Thursday, September 3, 2020

10 th std samacheer kalvi tamil part 3(இலக்கணம்) -new syllabus

https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html

 புறப்பொருள் இலக்கணம்

புறத்திணை

புறம் பற்றிய நெறிகளை கூறுவது புறத்திணை

புறத்திணை 12 வகைப்படும்

     1. வெட்சித்திணை

ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளை (மாடுகளை) கவர்ந்து வர வெட்சி பூவினை சூடிக்கொண்டு சென்று ஆநிரை கவர்தல் வெட்சித்திணை ஆகும்

      2. கரந்தைத் திணை

வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை கரந்தை பூவை சூடி சென்று மீட்ப்பது கரந்தைத் திணை

      3.வஞ்சித் திணை

மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டை கைப்பற்ற கருதி வஞ்சி பூவை சூடிப் போருக்கு செல்வது  வஞ்சித் திணை

       4.காஞ்சித் திணை

தன் நாட்டை கைப்பற்ற வந்த  மாற்றரசனோடு ,காஞ்சிப் பூவை சூடி எதிர்த்து  போரிடல் காஞ்சித் திணை

       5.நொச்சித் திணை

கோட்டையை காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சி பூவை போரிடுவது நொச்சித் திணை

       6.உழிஞைத் திணை

மாற்றரசனின் கோட்டையை கைப்பற்ற உழிஞை பூவை சூடிய தன் வீரர்களுடன் அதனை சுற்றி வளைத்தல் உழிஞைத் திணை

      7.தும்பைத் திணை

பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தம் வீரர்களுடன் தும்பை பூவை சூடி  போர்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது  தும்பைத் திணை

      8.வாகைத் திணை

போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச்சூடி மகிழ்வது வாகைத் திணை

      9. பாடாண் திணை

பாடுவதற்கு தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ்,  கருணை முதலியவற்றை போற்றி பாடுவது பாடாண் திணை

     10.பொதுவியல் திணை

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும்,அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை

      11.கைக்கிளை

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்

      12.பெருந்திணை

பெருந்திணை பொருந்தா காமம்

 கலைச்சொல்

  1. Consulate –துணைத்தூதரகம்
  2. Patent –காப்புரிமை
  3. Document –ஆவணம்
  4. Guild –வணிகக் குழு
  5. Irrigation – பாசனம்
  6. Territory – நிலப்பகுதி

பா- வகை,அலகிடுதல்

           யாப்பு

            எழுத்து, அசை, சீர், தலை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளை கொண்டது யாப்பு

           ஓசையின் வகைகள்

  1.             செப்பல் ஓசை
  2.              அகவல் ஓசை
  3.              துள்ளல் ஓசை
  4.              தூங்கல் ஓசை   

           செப்பல் ஓசை

செப்பலோசை வெண்பாவிற்குரியது

குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளது

           அகவல் ஓசை

அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது

சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்கள் அகவற்பாவில் அமைந்தவை

            துள்ளல் ஓசை

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை

இது கலிப்பாவிற்க்கு உரியது

தூங்கல் ஓசை

தூங்கல் ஓசை வஞ்சிப்பாவிற்க்கு உரியது

வெண்பா

  1. குறள் வெண்பா
  2. சிந்தியல் வெண்பா
  3. நேரிசை வெண்பா
  4. இன்னிசை வெண்பா
  5. பஃறொடை வெண்பா

ஆசிரியப்பா

  1. நேரிசை ஆசிரியப்பா
  2. இணைக்குறள் ஆசிரியப்பா
  3. நிலை மண்டில ஆசிரியப்பா
  4. அடி மறி மண்டில ஆசிரியப்பா

வெண்பாவின் பொது இலக்கணம்

  1. செப்பல் ஓசை பெற்று வரும்
  2. ஈற்றடி முச்சீராகவும்,ஏனைய அடிகள் நாற்சீரகவும் வரும்
  3. இயற்சீர் , வெண்சீர் மட்டுமே பயின்று வரும்
  4. இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வரும்
  5. இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்(கலிவெண்பா 13 அடி மேல் வரும்)
  6. ஈற்றுச்சீர் நாள்,மலர், காசு, பிறப்பு என்னும்  வாய்பாட்டில் வரும்

