தமிழ் மொழி வாழ்த்து
(பாரதியார் கவிதைகளின் தொகுப்பு)
பொருள்
- நிரந்தரம்- காலம் முழுமையும்
- வைப்பு- நிலப்பகுதி
- சூழ்கலி- சூழ்ந்துள்ள அறியாமை இருள்
- வண்மொழி- வளமிக்க மொழி
- இசை- புகழ்
- தொல்லை- பழமை, துன்பம்
நூல்குறிப்பு
- சி.சுப்பிடமணிய பாரதியார்
- பண்முக ஆற்றல்- கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர், விடுதலை போராட்ட வீரர்
- இதழ்கள்- இந்தியா, விஜயா போன்ற இதழ்கள் நடத்தினார்
- நூல்கள்- சந்திரகிரியின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் , வசனக் கவிதைகளையும், சீட்டுகவிகளையும் எழுதியவர்
- பாரதிதாசன் இவரை சிந்துக்கு தந்தை, செந்தமிழ் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன்
செந்தமிழ் அந்தாதி
book back
- மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் வைப்பு
- ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்று+என்றும்
- ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வானம் + அளந்தது
- ‘அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அறிந்ததனைத்தும்
- ‘வானம் + அறிந்த’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் வானமறிந்த
தமிழ்மொழி மரபு
பொருள்
- விசும்பு- வானம்
- மயக்கம்- கலவை
- இருதிணை- உயர்திணை, அஃறிணை
- வழாஅமை- தவறாமை
- ஐம்பால்- ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
- மரபு- வழக்கம்
- திரிதல்- மாறுபடுதல்
- செய்யுள்- பாட்டு
- தழாஅல்- தழுவுதல்
புலவர்கள்
சில எழுத்துக்களை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது
(வழாஅமை, தழாஅல்) உயிரளபடை
நூல்குறிப்பு
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்
- எழுத்து, சொல், பொருள் மூன்று அதிகாரம் உடையது
- ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களை உடையது
- மரபியல் பொருளதிகாரத்தில் உள்ளது
இளமை பெயர்கள்
- புலி- பறழ்
- சிங்கம்- குருளை
- யானை- கன்று
- பசு- கன்று
- கரடி-குட்டி
- ஒலிமரபு
- புலி- உறுமும்
- சிங்கம்- முழங்கும்
- யானை- பிளிறும்
- பசு- கதறும்
- கரடி- கத்தும்
book back
- பறவைகள் விசும்பில்(வானில்) பறந்து செல்கின்றன
- இயற்கையை போற்றுதல் தமிழர் மரபு
- ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இரண்டு + திணை
- ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஐந்து + பால்
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஒவியமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஒவிய எழுத்து என்பர்
- ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்
- அச்சுகலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் நிலையான வடிவத்தை பெற்றுள்ளன
- தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களை கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும், செப்பேடுகளிலும் காண முடியும்
- கல்வெட்டு, செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாக பிரிக்கலாம்
- வட்டெழுத்து – வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழமையான தமிழ் எழுத்து
- தமிழெழுத்து- இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்
- சேரமண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் 8 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும். சாசனங்களில் வட்டெழுத்துக்களே இடம்பெறுகின்றன
- முதலாம் இராசராச சோழனின் ஆட்சி காலமான 11 நூற்றாண்டுக்கு பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன
- கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் ஆகும்(சிலப்பதிகாரம் –கண்ணெழுத்து படுத்த எண்ணு பல்பொதி)
- பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்
- பாறைகளில் வளைக்கோடு பயன்படுத்த முடியாததால் நேர்கோடும், ஓலைகளில் நேர்கோடு பயன்படுத்த முடியாததால் வளைக்கோடும் பயன் படுத்தப்பட்டன
