Friday, August 28, 2020

10 th std samacheer kalvi tamil (lesson1 to 3) -new syllabus

 https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html 

அன்னை மொழியே

ஆசிரியர் குறிப்பு

  1. பெயர்-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  2. இயற்பெயர்-துரை மாணிக்கம்
  3. இதழ்கள்-தென்மொழி,தமிழ்ச்சிட்டு மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்
  4. நூல்கள்-உலகியல்நூறு பாவியக்கொத்துநூறசிரியம்கனிச்சாறு,                 எண்சுவை எண்பது,மகபுகுவஞ்சி,பள்ளிப்பறவைகள்
  5. *இவர் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவுலமாய் அமைந்துள்ளது
  6. *இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது

பொருள்

  1. முன்னை-பழமை
  2. முகிழ்ந்த-தோன்றிய                                                                       
  3. தென்னன்பாண்டியமன்னன்
  4. பாப்பத்தே-பத்துப்பாட்டு,எட்டுத்தொகை

Notes

  1. அன்னை மொழிக்கு பெருமை சேர்க்கும் இலக்கியங்களாக பாவலரேறு கூறும் நூல்கள் -திருக்குறள்,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினென்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம்,மணிமேகலை
  2. சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்-என்றன்                    சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”- சச்சிதானந்தன்

 Book Bank

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் எம் + தமிழ் + நா

 தமிழ்சொல் வளம்

நாடும் மொழியும் நமதிரு கண்கள்-பாரதியார்

“திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எழுதியவர்-கால்டுவெல்

அடி வகை

  1. நெல்,கேழ்வரகு முதலியவற்றின் அடி-தாள்
  2. கீரை,வாழை முதலியவற்றின் அடி-தண்டு
  3. நெட்டி,மிளகாய் முதலியவற்றின் அடி-கோல்
  4. குத்துச்செடி,புதர் முதலியவற்றின் அடி-தூறு
  5. கம்பு,சோளம் முதலியவற்றின் அடி-தட்டு,தட்டை
  6. கரும்பின் அடி-கழி
  7. மூங்கிலின் அடி-கழை
  8. புளி,வேம்பு முதலியவற்றின் அடி-அடி

கிளை பிரிவு

  1. அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை-கவை
  2. கவையின் பிரிவு-கொம்பு,கொப்பு
  3. கொம்பின் பிரிவு-கிளை
  4.  கிளையின் பிரிவு-சினை
  5. சினையின் பிரிவு-போத்து
  6. போத்தின் பிரிவு-குச்சு
  7. குச்சின் பிரிவு-இணுக்கு
  8. காய்ந்த குச்சி-சுள்ளி
  9. காய்ந்த சிறு கிளை-விறகு
  10. காய்ந்த கழி-வெங்கழி
  11. காய்ந்த கொம்பும்,கவையும்,அடியும்-கட்டை

இலை வகை

  1. புளி,வேம்பு முதலியவற்றின் இலை-இலை
  2. நெல்,புல் முதலியவற்றின் இலை-தாள்
  3. கரும்பு,சோளம் முதலியவற்றின் இலை-தோகை
  4. தென்னை,பனை  முதலியவற்றின் இலை-ஓலை
  5. காய்ந்த தாளும்,தோகையும்-சண்டு
  6. காய்ந்த இலை-சருகு

கொழுந்து வகை

  1. நெல்,புல் முதலியவற்றின் கொழுந்து-துளிர்,தளிர்      
  2. புளி,வேம்பு முதலியவற்றின் கொழுந்து-முறி
  3. கரும்பு,சோளம்,தென்னை,பனை முதலியவற்றின் கொழுந்து-குருத்து
  4. கரும்பின் நுனிபகுதி-கொழந்தாடை

பூவின் நிலை

  1. பூவைன் தோற்றனிலை-அரும்பு
  2. பூவின் விரிய தொடங்கும் நிலை-போது
  3. பூவின் மலர்ந்த நிலை-மலர்
  4. புவின் கிழே விழுந்த நிலை-வீ
  5. பூ வாடின நிலை-செம்மல்

