Wednesday, February 10, 2021

அளவீடுகள்

 அளவீடுகள்(6term 1)

பன்னாட்டு அலகு முறை(SI)

  1. வெப்பநிலை- கெல்வின்
  2. மீட்டர்- தொலைவு
  3. ஆம்பியர்- மின்னோட்டம்
  4. காலம்- வினாடி
  5. பொருட்களின் அளவு- மோல்
  6. நிறை- கிலோகிராம்
  7. ஒளிச்செறிவு- கேண்டிலா                                                             

  • தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது அளவீடுகள்
  • ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் . இதன் அலகு மீட்டர்(m)
  • உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட அளவு முறை பன்னாட்டு அலகு முறை(International system of units) or SI அலகு முறை
  • 10 டெசி மீட்டர்(d)-1 மீட்டர்
  • 100 சென்டி மீட்டர்(cm)-1 மீட்டர்
  • 1000 மில்லி மீட்டர்(mm)- 1 மீட்டர்
  • 1000000000 நானோ மீட்டர்(nm)- 1 மீட்டர்
  • 1000 மீட்டர்(m)- 1 கிலோ மீட்டர்(km)
  • அறிவியல் கணக்கீடுகளில் அளவீடுகள் துல்லியமாக இருத்தல் அவசியம்
  • ஒரு பொருளின் தோற்ற நிலையை இரு வேறு பார்வைக் கோடுகளின் வழியே நோக்கும் போது ஏற்படுவதாக தோன்றும் அளவீட்டு மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சியே இடமாறு தோற்ற பிழை எனப்படும்
  • பரப்பளவு= நீளம் * அகலம் (நீளம் என்பது ஒரு அடிப்படை அலகாகும்)
  • பருமன்= நீளம் * அகலம் * உயரம்(lbh) கன செமீ(பருமன் என்பது வழி அலகாகும்)
  • திரவத்தை அளக்க பயன்படும் அளவீடு லிட்டர்
  • ஒரு பருப்பொருள் எவ்வளவு இடத்தை அடைத்து கொள்கிறதோ அதுவே அதன் பருமன் ஆகும்
  • 1மி.மீ 3 =1 மைக்ரோ லிட்டர்
  • 1 செ.மீ3= 1 மில்லி லிட்டர்
  • 1மீ3=1 கிலோ லிட்டர்
  • நிலவில் ஈர்ப்பு விசை புவியை போல ஆறில் ஒரு பங்கு தான் எனவே நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் ஆறில் ஒரு பங்கு
  • நிறை என்பது ஒரு பொருளின் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும்
  • எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவி ஈர்ப்பு விசையே ஆகும்
  • 1000 மில்லிகிராம்- 1 கிராம்
  • 1000 கிராம்- 1 கிலோ கிராம்
  • 1000 கிலோ கிராம்- 1 டன்
  • ஒரு தெரிந்த நிலையான நிறையோடு ஒரு தெரியாத பொருளின் நிறையை ஒப்பிடுவதன் மூலம் அந்த பொருளின் நிறையானது கணக்கிடப்படுகிறது. அது படித்த நிறை எனப்படும்( தராசு)
  • துல்லியமான எடையை காண மின்னனு தராசு பயன்படுகிறது
  • முற்காலத்தில் நேரத்தை கணக்கிட மணல் கடிகாரம், சூரியக் கடிகாரம் பயன்படுத்தினர்
  • நவீன காலத்தில் மின்னனு கடிகாரம், நிறுத்து கடிகாரம் பயன்படுகிறது
  • ஒழுங்கற்ற பொருளின் பருமனை அளந்தறிய நீர் இடப்பெயர்ச்சி முறை பயன்படுகிறது
  • 7875 செ. மீ= 78 மீ 75 செ,மீ
  • 1195 மீ= 1 கிமீ 195 மீ
  • 15செ.மீ 10மி,மீ= 160 மி.மீ
  • 45 கி.மீ 33 மீ= 45033மீ
  • ஒடோமீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைலைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்
  • மெட்ரிக் முறை அலகுகள் அல்லது  திட்ட அலகுகள் 1790 –ல் பிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது 
  • நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் 16 ஆம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால்  கண்டுபிடிக்கப்பட்ட்து
  • 1 கிலோகிராம் என்பது பிரான்சில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889-ல் நிறுவப்பட்ட பிளாட்டினம், இரிடியம் உலோக கலவையால் ஆன ஒரு உலோக தண்டின் நீளம் ஆகும்

