கல்வி அழகே அழகு
“கற்றோர்க்கு
கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம்
வேண்டாவாம்”
பொருள்
- கலன் - அணிகலன்
- முற்ற் – ஒளிர
நூல்குறிப்பு
- குமரகுருபர் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்
- சிற்றிலக்கியங்கள்- கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம்,சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைதமிழ்,முத்துகுமாரசாமி பிள்ளைதமிழ்
- மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறிவிளக்கம் என பெயர் பெற்றது
- கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன
book back
- கற்றவர்க்கு அழகு தருவது கல்வி
- ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கலன் + அல்லால்
புத்தியை தீட்டு
பொருள்
- தடம்- அக்டையாளம்
- அகம்பாவம்- செருக்கு
ஆசிரியர் குறிப்பு
- ஆலங்குடி சோமு
- திரைப்பட பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்
- ஊர்- சிவகங்கை->ஆலங்குடி
- தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்
book back
- என் நண்பர் பெரும்புலவராக இருந்த போதும் அகம்பாவம் இன்றி வாழ்ந்தார்
- ‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கோயில் + அப்பா
- பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் பகைவனென்றாலும
பல்துறைக் கல்வி
- இளமையில் கல்- முதுமொழி
- ஏட்டு கல்வி மட்டும் கல்வி ஆகாது
- நாம் நமது தாய்மொழி வாயிலாக கல்வி பெறலே சிறப்பு
- வாழ்விற்குறிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று
- உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ‘அறிவியல்’ என்னும் அறிவுக்க்லை
- கல்வி என்பது வருவாய் தேடும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்ச்சியளிக்கும் ஒரு நெறி முறையாகும்”- விஜயலட்சுமி பண்டிட்(ஐ.நா. அவையின் முதல் பெண்தலைவர்)
- “ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி. பலர்க்கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில்”குலோத்துங்கன்
நூல்குறிப்பு
- திரு.வி.க(திருவாரூர் விருதாச்சலம் கல்யாணசுந்தரனார்)
- அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர், நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்
- சிறந்த மேடை பேச்சாளர்
- தமிழ் தென்றல்(சிறப்பு பெயர்)
- நூல்கள்- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும். பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து
book back
- அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி
- கல்வி பயிற்சிக்குரிய பருவம் இளமை
- இன்றைய கல்வி தொழிலில் நுழைவதற்க்கு கருவியாக கொள்ளப்பட்டு வருகிறது
- கலப்பில் வளர்ச்சி உண்டென்பது இயற்கை நுட்பம்
- புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது
- வாழ்விற்க்குரிய இன்பத்துறைகளில் தலையாயது காவிய இன்பம் ஆகும்
இயற்கை
ஒவியம்- பத்துப்பாட்டு
இயற்கை
தவம்- சிந்தாமணி
இயற்கை
பரிணாமம்- கம்பராமாயணம்
இயற்கை
அன்பு- பெரிய புராணம்
ஆன்ற குடிப்பிறத்தல்
- பி.ச.குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர்
- இவர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்
- ஜெயகாந்தனோடு நெருங்கி பழகி “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியுள்ளார்
- இவர் எழுதிய ”ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்” என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி
திருக்கேதாரம்
“பண்ணிந்தமிழ்
இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின் ஒளி
கனகச்சுனை வயிரம் அவை சொரிய”-சுந்தரர்
பொருள்
- பண்-இசை
- கனகச்சுனை- பொன் வண்ண நீர்நிலை
- மதவேழங்கள்- மதயானைகள்
- முரலும்- முழங்கும்
- பழவெய்- முதிர்ந்த மூங்கில்
ஆசிரியர் குறிப்பு
