group 4 - பாரதம் அன்றய நாற்றங்கால்
பொருள்
- மெய்- உண்மை
- தேசம்- நாடு
நூல்குறிப்பு
- தாரபாரதி
- இயற்பெயர் இராதாகிருஷ்ணன்
- கவிஞாயிறு- அடைமொழி
- நூல்கள்- புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள். தாராபாரதியின் கவிதைகள்
Book Back
- தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல்- திருக்குறள்
- காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடம்- காவிரிக்கரை
- கலைக்கூடமாக காட்சி தருவது – சிற்பக்கூடம்
- நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நூல் + ஆடை
- எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எதிரொலிக்க
group 4 - தமிழ்நாட்டில் காந்தி
- 1919 பிப்ரவரி காந்தியடிகள் முதன்முறையாக சென்னைக்கு வந்தார்
- ஆங்கில அரசு விதித்திருந்த ரெளலட் சட்டத்தை எதிர்த்து போராட ஆலோசனை கூட்டம் இராஜாஜி அவர்கள் விட்டில் நடைபெற்றது
- “திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன் அதற்கு தாங்கள் தலைமை தாங்க முடியுமா?”- என்றார் பாரதி
- “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்றார் காந்தி
- ”அது முடியாது திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும் தாங்கள் தொடங்கப் போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துக்கள் நான் போய் வருகிறேன் “- என்றார் பாரதி
- “இவர் எங்கள் தமிழ்நாட்டு கவிஞர் தமிழ்நாட்டின் சொத்து”- என்றார் இராஜாஜி(இவர் என கூறிப்பிடுவது பாரதியாரை)
- “இல்லை இல்லை இவர் இந்திய நாட்டின் சொத்து இவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்” – என்றார் காந்தி (இவர் என கூறிப்பிடுவது பாரதியாரை)
- 1921 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மதுரைக்கு புகைவண்டியில் செல்லும் போது விவசாயிகள் ஒரே ஒரு துண்டை மட்டும் கட்டியிருப்பதை பார்த்து தானும் அன்றிலிருந்து எளிமையாக துண்டும், வேட்டியும் மட்டும் அணிந்தார்.இதுவே எளிமை திருக்கோலம் ஆகும்
- காந்தியடிகள் காரைக்குடியில் கானாடுகாத்தான் ஊரில் ஒரு பணக்காரர் வீட்டில் தங்கினார். அவர் வீடு முழுவதும் வெளிநாட்டு பொருள்கள் வைத்திருந்தார். “ உங்கள் வீட்டை வெளிநாட்டி பொருள்களால் அழகு செட்ய்து இருக்கிறீர்கள் அதற்கு செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுத்தால் போதும் இதை விட அழகாக செய்து விடுவேன்”என்றார் காந்தி. அடுத்த முறை அவர் அந்த வீட்டுக்கு செல்லும் பொழுது ஒரு வெளிநாட்டு பொருள் கூட இல்லை
- மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல தலைவர்கள் அழைத்தபோது” அந்த கோவிலுக்கு செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?” என்றார் காந்தி. இல்லை என்றனர் தன்]லைவர்கள்.” அப்படியானால் அங்கே வரமாட்டேன்”என்றார். பின்பு அங்கு செல்ல அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்ட பின்பு அந்த கோயிலுக்கு சென்று வந்தார்
- தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழி கற்றார். ஜி.யூ. போப் எழுதிய தமிழ்கையேடும், திருக்குறளும் அவரை கவர்ந்தன
- 1937 சென்னையில் இலக்கிய மாநாட்டில் உ.வே.சாமிநாதர் அவர்களின் வரவேற்புரையை கேட்டு “ இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது”என்றார் காந்தி
Book Back
- காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் மதுரை
- காந்தியடிகள் எந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்- உ.வே.சா
பொருத்துக
- இலக்கிய மாநாடு- சென்னை
- தமிழ்நாட்டின் சொத்து- பாரதியார்
- குற்றாலம்- அருவி
- தமிழ் கையேடு- ஜி.யூ.போப்
group 4 -வேலுநாச்சியார்
- இராமநாதபுரம் செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்
- தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது கற்றார்
- சிலம்பம், குதிரை ஏற்றம், வாள்போர், வில்பயிற்சி கற்றார்
- சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்
- காளையற்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதன் இறந்தார்
- வேருநாச்சியார் திண்டுக்கல்லில் ஒரு கோட்டையில் தங்கி ஒரு படையை திரட்டி பயிற்சி அளித்தார்
- வேலுநாச்சியார், அமைச்சர் தாண்டவராயன், பெரிய மருது சின்ன மருது மற்றும் குறு நிலமன்னர்கள் ஒன்றாக இருந்தனர்
- ஹைதர் அலி 5000 குதிரை படைகளை அனுப்பினார்
- ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும், பெண்கள் படைப்பிரிவுக்கு கியிலியும் தலைமை ஏற்றனர்
- சிவகங்கை கோட்டை விஜயதசமி அன்று திறக்கப்படும்
- வேலுநாச்சியாரை காட்டி கொடுக்கும் படி உடையாள் என்ற பெண்ணை சித்தரவதை செய்து கொன்றனர் ஆங்கிலேயர்கள். அவளது சிறப்பை அறிவதற்காக இடையாளுக்கு நடுகல் நடப்பட்டது
- வேலுநாச்சியார் தனது கணவர் இறந்த ஊரான காளையர்கோவிலை முதலில் மீட்டனர், பின் சிவகங்கையையும் மீட்டனர்
- சிவகங்கையை மீட்க குயிலி என்ற பெண் தன் மீது தீ வைத்து ஆயுத கிடங்கில் குதித்துவிட்டாள்
- வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஹைதரலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது
group 4 -பராபரக் கண்ணி
”தம்
உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு
ஏவல் என்று செய்வேன் பராபரமே!”
