- சிற்றக்கல் ஒளி
- 1906 –ல் காந்தியடிகள் தென்னப்பிரிக்காவில் சத்தியாகிரக அறப்போரை தொடங்கி வைத்தார்
- 1906 – வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்
- 1906 ஜூன் 26 ஞானபிரகாசம் பிறந்தார்(சென்னை, ஆயிரம் விளக்கு)
- பெற்றோர்- பொன்னுசாமி, சிவகாமி
- சரபையர் என்ற முதியவர் இவருக்கு “சிவஞானி” என பெயர் வைத்தார்
- பின்னாளில் இது “சிவஞானம்” என பெயர் பெற்றது
- மூன்றாம் வகுப்பு வரைபடித்த இவர் கேள்வி ஞானத்தால் பல நூல்கள் படித்தார்
- இவரது கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியுர் ஞானியாரடிகளுக்கே மிகுந்த பங்குண்டு
- “நானாக முயன்று சேர்த்து வைத்த சொத்து பல்லாயிரக்கணக்கான நூல்களை தவிர வேறு இல்லை “என்று கூறினார்
- தமிழா!துள்ளி எழு! என்னும் துண்டறிக்கையை மக்களிடையே வழங்கியதிற்காக சிறையில் அடைக்கப்பட்டார்
- 1982 ஆகஸ்டு 8 – “இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானத்தை இந்திய பேராயக்கட்சி நிறைவேற்றியது. இது இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்
- விடிதலைக்கு பின்பு மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது
- வடக்கெல்லை தமிழ் மக்களை ஒன்று இணைக்க செய்தவர் மங்கலங்கிழார் தமிழ் ஆசான். இதற்க்காக இவர், ஞானபிரகாசம், விநாயகம், தியாகராஜன், ரஷித் சிறையில் அடைக்கப்பட்டனர்
- சித்தூர் ஆந்திராவிடம் கொடுக்கப்பட்டது. பின்பு போராடி திருத்தணி வரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன
- சென்னையும் ஆந்திர தலைநகராக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. .ஆனால் இவர்கள் “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.இதன் விளைவாக மத்திய அரசு ஆந்திரா தலைநகர் அதன் எல்லைக்குள்ளேயே அமைக்கப்படும் என்றது
- 1953-1954 ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லை பகுதிகளை கேரள(திருவாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்க போராடினார்கள்
- 1955 அக்டோபர் 10 பசல் அலி ஆணையம் மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரித்து அமைக்கும் கொள்கை கொண்டு வரப்பட்டது
- இந்த கொள்கை மூலமாக மலபார் மாவட்டதை கேரளத்தோடும், திருவாங்கூர், கொச்சி, இராஜியத்திலிருந்த கல்குளம், விளவங்கோடு, தோவளை, அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ் நாட்டோடும் இணைந்தன
- புறநானுற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழ் நாட்டின் வடக்கெல்லையாக வேங்கட மலையும் , தெற்கு எல்லையாக குமரி முனையும் கூறப்பட்டது
- 1956 நவம்பர் 1 கன்னியாகுமரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதற்காக போராடிய மார்ஷல் நேசமணிக்கு நாகர்கோவிலில் சிலையும், மணிமண்டபமும் தமிழக அரசு அமைத்துள்ளது
- சேர நாட்டு துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையே பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட ஒப்பந்தம் ஆஸ்டிரியா நாட்டு தலைநகர் வியன்னா அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தம் கி.பி.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
- மா.பொ.சிவஞானத்தின் “ எனது போராட்டம்” என்னும் சுயவரலாற்று நூலில் இருந்து எடிக்கப்பட்டது. சிலம்புசெல்வர் என்று போற்றப்படுகிறார்
- 1952-1954- சட்டமன்ற மேலவை உறுப்பினர்
- 1972- 1978- சட்டமன்ற மேலவை தலைவராக பதவி வகித்தார்
- தமிழரசு கழகத்தை தொடங்கியவர்
- இவர் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” நூலுக்காக சாகத்திய அகாதெமி விருது 1966 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
- தமிழக அரசு திருத்தணியிலும், சென்னை தியாகராய நகரிலும் இவருக்கு சிலை அமைத்துள்ளது
- ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே திருப்பதியும் திருத்தணியும்
- தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது சிலப்பதிகாரம்
ஏர் புதிதா?
