Wednesday, December 23, 2020

7 th std samacheer kalvi tamil Term 1-new syllabus

group 4 -எங்கள் தமிழ்

பொருள்

  1. ஊக்கிவிடும்- ஊக்கப்படுத்தும்
  2. குறி-குறிக்கோள்
  3. பொழிகிற-தருகின்ற
  4. விரதம்- நோன்பு

நூல்குறிப்பு

  1. நாமக்கல் கவிஞர்
  2. தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்
  3. காந்தியடிகள் கொள்கையை பின்பற்றியதால் காந்தியகவிஞர் என்பர்
  4. தமிழகத்தின் முதல் அரசவை கவிஞராக இருந்தவர்
  5. நூல்கள்- மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி

Book Back

  1. நெறி என்னும் சொல்லின் பொருள் வழி
  2. குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது குரல் + ஆகும்
  3. வான்+ஒலி என்பத்னை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் வானொலி

ஒன்றல்ல இரண்டல்ல

பொருள்

  1. ஒப்புமை- இணை
  2. முகில்- மேகம்
  3. அற்புதம்- விந்தை
  4. உபகாரி- வள்ளல்

முல்லைக்கு தேர் தந்தது வள்ளல் வேற்பாரி

 புலவரின் சொல்லுக்கு தன் தலையை தரத் துணிந்தான் குமண வள்ளல்

நூல்குறிப்பு

  1. உடுமலை நாராயணகவி
  2. பகுத்தறிவு கவிராயர்(சிறப்பு)
  3. திரைப்பட பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்

Book Back

  1. பகைவரை வெற்றி கொண்டவரை பாடும் இலக்கியம் பரணி
  2. வானில் முகில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்
  3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இரண்டு+அல்ல
  4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தந்து+உதவும்
  5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ஒப்புமையில்லாத

group 4 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

  1.  பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல்நிலை
  2. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் இரண்டாம் நிலை
  3. மொழியின் உயிர் நாடியாக  விளங்குவது பேச்சுமொழி
  4. கவனி-பேணுதல்
  5. கவனித்து செல்- பாதுகாப்பு
  6. “என்னால் போக முடியாது”- ஓங்கி ஒலிக்கும் போது- மறுப்பு
  7. “என்னால் போக முடியாது”- மென்மையாக ஒலிக்கும் போது- இயலாமை
  8. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்                                                                 திரிபும் தத்தமில் சிறிது உளவாகும்”- நன்னூல்
  9. மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர் (இருக்கு, இருக்குது, கீது)
  10. கன்னடம், தெலுங்கு, மலையாளம்  முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள்
  11. பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர் (நல்லா சாப்ட்டான், நன்றாக சாப்பிட்டான்)
  12. பேச்சு மொழி திருத்தமான இலக்கிய நடையில் அமைதவதில்லை
  13. தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு எனவே தமிழை “ இரட்டை வழக்கு மொழி” என்பர்
  14. “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் வெளியுலகில், சிந்தனையில் புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து செந்தமிழை செந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்” பாவேந்தர்
  15. “பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்ட நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்”- மு.வரதராசனார்
  16. பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் உள்ள வேறுபாட்டை தொல்காப்பியர் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று  கூறுகிறார்
  17. கேட்டல் பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்கு தாய்மொழி அறிமுகமாகிறது
  18. படித்தல், எழுதுதல், என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன

Book Back

  1. மொழியின் முதல் நிலை பேசுதல், கேட்டல் ஆகியனவாகும்
  2. ஒலியின் வரிவடிவம் பேச்சு ஆகும்
  3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று தெலுங்கு
  4. பேச்சுமொழியை உலகவழக்கு என்றும் கூறுவர்

சொலவடைகள்(பொம்மலாட்டம்)

