group 4 கலங்கரை விளக்கம்
பொருள்
- மதலை- தூண்
- ஞெகிழ்-தீச்சுடர்
- அழுவம்- கடல்
- சென்னி- உச்சி
- உரவுநீர்- பெருநீர் பரப்பு
- கரையும்- அழைக்கும்
நூல்குறிப்பு
- சங்ககால புலவர் (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
- இவர் பத்துபாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை பாடியுள்ளார்
- பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இறந்திரையன்
- வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர் பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு வழிக்காட்டுவதாக பாடப்படுவது ஆற்றுபடை இலக்கியம்
பத்துப்பாட்டு
பாடல்கள்
- திருமுருகாற்று படை
- பொருநராற்றுபடை
- சிறுபாணாற்றுபடை
- பெரும்பாணாற்றுபடை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
1. Book Back
- வேயாமாடம் எனப்படுவது சாந்தினால் பூசப்படுவது
- உரவுநீர் அழுவம்- இத்தொடரில் அடிகோடிட்ட சொல்லின் பொருள் கடல்.
- கடலில் துறை அறியாமல் கலங்குவன மரக்கலங்கள்
- தூண் என்னும் பொருள் தரும் சொல் மதலை
கவின்மிகு கப்பல்
பொருள்
- உரு- அழகு
- போழ- பிளக்க
- வங்கூழ்- காற்று
- நீகான் - நாவாய் ஓட்டுபவன்
- வங்கம்- கப்பல்
- எல்- பகல்
- கோடு உயர்- கரை உயர்ந்த
- மாட ஒள்ளெரி- கலங்கரை விளக்கம்
- மருதன் இளநாகனார்(சங்ககால புலவர்களுள் ஒருவர்)
- கலித்தொகையில் மருததிணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் இவரே
- மருததிணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்
- அகநானூறு(நெடுந்தொகை என்றும் அழைப்பர்) எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
எட்டுதொகை நூல்கள்
- நற்றினை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுபத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
1. Book Back
- இயற்கை வங்கூழ் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் காற்று
- மக்கள் வங்கத்தில் ஏறி வெளிநாடுகளுக்கு சென்றனர்
- புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது கடல்
- ‘பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெருமை+கடல்
- இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இன்றாகி
பொருத்துக
- வங்கம்- கப்பல்
- நீதான் – நாவாய் ஓட்டுபவன்
- எல்- பகல்
- மாட ஒள்ளெரி- கலங்கரை விளக்கம்
group 4 தமிழரின் கப்பற்கலை
- மூந்நீர் வழக்கம் என்று கடற்பயணத்தை குறிப்பிடுகிறது தொல்காப்பியம்
- கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து-குறள்
- பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன
- உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்- அகநானூறு
- “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்”—பதிற்றுப்பத்து
- சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிட்டுள்ளன
- எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து எடுத்து விட்டு தோணிகள் பயன்படுத்தப்பட்டன
- சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தினர்-தோணி, ஓடம், படகு, புனை, மிதவை, தெப்பம்
- கலம், வங்கம்,நாவாய் பயன்படுத்தி கடல் பயணம் மேற்கொண்டார்கள்
- கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர்
- “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்”- மணிமேகலை
- நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களை பயன்படுத்தினர்
- மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை வெட்டுவாய் என்பர்
- கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்
- தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் நீளம், அகலம்,உயரம் ஆகியவற்றை கணக்கிட்டனர்