”முதல்மழை
விழுந்ததும்
மேல்மண்
பதமாகிவிட்டது”
ஏர்
புதிதா? எனும் கவிதை கு.ப.ரா படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது
ஆசிரியர்
- கு.ப.ராஜகோபாலன்(1902 ல் கும்பகோணத்தில் பிறந்தார்)
- சிறப்பு- சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர்
- பணி- தமிழ்நாடு, பாரதமணி, பாரத தேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணி புரிந்தார்
- இவரது மறைவுக்கு பின் இவரது படைப்புகள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன
மெய்க்கீர்த்தி
- மெய்கீர்த்தி புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
- இரண்டாம் இராசராச சோழனின் மெய்கீர்த்தி பாடமாக வந்துள்ளது
- இரண்டாம் இராசராச சோழனின் பட்டங்கள் கோப்பரகேசரி, திருபுவன சக்கரவர்த்தி
- முதலாம் இராசராச சோழனின் காலந்தொட்டு மெய்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டுள்ளன
சிலப்பதிகாரம்
பொருள்
- சுண்ணம்- நறுமணப்பொடி
- காருகர்- நெய்பவர்
- தூசு- பட்டு
- துகிர்- பவளம்
- வெறுக்கை- செல்வம்
- நொடை- விலை
- பாசவர்- வெற்றிலை விற்போர்
- ஓசுநர்- எண்ணைய் விற்போர்
- மண்ணுள் வினையர்- ஓவியர்
- மண்ணீட்டாளர்- சிற்பி
- கிழி- துணி
ஐம்பெருங்காப்பிய
முறைவைப்பு
“சிந்தா
மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான-நந்தா
வளையா
பதிதருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத
குண்டலகே சிக்கும்”…..திருத்தணிகையுலா
உரைபாட்டு
மடை
- சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை
- இது உரைநடைபாங்கில் அமைந்திருக்கும் பாடல்
- வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்கு திருப்பி விடுவது மடை
- உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்
- செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைபாட்டு மடை
நூல்குறிப்பு
- ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
- சிறப்பு- முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
- முவேந்தர் பற்றி கூறுகிறது
- 3 காண்டங்களையும்(புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம்),30 காதைகளையும் கொண்டது
- கோவலன், கண்ணகி,மாதவி வாழ்க்கையை பாடுவது
- சிலப்பதிகாரம்.மணிமேகலை(இரட்டைகாப்பியம்)
ஆசிரியர்
- இளங்கோவடிகள்
- சேர மரபு
- மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலை சாத்தனார்”அடியேன் நீயே அருளுக” என்றார்
- “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்”- இளங்கோவடிகள்
மங்கையராய் பிறப்பதற்கே
எம்.எஸ்.சுப்புலட்சுமி
- ”இசை பேரரசி” என எம்.எஸ்.சுப்புலட்சுமியை கூறியவர் நேரு
- எம்.எஸ்.சுப்புலட்சுமி- மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி
- எம்.எஸ்.சுப்புலட்சுமி கடைசி திரைப்படம் – மீரா
- எம்.எஸ்.சுப்புலட்சுமி காந்தியடிகளிடம் “இரகுபதி ராகவ ராஜாராம்” பாடலை பாடினார்
- காந்தியடிகளின் விருப்பத்திற்கு இணங்க மீராபஜன் “ஹரிதும் ஹரோ” என்ற பாடலை பாடினார்
- எம்.எஸ்.சுப்புலட்சுமி 1954- தாமரையணி விருது பெற்றார்
- 1963- இங்கிலாந்திலும், 1966- ஐ.நா அவையிலும் பாடினார்
- 1966 திருப்பதியில் வெங்கடேச சுப்ரபாதம் பாடினார்
- 1974- நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்றார்(இவ்விருது பெரும் முதல் இசை கலைஞர்)
- இந்தியாவின் உயரிய விருதான “இந்திய மாமணி “ பட்டம் பெற்றார்
- தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி,குஜராத்தி மொழிகளில் பாடியுள்ளார்
