விசையும் இயக்கமும்(6 term1)
- காலத்தை பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் எனவும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே இடத்தில் இருப்பதை ஒய்வு நிலை எனவும் கூறலாம்
- (இயங்கும் படகில் உள்ள மனிதன் ஆற்றின் கரையை பொறுத்து இயக்க நிலையில் உள்ளான். படகினை பொறுத்து ஒய்வு நிலையில் உள்ளான்)
- வானியலாளர் ஆர்யபட்டா “ எவ்வாறு நீங்கள் ஆற்றில் ஒரு படகில் செல்லும் போது ஆற்றின் கரையானது உங்களுக்கு பின்புறம் எதிர்திசையில் செல்வது போலத் தோன்றுகிறதோ, அது போலவே வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் காணும் போது அது கிழக்கிலிருந்து மேற்காக செல்வதாக தோன்றுவதால் நிச்சயம் நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தானே சுற்ற வேண்டும்” என்றார்
- பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை எனப்படும்
- விசை – தொடு விசை. தொடா விசை
- தொடு விசை- தொடுதலின் அடிப்படையில் வகைப்படுத்துதல் (கால்பந்தை உதைத்தல்)
- தொடா விசை- புவியிர்ப்பு விசை- காந்த விசை
- விசையானது ஒரு பொருளின் மீது செயற்படுத்தும் போது பொருளை ஒய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கு கொண்டு வருகிறது
- நேர்க்கோட்டு இயக்கம்-பொருளானது நேர்க்கோட்டு பாதையில் இயங்கும்(தானாக கீழே விழும் பொருள்)
- வளைவுப்பாதை இயக்கம்- பொருளானது முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்(பந்தினை வீசுதல்)
- வட்டபாதை இயக்கம்- ஒரு பொருள் வட்டப் பாதையில் இயங்கும்(கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டி சுற்றுதல்)
- தற்சுழற்சி இயக்கம்- ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல்(பம்பரத்தின் இயக்கம்)
- அலைவு இயக்கம்- ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல்(தனி ஊசல்)
- ஒழுங்கற்ற இயக்கம்- ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்
- அலைவானது அதிவேகமாக நடைபெறும் போது நாம் அவ்வியக்கத்தினை அதிர்வுறுதல் என அழைக்கிறோம்
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை நாம் கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம்
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைப்பெறாது இவ்வகை இயக்கம் கால ஒழுங்கற்ற இயக்கம்
- அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும் ஆனால் அனைத்து கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கமாக காணப்படாது
- ஒரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும். இதன் அலகு மீட்டர்/ வினாடி
- சராசரி வேகம்(s)= கடந்த தொலைவு(d)/எடுத்துக் கொண்ட காலம்(t)
- ரோபார்ட்- ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையிலிருந்து ரோபார்ட் என்ற வார்த்தையானது உருவாக்கப்பட்டது
- செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளை போன்று சிந்திக்க தக்க வகையில் கணிணி செயல்பாடுகளை உருவாக்கும்
- நானோ ரோபாட்டுகள் அல்லது நானோபோட்ஸ் என்பவை மிகச் சிறிய அளவுடையவை
- உசைன் போல்ட் 100மீட்டர் தூரத்தினை 9.58 வினாடிகள் கடந்து உலக சாதனை படைத்தார்
- தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக 112கி.மி/மணி என்ற வேகத்தில் ஓடும் மிக வேகமான விலங்காகும்
Problem
sum
1.ஒரு பொருளானது
10 மீட்டர் தொலைவினை 2 நொடியில் கடந்தால் அதன் சராசரி வேகம்
சராசரி
வேகம்(s)= கடந்த தொலைவு(d)/எடுத்துக் கொண்ட காலம்(t)
வேகம்(S)=10/2=5மி/வி
2.ஒரு பேருந்து
180 கிலோ மீட்டர் தொலைவினை 3 மணிநேரத்தில் கடந்தால் அதன் வேகம் எவ்வளவு?