பிஞ்சு வகை

  1. பூவோடு கூடிய இளம் பிஞ்சு-பூம்பிஞ்சு
  2. இளம் காய்-பிஞ்சு
  3. மாம்பிஞ்சு-வடு
  4. பலா பிஞ்சு-முசு
  5. எள் பிஞ்சு-கவ்வை
  6. தென்னை,பனை பிஞ்சு-குரும்பை
  7. முற்றாத தேங்காய்-இளநீர்
  8. இளம் பாக்கு-நுழாய்
  9. இள நெல்-கருக்கல்
  10. வாழைப்பிஞ்சு-கச்சல்

குலை வகை

  1. அவரை,துவரை குலை-கொத்து
  2. கொடி முந்திரி குலை-குலை
  3. வாழைக்குலை-தாறு
  4. கேழ்வரகு,சோளம் கதிர்-கதிர்
  5. நெல், தினை கதிர்-குரல்
  6. வாழைத்தாற்றின் பகுதி-சீப்பு
கெட்டுப்போன காய்கனி வகை
  1. நுனியில்  சுருங்கிய காய்-சூம்பல்
  2. சுருங்கிய பழம்-சிவியல்
  3. சூட்டினால் பழுத்த பிஞ்சு-வெம்பல்
  4. குளுகுளுத்து நாறிய பழம்-அழுகல்
  5. பதரை போன மிளகாய்-சொண்டு
  6. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்-அல்லிகாய்
  7. தென்னையில் கெட்ட காய்-ஒல்லிக்காய்
பழதோல் வகை

  1. மெல்லியது-தொழி
  2. திண்ணமானது-தோல்
  3. வன்மையானது-தோடு
  4. மிக வன்மையானது-ஓடு
  5. சுரையின் ஓடு-குடுக்கை
  6. தேங்காய் நெற்றின் மேல்பகுதி-மட்டை
  7. நெல்,கம்பு முதலியவற்றின் மூடி-உமி
  8. வரகு,கேழ்வரகு முதலியவற்றின் உமி-கொம்மை

இளம் பயிர் வகை

  1. நெல்,கத்திரி அகியவற்றின் இளநிலை-நாற்று
  2. மா,புளி வாழை அகியவற்றின் இளநிலை-கன்று
  3. வாழையின்  இளநிலை-குருத்து
  4. தென்னையின்  இளநிலை-பிள்ளை
  5. பனையின்  இளநிலை-மடலி,வடலி
  6. நெல்,சோளம் அகியவற்றின் பசும்பயிர்-பைங்கூழ்

நிலவகை

  1. தரிசு-நீரில்லா வறண்ட நிலம்
  2. கரிசல்-கருமண் நிலம்
  3. புறம்போக்கு-பயன்படாத நிலம்
  4. அவல்-வளை நிலம்
  5. சிவல்-செம்மண் நிலம்
  6. முரம்பு-கல்லினால் ஆன மேட்டு நிலம்
  7. சுவல்- மேட்டு நிலம்

“உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு”-மலேசியா(தமிழிற்க்காக)

*இந்த பாடம் “சொல்லாய்வுக்கட்டுரைகள்” நூலில் உள்ள ”தமிழ்சொல் வளம்” எனும் கட்டுரையின் சுருக்கம்

*எழுதியவர் தேவனேய பாவணார்(சிறப்பு பெயர்-மொழி ஞாயிறு)

*இவர் தமிழ் சொல் அராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

*உலக தமிழ் கலகத்தை நிறுவி தலைவராக இருந்தவர்

*போர்ச்சுகீசில் உள்ள லிசுபனில் 1554  ஆம் ஆண்டு  “கார்டிலா” எனும் நூல் முதன் முதலாக தமிழில் மொழிபெய்ர்க்கப்பட்டது

தமிழ்திரு இரா.இளங்குமரனார்

  1. திருச்சி இல் உள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” அமைத்துள்ளார்
  2. பாவணர் நூலகம்” உருவாக்கியிள்ளார்
  3. “விழிகளை இழக்க நேரிட்டால் கூட   தாய்தமிழினை இழந்து விடக்கூடாது”என்று எண்ணியவர்
  4. இன்றளவும் இமைகளை மூடியபடி தமிழ் எழுதுபவர்(திரு.வி.க தமிழ்த்தென்றல் எழுதியது போல)
  5. எழுதிய நூல்கள்-இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம்,தனித்தமிழ் இயக்கம்,பாவாணர் வரலாறு,குண்டலகேசி உரை,யாப்பருங்கலம் உரை,புறத்திரட்டு உரை,திருக்குறள் தமிழ் மரபுரை,காக்கை பாடினிய உரை,தேவ நேயம்
Book bank
1. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது சருகும் சண்டும் 
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை மணி வகை

