Wednesday, December 2, 2020

8 th std samacheer kalvi tamil Term 2 -new syllabus

 கல்வி அழகே அழகு

“கற்றோர்க்கு கல்வி நலனே  கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம்”

பொருள்

  1. கலன் - அணிகலன்
  2. முற்ற் – ஒளிர

நூல்குறிப்பு

  1. குமரகுருபர் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  2. சிற்றிலக்கியங்கள்- கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம்,சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைதமிழ்,முத்துகுமாரசாமி பிள்ளைதமிழ்
  3. மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறிவிளக்கம் என பெயர் பெற்றது
  4. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன

book back

  1. கற்றவர்க்கு அழகு தருவது கல்வி 
  2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கலன் + அல்லால்

புத்தியை தீட்டு

பொருள்

  1. தடம்- அக்டையாளம்
  2. அகம்பாவம்- செருக்கு

ஆசிரியர் குறிப்பு

  1. ஆலங்குடி சோமு
  2. திரைப்பட பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்
  3. ஊர்- சிவகங்கை->ஆலங்குடி
  4. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்

book back

  1. என் நண்பர் பெரும்புலவராக இருந்த போதும் அகம்பாவம் இன்றி வாழ்ந்தார்
  2.  ‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கோயில் + அப்பா
  3.  பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  பகைவனென்றாலும

ல்துறைக் கல்வி

  1. இளமையில் கல்- முதுமொழி
  2. ஏட்டு கல்வி மட்டும் கல்வி ஆகாது
  3. நாம் நமது தாய்மொழி வாயிலாக கல்வி பெறலே சிறப்பு
  4. வாழ்விற்குறிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று
  5. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ‘அறிவியல்’ என்னும் அறிவுக்க்லை
  6. கல்வி என்பது வருவாய் தேடும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்ச்சியளிக்கும் ஒரு நெறி முறையாகும்”- விஜயலட்சுமி பண்டிட்(ஐ.நா. அவையின் முதல் பெண்தலைவர்)
  7. “ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி. பலர்க்கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில்”குலோத்துங்கன்

நூல்குறிப்பு

  1. திரு.வி.க(திருவாரூர் விருதாச்சலம் கல்யாணசுந்தரனார்)
  2. அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர், நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்
  3. சிறந்த மேடை பேச்சாளர்
  4. தமிழ் தென்றல்(சிறப்பு பெயர்)
  5. நூல்கள்-  மனித வாழ்க்கையும் காந்தியடிகளும். பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து

book back

  1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி
  2. கல்வி பயிற்சிக்குரிய பருவம்  இளமை
  3. இன்றைய கல்வி தொழிலில் நுழைவதற்க்கு கருவியாக கொள்ளப்பட்டு வருகிறது
  4. கலப்பில்  வளர்ச்சி உண்டென்பது இயற்கை நுட்பம்
  5. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது
  6. வாழ்விற்க்குரிய இன்பத்துறைகளில் தலையாயது காவிய இன்பம்  ஆகும்

இயற்கை ஒவியம்- பத்துப்பாட்டு 

இயற்கை தவம்- சிந்தாமணி

இயற்கை பரிணாமம்- கம்பராமாயணம்

இயற்கை அன்பு- பெரிய புராணம்

ஆன்ற குடிப்பிறத்தல்

  1. பி.ச.குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர்
  2. இவர்  தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்
  3. ஜெயகாந்தனோடு நெருங்கி பழகி “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியுள்ளார்
  4. இவர் எழுதிய ”ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்” என்னும் நூலிலிருந்து  ஒரு பகுதி

திருக்கேதாரம்

“பண்ணிந்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்

கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம் அவை  சொரிய”-சுந்தரர்

பொருள்

  1. பண்-இசை
  2. கனகச்சுனை- பொன் வண்ண  நீர்நிலை
  3. மதவேழங்கள்-  மதயானைகள்
  4. முரலும்- முழங்கும்
  5. பழவெய்- முதிர்ந்த மூங்கில்

ஆசிரியர்  குறிப்பு

  1. சுந்தர்(தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்)
  2. சிறப்பு பெயர்(நம்பியாரூரர், தம்பிரான் தோழர்)
  3. இவரது பாடல் ஏழாம் திருமுறை ஆகும்
  4. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை  முதல் நூலகக்  கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்
  5. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய  மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே “தேவாரம்
  6. இந்நூலை தொகுத்தவர்  நம்பியாண்டார் நம்பி