ஆசிரியப்பா பொது இலக்கணம்

  1. அகவல் ஓசை பெற்று வரும்
  2. ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்
  3. ஆசிரியத்தளை மிகுதியாகவும் ,வெண்டளை கலித்தளை ஆகியவை விரவியும் வரும்
  4. மூன்ற அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்
  5. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு

குறள் வெண்பா

  1. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்
  2. இரண்டு அடிக்ளாய் வரும்
  3. முதல் அடி நான்கு சீராகவும்(அளவடி),இரண்டாம் அடி மூன்று சீராகவும்(சிந்தடி) வரும்

அலகிடுதல்

சீரை பிரித்து அசை பார்த்து அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்

ஓரசைச்சீர்

  1. நேர்-நாள்
  2. நிரை-மலர்
  3. நேர்பு-காசு
  4. நிரைபு- பிறப்பு

ஈரசைச்சீர்

  1. நேர் நேர்- தேமா
  2. நிரை நேர் – புளிமா
  3. நிரை நிரை- கருவிளம்
  4. நேர் நிரை-கூவிளம்

மூவசைச்சீர்

  1. நேர் நேர் நேர் - தேமாங்காய்
  2. நிரை நேர் நேர் – புளிமாங்காய்
  3. நிரை நிரை நேர் - கருவிளங்காய்
  4. நேர் நிரை நேர் -கூவிளங்காய்
  5. நேர் நேர் நிரை - தேமாங்கனி
  6. நிரை நேர் நிரை – புளிமாங்கனி
  7. நிரை நிரை நிரை - கருவிளங்கனி
  8. நேர் நிரை நிரை –கூவிளங்கனி

யாப்பதிகாரம்(புலவர் குழந்தை)

  1. செப்பலோசை- இருவர் உரையாடுவது போன்ற ஓசை
  2. அகவலோசை – சொற்பொழிவாற்றுவது(ஒருவர் பேசுதல்)போன்றது
  3. துள்ளலோசை – கன்று துள்ளினாற் போல சீர்தோறும் துள்ளி வரும்
  4. தூங்களோசை- சீர்தோறும் துள்ளாது தூங்கியே(தாழ்ந்தே) வரும்

Book back

பாவகைகள் வகைப்படுத்துக

  1. அன்னை மொழியே- ஆசிரியப்பா வகையை சார்ந்தது
  2. முல்லைப்பாட்டு – வெண்பா வகையை சார்ந்தது
  3. காசிக்காண்டம்- கலிப்பா வகையை சார்ந்தது
  4. மலைபடுகடாம்- ஆசிரியப்பா வகையை சார்ந்தது
  5. திருக்குறள்- வெண்பா வகையை சார்ந்தது
  6. பரிபாடல் – ஆசிரியப்பா வகையை சார்ந்தது
  7. நீதி வெண்பா- வெண்பா வகையை சார்ந்தது
  8. முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்- கலிப்பா வகையை சார்ந்தது
  9. கால்க்கணிதம் – ஆசிரியப்பா வகையை சார்ந்தது

கலைச்சொல்

  1. Belief – நம்பிக்கை
  2. Renaissance –மறுமலர்ச்சி
  3. Philosopher –மெய்யியலாளர்
  4. Revivalism- மீட்டுருவாக்கம்

அணி

அணி

செய்யுளுக்கு அழகு சேர்ப்பது

தற்குறிப்பேற்ற அணி

இயல்பாய் நிகழும்,நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றி கூறுவது

“போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

‘வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட”

(கோவலனை இம்மதுரைக்கு வர வேண்டாம் என்று கொடிகள் கை அசைக்கின்றன.)