- சுந்தர்(தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்)
- சிறப்பு பெயர்(நம்பியாரூரர், தம்பிரான் தோழர்)
- இவரது பாடல் ஏழாம் திருமுறை ஆகும்
- இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே “தேவாரம்”
- இந்நூலை தொகுத்தவர் “நம்பியாண்டார் நம்பி”
பதிகம்-பத்து
பாடல்களை கொண்டது
தே+ஆரம்- இறைவனுக்கு சூட்டப்படும் மாலை
தே+வாரம்- இனிய இசை பொருந்திய பாடல்கள்
book back
- காட்டில் இருந்து வந்த வேழங்கள்(யானை) கரும்பை தின்றன
- ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கனகம் + சுனை
- முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் முழவதிர
பாடறிந்து ஒழுகுதல்
பொருள்
- அலந்தவர்- வறியவர்
- கிளை- உறவினர்
- செளாஅமை- வெறுக்காமை
- பேதையார்- அறிவற்றவர்
- நோன்றல்- பொறுத்தல்
- மறாஅமை-மறவாமை
- பொறை- பொறுமை
- போற்றார்- பகைவர்
நூல்குறிப்பு
- கலித்தொகை எட்டுதொகை நூல்களுள் ஒன்று
- கலிப்பா என்னும் பா வகை
- குறிஞ்சிக்கலி, முல்ல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி ஐந்து பிரிவுகளை உடையது
- கலித்தொகையை தொகுத்த நல்லந்துவனார் சங்ககால புலவர்களுள் ஒருவர்
- நெய்தற்கலி பாடல்களை இயற்றியவரும் இவரே
book back
- பசியால் வாடும் அலந்தவர் உணவளித்தல் நமது கடமை
- நம்மை இகழ்வாரை பொறுத்து கொள்ள வேண்டும்
- மறை பொருளைக் காத்தல் நிறை எனப்படும்
- ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பாடு+அறிந்து
- முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் முறையெனப்படுவது
நாட்டுபுற கைவினைக் கலைகள்
- சிந்துசமவெளி- பானைஒடுகள்
- ஆதிசசநல்லூர்- முதுமக்கள் தாழிகள்
- செம்பியன் கண்டியூரில் –கலையழகு மிகுந்த மண்கலங்கள்
- கீழடி- சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன
- மண்பாண்டகள்- குடம்,தோண்டி,கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி
- திருவை-பானை செய்யும் சக்கரம்
- பானை வனைதல்-பானை செய்தல்
- சுடுமண்(டெரகோட்டா) சிற்பக்கலை-மண்பாண்ட கலையின் இன்னொரு வளர்ச்சிநிலை
மூங்கிலால்
செய்யப்படும் பொருட்கள்-மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை,முறம், ஏணி, சதுரததட்டி,
கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப் பெட்டி, பழக்கூடை, பூக்கூடை,
பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால் நடைகளுக்கு மருந்து புகட்டும்
குழாய்
- குழந்தைகளை படுக்கவைப்பது- தடுக்குப்பாய்
- உட்கார்ந்து உண்ண உதவுவது- பந்திப்பாய்
- உட்காரவும், படுக்கவும்- திண்ணைப்பாய்
- திருமணத்துக்கு பயன்படுத்துவது- பட்டுப்பாய்
- தொழுகைக்கு பயன்படுத்துவது- தொழுகைப்பாய்
- முற்காலத்தில் பாய் மரக்கப்பல்களில் பயன்பட்டது கூட பாய்தான்(”கூம்பொடு மீப்பாய் களையாது”- புறநானூறு)
- பனையோலை பொருட்கள்- கிலுகிலுப்பை, பொம்மைகள் பொருள்களை வைத்துக் கொள்ள கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஒலைப்பாய்
- பனைமட்டையின் நாரிலிருந்து- கயிறு, கட்டில், கூடை
- பிரம்பினால் ஆனபொருட்கள்- கட்டில், ஊஞ்சல், நாற்காலி, தொட்டில், பூக்கூடை, மேசை, பழக்கூடை, இடியாப்பத்த்ட்டு, அருச்சனைத்தட்டு, வெற்றிலைப்பெட்டி
- மூங்கில்கள்- மூன்று வகை(கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டுமூங்கில்0
- கூட்டு மூங்கிலே கைவினை பொருள்கள் செய்வதற்கு ஏற்றவை
- தமிழ்நாட்டின் மாநில மரம்- பணை
- பிரம்பு தாவரவியல் பெயர்(கலாம்ஸ் ரொடாங்).அசாம், அந்தமான், மலேசியா இறக்குமதி செய்யப்படுகிறது
book back
- பழந்தமிழ்
இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை பணையோலைகள்
- பானை வனைதல் ஒரு சிறந்த கலையாகும்
- ‘மட்டுமல்ல’ எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மட்டும்+அல்ல
- கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கயிற்றுக்கட்டில்