 இரட்டுற மொழிதல்

பொருள்

  1. துய்ப்பது-கற்பது,தருதல்
  2. மேவலால்-பொருந்துதலால்,பெறுதலால்

*ஒரு சொல்லோ சொற்றோடரோ இருபொருள்  பட வருவது இரட்டுற மொழிதல் அணி அல்லது சிலேடை அணி

“முத்தமிழ் துய்பதால் முச்சங்கம் கண்டதால்,,,,:-தனிப்பாடல் திரட்டு

முத்தமிழ்

  1. இயல்,இசை,நாடகம்
  2. முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

முச்சங்கம்

  1. முதல்,இடை,கடை
  2. முன்று வகையான சங்குகள் தருதல்

மெத்த வணிகலன்

  1. ஐம்பெரும்காப்பியம்
  2. மிகுதியான வணிக கப்பல்கள்

சங்கத்தவர் காக்க

  1. சங்க பலகையிலிருந்து புலவர்கள் பாதுகாத்தமை
  2. நீர் நிலைகளை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்

ஆசிரியர்

  1. தமிழழகனார்(சந்தகவிமணி)
  2. இயற்பெயர்-சண்முக சுந்தரம்
  3. 12 சிற்றிலக்கிய நூல்கள் படைத்துள்ளார்

 உரைநடையின் அணிகலன்கள்

  1. முதல் தமிழக் கணினியின் பெயர் திருவள்ளுவர்
  2. 1983 தமிழக் கணினி விற்பனைக்கு வந்தது
  3.  எழில் முதல்வன் (மா.இராமலிங்கம்) எழுதிய புதிய உரைநடை சாகத்திய அகாதெமி விருது பெற்றது
  4. எழில் முதல்வன் மரபு கவிதை,புதுக்கவிதை படைப்பதில் வல்லவர்
  5. இற்றிய நூல்கள்-இனிக்கும் நினைவுகள்,எங்ஙெங்கு காணினும்,யாதுமாகி நின்றாய்
  6. குடந்தை அரசு ஆடவர் கல்லூரி,பாரதிதாசன் பல்கலைக்கலகம் அகியவற்றில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்

 