- கப்பலின் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையை போன்று வடிவமைப்பதை கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்பர்
- மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைத்து இடையில் தேங்காய் நார், பஞ்சு வைத்து, சணல் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இந்த முறையை இத்தாலி அறிஞார் மார்க்கோபோலோ பாராட்டினார்
- மரத்தினால் ஆன ஆணிகளை பயன்படுத்தினர் இதனை தொகுதி என்பர்
- பாய்மர கப்பல்கள்-பெரிய பாய்மரம், திருக்கைத்தி பாய்மரம்,காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம்
- பாய்மர கப்பல் கயிறுகள்- ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைகயிறு, மூட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்கயிறு
- “பாய்மரகப்பலின் பாய் கயிறு பழுது ஏற்படும் போது மரப்பிசின் கொண்டு இணைத்தனர்”- பரிபாடல்
கப்பலின் உறுப்புகள்- ஏரா, பருமல்,
வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம்
- ஏரா- அடிமரம்,
- பருமல்- குறுக்கு மரம்,
- சுக்கான்- உரிய் திசையில் திருப்புவதற்க்கு பயன்படும் கருவி,
- நங்கூரம் –கப்பலை ஓரிடத்தில் நிலையாக நிறுத்துவதற்க்கு
- சமுக்கு- காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைக்காட்டும் கருவியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.கப்பல் சாத்திரம் என்னும் நூல் இந்த கருவி பயன்படுத்தியதாக கூறுகிறது
- மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி – கப்பல் செலுத்துபவர்
- “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக”- புறப்பாடல்
- கடலில் செல்லும் கப்பல்களுக்கு துறைமுகம் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அழைக்கப்படுவது கலங்கரை விளக்கம்( கப்பலை அழைக்கும் விளக்கு)
- “கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்குந்து”- புறநானூறு
- (கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்)
- நீயுசிலாந்து நாட்டு வெலிங்கடன் அருங்காட்சியகத்தில் பழங்கால தமிழ்நாட்டு கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி இடம் பெருகிறது
- இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் பெரிய கப்பற்படையை கொண்டு பல நாடுகளை வென்றனர்
- “ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும் . ஆனல் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார்
- பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாக பயன்படுத்தி கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்து உண்டு
1. Book Back
- தமிழ்ர்கள சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தியது ஓடம்
- தொல்காப்பியம் கடற் பயணத்தை முந்நீர் வழக்கம் என்று கூறுகிறது
- கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி சுக்கான்
- கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் தொகுதி எனப்படும்
- கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது நங்கூரம்
- இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் கண்ணடை என குறிப்பிடப்படும்
பொருத்துக
- ஏரா- அடிமரம்
- பருமல்- குறுக்கு மரம்
- மீகாமன் – கப்பலை செலுத்துபவர்
- காந்த ஊசி- திசைக்காட்டும் கருவி
ஆழ்கடலின் அடியில்
நூல்குறிப்பு
- அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்
- இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்
- இவர் எழுதிய புதினங்கள்-எண்பது நாளில் உலகத்தை சுற்றி பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம், ஆழ்கடலின் அடியில்
இன்பத்தமிழ் கல்வி
“ஏடெடுத்தேன்
கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று
சொன்னது வான்”
பொருள்
- எத்தனிக்கும்- முயலும்
- வெற்பு- மாலை
- கழனி- வயல்
- நிகர்- சமம்
- பரிதி- கதிரவன்