  1. “புண்ணுக்கு  மருந்து போடமுடியும் புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா”
  2. ”அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது”
  3. ”வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப்பகை”
  4. ”எறும்பு ஊர கல்லும் தேயுங்கிரா மாதிரி”
  5. “உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்”
  6. “அடை மழைவிட்டாலும் செடி மழை விடாது”
  7. ”நினைச்சதாம் கழுதை அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்”
  8. “சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?”
  9. ”நல்ல பாம்பு படம் எடுக்கலாம்,நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா”
  10. ”ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் “
  11.   ”ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் காரணம் போட முடியும்”
  12. ”காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்”
  13. “இருப்பவனுக்கு புளியேப்பம், இல்லாதவனுக்கு பசியேப்பம்”
  14. “நாலு விட்ல கல்யாணமாம்.நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஒட்டமாம்”
  15. “அவப்பொழுது போக்குவதிலும் தவப்பொழுது நல்லதும்பாங்க”
  16. ”பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?”
  17. ”அதிர அடிச்ச உதிர விளையும்”
  18.  ”குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலா”
  19. ”அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்”
  20. ”கார்த்திகை மாதம் பிறையை கண்ட மாதிரி”
  21.  ”அதை விட்டாலும் கதி இல்ல அப்பால போனாலும் விதி இல்ல”
  22. ”தட்டி போட்ட ரொட்டிக்கு புரட்டி போட ஆள் இல்லாம”
  23. ”அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்க கூடாது”
  24. “அமாவாசை இருட்டில் பொள்ளாச்சிக்கு போன இடமெல்லாம் வழிதான்”

காடு

“கார்த்திகை தீபமெனக்

காடெல்லாம் பூத்திருக்கும்

பார்த்திட வேண்டுமடீ- கிளியே

பார்வை குளிருமடீ”

பொருள்

  1. ஈன்று-பெற்று
  2. கொம்பு- கிளை
  3. களத்திட- மகிழ்ந்திட
  4. நச்சவரம்- விடமுள்ள பாம்பு
  5. விடுதி- தங்கும் இடம்
  6. அதிமதுரம்- மிகுந்த சுவை

ஆசிரியர் குறிப்பு

  1. சுரதா
  2. இயற்பெயர்(இராச கோபாலன்)
  3. பாரதியாரின் இயற்பெயர்  சுப்புரத்தினம் என்பதை தன் பெயருடன் இணைத்து சுப்புரத்தின தாசன் (சுரதா) என மாற்றிக்கொண்டார்
  4. உவமை கவிஞர் என்று அழைக்கப்பட்டார்
  5. நூல்கள்- அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம், சுரதா  கவிதைகள்,
  6. கிளிக்கண்ணி என்னும் பாவகையை சேர்ந்தது
  7. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களை பேசும் பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை “கிளிக்கண்ணி

Book Back

  1. வாழை கன்றை ஈன்றது
  2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது காடு+எல்லாம்
  3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கிழங்கெடுக்கும்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

 பொருள்

  1. பரவசம்- மகிழ்ச்சிப் பெருக்கு
  2. துஷ்டி கேட்டல்- துக்கம் விசாரித்தல்

நூல்குறிப்பு

  1. ராஜமார்த்தாண்டன்
  2. கவிஞர், இதழாளர், கவிதை திறனாய்வாளர்
  3. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்
  4. ராஜமார்த்தாண்டன் கவிதைகள்” என்னும் நூலுக்காக தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு பெற்றவர்
  5. சிறந்த தமிழ் கவிதைகளை தொகுத்து “ கொங்குதேர் வாழ்க்கை” என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்

Book Back

  1. நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது கோலிக்குண்டு
  2. ” சுட்ட பழங்கள்” என்று குறிப்பிடப்படுபவை சுடப்பட்ட பழங்கள்
  3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெயர்+அறியா
  4. ‘மனமில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மனம்+இல்லை
  5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் நேற்றிரவு

