https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html
அன்னை மொழியே
ஆசிரியர் குறிப்பு
- பெயர்-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- இயற்பெயர்-துரை மாணிக்கம்
- இதழ்கள்-தென்மொழி,தமிழ்ச்சிட்டு மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்
- நூல்கள்-உலகியல்நூறு , பாவியக்கொத்து, நூறசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது,மகபுகுவஞ்சி,பள்ளிப்பறவைகள்
- *இவர் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவுலமாய் அமைந்துள்ளது
- *இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது
பொருள்
- முன்னை-பழமை
- முகிழ்ந்த-தோன்றிய
- தென்னன் –பாண்டியமன்னன்
- பாப்பத்தே-பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
Notes
- அன்னை மொழிக்கு பெருமை சேர்க்கும் இலக்கியங்களாக பாவலரேறு கூறும் நூல்கள் -திருக்குறள்,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினென்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம்,மணிமேகலை
- “சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்-என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”- சச்சிதானந்தன்
Book Bank
1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் எம் + தமிழ் + நா
நாடும்
மொழியும் நமதிரு கண்கள்-பாரதியார்
“திராவிட
மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எழுதியவர்-கால்டுவெல்
அடி
வகை
- நெல்,கேழ்வரகு முதலியவற்றின் அடி-தாள்
- கீரை,வாழை முதலியவற்றின் அடி-தண்டு
- நெட்டி,மிளகாய் முதலியவற்றின் அடி-கோல்
- குத்துச்செடி,புதர் முதலியவற்றின் அடி-தூறு
- கம்பு,சோளம் முதலியவற்றின் அடி-தட்டு,தட்டை
- கரும்பின் அடி-கழி
- மூங்கிலின் அடி-கழை
- புளி,வேம்பு முதலியவற்றின் அடி-அடி
கிளை
பிரிவு
- அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை-கவை
- கவையின் பிரிவு-கொம்பு,கொப்பு
- கொம்பின் பிரிவு-கிளை
- கிளையின் பிரிவு-சினை
- சினையின் பிரிவு-போத்து
- போத்தின் பிரிவு-குச்சு
- குச்சின் பிரிவு-இணுக்கு
- காய்ந்த குச்சி-சுள்ளி
- காய்ந்த சிறு கிளை-விறகு
- காய்ந்த கழி-வெங்கழி
- காய்ந்த கொம்பும்,கவையும்,அடியும்-கட்டை
இலை
வகை
- புளி,வேம்பு முதலியவற்றின் இலை-இலை
- நெல்,புல் முதலியவற்றின் இலை-தாள்
- கரும்பு,சோளம் முதலியவற்றின் இலை-தோகை
- தென்னை,பனை முதலியவற்றின் இலை-ஓலை
- காய்ந்த தாளும்,தோகையும்-சண்டு
- காய்ந்த இலை-சருகு
கொழுந்து
வகை
- நெல்,புல் முதலியவற்றின் கொழுந்து-துளிர்,தளிர்
- புளி,வேம்பு முதலியவற்றின் கொழுந்து-முறி
- கரும்பு,சோளம்,தென்னை,பனை முதலியவற்றின் கொழுந்து-குருத்து
- கரும்பின் நுனிபகுதி-கொழந்தாடை
பூவின் நிலை
- பூவைன் தோற்றனிலை-அரும்பு
- பூவின் விரிய தொடங்கும் நிலை-போது
- பூவின் மலர்ந்த நிலை-மலர்
- புவின் கிழே விழுந்த நிலை-வீ
- பூ வாடின நிலை-செம்மல்
பிஞ்சு வகை
- பூவோடு கூடிய இளம் பிஞ்சு-பூம்பிஞ்சு
- இளம் காய்-பிஞ்சு
- மாம்பிஞ்சு-வடு
- பலா பிஞ்சு-முசு
- எள் பிஞ்சு-கவ்வை
- தென்னை,பனை பிஞ்சு-குரும்பை
- முற்றாத தேங்காய்-இளநீர்
- இளம் பாக்கு-நுழாய்
- இள நெல்-கருக்கல்
- வாழைப்பிஞ்சு-கச்சல்
குலை வகை
- அவரை,துவரை குலை-கொத்து
- கொடி முந்திரி குலை-குலை
- வாழைக்குலை-தாறு
- கேழ்வரகு,சோளம் கதிர்-கதிர்
- நெல், தினை கதிர்-குரல்
- வாழைத்தாற்றின் பகுதி-சீப்பு
- நுனியில் சுருங்கிய காய்-சூம்பல்
- சுருங்கிய பழம்-சிவியல்
- சூட்டினால் பழுத்த பிஞ்சு-வெம்பல்
- குளுகுளுத்து நாறிய பழம்-அழுகல்