புள்ளிகளும்,
எழுத்துகளும்
- எகர, ஒகர மீது புள்ளிகள் வைத்தனர்(எ.து-எது, எது-ஏது)
- நெடிலுக்கு எழுத்தின் பக்கவாட்டில் புள்ளிகள் வைக்கப்பட்டன(க.=கா, த.=தா)
- ஐகாரம்(..க=கை)
- ஒளகாரம்(கெ..=கெள,தெ..=தெள)
- மகரம்(ப்=ம)
- குற்றியலிகர , குற்றியலுகர எழுத்துக்களின் மேல் புள்ளியிடம் வழக்கம் அந்தகாலத்தில் இருந்தது
வீரமாமுனிவர்
எழுத்து சீர்த்திருத்தம்
- எ.=எ
- எ=ஏ
- ஒ.=ஒ
- ஒ=ஓ
- கெ.=கெ
- கெ=கே
- கொ.=கொ
- கொ=கோ
பெரியார்
எழுத்து சீர்த்திருத்தம்
கல்வெட்டுகளில்
உள்ள எழுத்துகளின் அமைப்பு
- “ஸ” எனும் வட எழுத்து காணப்படுகிறது
- மெய்யை குறிக்க புள்ளி பயன்படுத்தவில்லை
- எகர, ஒகர குறில் நெடில் வேறுபாடில்லை
- அரிச்சலூர் கல்வெட்டில் தமிழ் எழுத்தும், வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டன
book back
- தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற அச்சுகலை காரணமாக இருந்தது
- வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து வட்டெழுத்து
- தமிழ் எழுத்து சீர்த்திருத்த பணியில் ஈடுப்பட்டவர் பெரியார்
- கடை சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் கண்ணெழுத்துகள் எனப்பட்டது
- எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர் வீரமாமுனிவர்
சொற் பூங்கா
- தமிழ் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள்
- சொன்றி, சோறு என்பவை அவ்வழியில் வந்தவை
- எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியர் மொழி
- “நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி”,”குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைவு இலவே” என்றார் தொல்காப்பியர்
நன்னூலார் ஓரெழுத்து ஒரு மொழி 42 என்றார்
பொருள்
- ஆமா-காட்டுபசு
- மாநாடு- பெரிதும் கூடும் அவை
- மாநிலம்- பெருநிலம்
- மாஞாலம்- உலக பெரும்பரப்பு
- மாற்றம்- மா தளிர் நிறம்
- அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா- விலங்கின பெயர்
- ஈ-ஓயாது ஒலி எலுப்பும்(மாட்டு ஈ)
- ஏய்-என்னோடு கூடு
காலத்தால்
கரைந்து தேய்ந்தவை
- ஆன் – ஆ
- மான் – மா
- கோன் – கோ
- தேன் – தே
- பேய் – பே
- ஏய்-ஏ, எய்
- ஏவுதல்- அம்புவிடுதல்
- ஏவலன் – கடமை புரிபவன்
- ஏகலை – அம்புவிடும்கலை
- ஏகலைவன் – அம்புவிடும்கலையில் வல்லவன்
- எய்ப்பன்றி – முள்ளம் பன்றி
- எயினர்- எய்பவர்
- எயினியர்- எய்பவர் (மகளிர்)
நூல்குறிப்பு
- செந்தமிழ் அந்தணர் (இரா.இளங்குமரனார்)
- பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியராக பணி புரிந்தார்
- நூல்கள்- இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்
- தேவநேயம் என்னும் நூலை தொகுத்துள்ளார்
- சிறப்பு- திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவணார் நூலகமும் அமைந்துள்ளன
ஈடில்லா இயற்கை
ஓடை
பொருள்
- தூண்டுதல்- ஆர்வம் கொள்ளுதல்
- ஈரம்- இரக்கம்
- முழவு- இசைக்கருவி
- பயிலுதல்- படித்தல்
- நாணம்- வெட்கம்
- செஞ்சொல்- திருந்திய சொல்
- நன்செய்- நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- புன்செய்- குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
- வள்ளைப்பாட்டு- நெல் குத்தும் போது பாடப்படும் பாடல்
நூல்குறிப்பு
- வாணிதாசன் (தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்க்)
- இயற்பெயர்(அரங்கசாமி, எத்திராசலு)
- பாரதிதாசனின் மாணவன்
- தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஆங்கிலம் வல்லவர்
- சிறப்பு பெயர்- கவிஞரேறு, பாவலர்மணி
- இவருக்கு பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது
- நூல்கள்- தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்
- ஓடை என்னும் பாடல் தொடுவானம் நூல்
book back
- பள்ளிக்கு சென்று கல்வி பயிலுதல் சிறப்பு
- செஞ்சொல் மாதரின் வள்ளைப்பட்டிற்கேற்ப முழவை மீடுவது ஓடை
- ‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நன்மை + செய்