- “ஒரு பெண் நினைத்தால் முயன்றால் முன்னேறலாம், வெல்லலாம், நீங்களும் முயலுங்கள் முன்னேறுங்கள் வெல்லுங்கள்”- எம்.எஸ்.சுப்புலட்சுமி
- குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்று மில்லை கோவிந்தா”… எம்.எஸ்.சுப்புலட்சுமி
பாலசரஸ்வதி
- தாமரை செவ்வணி விருது பெற்றவர்
- டோக்கியோவில் உள்ள “கிழக்கு மேற்கு சந்திப்பு” நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்
ராஜம்
கிருஷ்ணன்
- வேருக்கு நீர் எனும் புதினத்திற்காக “சாகத்திய அகாதெமி விருது” பெற்றவர்
- இவர் எழுதிய புதினங்கள்
- “பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி”
- ”கரிப்பு மணிகள்” (தூத்துக்குடி மக்களின் உப்பள தொழிலாளர்களின் வாழ்க்கை)
- “குறிஞ்சி தேன்” (நீலகிரி, படுகர் மக்களை பற்றியது)
- ”அலைவாய்க் கரையில்”(கடலோர மீனவர்களை பற்றியது)
- “சேற்றில் மனிதர்கள்”,”வேருக்கு நீர்”(அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றியது)
- ”கூட்டுக் குஞ்சிகள்”(தீப்பெட்டி செய்யும் குழந்தைகள் பற்றியது)
- ”மண்ணகத்து பூந்துளிகள்”(பெண்சிசு கொலை)
கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதன்
- மதுரையின் முதல் பட்டதாரி பெண்
- இந்திய அரசின் தாமரைத்திரு விருது பெற்றவர்
- சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர்
- சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது பெற்றவர்
- காந்தியடிகளின் சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றினார்
- ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றார்
- விடுதலைக்கு பின் கணவருடன் இணைந்து “பூதான இயக்கத்தில்” பணி புரிந்தார்
- ”உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” மூலம் உழவருக்கு வேளாண் இல்லாமல் வேறு பணிகள் மூலம் வருமானம் பெற செய்தார்
- ”உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள் உங்களால் எதையும் சாதிக்க இயலும்”- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- காந்தியடிகளுடனும்,வினோபாவேயுடனும் பணியாற்றி இன்ன்மும் உழைக்கும் - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
சின்னப்பிள்ளை
- எழுத படிக்க தெரியாத சின்னப்பிள்ளை பெண்களை குழுவாக இணைத்து விவசாயம் செய்தார்
- மீன்பிடி குத்தகை எடுத்தார்
- 2004 சுனாமி வந்த பொழுது தன் குழுவின் மூலம் உதவிகள் செய்தார்
- இவர் ஆரம்பித்த குழு “களஞ்சியம்”இன்று பல மாநிலங்களில் பறவி பல குழுக்கள் உள்ளன
- குடியரசு தலைவர் வாஜ்பாய் அவர்களிடம் “பெண் ஆற்றல் விருது” (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) விருது பெற்றார்
- தமிழக அரசின் “ஒளவை விருதையும்”,தூர்தர்ஷனின் “பொதிகை விருதையும்” அண்மையில் “தாமரைத்திரு விருதையும்” பெற்றார்
சங்க இலக்கியத்தில் அறம்
- “கவிதை வாழ்க்கையின் திறனாய்வு”—ஆர்னால்டு
- “இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”—புறநானூறு (ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிடுகிறார்)
- “அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்”—ஊன் பொதி பசுங்குடையார்
- “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” – மதுரைக்காஞ்சி
- “செம்மை சான்ற காவிதி மாக்கள்”—(அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்)
- “அறன் அற்க் கண்ட நெறிமான் அவையம்”—புறநானூறு
