காந்தவியல் (6 th term 3)
- காந்தம் மேக்னஸ் என்ற சிறுவன் கண்டறிந்ததால் மேக்னட் அல்லது மேக்னடைட் எனப்படுகிறது
- இது கண்டறியப்பட்ட மெக்னீசியா என்ற ஊரினாலும் வந்திருக்கலாம் என்று கூறுவர்
- காந்த தன்மையுடைய தாது மேக்னடைட்(இயற்கை காந்தம்) எனப்படும். இவை திசைகளை அறிய பயன்படுவதால் வழிகாட்டும் கற்கள் எனப்படும்
- இரும்பினால் செய்யப்பட்ட காந்தம் செயற்கை காந்தம் (சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம், காந்த ஊசி),நீளகோள வடிவம், வட்ட வடிவம், உருளை வடிவம்
- காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பொருள்கள் காந்ததன்மையுள்ள பொருள்கள் எனப்படுகின்றன(இரும்பு, கோபால்ட், நிக்கல்)
- காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் காந்த தன்மையற்ற பொருள்கள் எனப்படும்(காகிதம், நெகிழி)
- காந்தத்தின் ஈர்ப்புவிசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது. இந்த இரு முனைகளையும் காந்தத்தின் துருவங்கள் என அழைக்கிறோம்
- தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் வடக்கு- தெற்கு திசையிலேயே ஒய்வு நிலைக்கு வரும்
- சீனர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பே காந்த கற்களை பயன்படுத்தி திசையை கண்டுபிடித்தனர்
- காந்த திசைகாட்டும் கருவி என்பது திசையறிய உதவும் ஒரு காந்த ஊசிப்பெட்டி ஆகும்
- காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் (S-N,N-S) ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்த துருவங்கள் (N-N, S-S) ஒன்றையொன்று விலக்குகின்றன
- வெப்பப்படுத்தும் போது உயரத்திலிருந்து கீழே போடும்பொழுது, சுத்தியால் தட்டும் பொழுது(கைபேசி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிக்கு அருகில் காந்தங்கள் வைத்தால்) காந்தங்கள் அதன் காந்த தன்மையை இழந்துவிடும்
- மின்காந்த தொடர் வண்டி(maglev train-magnetic levitation train)
- காந்த ஈர்ப்பு விசையும் , விலக்கு விசையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி தொடர்வண்டி முன் செலுத்தப்படுகிறது. மின்சாரத்தினால் இது கட்டுபடுத்தப்படுகிறது
- சிறப்பு-உராய்வு இல்லை, உயர் வேகம், இரைச்சல் இல்லை
- சீனா , ஜப்பான தென் கொரியா இதை பயன்படுத்துகின்றன
- இந்தியாவில்- மும்பை- டெல்லி, மும்பை-நாக்பூர், சென்னை- பெங்களுரு- மைசூரு போன்ற வழித்தடங்கள் மின்காந்த தொடர்வண்டிகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசிலிக்கப்பட்டு வருகின்றன
Book back
1. பொருத்த்மான
விடையளி
- காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் ஊசி
- மாலுமி திசைக்காட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் சீனர்கள்
- தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே வடக்கு- தெற்கு திசையில் தான் நிற்கும்
- காந்தங்கள் தன் காந்ததன்மையை இழக்க காரணம் சுத்தியால் தட்டுவதால்
- காந்த ஊசிபெட்டியை பயன்படுத்தி திசையை அறிந்து கொள்ள முடியும்
2. கோடிட்ட இடங்களை
நிரப்புக
- செயற்கை காந்தங்கள் சட்டம்,லாடம்,வளையம் ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன
- காந்தத்தால் ஈர்க்க்ப்படும் பொருள்கள் காந்தத்தன்மை உடைய பொருள்கள் எனப்படுகின்றன
- காகிதம் காந்தப் பொருளல்ல
- பழங்கால மாலுமிகள், திசையை கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய காந்தகற்களைக் கட்டித் தொங்க விட்டிருந்தனர்
- ஒரு காந்தத்திற்க்கு எப்பொழுதும் இரண்டு துருவங்கள் இருக்கும்
3. சரியா? தவறா?