பதிகம்-பத்து பாடல்களை கொண்டது

தே+ஆரம்-  இறைவனுக்கு சூட்டப்படும் மாலை

தே+வாரம்-  இனிய இசை பொருந்திய பாடல்கள்

book back

  1. காட்டில் இருந்து வந்த வேழங்கள்(யானை) கரும்பை  தின்றன
  2.  ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கனகம் + சுனை
  3.  முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  முழவதிர

பாடறிந்து ஒழுகுதல்

பொருள்

  1. அலந்தவர்- வறியவர்
  2. கிளை- உறவினர்
  3. செளாஅமை- வெறுக்காமை
  4. பேதையார்- அறிவற்றவர்
  5. நோன்றல்- பொறுத்தல்
  6. மறாஅமை-மறவாமை
  7. பொறை- பொறுமை
  8. போற்றார்- பகைவர்

நூல்குறிப்பு

  1. கலித்தொகை எட்டுதொகை  நூல்களுள் ஒன்று
  2. கலிப்பா என்னும் பா வகை
  3. குறிஞ்சிக்கலி, முல்ல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி ஐந்து பிரிவுகளை உடையது
  4. கலித்தொகையை தொகுத்த நல்லந்துவனார் சங்ககால புலவர்களுள் ஒருவர்
  5. நெய்தற்கலி பாடல்களை இயற்றியவரும் இவரே

book back

  1. பசியால் வாடும் அலந்தவர் உணவளித்தல் நமது கடமை
  2. நம்மை இகழ்வாரை பொறுத்து கொள்ள வேண்டும்
  3. மறை பொருளைக் காத்தல் நிறை எனப்படும் 
  4. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பாடு+அறிந்து
  5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் முறையெனப்படுவது

நாட்டுபுற கைவினைக் கலைகள்

  1. சிந்துசமவெளி- பானைஒடுகள்
  2. ஆதிசசநல்லூர்- முதுமக்கள் தாழிகள்
  3. செம்பியன் கண்டியூரில் –கலையழகு மிகுந்த மண்கலங்கள்
  4. கீழடி- சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன
  5. மண்பாண்டகள்- குடம்,தோண்டி,கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி
  6. திருவை-பானை செய்யும் சக்கரம்
  7. பானை வனைதல்-பானை செய்தல்
  8. சுடுமண்(டெரகோட்டா) சிற்பக்கலை-மண்பாண்ட கலையின் இன்னொரு வளர்ச்சிநிலை

மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள்-மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை,முறம், ஏணி, சதுரததட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப் பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால் நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய்

  1. குழந்தைகளை படுக்கவைப்பது-  தடுக்குப்பாய்
  2. உட்கார்ந்து உண்ண உதவுவது- பந்திப்பாய்
  3. உட்காரவும், படுக்கவும்- திண்ணைப்பாய்
  4. திருமணத்துக்கு பயன்படுத்துவது- பட்டுப்பாய்
  5. தொழுகைக்கு பயன்படுத்துவது- தொழுகைப்பாய்
  6. முற்காலத்தில் பாய் மரக்கப்பல்களில் பயன்பட்டது கூட பாய்தான்(”கூம்பொடு மீப்பாய் களையாது”- புறநானூறு)
  7. பனையோலை பொருட்கள்- கிலுகிலுப்பை, பொம்மைகள் பொருள்களை வைத்துக் கொள்ள கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஒலைப்பாய்
  8. பனைமட்டையின் நாரிலிருந்து- கயிறு, கட்டில், கூடை
  9. பிரம்பினால் ஆனபொருட்கள்- கட்டில், ஊஞ்சல், நாற்காலி, தொட்டில், பூக்கூடை, மேசை, பழக்கூடை, இடியாப்பத்த்ட்டு, அருச்சனைத்தட்டு, வெற்றிலைப்பெட்டி
  10. மூங்கில்கள்- மூன்று வகை(கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டுமூங்கில்0
  11. கூட்டு மூங்கிலே கைவினை பொருள்கள் செய்வதற்கு ஏற்றவை
  12. தமிழ்நாட்டின் மாநில மரம்- பணை
  13. பிரம்பு தாவரவியல் பெயர்(கலாம்ஸ் ரொடாங்).அசாம்,  அந்தமான், மலேசியா இறக்குமதி செய்யப்படுகிறது

book back

  1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை பணையோலைகள்
  2. பானை வனைதல் ஒரு சிறந்த கலையாகும்
  3.  ‘மட்டுமல்ல’ எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மட்டும்+அல்ல
  4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கயிற்றுக்கட்டில்