- அன்னதோர்- அப்படிஒரு
- கார்முகில் – மழைமேகம்
- துயின்றிருந்தோர்- உறங்கியிருந்தோர்
நூல்குறிப்பு
- பாரதிதாசன்
- கவிஞர், இதழாளர், தமிழாசிரியர்
- கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றை படைப்பதில் வல்லவர்
- எழுதிய நூல்கள்- பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்டவீடு, குடும்ப விளக்கு, கண்ணாகி புரட்சி காப்பியம்
- பிசிராந்தையார் நூலுக்கு சாகத்திய அகாதெமி விருது அளிக்கப்பட்டது
- பாரதிதாசன் கவிதைகள்- தமிழ் பேறு தொகுப்பில் இடம் பெற்றுள்ளது இந்த பாடல்
1. Book Back
- பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது மயில்
- மலையை குறிக்கும் சொல் வெற்பு
- ‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஏடு+எடுத்தேன்
- ‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது துயின்று + இருந்தார்
- என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் என்றுரைக்கும்
பொருத்துக
- கழனி- வயல்
- நிகர்- சமம்
- பரிதி- கதிரவன்
- முகில்- மேகம்
அழியா
செல்வர்
“வைப்புழிக் கோட்பா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின் வல்வார்
எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன
விச்சை மற்று அல்ல பிற”
பொருத்துக
- வைப்புழி- பொருள் சேமித்து வைக்கும் இடம்
- கோட்பா- ஒருவரால் கொள்ள்ப்படாது
- வாய்த்துஈயில்- வாய்க்கும் படி கொடுத்தாலும்
- விச்சை- கல்வி
- சமணமுனிவர்
- சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார்(நாலடி நானூறு, வேளாண்வேதம் வேறு பெயர்கள்)
- பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று
- அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
- இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்து போற்றப்படுவதை நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பர்
1. Book Back
- ஒருவர் தன் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வி
- கல்வியை போல கேடில்லாத செல்வம் வேறில்லை
- ‘வாய்த்தியின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வாய்+தீயின்
- கேடில்லை’ என்னும் கொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கேடு+இல்லை
- எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எவனொருவன்
வாழ்விக்கும் கல்வி
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”- வள்ளுவர்
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”-வள்ளுவர்
”பள்ளித்
தலமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்”- பாரதி
நூல்குறிப்பு
- திருக்குறளார் வீ,முனிசாமி(திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர்)
- எழுதிய நூல்கள்- வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, சிந்தனை களஞ்சியம்
- உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது
1. Book Back
- காலத்தின் அருமையை கூறும் திருக்குறள் அதிகாரம்- காலம் அறிதல்
- கல்வியில்லாத நாடு விளக்கில்லாத வீடு
- “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்”- என்று பாடியவர் பாரதியார்
- ‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது உயர்வு + அடைவோம்
- இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இவையெல்லாம்
பள்ளி மறுதிறப்பு
நூல்குறிப்பு
- சுப்ரபாரதிமணியன்
- இவர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களை பாதுக்காத்தல் (சிறுகதை, புதினம், கட்டுரை) எழுதியுள்ளார்
- கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்
- எழுதிய நூல்கள்- பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை,ஒரு வேண்டுகோள்
பொருள்
- பிருமாக்கள்- படைப்பாளர்கள்
- நெடி- நாற்றம்
- மழலை- குழந்தை
