மின்னியல்(6th term 2)
- மின்சார உற்பத்தி: அனல் மின் நிலையம், நீர்மின்நிலையம், கடல் அலை, காற்றாலை, சூரிய ஒளி
- நெய்வேலி->அனல் மின்நிலையம்(பழுப்பு நிலக்கரி அதிகம் கிடைப்பதால்)
- திருநெல்வேலி->காற்றாலை(மலை பகுதி காற்று வீசும்)
- மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும்
- சூரிய மின்கலன்கள்
- காற்றாலைகள் (திருநெல்வேலி-கயத்தாறு, கன்னியாகுமரி- ஆரல்வாய்மொழி)
- அணுமின்நிலையங்கள்(காஞ்சிபுரம், கல்பாக்கம், திருநெல்வேலி- கூடங்குளம்)
- அனல்மின் நிலையங்கள்(கடலூர்- நெய்வேலி, திருவள்ளூர்- எண்ணூர்)
- நீர்மின் நிலையங்கள்(சேலம்- மேட்டூர்,திருநெல்வேலி-பாபநாசம்)
மின்கலன்
- மின்கலன் என்பது வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஒரு கருவியாகும்
- மின்கலன்கள்-முதன்மை மின்கலன்கள், துணை மின்கலன்கள்
- முதன்மை மின்கலன்கள்- ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்(கை கடிகாரம்,சுவர் கடிகாரம், ரோபோ பொம்மைகளில் பயன்படும் மின்கலன்
- துணை மின்கலன்கள்- பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன் படுத்தக்கூடியது (கைபேசிகள், மடிக்கணிணிகள், அவசர கால விளக்குகள்)
மின்கல அடுக்கு
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களை இணைத்து, மின்கல அடுக்கு உருவாக்கப்படுகிறது
மின்சுற்று
- மின்சுற்று என்பது மின்கலத்தின் நேர்முனையிலிருந்து எதிர்முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்
திறந்த மின்சுற்று
- ஒரு மின் சுற்றில் சாவியானது (switch) திறந்த நிலையில் (off)இருந்தால் அந்த மின் சுற்றில் மின்னோட்டம் செல்லாது. அத்தகைய மின் சுற்று திறந்த மின் சுற்று எனப்படும்
மூடிய மின்சுற்று
- ஒரு மின் சுற்றில் சாவியானது(switch)மூடிய நிலையில் (on) இருப்பின் அந்த சுற்றில் மின்னோட்டம் (current) பாயும் அத்தகைய மின் சுற்று மூடிய மின் சுற்று எனப்படும்
மின்சுற்றின்
வகைகள்
- எளிய மின்சுற்று, தொடரிணைப்பு, பக்க இணைப்பு
எளிய மின்சுற்று- ஒரு சாவி, ஒரு மின்கலன் மற்றும் இணைப்புக்
கம்பி கொண்டு உருவாக்கப்படும் மின்சுற்று எளிய மின்சுற்று
தொடரிணைப்பு- ஒன்றுக்கு மேற்ப்பட்ட மின் விளக்குகள்
தொடராக இருக்குமாறு சாவி, மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் மூலம் இணைக்கப்படும் மின்சுற்று
தொடர் இணைப்பு மின்சுற்று எனப்படும்(ஒன்று பழுதடைந்தாலும் மற்றவை எரியாது)
பக்க இணைப்பு- ஒன்றுக்கு மேற்ப்பட்ட மின் விளக்குகள்
இணையாக இருக்குமாறு சாவிகள் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது(ஒன்று
பழுதடைந்தாலும் மற்றவை எரியும்)
- ஈல் என்னும் மீன் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது(உணவிற்காக்வும், தங்களை காத்துக் கொள்ளவும்)
- அம்மீட்டர் என்பது ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவியாகும்
மின் பொருட்களின்
குறியீடு பட்டியல்
- எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் மின் கடத்திகள் என்கிறோம் (தாமிரம், இரும்பு, அலுமினியம், மாசுபட்ட நீர், புவி)
மின்கடத்தாப்
பொருள்கள் (அரிதிற் கடத்திகள்)
எந்தெந்த
பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்க வில்லையோ அவற்றை நாம் அரிதிற்
கடத்திகள் என்கிறோம் (பிளாஸ்டிக், கண்ணாடி,
மரம், ரப்பர், பீங்கான், எபோனைட்)