தமிழர் இசைக்கருவிகள்
இசையை குரல்வழி
இசை, கருவிழி இசை என இசையை இரண்டாகப்பிரிப்பர்
இசைக்கருவிகளை
இசைத்து பாடல் பாடுவோர் பாணர் என்ப்பட்டனர்
“நல்லியாழ்
மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்
பாடினி அணியாள்”- புறநானூறு
இசைக்கருவியின்
வகைகள்(4)
தோல்கருவி-
விலங்குளின் தோலால் செய்யபடும் கருவி(எ.கா முழவு, முரசு)
நரம்புகருவி-நரம்பு
அல்லது தந்திகளை உடையவை(எ.கா யாழ், வீணை)
காற்றுக்கருவிகள்-காற்றை
பயன்படுத்தி இசைக்கப்படுபவை(எ.கா குழல், சங்கு)
கஞ்சக்கருவிகள்-
ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை
தோல்கருவி(உடுக்கை)
- பெரிய உடுக்கை-தவண்டை
- சிறிய உடுக்கை-குடுகுடுப்பை
- “தண்டுடுக்கை தானந்தக்கை சாரநடம் பயில்வார்”-சம்பந்தர் தேவாரம்
தோல்கருவி(குடமுழா)
- 5 முகங்களை உடைய முரசு வகையை சார்ந்தது
- இதனை பஞ்ச்மகா சப்தம் என்றும் அழைப்பர்
- கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவி
- சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
- ஏழு துறைகளை உடையது
- 20 வீரல் நீளம் உடையது
- மூங்கில் மட்டுமன்றி சந்தனம், செங்காலி, கருங்காலி மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன
- கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல் குழல் என பலவகையான குழல்கள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது
- “குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளா தார்” –திருக்குறள்
காற்றுக்கருவி(கொம்பு)
- மாடுகளின் கொம்புகள் இப்பொழுது பித்தளை, வெண்கலத்தால் செய்யப்படுகின்றன
- வேட்டையின் போதும், கள்வரை விரட்டவும், காவலர்களை விழித்திருக்க செய்யவும் பயன்படுத்துவர்
- இக்காலத்தில் (ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி)திருவிழா காலங்களில் இசைக்கப்படுகின்றன
காற்றுக்கருவி(சங்கு)
- இஃது ஒரு இயற்கை கருவி
- வலமாக சுழிந்து இருந்தால் வலம்புரி சங்கு என்பர்
- சங்க நாதம் என்பர்(இதன் ஒலியை)
- இலக்கியங்களில் பணிலம் என்பர்
- “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் மங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்”-திருப்பாவை
கஞ்சக்கருவி-
சாலரா(ஜால்ரா)
- பித்தளை வெண்கலத்தால் ஆனது
- இதனை பாண்டில் எனவும் அழைப்பர்
கஞ்சக்கருவி(சேகண்டி)
- வட்டவடிவமான மணிவகையை சேர்ந்தது
- குச்சியாலோ, இரும்பு துண்டாலோ அடித்து ஒலி எழுப்புவர்
- இதனை சேமங்கலம் என்பர்
- இதனை கோவில் வழிப்பாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர்
தோல்கருவி(திமிலை)
- மணற்கடிகார வடிவில் இருக்கும்
- இதனை பாணி என்னும் பெயரால் அழைப்பர்
- “சங்கொடு தாரை தாளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியந்துடி திமிலை தட்டி”- பெரியபுராணம்
தோல்கருவி(பறை)
- பகைவர்களின் ஆநிரையைக் கவர செல்லும் போது ஆகோட்பறையை முழக்குவர்
- இக்காலத்தில் தப்பு எனப்படுகிறது. ஆடும் ஆட்டம் தப்பாட்டம் ஆகும்
தோல்கருவி
(மத்தளம்)
- மத்து என்பது ஒசையின் பெயர்
- மத்து+தளம்- மத்தளம் என்கிறார் அடியார்க்கு நல்லார்
- இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது.எனவே முதற்கருவி என்பர்
- “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்”-நாச்சியார் திருமொழி
தோல்கருவி(முரசு)
- போர் கருவிகளில் முதன்மையானது
- பழந்தமிழ் நாட்டில் (படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு) மூன்று வகை இருந்தது
- தமிழ் மக்களிடம் 36 வகை முரசுகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது
- மாக்கண் முரசம்-மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது
தோல்கருவி(முழவு)
- மண்ணமை முழவு-பெருநாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது
- கால்த்தை அறிவிக்க நாழிகை, முழவு, காலைமுழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன
- “கலைஉணக கிழந்த முழவுமருள் பெரும்பழம்”-புறநானூறு
நரம்புக்கருவி(யாழ்)
- பேரியாழ், செங்கோட்டியாழ் மிகப்பழமையானது
- 21 நரம்புகளை கொண்டது- பேரியாழ்
- 19 நரம்புகளை கொண்டது- மகரயாழ்
- 14 நரம்புகளை கொண்டது- சகோடயாழ்
- பிற்காலத்தில் வீணையாக மாறியது
நரம்புக்கருவி(வீணை)
- 7 நரம்புகளை கொண்டது
- பரிவாதன் என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்தரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது
வளம் பெருகுக
பொருள்
- வாரி- வருவாய்
- வைகுக- தங்குக
- எஞ்சானம்- குறைவின்றி
- முட்டாது- தட்டுபாடின்றி
- ஓடை-ஒசை
- ஒட்டாது- வாட்டம் இன்றி
- வெரீஇ- அஞ்சி
- யாணர்- புதுவருவாய்
நூல்குறிப்பு
- தகடுர் யாத்திரை(தர்மபுரி எனப்படுகிறது)
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை
- இந்நூலில் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன
book back
- தோட்டத்தில் தம்பி ஊன்றிய வித்துகள் எல்லாம் முளைத்தன
- என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு வாரி பெருகிற்று.
- ‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ + களத்து
- கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கதிரீன
மழைச்சோறு
உப்பில்லா
சோற்றை வீடுவீடாக சென்று வாங்கி பகிர்ந்து உண்வர் (மழைச்சோற்று நோன்பு என்பர்)
நூல்குறிப்பு
- பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைசோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது
- இந்நூலின் பதிப்பாசிரியர் அ.கெளரன்
- கனத்தமழை என்னும் சொல்லின் பொருள் பெருமழை
- ‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வாசல்+எல்லாம்
- ‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெற்று + எடுத்தோம்
- கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் காலிறங்கி
கொங்கு நாட்டு வணிகம்
வண்புகழ்
மூவர்தண்பொழில் வரைப்பு-தொல்காப்பியம்
மூவேந்தர்கள்
குறித்த செய்திகள் (வால்மீகி, இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு)
காண்லாம்
சேரர்
- சேரர்களே பழமையானவர்கள்
- “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்”- தொல்காப்பியம்
- நாடு குடநாடு எனப்பட்டது(கருவூர் ) என்றும் அழைப்பர்
- தலைநகர் வஞ்சி
- மேற்குதொடர்ச்சி மலையில் தொடங்கி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரை இருந்தது
- துறைமுகம்- தொண்டி, முசிறி, காந்தரூர்
- கொடி- விற்கொடி
- பூ- பனம்பூ
- எல்லைகள்- இன்றைய கேரளமும், கொங்குநாடும் (கோவை, சேலம்)சேர்ந்தது
- கொங்குமண்டலம்- (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுகல்,சேலம், கரூர்)
- கொங்கு நாட்டின் ஆறுகள்- காவிரி, பவானி, நொய்யல், அமராவதி (ஆன்பொருநை)
- செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்
- கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை சேரமன்னர்கள் அடக்கினர்
- முசிறியில் இருந்து தான் மிளகு, முத்து, யானை, தந்தங்கள், பட்டு, மணி ஏற்றுமதி செய்யப்பட்டன
- பொன், புடவைகள், ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை இறக்குமதி செய்யப்பட்டன
- “நெல்லும் உப்பும் நேரே ஊரிர் கொள்ளி ரோவெனச் சேரிதொறும் றுவலும்”- அகநானூறு
- நெல்லும் உப்பும் ஒரே மதிப்பு உடையனவாக இருந்தது
- “கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி
- நீலகிரி தேயிலை தொழிற்சாலைகள் நிறைந்தது
கோயம்புத்தூர்
- கோவன் புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவியது
- நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள் பயிரிடப்படுகின்றன
- மின்சாரப்பொருள்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தொழிற்சாலைகள் உள்ளன
திண்டுக்கல்