விலங்குகள் உலகம்

  1. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் முண்டந்துறை வனவிலங்கு காப்பகம்
  2. 895 கிலோ மீட்டர் பரப்பளவு
  3. யானை, புலி, சிங்கம், மான், கரடி, காட்டுமாடு, சிறுத்தை
யானை
  1. ஆசிய யானை,ஆப்பிரிக்க யானை)
  2. ஆசிய யானை-ஆண்யானைக்கு தந்தம் உண்டு, பெண் யானைக்கு தந்தம் இல்லை
  3. ஆப்பிரிக்க யானை-இரண்டுக்குமே தந்தம் உண்டு 
  4. அவற்றின் உயரம், நிறம், நகம் ஆகியவற்றிலும் வேறுபாடுகள் உண்டு
  5. யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும் பெண் யானை தான் தலைமை தாங்கும்
  6. தங்களுக்கு தேவையான தண்ணீர் , உணவு ஆகியவற்றுக்காக இடம் பெயர்ந்துக்கொண்டே இருக்கும்
  7. நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை, தழைகளை உணவாக உட்கொள்ளும்
  8. குடிக்க 65 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்
  9.   யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட பாசமிகு விலங்கு, கண் பார்வை குறைவு, கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி                    
கரடி
  1. கரடி ஓர் அணைத்துண்ணி
  2. அது பழங்கள், தேன் போன்றவற்றை உண்பதற்காக் மரங்களில் ஏறும்
  3. உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல் ஆகியவற்றை தேடி உண்ணும்
  4. கறையான் அதற்கு மிகவும் பிடித்த உணவு
  5. கரடியின் உடலை போர்த்தி இருக்கும் அடர்ந்த முடிகள் தேனீக்களிடமிருந்து அதனை காப்பாற்றி விடும்
  6. நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்
புலி
  1. இரவில் மட்டுமே வேட்டையாடும்
  2. புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை
  3. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரே ஒரு புலி மட்டுமே வாழும்
  4. கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு(அல்லது) மூன்று குட்டிகள் ஈனும்
  5. இரண்டு ஆண்டுகள் வரை வளர்க்கும் அவை வேட்டையாட கற்றவுடன் அவற்றிற்க்கு தனியாக எல்லை பிரித்து அனுப்பிவிடும்
  6. புலிதான் ஒரு காட்டின் வளத்தை குறிக்கும்
  7. புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின் வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை
  8. பண்புள்ள விலங்கு
சிங்கம்
  1. ஆசிய சிங்கம்
  2. ஆப்பிரிக்க சிங்கம்
  3. இந்தியாவில் குஜராத்-கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன
  4. நிறம், உயரம்,பருமன்,எடை, பலம்ம் ஆகிய அனைத்திலும் சிங்கத்தைவிட புலியே சிறந்தது
  •  இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்று கூறுகிறார்கள்
  • புள்ளிமான்
  • இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் என பல வகையான மான்கள் உள்ளன
  • நம் நாட்டு புள்ளி மான்களே அழகில் சிறந்தது
  • தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் மேட்டுபாளையம்(கோவை)
  • கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் Bsc. Forestry, Msc. Forestry ஆகிய படிப்புகள் உள்ளன

Book Back

  1. ஆசிய யானைகளில் ஆண்- பெண் யானைகளை வேறுபடுத்துவது தந்தம்
  2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் முண்டந்துறை
  3. காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு புலி
  4. யானைக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானை தான் தலைமை தாங்கும்
  5. கரடிகளை தேனிக்களிட்மிருந்து பாதுக்காப்பது அதன் அடர்ந்த முடிகள்
  6. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது காடு + ஆறு
  7. அனைத்துண்ணி ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் அனைத்து + உண்ணி
  8. நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் நேரமாகி
  9. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் வேட்டையாடிய

இந்திய வனமகன்

  1. ஜாதவ்பயேங் பிரம்மபுத்திர ஆற்றின் நடுவில் உள்ள மிகப் பெரிய தீவில் 30 ஆண்டுகள் கடின உழைப்பால் காட்டை உருவாக்கினார்
  2. அரசு சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்தியது
  3. அஸ்ஸாம் வேளாண்மை பல்கலைகழகப் பேராசிரியர் ஜாதுநாத்
  4. “மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டும் எனில் மண்ணிம் தன்மையை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும் அதற்கு மண்புழுக்கள் மட்டுமின்றி சிவப்பு கட்டெறும்புகளும் உதவும்
  5. ஜிட்டுகலிட்டா வனவிலங்கு ஆர்வலர்

புலி தங்கிய குகை

பொருள்

  1. சிற்றில்- சிறு வீடு
  2. யாண்டு- எங்கே
  3. ஈன்ற வயிறு- பெற்றெடுத்த வயிறு
  4. கல் அளை- கற்குகை

நூல்குறிப்பு

  1. காவற்பெண்டு,சங்ககால பெண்பாற்புலவர்களுள் ஒருவர்
  2. சோழ மன்னன் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்
  3. இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது
  4. புறநானூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
  5. பண்டைக்கால தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது

Book Back

  1. ”யாண்டு” என்னும் சொல்லின் பொருள் எங்கே
  2. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது யாண்டு + உளனோ?
  3. ‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கல்லளை

பாஞ்சை வளம்

பொருள்

  1. சூரன் - வீரன்
  2. பொக்கிஷம்- செல்வம்
  3. சாஸ்தி- மிகுதி
  4. விஸ்தாரம்- பெரும்பரப்பு
  5. வாரணம்- யானை
  6. பரி-குதிரை
  7. சிங்காரம்- அழகு
  8. கமுகு- பாக்கு