- பதரை போன மிளகாய்-சொண்டு
- தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்-அல்லிகாய்
- தென்னையில் கெட்ட காய்-ஒல்லிக்காய்
- மெல்லியது-தொழி
- திண்ணமானது-தோல்
- வன்மையானது-தோடு
- மிக வன்மையானது-ஓடு
- சுரையின் ஓடு-குடுக்கை
- தேங்காய் நெற்றின் மேல்பகுதி-மட்டை
- நெல்,கம்பு முதலியவற்றின் மூடி-உமி
- வரகு,கேழ்வரகு முதலியவற்றின் உமி-கொம்மை
இளம் பயிர் வகை
- நெல்,கத்திரி அகியவற்றின் இளநிலை-நாற்று
- மா,புளி வாழை அகியவற்றின் இளநிலை-கன்று
- வாழையின் இளநிலை-குருத்து
- தென்னையின் இளநிலை-பிள்ளை
- பனையின் இளநிலை-மடலி,வடலி
- நெல்,சோளம் அகியவற்றின் பசும்பயிர்-பைங்கூழ்
நிலவகை
- தரிசு-நீரில்லா வறண்ட நிலம்
- கரிசல்-கருமண் நிலம்
- புறம்போக்கு-பயன்படாத நிலம்
- அவல்-வளை நிலம்
- சிவல்-செம்மண் நிலம்
- முரம்பு-கல்லினால் ஆன மேட்டு நிலம்
- சுவல்- மேட்டு நிலம்
“உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு”-மலேசியா(தமிழிற்க்காக)
*இந்த பாடம் “சொல்லாய்வுக்கட்டுரைகள்” நூலில் உள்ள ”தமிழ்சொல்
வளம்” எனும் கட்டுரையின் சுருக்கம்
*எழுதியவர் தேவனேய பாவணார்(சிறப்பு பெயர்-மொழி ஞாயிறு)
*இவர் தமிழ் சொல் அராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
*உலக தமிழ் கலகத்தை நிறுவி தலைவராக இருந்தவர்
*போர்ச்சுகீசில் உள்ள லிசுபனில் 1554 ஆம் ஆண்டு
“கார்டிலா” எனும் நூல் முதன் முதலாக தமிழில் மொழிபெய்ர்க்கப்பட்டது
தமிழ்திரு இரா.இளங்குமரனார்
- திருச்சி இல் உள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” அமைத்துள்ளார்
- “பாவணர் நூலகம்” உருவாக்கியிள்ளார்
- “விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழினை இழந்து விடக்கூடாது”என்று எண்ணியவர்
- இன்றளவும் இமைகளை மூடியபடி தமிழ் எழுதுபவர்(திரு.வி.க தமிழ்த்தென்றல் எழுதியது போல)
- எழுதிய நூல்கள்-இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம்,தனித்தமிழ் இயக்கம்,பாவாணர் வரலாறு,குண்டலகேசி உரை,யாப்பருங்கலம் உரை,புறத்திரட்டு உரை,திருக்குறள் தமிழ் மரபுரை,காக்கை பாடினிய உரை,தேவ நேயம்
பொருள்
- துய்ப்பது-கற்பது,தருதல்
- மேவலால்-பொருந்துதலால்,பெறுதலால்
*ஒரு சொல்லோ சொற்றோடரோ இருபொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி அல்லது சிலேடை அணி
“முத்தமிழ் துய்பதால் முச்சங்கம் கண்டதால்,,,,:-தனிப்பாடல்
திரட்டு
முத்தமிழ்
- இயல்,இசை,நாடகம்
- முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
முச்சங்கம்
- முதல்,இடை,கடை
- முன்று வகையான சங்குகள் தருதல்
மெத்த வணிகலன்
- ஐம்பெரும்காப்பியம்
- மிகுதியான வணிக கப்பல்கள்
சங்கத்தவர் காக்க
- சங்க பலகையிலிருந்து புலவர்கள் பாதுகாத்தமை
- நீர் நிலைகளை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்
ஆசிரியர்
- தமிழழகனார்(சந்தகவிமணி)
- இயற்பெயர்-சண்முக சுந்தரம்
- 12 சிற்றிலக்கிய நூல்கள் படைத்துள்ளார்
உரைநடையின் அணிகலன்கள்
- முதல் தமிழக் கணினியின் பெயர் திருவள்ளுவர்
- 1983 தமிழக் கணினி விற்பனைக்கு வந்தது
- எழில் முதல்வன் (மா.இராமலிங்கம்) எழுதிய புதிய உரைநடை சாகத்திய அகாதெமி விருது பெற்றது
- எழில் முதல்வன் மரபு கவிதை,புதுக்கவிதை படைப்பதில் வல்லவர்
- இற்றிய நூல்கள்-இனிக்கும் நினைவுகள்,எங்ஙெங்கு காணினும்,யாதுமாகி நின்றாய்
- குடந்தை அரசு ஆடவர் கல்லூரி,பாரதிதாசன் பல்கலைக்கலகம் அகியவற்றில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்
lesson 2- கேட்கிறதா என் குரல்
- உலகம் ஐம்பெரும் புதங்களால் ஆனது