- வனப்பு- அழகு
- பூரிப்பு- மகிழ்ச்சி
- மேனி- உடல்
நூல்குறிப்பு
- தேனரசன்
- தமிழாசிரியராக பணியாற்றியவர்
- வானம்பாடி , குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்
- இவரது கவிதைகளில் சமுதாய சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்
- கவிதை நூல்கள்- மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம்
1. Book Back
- மயிலும் மானும் வனத்திற்கு வனப்பு தருகின்றன
- மிளகாய் வற்றலின் நெடி தும்மலை வரவழைக்கும்
- அன்னை தான்பெற்ற மழலையின் சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்
- வனப்பில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வனப்பு+இல்லை
- வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் வார்ப்பெனில்
கீரைப்பாத்தியும் குதிரையும்(இரட்டுற மொழிதல்)
”கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறிப் பரியாகு மே”- காளமேகப்புலவர்
பொருள்
- வண்கீரை- வளமான கீரை
- முட்டப்போய்- முழுதாகச் சென்று
- மறித்தல்- தடுத்தல், எதிரிகளை தடுத்துதாக்குதல்
- பரி-குதிரை
- கால்- வாய்க்கால், குதிரையின் கால்
நூல்குறிப்பு
- காளமேகப்புலவர்
- இயற்பெயர் வரதன்
- மேகம் மழை பொழிவது போல கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் எனப்பட்டார்
- எழுதிய நூல்கள்- திருவனைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல்
- இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது
1. Book Back
- 'ஏற பரியாகுமே’ என்னும் தொடரில் பரி என்பதன் பொருள் குதிரை
- பொருந்தாத ஓசை உடைய சொல் திரும்புகையில்
- ‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வண்மை+கீரை
- கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கட்டியடித்தல்
பேசும் ஓவியங்கள்
- பழங்கால மனிதர்கள் குகைகளில் வரைந்த ஒவியங்கள்(நடனம் ஆடுதல், போர்) இவை கோட்டோவியங்கள், மண், கல்துகள் கொண்டு வண்ணம் தீட்டினர்
- மனித வளர்ச்சியில் சுவர் ஓவியங்கள் வரைய தொடங்கினார்(கோவில், அரண்மனை, மண்டபங்கள்)
- சித்தனவாசல்- ஆற்று மணலுடன் சுண்ணாம்பு சேர்த்து சுவரை சமபடுத்தி வரைவார்கள்
- தஞ்சை கோவிலில் ஏராளமான சுவர் ஓவியங்கள் காண்லாம் (நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் வாழ்கை நினைவுகளாக வரைந்துள்ளனர்)
துணி ஓவியம்
- பழங்கால ஓவிய வகைகளில் ஒன்று
- பயன்படுத்தப்படும் துணி எழினி, திரைச்சீலை, கிழி,படாம்
- சீவகசிந்தாமணி காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது
- துணி ஓவியங்களை கலம்காரி ஓவியங்கள் என்ற பெயரில் ஆந்திராவிலும் , தமிழகத்திலும் வரைகின்றனர்
ஓலைச்சுவடி ஓவியம்
- ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளை கொண்டு கோட்டோவியங்களாகவும் , வண்ணப்பூச்சு ஓவியமாகவும் வரைவர் (தஞ்சை- சரசுவதி மகாலில் உள்ளது)
செப்பேட்டு ஓவியம்
- மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பர்
- அதுபோல உளிக்கொண்டு ஓவியங்களும் வரைந்தனர்(நீர்நிலைகள், செடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள்)
தந்த ஓவியம்
- வயது முதிர்ந்து இறந்த யானையின் தந்தங்களின் மீது பலவகை நீர்வண்ணங்கள் பயன்படுத்த அழகான ஓவியங்கள் வரைவார்கள் (கேரளாவில் அதிகம் காண முடியும்)
கண்ணாடி ஓவியம்
- தஞ்சாவூரில் மிகுதியாக காணப்படும்
தாள் ஓவியம்
- கோட்டோவியங்கள்,வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள் என பலவகை உண்டு.கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தி வரைகின்றனர்
கருத்துபட
ஓவியம்
- அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்கும்
- பாரதியார் தான் முதன்முதலில் இந்தியா என்ற இதழில் கருத்துப்பட ஓவியம் வரைந்தார்
- இந்த ஓவியத்தின் மாற்று உருவமே கேலிசித்திரம்
நவீன ஓவியம்