வேகம்(S)=180/3= 60 கி.மீ/மணி
3.ஒரு பூனை
150 மீட்டர் தொலைவினை 10 வினாடியில் கடந்தால் அதன் சராசரி வேகம்?
வேகம்(S)=150/10=15மீ/வி
4.பிரியா தனது
மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கி.மீ தூரம் பயணம் செய்தால் அவருடைய சராசரி வேகம்
என்ன?
வேகம்(S)=40/2= 20 கி.மீ/ மணி
5.ஒரு கப்பலானது
மனிக்கு 50 கி.மீ வேகத்தில் 5 மணி நேரம் பயணம் செய்தது எனில் அக்கப்பல் கடந்த மொத்த தொலைவு யாது?
கடந்த தொலைவு(D)=வேகம்(s)*காலம்(t)
D=50 * 5= 250 கி.மீ
6.ஒரு பேருந்தானது
மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணம் செய்து 300 கி.மீ தொலைவினை கடந்தால் அப்பேருந்து
பயணம் செய்ய எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு?
t=d/s
=300/50=6 மணி
7.நீங்கள்
10 கி.மி தொலைவினை இரண்டு மணி நேரத்தில் கடந்தால், உங்களுடைய வேகம் மணிக்கு 5 கி.மீ
8. நீங்கள்
15 கி.மீ தொலைவினை ½ நேரத்தில் கடக்க முடியுமானால் உங்களால் ஒரு மணி நேரத்தில் 30கி.மீ
தொலைவினை கடக்க முடியும் அப்போது உங்களின் வேகம் மணிக்கு 30கி.மீ ஆக இருக்கும்
9. நீங்கள் மணிக்கு
20 கி.மீ வேகத்தில் 2 மணி நேரம் வேகமாக ஒடினால் நீங்கள் கடந்த தொலைவு 40 கி.மீ
ஆகும்
சரியான விடையை
தேர்ந்தெடு
- வேகத்தின் அலகு மீ/வி
- கீழ்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்? அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
- கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு வேகம்=தொலைவு/காலம்
கீதா தன்
தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டிலிருந்து 40.கி.மீ தொலைவிலுள்ள
மாமா வீட்டிற்கு செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்
கூற்று1
:கீதாவின் வேகம் 1 கி.மீ/நிமிடம்
கூற்று
2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி
கூற்று
1 மட்டும் சரி
சரியா? தவறா?
- மையபுள்ளியை பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும் (சரி)
- அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும் (தவறு)
- மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும் (தவறு)
- வருங்காலத்தில் மனிதர்களின் பதிலாக ரோபாட்டுகள் செயல்படும்(தவறு)
கோடிட்ட இடங்களை
நிரப்புக
- சாலையில் நேராக செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் நேர்க்கோட்டு இயக்கம்
- புவி ஈர்ப்பு விசை தொடா விசையாகும்
- மண்பாண்டம்
செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் சுழற்சி இயக்கமாகும்
- ஒரு பொருள்
சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால் அப்பொருளின் இயக்கம் கால
ஒழுங்கு இயக்கம்
தொடர்பின்
அடிப்படையில் நிரப்புக
- பந்தை உதைத்தல்:தொடு விசை::இலை கீழே விழுதல்: தொடா விசை
- தொலைவு : மீட்டர்:: வேகம்: மீட்டர்/வினாடி
- சுழற்சி இயக்கம்: பம்பரம் சுற்றுதல்::அலைவு இயக்கம்:கயிறு அதிர்வுறுதல்
ஒரு வார்த்தையில்
விடையை எழுதுக
- தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் தொடா விசை
- காலத்தை பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது இயக்கம்
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்ப திரும்ப நிகழும் அலைவு இயக்கம் எனப்படும்
- சம கால இடைவெளியில் சம தொலைவை கடக்கும் பொருளின் கால ஒழுங்கு இயக்கம்
- நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளை செய்யுமாறு கணிணி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ரோபார்ட்
No comments:
Post a Comment