நூல்குறிப்பு

நா.வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது

Book Back

  1. ஊர்வலத்தின் முன்னால் வாரணம் அசைந்து வந்தது
  2. பாஞ்சாலங்குறிச்சியில் முயல் நாயை விரட்டும்
  3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது மாடிவீடு
  4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பூட்டிய+ கதவுகள்
  5. ‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தோரணம் + மேடை
  6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் வாசலலங்காரம்

பொருத்துக

  1. பொக்கிஷம்- செல்வம்
  2. சாஸ்தி- மிகுதி
  3. விஸ்தாரம்- பெரும்பரப்பு
  4. சிங்காரம்- அழகு

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

“வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேக பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும்  உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுதந்திர தியாகி” என்று பெரியாரால் பாரட்டப்பெற்றவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
இளமை
  1.   1908  அக்டோபர் 30ல் இராமநாதபுரம் பசும்பொன் என்னும் ஊரில் பிறந்தார்
  2. பெற்றோர்- உக்கிர பாண்டியத்தேவர்,இந்திராணி அம்மையார்
  3. இளமையிலேயே அன்னையை இழந்ததால் இசுலாமியத்தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்
  4. தன் தொடக்க கல்வியை கமுதியிலும், உயர்நிலை கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும் இராமநாதபுரத்திலும் பயின்றார்
  5. இராமநாதபுரத்தில் பிளேக் நோய் பரவியதால் அவரது படிப்பு பாதியிலேயே நின்று விட்டது
  6. தமிழ் , ஆங்கிலம் இரு மொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றுவார்
  7. சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார்
  8. ஆங்கில அரசு “வாய்ப்பூட்டுசட்டம்”  மூலம் மேடைகளில் பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதித்தது.வட இந்தியாவில் பாலகங்காத திலகர் அவர்களுக்கு  வாய்ப்பூட்டுசட்டம்  போடப்பட்டது
  9. திரு. வி. க அவர்கள் இவரை “தேசியம் காத்த செம்மல்” என்று பாரட்டினார்
  10. முத்துராமலிங்க தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் (வங்கசிங்கம்)  அவர்களை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்
  11. நேதாஜி தொடங்கிய “இந்திய தேசிய இராணுவம்” ல் முத்துராமலிங்கரால் ஏராளமான் தமிழர்கள் இணைந்தனர்
  12. நேதாஜி என்னும் பெயரில் வார இதழ் ஒன்றை நடத்தினார்
  13. முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில் “விவேகானந்தரின் பெருமை” என்னும் தலைப்பில் காமராசர் முன்னிலையில் உரையாடினார்
  14. “இது போன்ற ஒரு பேச்சை இது வரை நான் கேட்டதில்லை முத்துராமலிங்கரின் வீரம்மிக்க பேச்சு விடிதலை போருக்கு மிகவும் உதவும்”-காமராசர்
  15. “ தென்னாட்டு சிங்கம் என்று தேவரை சொல்லுகிறார்களே அது சால் பொருந்தும் என அவரது தோற்றத்தை பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேச தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது” – அறிஞர் அண்ணா
  16. முத்துராமலிங்க தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வருகிறது.உதடுகளிலிருந்து அல்ல உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையென பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவ்து அவரது வழக்கம்” இராஜாஜி
  17. “ஆங்கிலத்தில் பேசிய பேச்சு பெள்ளையர் காலத்தில் விட்டல்பாய், வல்லபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சை போல் இருந்ததாக வட இந்திய இதழ்கள் பாராட்டின
  18.   இந்திய தேர்தலில் இராம்நதபுரம் மன்னரை (சண்முக இராஜேஸ்வர சேதுபதி) எதிர்த்து போட்டியிட்ட தேவர் அவர்களின் வெற்றியையும் பொப்பிலி அரசை எதிர்த்து போட்டியிட்ட வி.வி.கிரி அவர்களின் வெற்றியையும் இந்திய மாணவர்கள் எதிர்ப்பார்த்து இருந்தோம்” கே.டி.கே.தங்கமணி(லண்டனில் பாரிஸ்டருக்கு படித்து வந்தவர்)
  19. 1934 கமுதியில் குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.அவரது தொடர் போராட்டத்தால் 1948ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்க்ப்பட்டது
  20. 1939 மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்
  21. ஜமின் விவசாயிகள் சங்கம்-உழவர்க்கே நிலம் சொந்தம் என்றார். 32½ சிற்றூர்களில் இருந்து தமக்கு சொந்தமான நிலத்தை பகிர்ந்தளித்தார்
  22. பாரதமாதா கூட்டுறவு பண்டகசாலையை ஏற்படுத்தி விளைப்பொருளுக்கு சரியான விலை கொடுக்க செய்தார்
  23. சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்
  24. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மத்திய பிரதேசத்தின் தாமோ என்னும் நகரில் உள்ள இராணுவ சிறையில் அடைக்கப்பட்டு போர் முடிந்த பிறகு தான் விடுதலை செய்யப்பட்டார்
  25. பர்மாவில் புத்த பீட்சுகளில் உயர்ந்தவர்களுக்கு பெண்கள் தங்கள் கூந்தலை விரித்து நடைப்பாதையாக வரவேற்பு அளிப்பது வழக்கம். தேவர் “இது பெண்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது ”என்று மறுத்துவிட்டார்
  26. விவேகானந்தரின் தூதுவராக, நேதாஜியின் தளபதியாக, சத்தியசீலராக, முருகபக்தராக, ஆன்மீக புத்திரராக, தமிழ் பாடும் சித்தராக, தென்பாண்டி சீமையின் முடிசூடா மன்னராக, நீதிவழுவா நேர்மையாளராக, புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக, பக்தியில் பரமஹம்சராக, இந்திய தாயின் நன்மகனாக விளங்கினார்
  27. 1963  அக்டோபர் 30 இயற்கை எய்தினார்
சிறப்பு
  1. 1936 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் விருதுநகரில் போட்டியிட பெருந்தலைவர் காமராசர் முன் வந்தார். நகராட்சிக்கு வரி  செலுத்தியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் நிலை இருந்தது. என்வே முத்துராமலிங்க தேவர் ஓர் ஆட்டுக்குட்டியை வாங்கி காமராசர் பெயரில் வரி கட்டி அவரை தேர்தலில் போட்டியிட வைத்தார்
  2. தமிழக சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
  3. சென்னையில் அரசு சார்பாக சிலை அமைக்கப்பட்டுள்ளது
  4. இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது
  5. 1995- தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது
  6. தன் வாழ்நாளில் 1/5 பங்கு(4000/20,275 நாட்கள்) சிறையில் கழித்தார்
சிறப்பு பெயர்கள்- தேசியம் காத்த செம்மல், சித்யா பாஸ்கர், பிரணவ கேசரி, சண்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை

Book Back

  1. முத்துராமலிங்கதேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் சாயல்குடி
  2. முத்துராமலிங்கதேவர்  நடத்திய இதழின் பெயர்  நேதாஜி
  3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கரை பாராட்டியவர் திரு.வி.க

கப்பலோட்டிய தமிழர்(சிதம்பரனார்)

  1. தூத்துக்குடி-தென்னாட்டு துறைமுகம்,கொற்கை பெருந்துறையின் வழித்தோன்றல்
  2. “வசையொழிய வாழ்வாரே வாழ்வார்”- வள்ளுவர்
  3. சுதேசி கப்பல் கம்பெனி- தலைவர்- பாண்டித்துறையார்
  4. சுதேசி கப்பல் கம்பெனி-செயலாளர்- கப்பலோட்டிய தமிழர்
  5. சுதேச மந்திரம்- “ வந்தே மாதரம்
  6. “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே  தீருவேன்” – பாடகங்காதர திலகர்
  7. “வந்தே மாதரம் என்போம்  எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” பாரதியார்
  8. சிதம்பரனாருக்கு “இரட்டை தீவாந்திர தண்டனை” வழங்கப்பட்டது . அப்பில் கோட்டில் சிறை தண்டனையாக மாறியது
  9. கோவை சிறையிலும், கண்ணூர் சிறையிலும் கொடும்பணி செய்தார். தொல்காப்பியம் படித்தார்
  10. ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூலில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிப்பெயர்த்தார்
  11. மெய்யறிவு, மெய்யறம் என்ற சிறு நூல்களை  இயற்றினார்
  12. “பாயக் காண்பது சுதந்திர வெள்ளம்                                                               பணியக் காண்பது  வெள்ளையர் உள்ளம்”- சிதம்பரனார்
  13. “சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும் புரட்சி ஒங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்  விடுர்தலைப்பெறும் “-சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைதண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று

நூல்குறிப்பு

  1. இரா.பி.சேது(சொல்லின் செல்வர்)
  2. தமிழறிஞர், எழுத்தாளர், வழக்கரைஞர், மேடை பேச்சாளர்
  3. இவரின் தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகத்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்
  4. நூல்கள்- ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ்விருந்து, தமிழகம், ஊரும் பேரும், மேடைப்பேச்சு
  5. வ.உ.சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...