- பார்வையார்களின் மனப்பான்மைக்கு ஏற்ப பொருள் கொள்ளும் வகையில் கோடுகளாகவும், கிறுக்கல்களாகவும் வரைகின்றனர்
“புனையா ஓவியம்
கடுப்ப புனைவில் “- நெடுநல்வாடை
“புனையா ஓவியம்
புறம் போற்தன்ன”- மணிமேகலை
“இன்ன பலபல
எழுத்துநிலை மண்டபம்
துன்னுநர்
சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்”- பரிபாடல்
(ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டு அறியாதவர்களுக்கு அறிந்தவர் விளக்கினர் என்பது பரிபாடலில் கூறப்பட்டுள்ளது)
ஓவிய பெயர்
ஐரோப்பிய
கலை நுணுக்கத்துடன் இந்திய கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளை புகுத்தியவர்
இராஜா இரவிவர்மா நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன
நாட்காட்டி
ஓவியங்களை பசார் பெயிண்டிங் என்பர்
நாட்காட்டி
ஓவியங்களின் முன்னோடி கொண்டையராஜு
1. Book Back
- குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று மண்துகள்
- நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் கேலிசித்திரம்
- ‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கோடு+ஓவியம்
- ‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது செப்பு + ஏடு
- எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எழுத்தாணி
- கருத்து படங்களை அறிமுகபடுத்தியவர் பாரதியார்
- கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது துணி ஓவியம்
- மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகள் மீது பொறித்து பாதுகாத்தனர்
தமிழ் ஒளிர் இடங்கள்
இந்தியாவின் தொன்மையான நூலகங்களுள்
ஒன்று தஞ்சை சரசுவதி மஹால்.கி.பி.1122 முதல்
இயங்கி வருவதாக கல்வெட்டுகள் கூறுகின்றன
தமிழ்,தெலுங்கு பல்வேறு மொழிகளின் ஓலை
சுவடிகளும், தொன்மையான இசைக் கருவிகளும் , சிற்பங்களும் இங்கு உள்ளன
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கலகம்
- 1981 –ல் தொடங்கப்பட்டது
- 1000 ஏக்கர் நில பரப்பு கொண்டது
- வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது “ தமிழ்நாடு” என்று தெரியும் இதன் கட்டிடம்
- இப்பல்கலைகழகத்தின் நோக்கம் – இந்திய நாகரிகத்தின் பண்பாடு கூறுகள் அனைத்தையும் விரிவாகவும், ஆழமாகவும் ஆராய வேண்டும்
- ஐந்து புலங்களும் (கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ் புலம், மொழிப்புலம், அறிவியல் புலம்) இருபத்தைந்து துறைகளும் உள்ளன
- சித்த மருத்துவ துறை மூலம் மருத்துவ தொண்டு ஆற்றி வருகிறது
- உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர்
உ.வே.சா நூலகம்(சென்னை)
- 1942 ல் தொடங்கப்பட்டது
- தமிழ், தெலுங்கு வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன
- இங்கு 2128 ஓலைச்சுவடிகளும், 2941 தமிழ் நூல்களும் உள்ளன
கீழ்த்திசை நூலகம்- சென்னை
- 1869 ல் தொடங்கப்பட்டது
- தமிழ், தெலுங்கு , கன்னடம், மராத்தி பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன
- கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள் உள்ளன
- தற்பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் உள்ளது
கன்னி மாரா நூலகம்- சென்னை
- 1896ல் தொலங்கப்பட்டது
- தமிழ் நாட்டின் மைய நூலகம்
- இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்று
- 6 லட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட நூல்கள் உள்ளன
- இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்கு பாதுக்காக்கப்படுகிறது
- 3 தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகிறது
வள்ளுவர் கோட்டம்- சென்னை(கோடம்பாக்கம்)
- 1973 கட்டுமான பணி தொடங்கி 1976 ல் முடிவுற்றது
- திருவாரூர் தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது
- அடிப்பகுதி 25 அடி நீளமும், 25 அடி அகலமும் உடையது