Book back

சரியான விடையை தேர்ந்தெடு

  1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிட பயன்படுகிறது- அளவுநாடா
  2. 7 மீ என்பது செ.மீ-ல் – 700 செமீ
  3. ஒரு அளவை அளவிடும் முறைக்கு இயல் அளவீடு என்று பெயர்
  4. சரியானதை தேர்ந்தெடு-கி.மீ->மீ->செ.மீ->மி.மீ
  5. அளவுகோலை பயன்படுத்தி நீளத்தை அளவிடும் போது, உனது கண்ணின் நிலை அளவிடும் புள்ளிக்கு மேலே செங்குத்தாக இருக்க வேண்டும்

சரியா தவறா

  1. நிறையை 126 கி.கி எனக் கூறுவது சரியே – சரி
  2. ஒருவரின் மார்பளவை மீட்டர் அளவுகோல் பயன்படுத்தி அளவிட முடியும் – தவறு
  3. 10 மி.மீ என்பது 1 செ,மீ ஆகும்- சரி
  4. முழம் என்பது நீளத்தை அளவிடும் நம்பத் தகுந்த முறையாகும் – தவறு
  5. SI அலகு முறை என்பது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அலகு முறையாகும்- சரி

கோடிட்ட இடத்தை நிரப்புக

  1. SI அலகு முறையில் நீளத்தின் அலகு- மீட்டர்
  2. 500 கிராம்= 1/2 கிலோ கிராம்
  3. டெல்லிக்கும் சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு கிலோ மீட்டர்    என்ற அலகால் அளக்கப்படுகிறது
  4. 1மீ=100 செ.மீ என அளவிடப்படுகிறது
  5. 5 கி.மீ= 5000 மீ

ஒப்புமை தருக

  1. சர்க்கரை: பொதுத்தராசு; எலுமிச்சை சாறு: அளவுகள் குறிக்கபட்ட கொள்கலன்  
  2. மனிதனின் உயரம் : செ.மீ; கூர்மையான பென்சிலின் முனையின் நீளம்:மிமீ
  3. பால்: பருமன்; காய்கறிகள்:நிறை

பொருத்துக

  1. முன்கையின் நீளம்- முழம்
  2. நீளத்தின் SI அலகு-மீட்டர்
  3. நானோ- 10-9
  4. காலத்தின் SI அலகு-விநாடி
  5. கிலோ-103

Problem sum

1. இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 43.65 கி,மீ இதன் மதிப்பை மீட்டரிலும். செண்டிமீட்டரிலும் மாற்றுக

            1 கிலோ மீட்டர்- 1000 மீட்டர்

            43.65 *1000=43650 மீட்டர்

            1 கிலோமிட்டர்- 1000 மீட்டர் * 100 செ.மீ

            43.65 * 1000 *100= 4365000 செ.மீ

2. உனது வீட்டில் இருந்து உனது பள்ளிக்கு இடையே உள்ள தொலைவு 2250 மீ. இந்த தொலைவினை கிலோ மீட்டராக மாற்றுக

            1000 மீட்டர்= 1கிலோ மீட்டர்

2250 மீட்டர்= 2250/1000 = 2.25 கி.மீ

3. கூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும் போது அளவு கோலின் ஒரு முனை 2.0செ.மீ மற்றும் அடுத்து முனை 12.1செ.மீ என்ற இரு அளவுகளை காட்டினால் பென்சிலின் நீளம் என்ன?

            பென்சிலின் நீளம்=   12.1-2.0= 10.1 செ.மீ

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...