 lesson 2- கேட்கிறதா என் குரல்

  1. உலகம் ஐம்பெரும் புதங்களால் ஆனது
  2. மூச்சு பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்-திருமூலர்(திருமந்திரம்)
  3. “ வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்”-ஒளவை
  4. கிழக்கு-குணக்கு என்ற  பெயரும் உண்டு
  5. கிழ்க்கிலிருந்து வீசும் போது கொண்டல் எனப்படும்
  6. மேற்க்கு- குடக்கு  என்ற பெயரும் உண்டு
  7. மேற்கிலிருந்து வீசும் போது கோடை எனப்படும்
  8. வடக்கு- வாடை என்ற பெயரும் உண்டு
  9. வடக்கிலிருந்து வீசும் போது வாடைக்காற்று,ஊதக்காற்று எனப்படும்
  10. தெற்கிலிருந்து வீசும் போது தென்றல் எனப்படும் (இதமான காற்று)
  11. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்”-சிலம்பு
  12. “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
  13. செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”-பலபட்டை சொக்கநாத புலவர்(பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது)
  14. “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி                                                           வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!                                                         களீஇயல் யானைக் கரிகால் வளவ—சங்க கால பெண்புலவர் (”வெண்ணிகுயத்தியார்)
  15. பருவக்காற்றின் பயனை உலகுக்கு உணர்த்தியவர் hippalus கிரேக்க அறிஞர்
  16. June to September- தென்மேற்க்கு பருவக்காற்று
  17. October to December- வடக்கிழக்கு பருவக்காற்று
  18. ”வளி மிகின் வலி இல்லை”-ஐயூர் முடவனார்
  19. “கடுங்காற்று மணலை கொண்டு வந்து சேர்க்கிறது” மதுரை இளநாகனார்
  20. காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 5 ஆம் இடம்
  21. இந்திய அளவில் தமிழகம் 1 இடம்
  22. காற்றை  அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா 2 வது இடம்
  23. மனிதன் உணவின்றி 5 வாரம் உயிர் வாழலாம்
  24. மனிதன் நீரின்றி 5 நாள் உயிர் வாழலாம்
  25. மனிதன் காற்றுஇன்றி 5 நிமிடம் கூட உயிர் வாழ முடியாது
  26. இந்தியாவில் அதிக உயிரிழப்பை தரும் காரணங்களில் 5 வது இடம் காற்று மாசுபாடு
  27. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐ.நா.சிறுவர் நிதியம்(UNICEF) கூறுகிறது
  28. குளிர்பதனப்பெட்டி வெளியிடும் குளோரோ புளோரோ கார்பன் ஆல் காற்று மாசு அடைகிறது. இதனை தடுக்க தற்பொழுது ஹைட்ரோ கார்பன் குளிபதனப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது
  29. அமில  மழை பொழிய காரணமாக இருக்கும் வாயுக்கள் கந்தக டை ஆக்சைடு , நைட்ரஜன் டை ஆக்சைடு
  30. ஒரு மணித்துளிக்கு 12 – 18 முறை மூச்சு காற்று (கார்பன் டை ஆக்சைடு) வெளியேறுகிறது
  31. ஜுன் 15 – உலக காற்று நாள்
  32. கி.பி. 1 ஆம் நூற்றாண்டில்  hippalus என்ற கிரேக்க அறிஞர் பருவக்காற்று மூலமாகவே சேரநாட்டு முசிறி துறைமுகத்தை அடைந்தார்.என்வே இந்த பருவக்காற்று ஹிப்பாலஸ் பருவக்காற்று எனப்பட்டது.கடல்  வணிகம் பெருகியது
  33. வரும் காலங்களில் ஆக்ஸிஜன் 1 பாட்டில் 1000 ருபாய்க்கும் அதிகமாக இருக்கும்

காற்றே வா


“காற்றே வா

மகரந்த தூளைச் சுமந்து கொண்டு மனத்தை……” – பாரதியார்

பொருள்

  1. மயலுறுத்து – மயங்கச்செய்
  2. ப்ராண-ரஸம் – உயிர்வளி
  3. லயத்துடன் – சீராக

ஆசிரியர் குறிப்பு

  1. பெயர்-மகாகவி சுப்ரமணிய பாரதியார்
  2. பாராட்டு- “நீடுதுயில் நீக்கி  பாடவந்த நிலா”,”பாட்டுக்கொரு  புலவன் பாரதி”,சிந்துக்கு தந்தை”
  3. காவியம்- பாஞ்சாலி சபதம்,குயில் பாட்டு,
  4. நீதி பாடல்கள்- கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி
  5. இதழ்களின் ஆசிரியர் பணி-இந்தியா, சுதேசிமித்திரன்

யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனக்கவிதை எனப்படுகிறது.இதனை முதலில் கையாண்டவர் பாரதியார். இதுவே புதுக்கவிதை எனப்படுகிறது

முல்லைப்பாட்டு

"நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை”-நப்பூதனார்

பொருள்

  1. நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
  2. நேமி- சக்கரம்
  3. கோடு- மலை
  4. நறுவி- நறுமணமுடைய மலர்கள்
  5. தூஉய்- தூவி
  6. கொடுஞ்செலவு- விரைவாக செல்லுதல்
  7. விரிச்சி – நற்சொல்
  8. சுவல்- தோள்

நூல் குறிப்பு

  1. முல்லைப்பாட்டு- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
  2. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை  உடைய நூல்(103 அடிகள்)
  3. ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
  4. ஆசிரியர்-காவிரி பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகன் நப்பூதனார்
Book Back
1. ‘பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