- தேரின் மொத்த உயரம் அடி
- இரண்டு பக்கத்திற்க்கும் , பக்கத்திற்க்கு நான்கு சக்கரங்கள் தனி கற்களால் அமைக்கப்பட்டுள்ளன
- கடைகோடி சக்கரங்கள் 2 பெரியதாகவும் நடுவில் உள்ள இரண்டு சக்கரங்கள் சிறியதாகவும் உள்ளது
- எண்கோண வடிவ கருவறையில் திருவள்ளுவரின் சிலை உள்ளது. தேரை யானைகள் இழுத்து செல்வது போல் உள்ளது
- நிகழ்ச்சிகள் நடத்த தனி அரங்கம் உள்ளது
- 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன
- அறத்துபால் – கரு நிற பளிங்கு கற்களாலும்,
- பொருட்பால்- வெண்ணிற பளிங்கு கற்களாலும்,
- இன்பதுபால்- செந்நிற பளிங்கு கற்களாலும் செதுக்கப்பட்டுள்ளன
- திருக்குறளை விளக்கம் ஓவியங்களும் உள்ளன
திருவள்ளுவர் சிலை- கன்னியாகுமரி
- இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது
- 30 அடி உயர பாறை மீது இச்சிலை உள்ளது
- 1990 இப்பணி தொடங்கி 2000 ல் முடிவுற்றது
- 2000 ஜனவரி 1 பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது
- பாறையிலிருந்து சிலையின் உயரம் 133 அடி
- அறத்துபாலை உணர்த்துவதாக பீடம்(38 அடி உயரம்)
- பொருட்பால், இன்பதுபால் சேர்த்து உணர்த்துவதாக (95 அடி உயரம்) அமைக்கப்பட்டுள்ளது
- பீடத்தின் உட்புறம் மண்டபம் உள்ளது
- மண்டபத்தில் 133 குறள்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன
- 7000 டன் எடை கொண்டது திருவள்ளுவர் சிலை(3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது, ஒவ்வொரு கற்களும் 3 டன்னிலிருந்து 8 டன் வரை எடை உள்ளது
- திருவள்ளுவர் சிலைக்கு செல்ல படகு வசதி உள்ளது
உலக தமிழ்சங்கம்- மதுரை
- மதுரை தல்லாகுளம் காந்தி அருங்காட்சியம் அருகில் உலக தமிழ் சங்கம் நிறுவப்பட்டுள்ளது
- 87 ஆயிரம் சதுர அடி பரப்பளவு
- 2016 ல் திறந்து வைக்கப்பட்டது(1981ஆம் ஆண்டு மதுரையில் நடைப்பெற்ற உலக தமிழ் மாநாட்டில் மதுரையில் உலக தமிழ்சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது)
- பன்னாட்டு அளவிலான கருந்தரங்க கூடங்கள், ஆய்வகங்கள், நூலகம், பார்வையாளர் அரங்கம் உள்ளது
- வெளிப்புற சுற்றுசுவரில் 1330 குறட்பாக்களும் இடம் பெற்றுள்ளன
- இதன் மற்றொர் அமைப்பு சங்கதமிழ்காட்சி கூடம்
- நுழைவாயிலில் திருவிளையாடல் புராண காட்சி புடைப்பு சிற்பமாக உள்ளது (தருமிக்கு பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கியது)
- வள்ளல்கள், புலவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன
- தொல்காப்பியர், கபிலர், ஒளவையார் முழு உருவ வெண்கல சிலை உள்ளது
- சுற்றுபுற சுவர்களில் சங்க இலக்கிய காட்சிகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது
சிற்பக் கலைக்கூடம்- பூம்புகார்
- 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலை நகரமாகவும், துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார்
- சிலப்பதிகாரம், பட்டினப்பாலையில் பூம்புகார் பற்றிய செய்தி வந்துள்ளது
- இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகரப்பகுதியும் அமைந்திருந்ததாக சிலபதிகாரம் கூறுகிறது
- 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்ப கலைக்கூடம் ஏற்படுத்தப்பட்டது
- 7 நிலை மாடங்களை கொண்டது
- கண்ணகியின் வரலாற்றை விளக்கும் 49 சிற்ப தொகுதிகள் இடம் பெற்றுள்ளன
- மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு உள்ளது
- கலைக்கூடத்திற்க்கு அருகில் இலஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம் உள்ளன
- இலஞ்சி மன்றம், பாவை மன்றம்- பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவரும்
- நெடுங்கல்மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும், அதை சுற்றி 8 சிறிய தூண்களும் , 8 மனித உருவங்களும் தற்கால சிற்பகலைக்கு எடுத்துகாட்டு

No comments:
Post a Comment