- மைக்கேல் பாராடே- டைனமோ மற்றும் மின்மோட்டரின் முன் மாதிரி கண்டறிந்தார்
- தாமஸ் ஆல்வா எடிசன் – மின் விளக்கு கண்டுபிடித்தவர்(அமெரிக்கா)
Book
back
1. பொருத்தமான
விடையை கண்டறிக
- வேதி ஆற்றாலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன்
- மின்சாரம் தாயரிக்கப்படும் இடம் மின் உற்பத்தி நிலையம்
- கீழ்கண்டவற்றுள் எது நற்கடத்தி வெள்ளி
2. கோடிட்ட இடங்களை
நிரப்புக
- மின்கடத்தி பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல
அனுமதிக்கின்றன
- ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் மூடிய மின்சுற்று எனப்படும்
- சாவி என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட
உதவும் சாதனமாகும்
- மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு நேர் முனையைக் குறிக்கும்
- இரண்டு அல்ல்து அதற்கு மேற்ப்ட்ட மின்கலகளின் தொகுப்பு மின்கல அடுக்கு ஆகும்
3. சரியா? தவறா?
- பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்ட பாதைகள உண்டு (சரி)
- இரண்டு மின்கலன்களை கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர் முனையையோடு இணைக்க வேண்டும் (தவறு)
- சாவி என்பது மின்சுற்றினை திறக்க அல்லது மூடப்பயன்படும் மின்சாதனம் ஆகும் (சரி)
- தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும் (தவறு)
- துணை மின்கலன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் (தவறு)
4. மிகக் குறிகிய
விடையளி
கீழே கொடுக்கப்பட்டுள்ள
மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டுமானால் எந்தெந்த சாவிகள் மூடப்பட வேண்டும்
K1,k2 சாவிகள்
மூடப்பட வேண்டும்
5. கூற்று(A):நமது
உடலானது மின் அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக் கொள்கிறது
காரணம்(R)
: மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்
அ. A மற்றும்
R இரண்டும் சரி மற்றும் R என்பது Aக்கு சரியான்
விளக்கம்
ஆ. A சரி,
ஆனால் R என்பது Aக்கு சரியான் விளக்கம் அல்ல
இ. A தவறு
ஆனால் R சரி
ஈ. A மற்றும் R இரண்டும் சரி.R என்பது Aக்கு சரியான
விளக்கம் அல்ல
விடை: அ.
A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது
Aக்கு சரியான் விளக்கம்
6. எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க
முடியுமா?
உருவாக்க
முடியும் எலுமிச்சை பழத்தில் காப்பர் மற்றும் துத்தநாக தகடுகளை செருகினால் இவற்றிற்கிடையே
அயனிகள் பரிமாற்றம் செய்து மின்னோட்சம் உருவாகும்
7.கீழே கொடுக்கப்பட்டுள்ள
படங்களிலிருந்து மின்கடத்தியை கண்டுபிடித்து எழுதுக
இரும்பு சங்கிலி
மின்கடத்தி ஆகும்
8. டார்ச் விளக்கில்
எவ்வகையான மின்சுற்று பயன்படுகிறது
டார்ச் விளக்கில்
பயன்படுத்தப்படும் மின்சுற்று என்பது மின்கலத்தின் நேர்முனையிலிருந்து எதிர்மினைக்கு
மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்
9. பொருந்தாதை
வட்டம் இடுக. அதற்கான காரணம் தருக
சாவி, மின்விளக்கு,
மின்கல அடுக்கு, மின்னியற்றி
விடை மின்னியற்றி
10.கடிகாரத்டில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா?
ஏற்படாது.
ஏனென்றால் கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் குறைந்த மின் அழுத்தத்தினை கொண்டது
11. வெள்ளி உலோகம்
மிகச் சிறந்த மின் கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்க பயன்படுவதில்லை? ஏன்?



No comments:
Post a Comment