தீவக அணி

தீவகம்(விளக்கு)

செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருளை விளக்குவது

“சேந்தன வேந்தன் திருநெடுங்கண்,தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள்,இழிகுருதி-பாய்ந்து

திசைஅனைத்தும்,வீரச் சிலைப்பொழிந்த அம்பும்,

மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து"

நிரல்நிறை அணி

 நிரல்- வரிசை,நிறை-நிறுத்துதல்

 சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே  இணைத்து பொருள் கொள்வது

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”

  இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக விள்ங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே ஆகும்

தன்மையணி(அல்லது) தன்மை நவிற்சி அணி

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது

நான்கு வகை

  1. பொருள் தன்மையணி
  2. குணத் தன்மையணி
  3. சாதித் தன்மையணி
  4. தொழிற் தன்மையணி

”மெய்யீற் பொடியும் விரித்த  கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்-வையைக்கோன்

கண்டளவே தோற்றான்,அக்காரிகைத்தன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்”

கண்ணகியின் துயர் நிறைந்த தோற்ற்த்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் தன்மையணி எனப்படும்

  Book back

 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை—உவமை அணி

ஊழி பெயரினும் தாம் பெயரால் சான்றாண்மைக்கு

ஆழி என்ப்படு வார் –உருவக அணி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்-சொற்பொருள் பின்வருநிலை அணி

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்- வஞ்ச புகழ்ச்சி அணி

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற-பிறிது மொழிதல் அணி

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு- வேற்றுமையணி

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்- ஏகதேச உருவக அணி

பண் என்னாம் பாடற்  கியைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்- எடுத்துக்காட்டு உவமை அணி

நச்சப் படாதவன் செல்வம் நடூஊருள்

நச்சு மரம்பழுத் தற்று- உவமை அணி

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்- சொற்பொருள் பின்வருநிலை அணி

கலைச்சொல்

  1. Humanism –மனித நேயம்
  2. Cabinet –அமைச்சரவை
  3. Cultural boundaries-பண்பாட்டு எல்லை
  4. Cultural values-பண்பாட்டு விழுமியங்கள்

 

                              நூல்கள் எழுதியவர்கள்

  1. நாம் ஏன் தமிழ் கற்க வேண்டும்-முனைவர் சேதுமணியன்
  2. தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா.நன்னன்
  3. பச்சை நிழல் – உதய சங்கர்
  4. குயில் பாட்டு- பாரதியார்
  5. அதோ அந்த பறவை போல- ச.முகமது அலி
  6. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்
  7. திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்
  8. சிறுவர் நாடோடி கதைகள்- கி.ராஜநாராயணன்
  9. ஆறாம் திணை- மருத்துவர் கு.சிவராமன்
  10. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்-நீலமணி
  11. அன்றாட வாழ்வில் அறிவியல்- ச.தமிழ்ச்செல்வன்
  12. காலம்-ஸ்டீபன் ஹாக்கிங்
  13. சிறந்த சிறுகதைகள் பதிமூன்று-வல்லிக்கண்ணன்
  14. குட்டி இளவரசன் –வெ.ஸ்ரீராம்
  15. ஆசிரியரின் டைரி – எம்.பி.அகிலா
  16. தேன்மழை- சுரதா
  17. திருக்குறள் நீதி இலக்கியம் – க,த.திருநாவுக்கரசு
  18. நாட்டார் கலைகள்- அ.கா.பெருமாள்
  19. என் கதை- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
  20. வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
  21. நாற்காலிக்காரர்- ந.முத்துசாமி
  22. அறமும் அரசியலும்-மு.வரதராசனார்
  23. அபி கவிதைகள் – அபி
  24. எண்ணங்கள்- எம்.எஸ்.உதயமூர்த்தி
  25. யானை சவாரி- பாவண்ணன்
  26. கல்மரம்- திலகவதி
  27. அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்- ந.முருகேசபாண்டியன்                                            https://tnpscstudymaterialeasy.blogspot.com/p/welcome-page.html

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...