புயலிலே ஒரு தோணி

பொருள்

  1. கப்பித்தான் – தலைமை மாலுமி
  2. தொங்கான் – கப்பல்
  3. பலிவான் – இந்தோனேசியாவில் உள்ள ஒரு இடம்
notes
  1. “வட இந்தியப் பெருங்கடலில்  உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது
  2. 2004  ஆம் ஆண்டு உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் (புதுடெல்லி)புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியல் இட்டுள்ளது
  3. இந்த பெயர்களை வங்கதேசம், இந்தியா, மாலத்திவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான் , இலங்கை , தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து வைத்துள்ளன
  4. கஜா புயல் பெயர் இலங்கை வைத்தது
  5. பெய்டி புயல் பெயர் தாய்லாந்து வைத்தது
  6. அக்னி,ஆகாஷ், பிஜ்லி,ஜல்,லெஹர் புயல் பெயர் இந்தியா வைத்தது
  7. இடம்புரி புயல்கள்- அமெரிக்கா, ஜப்பான், சீனா வை தாக்கும் புயல்கள்
  8. வலம்புரி புயல்கள்- ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரை, ஹாவாய் தீவுகளை தாக்கும் புயல்கள்
  9. இந்த விளைவை 1835 ஆம் ஆண்டு கொரியாலிஸ் என்ற கணித வல்லுநர்(பிரெஞ்சு) கண்டுப்பிடித்தார்.எனவே இது கொரியாலிஸ் விளைவு எனப்படுகிறது
  10. புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எழுதியவர்-ப.சிங்காரம்(சிவகங்கை மாவட்டம்).தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார்.தனது சேமிப்பு 7 ½ லட்சத்தை  மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்
  11. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”- அகநானூறு                                   (நாமக்கல் மாவட்டத்தின் கொல்லி மலை )

  விருந்து போற்றுதும்

  1. “விருந்தே புதுமை” – தொல்காப்பியர்
  2. “மோப்பக் குழையும் அனிச்சம் …. “-திருக்குறள்                       (முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்
  3. “…….. தொல்லோர் சிற்ப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”- சிலப்பதிகாரம்                                                                                                    (கண்ணகி கோவலனை பிரிந்ததை விட விருந்தினரை போற்ற முடியாத நிலை எண்ணி வருந்துகிறாள்)
  4.  “பொருஎது செல்வமும் கல்வியும் பூத்தலால்                                                வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்                                                          விருந்தும் அன்றி விளைவன யாவையே”- கம்பராமாயணம்                            (கல்வியும்,செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக கூறுகிறார்)
  5. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண                                 மேன்மேலும் முகமலரும் மேலோர் போல “ – கலிங்கத்துபரணி                        (விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்)
  6. “உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்                                                           அமிழ்தம் இயைவ தாயினும் ,இனிது எனத்                                                     தமியர் உண்டலும் இலரே” – புறநானூறு                                               (அமிழ்தமே ஆயினும் பிறருக்கு கொடுத்து வாழும் நல்லவர் இருப்பதாலேயே இவ்வுலகம் நிலைத்திருக்கிறது)
  7.  ”அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”-நற்றினை                             (நள்ளிரவானாலும்  விருந்தினர் வந்தால் மகிழ்ந்து உணவிடும் பண்பு குடும்பதலைவிக்கு உண்டு)
  8. “குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்பெய்து                                        சிறிது புறப்பட்டன்றோ இலள்”-புறநானூறு                                            (தானியம் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை    உரலில் இட்டு உணவளித்தால் தலைவி)
  9. நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்                                               இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்                                கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்”- புறநானூறு                                      (நேற்று வந்த விருந்தினரை பேண உணவு இல்லாததால் இரும்பு வாளை பணயம் வைத்து உணவு அளித்தார்.இன்று வந்த விருந்தினருக்கு கருங்கோட்டு சிறியாழை பணயம் வத்து விருந்து அளித்தான்)
  10. “இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு உணவளிக்க தானியம் இல்லாத்தால் அன்று விதைத்த நெல்லை எடுத்து வந்து உணவளித்ததாக பெரியபுராணம் கூறுகிறது”
  11. “பலர்புகு வாயில் அடைப்பக்  கடவுநர்                                                          வருவீர் உளீரோ” – குறுந்தொகை                                                                         (பலர் நுழையும் நுழைவாயிலை இரவு மூடுவதற்கு முன்பு உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா”என்று கேட்கும் வழக்கம்)
  12. “மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” ஒளவையார்
  13. “காலின் ஏழடிப் பின் சென்று” பொருநராற்றுப்படை                               (விருந்தினரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர்)
  14. ”வாழையிலை விருந்து விழா”-(அமெரிக்கா-மினசோட்டா->தமிழ் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறது

காசிக்காண்டம்

பொருள்

  1. அருகுற- அருகில்
  2. முகமன் – விருந்தோம்பல் சொல்
  3. *இல்லற ஒழுக்கமாக் காசிக்காண்டம் கூறும் வழிமுறைகள் ஒன்பது
  4. *காசி நகரத்தின் பெருமையை கூறும் நூல் காசிக்காண்டம்

ஆசிரியர் குறிப்பு

  1. முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர் (புலவரும் ஆவார்)
  2. இவரது மற்றொரு நூல் வெற்றி வேற்கை எனும் நறுந்தொகை சிறந்த அறகருத்துகளை உடையது
  3. பட்டபெயர்- சீவலமாறன்
  4. நூல்கள்- நைடதம்,லிங்கபுராணம்,வாயு சம்கிதை,திருக்கருவை அந்தாதி,கூர்ம புராணம்
Book Back
1. காசிக்காண்டம் என்பது காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

மலைபடுகடாம்

பொருள்

  1. அசைஇ- இளைப்பாறி
  2. கடும்பு- சுற்றம்
  3. ஆரி- அருமை
  4. வயிரியம் – கூத்தர்
  5. இறடி- தினை
  6. அல்கி- தங்கி
  7. நரலும்- ஒலிக்கும்
  8. படுகர்- பள்ளம்
  9. வேவை- வெந்தது
  10. பொம்மல்- சோறு

notes

  1. “ஆற்றுபடுத்தும் கூத்தன் வள்ளலை நாடி வரும் கூத்தனை கண்டு நான் இந்த வள்ளலிடம் சென்று இன்னவெல்லாம் பெற்று வந்தேன் நீயும் சென்று பெற்று வா” என்று  கூறுவது ஆற்றுப்படை
  2. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம் (கூத்த்ராற்றுப்படை)
  3. 583 அடிகள் கொண்டது
  4. மலையை யானைக்கு உவமையாக்கி மலையில் எழும் பலவகை ஓசைகளை யானைக்கு மதம் பிடித்ததற்க்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளதால் இது மலைபடுகடாம் எனப்படுகிறது
  5.  நன்னன் என்னும் குறு நில மன்னன் பாட்டுடைத்தலைவன்
  6. பாடியவர்- இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார்
Book Back
1. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது சிற்றூர்

கோபாலபுரத்து மக்கள்

  1. கோபாலபுரத்து மக்கள் இந்நூல் இந்திய விடுதலை போரட்டத்தினை பின்னனியாக கொண்டது
  2. 1991 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது
  3. ஆசிரியர்- கி.ராஜநாராயணன்
  4. இவர் “கரிசல் வட்டாரச் சொல்லகராதி” ஒன்றை உருவாக்கியுள்ளார்
  5. இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழி புனைகதைகள் “கரிசல் இலக்கியம்” என்று அழைக்கபடுகின்றன
  6. இவர் எழுத்துலகில் கி.ரா என்று குறிப்பிடப்படுகிறார்
  7. “கறங்கு இசை விழவின் உறந்தை” – அகநானூறு                                 (உறந்தை- திருச்சி மாவட்டத்தின் உறையூர்)

வட்டார வழக்கு சொற்கள்

  1. பாச்சல்-  பாத்தி
  2. பதனம் – கவனமாக
  3. நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
  4. கடிச்சு குடித்தல்-  வாய்வைத்து குடித்தல்
  5. மகுளி- சோற்றுக்கஞ்சி
  6. வரத்துக்காரன் –புதியவன்
  7.  சடைத்து புளித்து- சலிப்பு
  8. அலுக்கம்- அழுத்தம்
  9. தொலவட்டையில் -  தொலைவில்

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...