தமிழர் இசைக்கருவிகள்

இசையை குரல்வழி இசை, கருவிழி இசை என இசையை இரண்டாகப்பிரிப்பர்

இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் பாணர் என்ப்பட்டனர்

“நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

பாணன் சூடான் பாடினி அணியாள்”- புறநானூறு

இசைக்கருவியின் வகைகள்(4)

தோல்கருவி- விலங்குளின் தோலால் செய்யபடும் கருவி(எ.கா முழவு, முரசு)

நரம்புகருவி-நரம்பு அல்லது தந்திகளை உடையவை(எ.கா யாழ், வீணை)

காற்றுக்கருவிகள்-காற்றை பயன்படுத்தி  இசைக்கப்படுபவை(எ.கா குழல், சங்கு)

கஞ்சக்கருவிகள்- ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை

தோல்கருவி(உடுக்கை)

  1. பெரிய உடுக்கை-தவண்டை
  2. சிறிய உடுக்கை-குடுகுடுப்பை
  3. “தண்டுடுக்கை தானந்தக்கை  சாரநடம் பயில்வார்”-சம்பந்தர் தேவாரம்

தோல்கருவி(குடமுழா)

  1. 5 முகங்களை உடைய முரசு வகையை சார்ந்தது
  2. இதனை பஞ்ச்மகா  சப்தம் என்றும் அழைப்பர்
  3. கோயில்களில் ஒலிக்கப்படும்  இசைக்கருவி
  4. சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
காற்றுக்கருவி(குழல்)(வேயங்குழல், புல்லாங்குழல்) 
  1. ஏழு துறைகளை உடையது
  2. 20 வீரல் நீளம் உடையது
  3. மூங்கில் மட்டுமன்றி சந்தனம், செங்காலி, கருங்காலி மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன
  4. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல் குழல் என பலவகையான குழல்கள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது
  5. “குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்                                                            மழலைச் சொல் கேளா தார்” –திருக்குறள்

காற்றுக்கருவி(கொம்பு)

  1. மாடுகளின் கொம்புகள் இப்பொழுது பித்தளை, வெண்கலத்தால் செய்யப்படுகின்றன
  2. வேட்டையின் போதும், கள்வரை விரட்டவும், காவலர்களை விழித்திருக்க செய்யவும் பயன்படுத்துவர்
  3. இக்காலத்தில் (ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி)திருவிழா காலங்களில் இசைக்கப்படுகின்றன

காற்றுக்கருவி(சங்கு)

  1. இஃது ஒரு இயற்கை கருவி
  2. வலமாக சுழிந்து இருந்தால் வலம்புரி சங்கு என்பர்
  3. சங்க நாதம் என்பர்(இதன் ஒலியை)
  4. இலக்கியங்களில் பணிலம் என்பர்
  5. “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்                                                 மங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்”-திருப்பாவை

கஞ்சக்கருவி- சாலரா(ஜால்ரா)

  1. பித்தளை வெண்கலத்தால் ஆனது
  2. இதனை பாண்டில் எனவும் அழைப்பர்

கஞ்சக்கருவி(சேகண்டி)

  1. வட்டவடிவமான மணிவகையை சேர்ந்தது
  2. குச்சியாலோ, இரும்பு துண்டாலோ அடித்து ஒலி எழுப்புவர்
  3. இதனை சேமங்கலம் என்பர்
  4. இதனை கோவில் வழிப்பாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர்

தோல்கருவி(திமிலை)

  1. மணற்கடிகார வடிவில்  இருக்கும்
  2. இதனை பாணி என்னும் பெயரால் அழைப்பர்
  3. “சங்கொடு தாரை தாளம் தழங்கொலி முழங்கு பேரி                         வெங்குரல் பம்பை கண்டை வியந்துடி திமிலை தட்டி”- பெரியபுராணம்

தோல்கருவி(பறை)

  1. பகைவர்களின் ஆநிரையைக் கவர செல்லும் போது ஆகோட்பறையை முழக்குவர்
  2. இக்காலத்தில் தப்பு எனப்படுகிறது. ஆடும் ஆட்டம் தப்பாட்டம் ஆகும்

தோல்கருவி (மத்தளம்)

  1. மத்து என்பது ஒசையின் பெயர்
  2. மத்து+தளம்- மத்தளம் என்கிறார் அடியார்க்கு நல்லார்
  3. இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது.எனவே முதற்கருவி என்பர்
  4. “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத                                     முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்”-நாச்சியார் திருமொழி

தோல்கருவி(முரசு)

