினார்
book back

  1. அடுத்தவர் வாழ்வைக் கண்டுஅழுக்காறு கொள்ளக் கூடாது
  2. நாம் நீக்க வேண்டுயவற்றுள் ஒன்று பொச்சாப்பு 
  3. ‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  இன்பம் + துன்பம்
  4. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் குணங்களெல்லாம்

பொருத்துக

  1. நிறை-மேன்மை
  2. பொறை- பொறுமை
  3. மதம்- கொள்கை
  4. மையல்- விருப்பம்

இளைய தோழனுக்கு(கவிதை)

நூல்குறிப்பு                 

  1. வானம் பாடி இயக்க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்
  2.  புதுக்கவிதை பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்
  3. கண்ணீர் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும், தரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்
  4. கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்
  5. இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு  என்னும் புதுக்கவிதை நூலுக்கு சாகத்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

book back

  1. உன்னுடன் நீயே கைக்குலுக்கி கொள்
  2. கவலைகள்  கைக்குழந்தைகள் அல்ல 
  3. ‘விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விழித்து + எழும்
  4. போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  போவது + இல்லை
  5. ‘படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  படுக்கை + ஆகிறது
  6. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  தூக்கிக்கொண்டு  
  7. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  விழித்தெழும்

சட்டமேதை அம்பேத்கர்

  1. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
  2. விடுதலை இந்தியாவின் முதல் சட்ட  அமைச்சர்
  3.  1891 ஏப்ரல் 14  பிறந்தார்
  4. பெற்றோர்-ராம்ஜிசக்பால்- பீமாபாய்
  5. 14 வது குழந்தையாக பிறந்தார்
  6. ஊர்-மகாராட்டிரம்- இரத்தனகிரி- அம்பவாதே
  7. இவரது தந்தை இராணுவ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்

கல்வி

  1. சதாராவில் உள்ள பள்ளியில் கல்வியை தொடங்கினார்
  2. இவரது ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர் மீது கொண்ட பற்றின் காரணமாக பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்ற பெயரே பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்
  3. 1904 – மும்பைக்கு குடிப்பெயர்ந்து – எல்பின்ஸ்டன் உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்தார்
  4. பரோடா மன்னனின் உதவியால் மும்பை பல்கலைகழகத்தில் படித்து 1912 ஆம் அண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்
  5. சிறிது காலம் பரோடா மன்னனின் அரண்மனையில் உயர் அலுவலராகவும் இருந்தார்
  6. பரோடா மன்னன் சாயாஜிராவ் உதவியுடன் அமெரிக்கா சென்றார்
  7. கொலம்பியா பல்கலைகழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூக அறிவியல் பாடங்களை கற்றார்
  8. 1915-முதுகலைப் பட்டம்(இந்திய வணிகம் )என்ற ஆய்விற்காக பெற்றார்
  9. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் “இந்தியாவில் சாதிகளின் தோற்றமும், வளர்ச்சியும்”
  10. கொலம்பியா பல்கலைகழகம் “இந்தியாவின் தேசிய பங்கு வீதம்” என்ற ஆய்வுக்காக முனைவர் பட்டம் வழங்கியது
  11. 1920- பொருளாதார படிப்பிற்காக இலண்டன் சென்றார்
  12. 1921-முதுமலை பட்டமும்
  13. 1923-முனைவர் பட்டம்(”ரூபாய் பற்றிய பிரச்சனைகள் ஆய்வு”)
  14. 1923- சட்டபடிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்

சமூக பணி

  1. 19240-”ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை  என்ற அமைப்பை நிறுவினார்
  2. 1930- வட்ட மேசை மாநாட்டில் (லண்டன்) கலந்து கொள்ளும் முன்  “ என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்” என்று கூறினார்
  3. இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் “ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதிதுவமும் வழங்கப்பட வேண்டும்” என்றார். இது இரட்டை வாக்குரிமை எனப்பட்டது
  4. இதை எதிர்த்து காந்தியடிகள் 1931உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
  5. இதனால் இரட்டைவாக்குரிமை பதிலாக ஒடுக்கப்பட்டோருக்கு என தனிதொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதுவே பூனே ஒப்பந்தம்
  6. 1935- சுதந்திர தொழிளார் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்
  7. 1927- ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை துவங்கினார்
  8. 1927- சமாஜ் சமாத சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்
  9. 1936- நாசிக் கோயில் நுழைவுப் போரட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்
  10. 1947-ஆகஸ்ட் 29 – அரசியல் நிர்ணய மன்றம் “ அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு” உருவாக்கப்பட்டது
  11.  இக்குழுவில் கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி , சையது முகமது சாதுல்லா. மாதவராவ, டி.பி.கைதான் (7 பேர் கொண்ட வரைவுக்குழு)
  12. அம்பேத்கரின் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது
  13.    1956- அக்டோபர் 14- நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துகொண்டார்
  14. அம்பேத்கர் எழுதிய “புத்தரும் அவரின் தம்மமும்” என்னும் புத்த்கம் அவரது மறைவுக்கு பின் 1957 ஆம் ஆண்டு வெளியானது
  15. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த அம்பேத்கர்
  16. 1990- அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது

 book back

  1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர்
  2. பூனா ஒப்பந்தம் இரட்டை வாக்குரிமையை மாற்ற ஏற்படுத்தப்பட்டது
  3. சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் சமாஜ் சமாத சங்கம்
  4. அம்பேத்கரின் சமூக பணிகளை பாராட்டி இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது
  5. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் புத்தரும் அவரின் தம்மமும்
  6. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் சுதந்திர தொழிலாளர் கட்சி
  7. பொருளாதார படிப்பிற்காக அம்பேத்கர் லண்டன் சென்றார்

அம்பேத்கரின் பொன்மொழி “நான் வணங்கு தெய்வங்கள் மூன்று முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை”

1930- வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கருடன் தமிழகத்தை சேர்ந்த இராவ் பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்

பால்மனம்

ஆசிரியர் குறிப்பு

  1. கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி
  2. சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்
  3. அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றார்
  4. தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்
  5. உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள் , அன்பின் சிதறல் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்
  6. பால் மனம் என்னும் இக்கதை அ.வெண்ணிலா  தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

 

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...