- “எறியார் எறிதல் யாவனது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான் “---புறநானூறு(மூலங்கிழார்) தன்னை விட வலிமை குறைந்தவரோடு போர் புரியக்கூடாது
- “செல்வத்து பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புற பலவே”—புறநானூறு (மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்) ஒரு மனிதன் தன் மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை எண்ணுவது உண்மையான மகிழ்ச்சி
- “வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் கொடுக்கும்” பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார்
- “உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்” ---ஒளவை
- “இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைத்தல் ஆடுகோட்ப்பாட்டு சேரலாதனின் இயல்பு “—நச்செள்ளையார்
- பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன்”—பரணர்
- “தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்தியதாக பெருந்தலை சாத்தனார் கூறுகிறார்
- “எல்லாவற்றையும் கொடுப்பவன்" என்று மலையமான் திருமுடிக்காரியை கபிலர் பாராட்டுகிறார்
- “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்”-நல்லந்துவனார்
- “உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்”-நல்வேட்டனார்
- “உறவினர் கெட வாழ்பவனின் பொழிவு அழியும் “-பெருங்கடுங்கோ
- “செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு”—தமிழ் இலக்கியம்
- நிறைவடைகிறவனே செல்வன்”—சீன நாட்டு தாவோயியம்
- ”பொய்யாச் செந்நா”,”பொய்படுபறியா வயங்கு செந்நா”-- தமிழ் இலக்கியம் (வாய்மை பேசும் நாவே உண்மையான நா)
- “பிழையா நன்மொழி” என்று வாய்மையை நற்றினை குறிப்பிடுகிறது
போதிதர்மர்
- கி.பி.6 ஆம் நூற்றாண்டில் காஞ்சியில் வாழ்ந்தவர்-சிற்றரசர் போதிதர்மர்
- இவர் சீனாவிற்க்கு சென்று பெளத்த சமய தத்துவத்தை பரப்பினார்
- அதுவே ஜென் தத்துவம்
- இவருக்கு சீனர்கள் கோவில் கட்டியுள்ளனர்
ஞானம்
ஆசிரியர்
- தி.சொ.வேணுகோபால்
- ”கோடைவயல்” தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது
- திருவையாற்றில் பிறந்தவர்
- மணிப்பால் பொறியியல் கல்லூரி பேராசிரியர்(mechanical)
- ”எழுத்து” கால புது கவிஞர்களில் ஒருவர்
- இவரது மற்றொரு கவிதை தொகுப்பு “மீட்சி விண்ணப்பம்”
காலக்கணிதம்
ஆசிரியர்
- கண்ணதாசன்
- இயற்பெயர் முத்தையா
- ஊர்- சிவகங்கை-சிற்றூர்-சிறுகூடல்பட்டியில் பிறந்தார்
- பெற்றோர்- சாத்தப்பன் விசாலாட்சி
- 1949- “கலங்காதிரு மணமே” பாடலை எழுதி திரை உலகில் பிரபலம் ஆனார்
- சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகத்திய அகாதெமி விருது பெற்றவர்
- தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்
”கூர்வேல்
குவைஇய மொய்ம்பின்
தேர்வண்
பாரிதண் பறம்பு நாடே”—புறநானூறு
சிவகங்கை
மாவட்டத்தின் பிரான் மலை(பறம்பு மலை)
Book Back
1. காலக் கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது
ஜெயகாந்தம்
ஜெயகாந்தன்
விருதுகள்
- குடியரசு தலைவர் விருது(உன்னைப்போல் ஒருவன்)-திரைப்படம்
- சாகத்திய அகாதெமி விருது(சில நேரங்களில் சில மனிதர்கள் )- புதினம்
- சோவியத் நாட்டு விருது(இமயத்துக்கு அப்பால்)
- ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது
சிறுகதை
தொகுப்பு
- குருபீடம்
- யுகசந்தி
- ஒரு பிடி சோறு
- உண்மை சுடும்
- இனிப்பும் கரிப்பும்
- தேவன் வருவாரா
- புதிய வார்ப்புகள்
குறும்புதினங்கள்
- பிரளயம்
- கைவிலங்கு
- ரிஷிமூலம்
- பிரம்ம உபதேசம்
- யாருக்காக அழுதான்