  1. போர் கருவிகளில் முதன்மையானது
  2. பழந்தமிழ் நாட்டில் (படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு)  மூன்று வகை இருந்தது
  3. தமிழ் மக்களிடம் 36 வகை முரசுகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது
  4. மாக்கண் முரசம்-மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது

தோல்கருவி(முழவு)

  1. மண்ணமை முழவு-பெருநாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது
  2. கால்த்தை அறிவிக்க நாழிகை, முழவு, காலைமுழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன
  3. “கலைஉணக கிழந்த முழவுமருள் பெரும்பழம்”-புறநானூறு

நரம்புக்கருவி(யாழ்)

  1. பேரியாழ், செங்கோட்டியாழ் மிகப்பழமையானது
  2. 21 நரம்புகளை கொண்டது- பேரியாழ்
  3. 19 நரம்புகளை கொண்டது- மகரயாழ்
  4. 14 நரம்புகளை கொண்டது- சகோடயாழ்
  5.   பிற்காலத்தில் வீணையாக மாறியது

நரம்புக்கருவி(வீணை)

  1. 7 நரம்புகளை கொண்டது
  2. பரிவாதன் என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்தரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது

வளம் பெருகுக

பொருள்

  1. வாரி- வருவாய்
  2. வைகுக- தங்குக
  3. எஞ்சானம்- குறைவின்றி
  4. முட்டாது- தட்டுபாடின்றி
  5. ஓடை-ஒசை
  6. ஒட்டாது- வாட்டம் இன்றி
  7. வெரீஇ- அஞ்சி
  8. யாணர்- புதுவருவாய்

நூல்குறிப்பு

  1. தகடுர் யாத்திரை(தர்மபுரி எனப்படுகிறது)
  2. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  3. இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை
  4. இந்நூலில் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன

book back

  1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய வித்துகள் எல்லாம் முளைத்தன
  2.   என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு வாரி பெருகிற்று.
  3. ‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ + களத்து 
  4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  கதிரீன

மழைச்சோறு

உப்பில்லா சோற்றை வீடுவீடாக சென்று வாங்கி பகிர்ந்து உண்வர் (மழைச்சோற்று நோன்பு என்பர்)

நூல்குறிப்பு

  1. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைசோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது
  2. இந்நூலின் பதிப்பாசிரியர் அ.கெளரன்
book back

  1. கனத்தமழை என்னும் சொல்லின் பொருள் பெருமழை
  2.  ‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வாசல்+எல்லாம்
  3.  ‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெற்று + எடுத்தோம்
  4.  கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் காலிறங்கி

கொங்கு நாட்டு வணிகம்

வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பு-தொல்காப்பியம்

மூவேந்தர்கள் குறித்த செய்திகள் (வால்மீகி, இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு) காண்லாம்

சேரர்

  1. சேரர்களே பழமையானவர்கள்
  2. “போந்தை வேம்பே ஆரென வரூஉம்  மாபெருந்                                   தானையர் மலைந்த பூவும்”- தொல்காப்பியம்
  3. நாடு குடநாடு எனப்பட்டது(கருவூர் ) என்றும் அழைப்பர்
  4. தலைநகர் வஞ்சி
  5. மேற்குதொடர்ச்சி மலையில் தொடங்கி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரை இருந்தது
  6. துறைமுகம்- தொண்டி, முசிறி, காந்தரூர்
  7. கொடி- விற்கொடி
  8. பூ- பனம்பூ
  9. எல்லைகள்- இன்றைய கேரளமும், கொங்குநாடும் (கோவை, சேலம்)சேர்ந்தது
  10. கொங்குமண்டலம்- (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுகல்,சேலம், கரூர்)
  11. கொங்கு நாட்டின் ஆறுகள்- காவிரி, பவானி, நொய்யல், அமராவதி (ஆன்பொருநை)
  12. செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்
  13. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை சேரமன்னர்கள் அடக்கினர்
  14. முசிறியில் இருந்து தான் மிளகு, முத்து, யானை, தந்தங்கள், பட்டு, மணி ஏற்றுமதி செய்யப்பட்டன
  15. பொன், புடவைகள், ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை இறக்குமதி செய்யப்பட்டன
  16. “நெல்லும் உப்பும் நேரே ஊரிர்                                                                       கொள்ளி ரோவெனச் சேரிதொறும் றுவலும்”- அகநானூறு
  17. நெல்லும் உப்பும் ஒரே மதிப்பு உடையனவாக இருந்தது
  18. “கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி
  19. நீலகிரி தேயிலை தொழிற்சாலைகள் நிறைந்தது