”அன்பர்பணி
செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை
தனேவந்து எய்தும் பராபரமே!”
“எல்லாரும்
இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே!”
பொருள்
- தண்டருள்- குளிர்ந்த கருணை
- கூர்- மிகுதி
- செம்மையர்க்கு- சான்றோர்க்கு
- ஏவல்- தொண்டு
- பராபரமே- மேலான பொருளே
- பணி- தொண்டு
- எய்தும்- கிடைக்கும்
- அல்லாமல்- அதை தவிர
- எல்லாரும்- எல்லா மக்களும்
ஆசிரியர்
குறிப்பு
- தாயுமானவர்
- திருச்சியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் பெருங்கணக்கராக பணி புரிந்தவர்
- தாயுமானவர் பாடல்கள்(தமிழ் மொழியின் உபநிடதம்) பராபரக் கண்ணி என்னும் தலைப்பில் உள்ளது
- கண்ணி- இரண்டு அடிகளால் பாடப்படும் பாடல்வகை
Book Back
- சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்சொல் சுறுசுறுப்பு
- தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தம்முயிர்
- இன்புற்று+இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இன்புற்றிருக்க
- தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தான் +என்று
நீங்கள் நல்லவர்
பொருள்
- சுயம்- தனித்தன்மை
- உள்ளீடுகள்- உள்ளே இருப்பவை
ஆசிரியர்
குறிப்பு
- லெபனான் நாட்டை சேர்ந்தவர் கலீல் ஜிப்ரான். கவிஞர், நாவலாஅசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்
- இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது
Book Back
- பரிசு
பெரும்போது உன்மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும்
- வாழ்வில்
உயர கடினமாக உழைக்க வேண்டும்
பசிப்பிணி போக்கிய பாவை
- கோவலன் மாதவி மகள் மணிமேகலை
- மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தீவிற்க்கு அழைத்து சென்றது
- அட்சய பாத்திரத்தை பற்றி மணிமேகலையிடம் கூறியது தீவதிலகை
- பொய்கையின் பெயர் கோமுகி(கோ- பசு, முகி- முகம்) பசுவின் முக்ம் போன்று அமைந்திருக்கும் பொய்கை
- மணிமேகலைக்கு கொண்டு உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர், சிறைசாலையில் உள்ளவர்கள் என அனைவருக்கும் உணவளித்தாள்
- “வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது, புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது”
- அறிஞர்களை கொண்டு சிறைசாலையில் உள்ளவர்களுக்கு நல்லறம் போதிக்குமாறு மணிமேகலை மன்னரிடம் கூறினாள்
Book Back
- மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு மணிபல்லவத்தீவு
- மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்- ஆதிரை
பாதம்
ஆசிரியர்
குறிப்பு
- எஸ்.ராம்கிருஷ்ணன்
- தற்கால தமிழ் எழுத்தாள்ர்களுள் குறிப்பிடத்தக்கவர்
- நாவல்கள், சிறுகதைகள்,கட்டுரை தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் எழுதியுள்ளார்
- நூல்கள்- உபபாண்டவம்,கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள்
- சிறுகதை தொகுப்பு- தாவரங்களின் உரையாடல்
ஆசியஜோதி
“நின்றவர்
கண்டு நடுங்கினாரே- ஐயன்
நேரிலே
நிற்கவும் அஞ்சினாரே”
- அரச வாழ்வை துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவ்ர்- புத்தர்
- பிம்பிசாரர் யாகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட ஆட்டுகுட்டிகளில் அடிப்பட்ட ஆட்டுகுட்டியை அரண்மனைக்கு எடுத்துசென்று உயிர் கொலையை தடுத்து நிறுத்தினார்
பொருள்
- அஞ்சினர்- பயந்தனர்
- கருணை- இரக்கம்
- வீழும்-விழும்
- ஆகாது-முடியாது