- கருணையினால் அல்ல
- சினிமாவுக்கு போன சித்தாளு
புதினங்கள்
- பாரீசுக்கு போ
- சுந்தர காண்டம்
- உன்னைப் போல் ஒருவன்
- கங்கை எங்கே போகிறாள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
மொழிப்பெயர்ப்புகள்
- வாழ்விக்க வந்த காந்தி(பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)
- ஒரு காதசிரியனின் கதை(முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
திரைப்படமான
படைப்புகள்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- ஊருக்கு நூறு பேர்
- உன்னைப்போல் ஒருவன்
- யாருக்காக அழுதான்
“சிறுகதை
மன்னன் “ என்ற பட்டம் பெற்றவர்
தன் கதைகளை திரைப்படமாக இயக்கி இருக்கிறார்
சாகத்திய
அகாதெமி விருதும், ஞானப்பீட விருதையும் பெற்றவர்
இவரது
கதைகள் பிறமொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன
சித்தாளு
ஆசிரியர்
- நாகூர்ருமி
- இயற்பெயர்- முகமதுரஃபி
- தஞ்சை மாவட்டம்
- 1980-கணையாழி இதழ்களில் எழுத தொடங்கினார்
- கவிதை தொகுதிகள்- நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல்
- மொழிப்பெயர்ப்பு கவிதைகளும், சிறுகதை தொகுதிகளும், நாவல்களையும்(கப்பலுக்கு போன மச்சான்) படைத்துள்ளார்
தேம்பாவணி
- கிறித்துவுக்கு முன் தோன்றியவர்(திருமுழக்கு யோவான்) அருளப்பன்
- இவருக்கு வீரமாமுனிவர் கருணையன் என்று பெயரிட்டுள்ளார்
- கருணையனின் தாயார் எலிசபெத் கானகத்தில் வாழ்ந்தார்
- எலிசபெத் இறப்பிற்கு பின் யோவானின் துயரமே இந்த பாடல்
பொருள்
- சேக்கை- படுக்கை
- யாக்கை- உடல்
- பிணித்து- கட்டி
- வாய்ந்த- பயனுள்ள
- இளங்கூழ்- இளம்பயிர்
- தயங்கி- அசைந்து
- காய்ந்தேன் – வருந்தினேன்
- கொம்பு – கிளை
- புழை- துளை
- கான் – காடு
- தேம்ப- வாட
- அசும்பு- நிலம்
- உய்முறை- வாழும்வழி
- ஓர்ந்து- நினைத்து
- கடிந்து- விலக்கி
- உவமணி- மணமலர்
- படலை- மாலை
- துணர்- மலர்கள்
தேம்பா+அணி- வாடாதமாலை
தேன்+பா+அணி-
தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
கிறிஸ்துவின்
வளர்ப்பு தந்தையான சூசையப்பர் என்னும் யோசேப்பின்(வளனை) பாட்டுடைத்தலைவராக கொண்டது
3
காண்டங்களையும், 36 படலங்களையும், 3615 பாடல்களையும் கொண்டது
17
ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது
ஆசிரியர்
- வீரமாமுனிவர்
- இயற்பெயர்- கான்சுடான்சு ஜோசப் பெசுகி
- நூல்கள்- சதுரகராதி(தமிழின் முதல் அகராதி), தொன்னுல் விளக்கம், சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்த குருகதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள்
- சிறப்பு- வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னனை சந்திப்பதற்காக 2 மாதத்தில் உருது மொழியை கற்றார். அதனால் இவருக்கு அம்மனர் இஸ்மத் சன்னியாசி(தூய துறவி) என்னும் பட்டம் வழங்கினார்
- Book Back
- பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று கருணையன்,எலிசபெத்துக்காக வேண்டினார்.
ஒருவன் இருக்கிறான்
- ஒருவன் இருக்கிறான் சிறுகதை கு.அழகிரிசாமி சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
- இவர் அரசு பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துபணியை மேற்கொண்டார்
- கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர்
- மலேசியாவில் படைப்பாளர்களுக்கு படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்
“ஆலங்கானத்து
அஞ்சுவர இறுத்து
அரசு
பட அமர் உழக்கி” – மதுரைக்காஞ்சி
(திருவாரூர் மாவட்டத்தின் ஆலங்கானம்)