- நெல், சோளம், தினைவகைகள், வாழைப்பழம், காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன
- மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது
- தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுகிறது
- சின்னாளபட்டி சுங்குடிச் சேலைகள் புகழ் பெற்றவை
- அரிசி, தோல், பூட்டு தொழிற்சாலைகள் உள்ளன
ஈரோடு
- பரப்பளவில் தமிழ்நாட்டில் 2வது பெரிய நகரமாக உள்ளது
- நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி எள் பயிரிடப்படுகின்றன
- மஞ்சள் சந்தை ஈரோட்டில் தான் நடைப்பெறுகிறது
- துணி நூற்பாலைகள், எண்ணைய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் உள்ளன
- நூல்நூற்பு, துணிகளுக்கு சாயம் ஏற்றுதல்,அச்சிடுதல், தோல்பதனிடுதல்
திருப்பூர்
- மிகச்சிறந்த பின்னலாடை நகரம்
- நெல், கரும்பு, பருத்தி, வாழை, முதன்மை பயிர்
- இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உள்ளது
- தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் பெருமை சேர்க்கின்றன
நாமக்கல்
- பச்சைமலை, கொல்லி மலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி உள்ளது
- நெல், சோளம்,கரும்பு, நிலக்கடலை, பருத்தி, திராட்சை, ஆரஞ்சு, காபி, பாக்கு, ஏலம் பயிரிடப்படுகின்றன
- முட்டை கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதல் இடம்
- சிமெண்ட், காகித தொழிற்சாலைகள், கைதறி நெசவு, வெண்கலப் பொருள்கள் தொழிற்சாலை உள்ளன
- சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இங்கு உள்ளது
சேலம்
- மாங்கனி நகரம் என்னும் சிறப்பு பெயர்கொண்டது
- நெல், பருப்பு வகைகள் , பருத்தி கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு பயிரிடப்படுகின்றன
- அதிக அளவில் ஜவ்வரிசி பயிரிடப்படுகிறது
- கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம்
- பால் பண்ணை, இராசாயனப்பொருள், அலுமினியம், சந்தன எண்ணைய், வனஸ்பதி தொழிற்சாலை உள்ளது
- ஏழைகளின் ஊட்டி (ஏற்காடு ) இம்மாவட்டத்தில் உள்ளது
கரூர்
- வஞ்சி நகரம் என்னும் வேறு பெயர் உண்டு
- கிரேக்க அறிஞர் தாலமி, தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக கரூர் குறிப்பிட்டுள்ளார்
- நெல்,சோளம் , கரும்பு, கேழ்வரகு, கம்பு பயிரிடப்படுகின்றன
- கல்குவாரி, கைத்தறிநெசவு, தோல் பதனிடுதல் , சாயமேற்றுதல் கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்கள் நடைப்பெறுகிறது
- பேருந்து கட்டுமான தொழிலின் சிகரமாக கரூர் விளங்குகிறது
ஊர்களும்
சிறப்பு பெயர்களும்
- தூத்துக்குடி- முத்து நகரம்
- சிவகாசி- குட்டி ஜப்பான்
- மதுரை- தூங்காநகரம்
- திருவண்ணாமலை- தீப நகரம்
book back
- “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் தொல்காப்பியம்
- சேரர்களின் தலைநகரம் வஞ்சி
- பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது நெல்
- ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு அமராவதி
- வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறைந்த மாவட்டம் கோயம்புத்தூர்
- மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் சேலம்
- சுங்குடி சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் திண்டுக்கல்
- சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது
- பின்னலாடை நகரமாக திருப்பூர் விளங்குகிறது
காலம் உடன் வரும்
நூல்குறிப்பு
- கன்னிவாடி சிரங்கராயன் சிவக்குமார்
- திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
- சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர்
- 150க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்
- சிறந்த சிறுகதைக்கான “இலக்கிய சிந்தனை விருது “ பெற்றவர்
- நூல்கள்- கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புகடலைக் குடிக்கும் பூனை
No comments:
Post a Comment