- மூச்சு பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்-திருமூலர்(திருமந்திரம்)
- “ வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்”-ஒளவை
- கிழக்கு-குணக்கு என்ற பெயரும் உண்டு
- கிழ்க்கிலிருந்து வீசும் போது கொண்டல் எனப்படும்
- மேற்க்கு- குடக்கு என்ற பெயரும் உண்டு
- மேற்கிலிருந்து வீசும் போது கோடை எனப்படும்
- வடக்கு- வாடை என்ற பெயரும் உண்டு
- வடக்கிலிருந்து வீசும் போது வாடைக்காற்று,ஊதக்காற்று எனப்படும்
- தெற்கிலிருந்து வீசும் போது தென்றல் எனப்படும் (இதமான காற்று)
- “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்”-சிலம்பு
- “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
- செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”-பலபட்டை சொக்கநாத புலவர்(பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது)
- “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களீஇயல் யானைக் கரிகால் வளவ—சங்க கால பெண்புலவர் (”வெண்ணிகுயத்தியார்)
- பருவக்காற்றின் பயனை உலகுக்கு உணர்த்தியவர் hippalus கிரேக்க அறிஞர்
- June to September- தென்மேற்க்கு பருவக்காற்று
- October to December- வடக்கிழக்கு பருவக்காற்று
- ”வளி மிகின் வலி இல்லை”-ஐயூர் முடவனார்
- “கடுங்காற்று மணலை கொண்டு வந்து சேர்க்கிறது” மதுரை இளநாகனார்
- காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 5 ஆம் இடம்
- இந்திய அளவில் தமிழகம் 1 இடம்
- காற்றை அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா 2 வது இடம்
- மனிதன் உணவின்றி 5 வாரம் உயிர் வாழலாம்
- மனிதன் நீரின்றி 5 நாள் உயிர் வாழலாம்
- மனிதன் காற்றுஇன்றி 5 நிமிடம் கூட உயிர் வாழ முடியாது
- இந்தியாவில் அதிக உயிரிழப்பை தரும் காரணங்களில் 5 வது இடம் காற்று மாசுபாடு
- காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐ.நா.சிறுவர் நிதியம்(UNICEF) கூறுகிறது
- குளிர்பதனப்பெட்டி வெளியிடும் குளோரோ புளோரோ கார்பன் ஆல் காற்று மாசு அடைகிறது. இதனை தடுக்க தற்பொழுது ஹைட்ரோ கார்பன் குளிபதனப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது
- அமில மழை பொழிய காரணமாக இருக்கும் வாயுக்கள் கந்தக டை ஆக்சைடு , நைட்ரஜன் டை ஆக்சைடு
- ஒரு மணித்துளிக்கு 12 – 18 முறை மூச்சு காற்று (கார்பன் டை ஆக்சைடு) வெளியேறுகிறது
- ஜுன் 15 – உலக காற்று நாள்
- கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் hippalus என்ற கிரேக்க அறிஞர் பருவக்காற்று மூலமாகவே சேரநாட்டு முசிறி துறைமுகத்தை அடைந்தார்.என்வே இந்த பருவக்காற்று ஹிப்பாலஸ் பருவக்காற்று எனப்பட்டது.கடல் வணிகம் பெருகியது
- வரும் காலங்களில் ஆக்ஸிஜன் 1 பாட்டில் 1000 ருபாய்க்கும் அதிகமாக இருக்கும்
காற்றே வா
“காற்றே வா
மகரந்த
தூளைச் சுமந்து கொண்டு மனத்தை……” – பாரதியார்
பொருள்
- மயலுறுத்து – மயங்கச்செய்
- ப்ராண-ரஸம் – உயிர்வளி
- லயத்துடன் – சீராக
ஆசிரியர்
குறிப்பு
- பெயர்-மகாகவி சுப்ரமணிய பாரதியார்
- பாராட்டு- “நீடுதுயில் நீக்கி பாடவந்த நிலா”,”பாட்டுக்கொரு புலவன் பாரதி”,சிந்துக்கு தந்தை”
- காவியம்- பாஞ்சாலி சபதம்,குயில் பாட்டு,
- நீதி பாடல்கள்- கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி
- இதழ்களின் ஆசிரியர் பணி-இந்தியா, சுதேசிமித்திரன்
யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனக்கவிதை எனப்படுகிறது.இதனை முதலில் கையாண்டவர் பாரதியார். இதுவே புதுக்கவிதை எனப்படுகிறது
முல்லைப்பாட்டு
"நனந்தலை
உலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி
பொறித்த மாதாங்கு தடக்கை”-நப்பூதனார்
பொருள்
- நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
- நேமி- சக்கரம்
- கோடு- மலை
- நறுவி- நறுமணமுடைய மலர்கள்
- தூஉய்- தூவி
- கொடுஞ்செலவு- விரைவாக செல்லுதல்
- விரிச்சி – நற்சொல்
- சுவல்- தோள்
நூல்
குறிப்பு
- முல்லைப்பாட்டு- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்(103 அடிகள்)
- ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
- ஆசிரியர்-காவிரி பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகன் நப்பூதனார்
புயலிலே ஒரு தோணி
பொருள்
- கப்பித்தான் – தலைமை மாலுமி
- தொங்கான் – கப்பல்
- பலிவான் – இந்தோனேசியாவில் உள்ள ஒரு இடம்
- “வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது
- 2004 ஆம் ஆண்டு உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் (புதுடெல்லி)புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியல் இட்டுள்ளது
- இந்த பெயர்களை வங்கதேசம், இந்தியா, மாலத்திவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான் , இலங்கை , தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து வைத்துள்ளன
- கஜா புயல் பெயர் இலங்கை வைத்தது
- பெய்டி புயல் பெயர் தாய்லாந்து வைத்தது
- அக்னி,ஆகாஷ், பிஜ்லி,ஜல்,லெஹர் புயல் பெயர் இந்தியா வைத்தது
- இடம்புரி புயல்கள்- அமெரிக்கா, ஜப்பான், சீனா வை தாக்கும் புயல்கள்
- வலம்புரி புயல்கள்- ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரை, ஹாவாய் தீவுகளை தாக்கும் புயல்கள்
- இந்த விளைவை 1835 ஆம் ஆண்டு கொரியாலிஸ் என்ற கணித வல்லுநர்(பிரெஞ்சு) கண்டுப்பிடித்தார்.எனவே இது கொரியாலிஸ் விளைவு எனப்படுகிறது
- புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எழுதியவர்-ப.சிங்காரம்(சிவகங்கை மாவட்டம்).தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார்.தனது சேமிப்பு 7 ½ லட்சத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்
- “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”- அகநானூறு (நாமக்கல் மாவட்டத்தின் கொல்லி மலை )
- “விருந்தே புதுமை” – தொல்காப்பியர்
- “மோப்பக் குழையும் அனிச்சம் …. “-திருக்குறள் (முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்
- “…….. தொல்லோர் சிற்ப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”- சிலப்பதிகாரம் (கண்ணகி கோவலனை பிரிந்ததை விட விருந்தினரை போற்ற முடியாத நிலை எண்ணி வருந்துகிறாள்)
- “பொருஎது செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே”- கம்பராமாயணம் (கல்வியும்,செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக கூறுகிறார்)
- “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல “ – கலிங்கத்துபரணி (விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்)
- “உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் ,இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” – புறநானூறு (அமிழ்தமே ஆயினும் பிறருக்கு கொடுத்து வாழும் நல்லவர் இருப்பதாலேயே இவ்வுலகம் நிலைத்திருக்கிறது)
- ”அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”-நற்றினை (நள்ளிரவானாலும் விருந்தினர் வந்தால் மகிழ்ந்து உணவிடும் பண்பு குடும்பதலைவிக்கு உண்டு)
- “குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்”-புறநானூறு (தானியம் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டு உணவளித்தால் தலைவி)
- நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்”- புறநானூறு (நேற்று வந்த விருந்தினரை பேண உணவு இல்லாததால் இரும்பு வாளை பணயம் வைத்து உணவு அளித்தார்.இன்று வந்த விருந்தினருக்கு கருங்கோட்டு சிறியாழை பணயம் வத்து விருந்து அளித்தான்)
- “இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு உணவளிக்க தானியம் இல்லாத்தால் அன்று விதைத்த நெல்லை எடுத்து வந்து உணவளித்ததாக பெரியபுராணம் கூறுகிறது”
- “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” – குறுந்தொகை (பலர் நுழையும் நுழைவாயிலை இரவு மூடுவதற்கு முன்பு உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா”என்று கேட்கும் வழக்கம்)
- “மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” ஒளவையார்
- “காலின் ஏழடிப் பின் சென்று” பொருநராற்றுப்படை (விருந்தினரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர்)
- ”வாழையிலை விருந்து விழா”-(அமெரிக்கா-மினசோட்டா->தமிழ் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறது
காசிக்காண்டம்
பொருள்
- அருகுற- அருகில்
- முகமன் – விருந்தோம்பல் சொல்
- *இல்லற ஒழுக்கமாக் காசிக்காண்டம் கூறும் வழிமுறைகள் ஒன்பது
- *காசி நகரத்தின் பெருமையை கூறும் நூல் காசிக்காண்டம்
ஆசிரியர்
குறிப்பு
- முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர் (புலவரும் ஆவார்)
- இவரது மற்றொரு நூல் வெற்றி வேற்கை எனும் நறுந்தொகை சிறந்த அறகருத்துகளை உடையது
- பட்டபெயர்- சீவலமாறன்
- நூல்கள்- நைடதம்,லிங்கபுராணம்,வாயு சம்கிதை,திருக்கருவை அந்தாதி,கூர்ம புராணம்
மலைபடுகடாம்
பொருள்
- அசைஇ- இளைப்பாறி
- கடும்பு- சுற்றம்
- ஆரி- அருமை
- வயிரியம் – கூத்தர்
- இறடி- தினை
- அல்கி- தங்கி
- நரலும்- ஒலிக்கும்
- படுகர்- பள்ளம்
- வேவை- வெந்தது
- பொம்மல்- சோறு
notes
- “ஆற்றுபடுத்தும் கூத்தன் வள்ளலை நாடி வரும் கூத்தனை கண்டு நான் இந்த வள்ளலிடம் சென்று இன்னவெல்லாம் பெற்று வந்தேன் நீயும் சென்று பெற்று வா” என்று கூறுவது ஆற்றுப்படை
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம் (கூத்த்ராற்றுப்படை)
- 583 அடிகள் கொண்டது
- மலையை யானைக்கு உவமையாக்கி மலையில் எழும் பலவகை ஓசைகளை யானைக்கு மதம் பிடித்ததற்க்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளதால் இது மலைபடுகடாம் எனப்படுகிறது
- நன்னன் என்னும் குறு நில மன்னன் பாட்டுடைத்தலைவன்
- பாடியவர்- இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார்
கோபாலபுரத்து மக்கள்
- கோபாலபுரத்து மக்கள் இந்நூல் இந்திய விடுதலை போரட்டத்தினை பின்னனியாக கொண்டது
- 1991 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது
- ஆசிரியர்- கி.ராஜநாராயணன்
- இவர் “கரிசல் வட்டாரச் சொல்லகராதி” ஒன்றை உருவாக்கியுள்ளார்
- இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழி புனைகதைகள் “கரிசல் இலக்கியம்” என்று அழைக்கபடுகின்றன
- இவர் எழுத்துலகில் கி.ரா என்று குறிப்பிடப்படுகிறார்
- “கறங்கு இசை விழவின் உறந்தை” – அகநானூறு (உறந்தை- திருச்சி மாவட்டத்தின் உறையூர்)
வட்டார
வழக்கு சொற்கள்
- பாச்சல்- பாத்தி
- பதனம் – கவனமாக
- நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
- கடிச்சு குடித்தல்- வாய்வைத்து குடித்தல்
- மகுளி- சோற்றுக்கஞ்சி
- வரத்துக்காரன் –புதியவன்
- சடைத்து புளித்து- சலிப்பு
- அலுக்கம்- அழுத்தம்
- தொலவட்டையில் - தொலைவில்
No comments:
Post a Comment