Wednesday, August 26, 2020

6 th std samacheer kalvi term 1 -new syllabus

 

group-4 இன்பதமிழ்

ஆசிரியர் குறிப்பு

  1.     இயற்பெயர்-சுப்புரத்தினம்
  2.     இயற்றிய கவிதைகள்-பெண் கல்வி,கைபெண் மறுமணம்,                      பொதுவுடைமை, பகுத்தறிவு
  3.     சிறப்பு பெயர்-புரட்சிகவி,பாவேந்தர்

பொருள்

  1.    நிருமித்த-உருவாக்கிய
  2.    விளைவு-விளைச்சல்
  3.   அசதி-சோர்வு

  •      தமிழுக்கு நிலவென்றும்,மணம் என்றும் பெயர்
  •      எங்கள் இளமைக்கு பால் போன்றது
  •      புலவர்களுக்கு  கூர்மையான வேல் போன்றது
  •      எங்கள் உயர்விற்க்கு எல்லையாகிய வானம் போன்றது
  •      எங்கள் சோர்வை நீக்கி ஒளிர செய்யும் தேன் போன்றது
  •      அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது
  •      உறுதி மிக்க வாள் போன்றது

Book back

  1. ஏற்ற தாழ்வற்ற சமுகம் அமைய வேண்டும்
  2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு அசதி அக இருக்கும்
  3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நிலவென்று
  4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்  தமிழெங்கள்
  5. ‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அமுது+என்ற
  6. ‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது செம்மை+பயிர்
பொருத்துக:

1.விளைவுக்கு-பால்-3

2.அறிவுக்கு-வேல்-4

3.இளமைக்கு-நீர்-1

4.புலவர்க்கு-தோள்-2

group-4 தமிழ்க்கும்மி

ஆசிரியர் குறிப்பு

  1. பெயர்-பெருஞ்சித்தரனார்
  2. இயற்பெயர்-மாணிக்கம்
  3. சிறப்பு பெயர்-பாவலரேறு
  4. இயற்றிய நூல்கள்-கனிச்சாறு,கொய்யக்கனி,பாவியக்கொத்து,நூறாசிரியம்
  5. இதழ்கள்-தேன்மொழி,தமிழ்ச்சிட்டு,தமிழ்நிலம்                                                *இந்த பாடல் கனிச்சாறு நூல்(8 தொகுதிகளாக வந்துள்ளது)                                 *தமிழ் உணர்வு  நிறைந்த பாடல்

பொருள்

  1. ஆழிப்பெருக்கு-கடல் கோள்
  2. ஊழி-நீண்டதொரு காலப்பகுதி
  3. உள்ளப்பூட்டு-அறிய விரும்பாமை
  4. மேதினி-உலகம்

Book back

  1. தாய் மொழியில் படித்தால் மேண்மை அடையலாம்
  2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் மேதினி சுருங்கிவிட்டது

வான் தோன்றி வளி தோன்றி, நெருப்பு தோன்றி

மண் தோன்றி, மழை  தோன்றி, மலகள் தோன்றி

---

செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!--வாணிதாசன்

group-4  வளர்தமிழ்

Notes:

  1. உலகில் 6000 க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
  2. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதவது காணோம்-பாரதியார்
  3. என்று பிறந்தவள் என்று உணாராத இயள்பினளாம் எங்கள்  தாய்-பாரதியார்
  4. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துக்கள்     வலஞ்சுழி-அ,எ,ஓள,ண,ஞ                                                                                         இடஞ்சுழி-ட,ய,ழ
  5. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே-தொல்காப்பியம்
  6. இமிழ்கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் –சிலப்பதிகாரம்(வஞ்சிகாண்டம்)
  7. தமிழன் கண்டாய் –அப்பர் தேவாரம்
  8. சீர்மை என்பது ஒழுங்குமுறையை குறிக்கும் சொல்
  9. திணை -> உயர்திணை,அஃறிணை
  10. அஃறிணை-உயர்வு அல்லாத சொல்(சீர்மை)
  11. பாகற்காய்(பாகு+அல்+காய்)-இனிப்பு அல்லாத காய்-( சீர்மை)
  12. இலக்கண நூல்-தொல்காப்பியம்,நன்னூல்
  13. சங்க இலக்கியம்-எட்டுத்தொகை,பத்துப்பாட்டு
  14. அறநூல்கள்-திருக்குறள்,நாலாடியார்
  15. காப்பியம்-சிலப்பதிகாரம்,மணிமேகலை
  16. பூவின் 7 நிலைகளுக்கும் (தோன்றுவது-முடிவது)வரை தனிப்பெயர்கள் உண்டு
  17. பலப்பொருள்                                                     மா-> மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல்,துகள்,மேன்மை,வயல்,வண்டு
  18. இயல்தமிழ்->எண்ணத்தை வெளிபடுத்தும்
  19. இசைதமிழ்->உள்ளத்தை மகிழ்விக்கும்
  20. நாடகத்தமிழ்->உணர்வில் கலந்து வாழ்வை வள்ப்படுத்தும்
  21. தமிழ் கவிதை வடிவங்கள்->துளிப்பா,புதுகவிதை,கவிதை,செய்யுள்
  22. உரைநடை வடிவங்கள்->கட்டுரை,புதினம்,சிறுகதை
  23. தற்போது தமிழ்->அறிவியல் தமிழ்,கணிணித்தமிழ் என்று மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது
  24. தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ் சொற்கள்->இணையம், முகநூல்,புலனம்,குரல் தெடல்,தேடுபொறி,செயலி,தொடுதிரை.