- ‘நீளுழைப்பு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நீள் + உழைப்பு
- ‘சீருக்கு + ஏற்ப’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் சீருக்கேற்ப
- ‘ஓடை + ஆட’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ஓடையாட
கோணக்காத்துப் பாட்டு
பொருள்
- முகில்- மேகம்
- கெடிகலங்கி- மிக வருந்தி
- சம்பிரமுடன் – முறையாக
- சேகரம்- கூட்டம்
- வின்னம்- சேதம்
- வாகு- சரியாக
- காலன் – எமன்
- மெத்த- மிகவும்
- காங்கய நாடு- கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
ஆசிரியர்
குறிப்பு
புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சமக்கும்மிகள் நூலில் இடம் பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய காத்து நொண்டி சிந்திலிருந்து சில பாடல்கள்
book back
- வானில் கரு முகில் தோன்றினால் மழை பொழியும் என்பர்
- முறையான உடற்பயிற்ச்சியும் சரிவிகித உணவும் காலணையும் ஓட்டிவிடும்
- ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விழுந்தது + அங்கே
- ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது செத்து + இறந்த
- பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் பருத்தியெல்லாம்
நிலம் பொது
அமெரிக்காவின்
பூஜேசவுண்ட் என்னுமிடத்தை சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர்
அவர்களின்
தலைவர் சியாட்டல்
நூல்குறிப்பு
- பக்தவத்சல பாரதி எழுதிய தமிழக பழங்குடிகள் என்னும் நூலில் இருந்து எடுத்துதரப்பட்டுள்ளது
- செவ்விந்தியர்கள் நிலத்தை தாயாக மதிக்கின்றனர்
வெட்டுகிளியும் , சருகுமானும்
- தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிகுளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்
- அவர்கள் பேசும் மொழி ஆல்ஆலப்பு
நூல்குறிப்பு
- மனிஷ், சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்துள்ளனர்
- அவற்றை யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் கீதா தமிழாக்கம் செய்துள்ளார்
திருக்குறள்
- பெருநாவலர், முதற்பாவலர், நாயனார்
- முப்பால்- அறம், பொருள், இன்பம்
- அறத்துப்பால்- பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
- பொருட்பால்- அரசியல், அமைச்சியல், ஓழிபியல்
- இன்பத்துபால்- களவியல், கற்பியல்
- பகழாலும், பழியாலும் அறியப்படுவது நடுவுநிலைமை
- பயனில்லாத களர்நிலத்திற்க்கு ஒப்பானவர்கள் கல்லாதவர்
நோயும் மருந்தும்
பொருள்
- தீர்வன- நீங்குபவை
- உவசமம்- அடங்கி இருத்தல்
- நிழல் இகழும்- ஒளி பொருந்திய
- பேர்தற்கு- அகற்றுவதற்கு
- திரியோக மருந்து- மூன்று யோக மருந்து
- தெளிவு- நற்காட்சி
- தறந்தன- தன்மையுடையன
- கூற்றவா- பிரிவுகளாக
- பூணாய்- அணிகலன்களை அணிந்தவளே
- பிணி- துன்பம்
- ஓர்தல்- நல்லறிவு
- பிறவார்- பிறக்க மாட்டார்
- பிறவித்துன்பங்கள் நீக்கம்
- மருந்துகள்- நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
நூல்குறிப்பு
- நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று
- இந்நூல் சமண சமய கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது
- கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்து சருக்கங்களை கொண்டது
- உடல் நலம் என்பது பிணி இல்லாமல் வாழுதல் ஆகும்
- நீலகேசி கூறும் நோயின் வகைகள் மூன்று
- ‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இவை + உண்டார்
- தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் தாமினி
வருமுன் காப்போம்
பொருள்
- நித்தம் நித்தம் – நாள்தோறும்
- மட்டு- அளவு
- சுண்ட- நன்கு
- வையம்- உலகம்
- பேணுவையேல்- பாதுகாத்தல்
- திட்டு முட்டு- தடுமாற்றம்
நூல்குறிப்பு
- தேசிக விநாயகனார்(கவிமணி)
- குமரி மாவட்டம்-தேரூர்
- 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்
- கவிதை நூல்கள்- ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும், மாலையும்
- உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிப்பெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்
book back
- காந்தியடிகள் வையம் போற்ற வாழ்ந்தவர்
- ‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நலம் + எல்லாம்
- இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இடமெங்கும்
தமிழர் மருத்துவம்
- சர்க்கரை , இரத்த கொதிப்பு, புற்று, மாரடைப்பு முதலிய நோய்களுக்கு உண்வு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம் மேற்கொள்ள வேண்டும்
- “வேர்பாரு, தழைபாரு மிஞ்சினக்கால் பற்செந்தூரம் பாரே”- சித்தர்கள்
- நோய்களுக்கு தாவரம் மட்டுமல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் பயன்படுத்தினார்கள்
- இன்றைக்கு நோய்கள் பெருகி இருப்பதற்க்கு காரணம் மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்தது தான்
- உண்வு, மாசு நிறந்த சுற்று சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் முக்கிய காரணம்
- சமயலறையில் செலவிடும் நேரம் நல்வாழ்விற்காக செலவிடும் நேரம்
உடல் நலத்திற்காக
நாள்தோறும் செய்ய வேண்டியவை
- 45 நிமிடத்தில் 3 கி. மி நடைப்பயணம்
- 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுபயிற்சி
- 7 மணிநேர தூக்கம்
- 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்
- கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் சாப்பிடலாம்
book back
- தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்க்கு தாவரங்களை பயன்படுத்தினர்
- தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது உணவின் நீட்சியாகவே உள்ளது
- உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று இரத்த கொதிப்பு
- சமையலறையில் செலவிடும் நேரம் நல்வாழ்வுக்காக செலவிடும் நேரமாகும்.
தலைக்குள் ஓர் உலகம்
- பிரபஞ்சத்தில் மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் மனித மூளை
- அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன்
- பத்தாயிரம் கோடு நியூரான்கள் உள்ளன
- நியூரான்களின் வலைப்பின்னல்தான் புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு
- மூளை முதுகுதண்டில் முளைக்கிறது
- மூளையின் மூன்று பாகம்- உள்மூளை, நடுமூளை, பின்மூளை
- முன்மூளை- மூக்கு, கண்
- சிறுமூளை- உடலின் அசைவுகளையும், உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது
- மூளைக்கு 1 நிமிடத்திற்கு 800 மில்லி இரத்தம் தேவைப்படுகிறது
- மூளை உடம்பின் எடையில் 50 ல் ஒரு பங்கு. ஆனால் இரத்தம், உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் 5 ல் 1 பாகம் அபகரித்து கொள்கிறது
- தனக்கான ஆற்றலை சேர்த்து வைக்க இடம் இல்லை(மூளை)
- மூளகியின் இடப்பக்க செய்திகள் வலப்பக்க பகுதிக்கும், வலப்பக்க செய்திகள் இடப்பக்க பகுதிக்கும் செல்கின்றன
- இடது பாதி- பேச, எழுத,கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க , அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம், மொழி அறவு
- வலது பாதி- கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது
- வலது பகுதி ஆக்ரமிப்பு- நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கருவிகளை கையாளுபவர்கள்
- இடது பகுதி ஆக்ரமிப்பு-பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சி பணிக்கு படித்தவர்கள்
- சுமார் தொண்ணூறு நிமிடங்களுக்கு ஒரு முறை நம் எல்லோர் மனநிலை மாறும்
- சராசரி மனிதன் தனது வாழ்நாளில் 20 வருடம் தூங்குகிறான்
- 3 இலட்சம் கனவுகள் காண்கிறான்
நூல்குறிப்பு
- சுஜாதா(இயற்பெயர்- ரங்கராஜன்)
- மின்னு வாக்கு எந்திரம் உருவாக்கம் பணியில் இவர் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்
- நூல்கள்- என் இனிய எந்திரா, மீண்டும் ஜுனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள், தலைமை செயலகம்



No comments:
Post a Comment