கோயம்புத்தூர்

  1. கோவன் புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவியது
  2. நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள் பயிரிடப்படுகின்றன
  3. மின்சாரப்பொருள்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தொழிற்சாலைகள் உள்ளன

திண்டுக்கல்

  1. நெல், சோளம், தினைவகைகள், வாழைப்பழம், காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன
  2. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது
  3. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுகிறது
  4. சின்னாளபட்டி சுங்குடிச் சேலைகள் புகழ் பெற்றவை
  5. அரிசி, தோல், பூட்டு தொழிற்சாலைகள் உள்ளன

ஈரோடு

  1. பரப்பளவில் தமிழ்நாட்டில்  2வது பெரிய நகரமாக உள்ளது
  2. நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி  எள் பயிரிடப்படுகின்றன
  3. மஞ்சள் சந்தை ஈரோட்டில் தான் நடைப்பெறுகிறது
  4. துணி நூற்பாலைகள், எண்ணைய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் உள்ளன
  5. நூல்நூற்பு, துணிகளுக்கு சாயம் ஏற்றுதல்,அச்சிடுதல், தோல்பதனிடுதல்

திருப்பூர்

  1. மிகச்சிறந்த பின்னலாடை நகரம்
  2. நெல், கரும்பு, பருத்தி, வாழை, முதன்மை பயிர்
  3. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உள்ளது
  4. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் பெருமை சேர்க்கின்றன

நாமக்கல்

  1. பச்சைமலை, கொல்லி மலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி உள்ளது
  2. நெல், சோளம்,கரும்பு, நிலக்கடலை, பருத்தி, திராட்சை, ஆரஞ்சு, காபி, பாக்கு, ஏலம் பயிரிடப்படுகின்றன
  3. முட்டை கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதல் இடம்
  4. சிமெண்ட், காகித தொழிற்சாலைகள், கைதறி நெசவு, வெண்கலப் பொருள்கள் தொழிற்சாலை உள்ளன
  5. சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இங்கு உள்ளது

சேலம்

  1. மாங்கனி நகரம் என்னும் சிறப்பு பெயர்கொண்டது
  2. நெல், பருப்பு வகைகள் , பருத்தி கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு பயிரிடப்படுகின்றன
  3. அதிக அளவில் ஜவ்வரிசி பயிரிடப்படுகிறது
  4. கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம்
  5. பால் பண்ணை, இராசாயனப்பொருள், அலுமினியம், சந்தன எண்ணைய், வனஸ்பதி தொழிற்சாலை உள்ளது
  6. ஏழைகளின் ஊட்டி (ஏற்காடு ) இம்மாவட்டத்தில் உள்ளது

கரூர்

  1. வஞ்சி நகரம் என்னும் வேறு பெயர் உண்டு
  2. கிரேக்க அறிஞர் தாலமி, தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக கரூர் குறிப்பிட்டுள்ளார்
  3. நெல்,சோளம் , கரும்பு, கேழ்வரகு, கம்பு பயிரிடப்படுகின்றன
  4. கல்குவாரி, கைத்தறிநெசவு, தோல் பதனிடுதல் , சாயமேற்றுதல் கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்கள் நடைப்பெறுகிறது
  5. பேருந்து கட்டுமான தொழிலின் சிகரமாக கரூர் விளங்குகிறது

ஊர்களும் சிறப்பு பெயர்களும்

  1. தூத்துக்குடி- முத்து நகரம்
  2. சிவகாசி- குட்டி ஜப்பான்
  3. மதுரை- தூங்காநகரம்
  4. திருவண்ணாமலை- தீப நகரம்

book back

  1. “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் தொல்காப்பியம்
  2. சேரர்களின் தலைநகரம் வஞ்சி
  3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது நெல்
  4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு அமராவதி
  5. வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறைந்த மாவட்டம் கோயம்புத்தூர்
  6. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் சேலம்
  7. சுங்குடி சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் திண்டுக்கல்
  8. சேரர்களின் நாடு  குடநாடு எனப்பட்டது
  9. பின்னலாடை நகரமாக திருப்பூர் விளங்குகிறது

காலம் உடன் வரும்

நூல்குறிப்பு

  1. கன்னிவாடி சிரங்கராயன் சிவக்குமார்
  2. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
  3. சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர்
  4. 150க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்
  5. சிறந்த சிறுகதைக்கான “இலக்கிய சிந்தனை விருது “ பெற்றவர்
  6. நூல்கள்- கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புகடலைக் குடிக்கும் பூனை

 

  

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...