              

Book back

  1. தொன்மை என்பதன் பொருள் பழமை
  2. மா  என்னும் சொல்லின் பொருள் விலங்கு
  3. நாம் சிந்திக்கவும் சிந்திததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி
  4. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் தொல்க்கப்பியம்
  5. மொழியை கணிணியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்

 

                            கனவு பலித்தது

  1. கடல் நீர் ஆவியாகி மேகம் ஆகி மழை பொழியும் என்ற  கருத்து (முல்லைபாட்டு,பரிபாடல்,திருக்குறள்,கார்நார்பது,திருப்பாவை)ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது
  2. ”ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால் நாழி”-ஒளவையார்
  3. காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி-பதிற்றுபத்து
  4. சுறாமீன் தாக்கியதால் எற்ப்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி-நற்றினை
  5. கலிலியோ கருத்து(தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்ய முடியும்)-இக்கருத்து கபிலர் எழுதிய திருவள்ளுவமாலை என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது
  6. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”-தொல்காப்பியம்
  7. ”கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி”-கார்நார்பது
  8. ”நெடு வெள்ளுசி நெடு வசி பரந்த வடு”- பதிற்றுபத்து
  9. ”கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்”-நற்றினை
  10. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பணையளவு காட்டும்”-கபிலர்

 சிலப்பதிகாரம்

”திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும்”-சிலப்பதிகாரம்

ஆசிரியர் குறிப்பு

  1. பெயர்-இளங்கோவடிகள்(சேர மரபு,கி.பி. 2 ஆம் நூற்றாண்டு)
  2. சிறப்பு-முத்தமிழ்க்காப்பியம்,குடிமக்கள்காப்பியம்)
  3. தமிழின் முதல் காப்பியம்
  4. இரட்டைகாப்பியம்->மணிமேகலை,சிலப்பதிகாரம்
  5. இப்பாடல் திங்கள்,ஞாயிறு,மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும்

பொருள்

  1. திங்கள்-நிலவு
  2. கொங்கு-மகரந்தம்
  3. மேரு-இமயமலை
  4. நாமநீர்-அச்சம் தரும் கடல்
  5. அலர்-மலர்தல்
  6. திகிரி-ஆணைச்சக்கரம்
  7. பொற்கோட்டு-பொன் மயமான சிகரத்தில்
  8. அளி-கருணை

 Book back

  1. கழுத்தில் சூடுவது-கணையாழி
  2. கதிரவனின் மற்றொரு பெயர்-ஞாயிறு

group-4  காணி நிலம்(பாரதியார் பாடல்கள்)

”காணி நிலம் வேண்டும்- பராசக்தி

காணி நிலம் வேண்டும்”

பொருள்

  1. காணி- நில அளவை குறிக்கும் சொல்
  2. மாடங்கள்- மாளிகையின் அடுக்குகள்
  3. சித்தம்- உள்ளம்

ஆசிரியர்  குறிப்பு

  1. பாரதியார்
  2. இயற்பெயர் சுப்பிரமணியன்
  3. இருபதாம் நூற்றாண்டிம் இ/னையற்ற கவிஞர் பாரதியார்
  4. பாரதி என்னும் பட்டம் எட்டயபுரமன்னர்  கொடுத்தார்
  5. நூல்கள்- பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு

1.      Book back

  1.        கிணறு என்பதை குறிக்கும் சொல் கேணி

பொருத்துக

  1. முத்துச்சுடர்போல- நிலா ஒளி
  2. தூயநிறத்தில்- மாடங்கள்
  3. சித்தம் மகிழ்ந்திட- தென்றல்