- பார்- உலகம்
- நீள்நிலம்- பரந்த உலகம்
- முற்றும்- முழுவதும்
- மாரி- மழை
- கும்பி- வயிறு
- பூதலம்- பூமி
ஆசிரியர்
குறிப்பு
- தேசிக விநாயகனார்
- 20 ஆம் நாற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்
- 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்
- கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்
- ஆசியஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் அஃப் ஆசியா என்னும் நூலை தழுவி எழுதப்பட்டது
Book Back
- புத்தரின் வரலாற்றை கூறும் நூல் ஆசியஜோதி
- நேர்மையான வாழ்வை வாழ்பவர் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
- ஒருவர் செய்யக் கூடாதது தீவினை
- எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எளிது+ஆகும்
- பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பாலை+எல்லாம்
- இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இன்னுயிர்
- மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் மலையெலாம்
மனிதநேயம்
தனக்கென
வாழாமல் பிறர்கென வாழ கருணை, பொருமை, பரிவு, நன்றி, உணர்வு, இன்சொல்பேசுதல் போன்றவை
தேவை இதுவே மனிதநேயம் ஆகும்
“தமக்கென
முயலா நோன்றாள்- பிறர்கென
முயலுநர்
உண்மையானே”-புறநானூறு
வள்ளலார்
“
அப்பா இவை இரண்டும் தங்ககடுக்கன்கள் குறைந்த
விலைக்கு விற்றுவிடாதே மேலும் ஒரு கடுக்கனுடன் சென்றால் உன்னை திருடன் என எளிதாக கண்டுபிடித்து
விடுவார்கள். எனவே தான் இரண்டு கடுக்கன்களையும்
நீ எடுத்து கொள்வதற்க்கு வாய்ப்பாக திரும்பி படுத்தேன்”- என்றார் வள்ளலார்
வடலூரில்
சத்திய தருமச்சாலை தொடங்கி அனைவருக்கும் உணவளித்தார்
வாடிய
பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் – வள்ளலார்
அன்னை
தெரசா
- மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி என்று வாழ்ந்தவர்
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
”வாழ்க்கை
என்பது
நீ
சாகும்வரை அல்ல
மற்றவர்
மனதில்
நீ
வாழும் வரை”- அன்னை தெரசா
கைலாஷ்
சத்யாத்ரி
- அன்னை தெரசாவிற்க்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் ஆவார்
- “குழந்தைகளை பாதுக்காப்போம்” என்னும் இயக்கம் மூலமாக குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபடுகிறார்
- 86000 குழந்தைகளை மீட்டுள்ளார்
- 103 நாடுகளில் 80000கி.மி தூரம் நடை பயணம் செய்துள்ளார்
- குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்
”குழந்தைகளை
தொழிலாளர்களாக மாற்றுவது மனித தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தை குழந்தைகளின் கண்கொண்டு
பாருங்கள். உலகம் அழகானது”- கைலாஷ் சத்யாத்ரி
Book Back
- எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் மனித நேயம்
- தம்
பொருளை கவர்ந்தவரிடமும் அன்பு காட்டியவர் வள்ளலார்
- அன்னை
தெரசாவிற்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது
- கைலாஷ்
சத்தியாத்ரி தொடங்கிய இயக்கம் “ குழந்தைகளை
பாதுகாப்போம்”
பொருத்துக
- வள்ளலார்- பசிப்பிணி போக்கியவர்
- கைலாஷ் சத்யாத்ரி- குழந்தைகள் உரிமைக்கு பாடுபட்டவர்
- அன்னை தெரசா- நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
முடிவில் ஒரு தொடக்கம்
அசோகன்
– புஷ்பாஞ்லி என்ற மருத்துவ தம்பதியினரின் மகன் ஹிதேந்திரன் இருதய தானம் செய்து ஒரு
சிறுமியின் உயிரை காப்பாற்றியவன்
No comments:
Post a Comment