சிறகின் ஓசை

  • குறிப்பிட்ட காலத்தில் ஓர் இடம் விட்டு மற்றொரு இடம் செல்வது வலசை போதல். பெரும்பாலும் நீர்வாழ் பறவைகளே வலசை போகின்றன
  • வலசை போதல் – காரணம்(உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை, இனப்பெருக்கம்)
  • நிலவு, விண்மீன், புவி ஈர்ப்பு புலம்- அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன
  • வடக்கிலிருந்து தெற்காக்வும், மேற்க்கிலிருந்து கிழக்காகவும் வலசை போதல் நடைப்பெறும்

வலசை போதலால் ஏற்படும் மாற்றங்கள்

  1. 1.      தலையில் சிறகு வளர்தல்
  2. 2.      இறகுகளின் நிறம் மாறுதல்
  3. 3.      உடலில் கற்றையாக முடி வளர்தல்

  • கப்பல் பறவை(frigrate bird) அல்லது கப்பல் கூழைக்கிடா அல்லது கடற்கொள்ளை பறவை – தரையிறங்காமல்(400 கி.மீ வரை பறக்கும்) கடலையும் தாண்டி பறக்கும்
  • தமிழகத்துக்கு வலசை வந்தது பற்றி 1500 ஆண்டுகளுக்கு முன்  வாழ்ந்த சத்திமுத்தப்புலவர்  “நாராய் , நாராய், செங்கல் நாராய்” என்று பாடியுள்ளார். அவர் பாடிய “ தென் திசை குமரி ஆடி  வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்”- பறவைகள் வலசை வந்ததை குறிப்பிடுகிறது
  • ஐரோப்பாவில் இருந்து செங்கல் நாரைகள் இப்பொழுதும் வருகின்றன
  • வெகுவாக அழிந்து வரும் உயிரினம்  சிட்டுகுருவி
  • ஆண்குருவியின் தொண்டை கருப்பாகவும், உடல்பகுதி அடர்பழுப்பாகவும் இருக்கும்
  • பெண்குருவியின் உடல் முழுவது மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • கூடுகட்டி வாழும்.(3லிருந்து 6 மிட்டைகள் இடும்), 14 நாட்கள் அடைக்காக்கும், 15 நாட்கள் குஞ்சு பொறிக்கும்.
  • துருவ பகுதிகளில் வாழாது
  • இந்தியா முழுவதும் உள்ளது. இமயமலையின் 4000 மீட்டர் உயரத்தில் கூட வாழும்
  • உணவு-  தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன்)
  • குஞ்சு உணவு- புழு, பூச்சி
  • வாழ்நாள்- 10 லிருந்து 13 வருடங்கள்
  • அழிவுக்கு காரணம்- விவசாயத்தில் பூச்சிகொல்லி பயன்படுத்துவது, பூழு பூச்சி கிடப்பதில்லை
  • இந்தியாவின் பறவை மனிதர்- டாக்டர் சலிம் அலி
  • தன் வாழ்க்கை வரலாறுக்கு “சிட்டுக்குருவியின் வீழ்ச்சி”(The faal of sparrow) என பெயரிட்டுள்ளார்
  • உலகிலேயே நெடுந்தொலைவு 22000கி.மீ பயணம் செய்யும் பறவை-ஆர்டிக் ஆலா
  • பறவை பற்றிய படிப்பு- ornithology
  • உலக சிட்டுகுருவிகள் நாள்- மார்ச் 20

1.       Book back

  1.       சிட்டு குருவி வாழ முடியாத இடம் துருவப்பகுதி
  2.       மிக நீண்ட் தொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா
  3.       பறவைகள் வலசை போவதை பற்றி பாடிய  தமிழ்புலவர் சத்திமுத்திபுலவர்
  4.       பறவைகள் இடம்பெயர்வதற்க்கு வலசை போதல் என்று பெயர்
  5.        இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் . சலீம் அலி

கிழவனும் கடலும் (The old man and tha sea)

  1. 1954 –ல் நோபல் பரிசு பெற்ற நூல்
  2. ஆசிரியர் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
  3. கதையின் நாயகன் சாண்டியாகோ(அவருக்கு 84 நாட்களாக மீன் கிடைக்கவில்லை)
  4. மனோலின் சிறுவன்(40 நாட்கள் அவருடன் சென்றான்)

group-4 திருக்குறள்

  1. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
  2. சிறப்பு பெயர்- வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர்,
  3. பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று
  4. 133 அதிகாரமும், 1330 குறள்களும் உள்ளன
  5. சிறப்பு- ”திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை”
  6.  நூலின் சிறப்பு பெயர்கள் – உலக பொதுமறை, வாயுறை வாழ்த்து,
  7. 100க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

1.       Book back

  1.       மக்களுக்கு மகிழ்ச்சி தருவது அறிவுடைய மக்கள்
  2.          ஒருவருக்கு சிறந்த அண் இன்சொல்

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...