- உருளை வடிவ காந்த்த்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு (தவறு)
- காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும் (சரி)
- காந்தத்தின் இரும்புதூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக் கொள்கின்றன (தவறு)
- காந்த ஊசியினை பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை அறிந்து கொள்ளமுடியும் (சரி)
- இரப்பர் ஒரு காந்த பொருள் (அல்ல)(சரி)
4. பொருத்துக
- காந்த திசைக்காட்டி- காந்த ஊசி
- ஈர்ப்பு- எதிரெதிர் துருவங்கள்
- விலக்குதல்- ஒத்த துருவங்கள்
- காந்த துருவங்கள்- அதிக காந்த வலிமை
5. பொருத்தமில்லாததை
வட்டமிட்டு காரணம் கூறுக
- இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர் குழாய், ஊசி
- மின் தூக்கி, தானியங்கி படிக்கட்டு, மின்காந்த இரயில் , மின்பல்பு
- கவர்தல், விலக்குதல், திசைக்காட்டுதல், ஒளியூட்டுதல்
6. பின்வரும்
படங்களில் இரு சட்டக்காந்தங்கள் அருகருகே காட்டப்பட்டுள்ளன. பின்வரும் வார்த்தைகளை
பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் என்ன நிகழும் என கூறு
(ஈர்க்கும்,
விலக்கும், திரும்ப ஒட்டிக் கொள்ளும்)
A. எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்
B. ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்
C. எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்
D. ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ள சட்டக் காந்தம் திரும்பி ஒட்டிக் கொள்ளும்
E. ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்
F. ஒன்ருக்கொன்று செங்குத்தாக உள்ள சட்டக்காந்தம் திரும்பி ஒட்டிக் கொள்ளும்
7. உயர்சிந்தனை
வினாக்களுக்கு விடையளி
உன்னிடம்
துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புதூளும் தரப்படுகிறது இதனைக்
கொண்டு
அ. காந்தத்தின்
துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
காந்தத்தினை
ஒரு நூலில் கட்டி தொங்க விடவும் . காந்தம் ஓய்வு நிலைக்கு வந்தவுடன் வடக்கு தெற்கு
துருவங்களை குறிக்கவும்
ஆ.காந்தத்தின்
எந்த பகுதியில் அதிக அளவு இரும்பு தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன? ஏன்?
துருவப் பகுதியில்
அதிக அளவில் ஒட்டிக் கொள்கின்றன.ட்துருவப் பகுதி அதிக அளவு வலிமையுடன் காணப்படுவதால்
8. படம் அ மற்றும்
ஆ ஆகியவை இரு சட்டக்காந்தங்களை குறிக்கின்றன
அவை ஒன்றையொன்று
ஈர்க்கின்றன. எனில், சட்டகாந்தம் ‘ஆ’ வின் துருவங்களை கண்டறிந்து குறிக்கவும்
படம் –’அ’
வில் தெற்கு மற்றும் வட துருவங்கள் உள்ளன. படம் – ‘ஆ’ விற்கு அருகில் உள்ள முனை படம்-’ஆ’
வின் தென் துருவம். அடுத்து காணப்படுவது வட துருவம். ஏனெனில் எதிர் எதிர் துருவங்கள்
ஈர்க்கும் தன்மையுடையது
9. ஒரு கண்ணாடி
குவளை|முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள்
கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு நீங்கள் என்ன
செய்வீர்கள்?
ஒரு சட்ட
காந்தத்தை எடுத்து நூலில் கட்டி கொள்ளவும். பின்பு நீர் உள்ள குவளையில் காந்தத்தினை
போடவும். குண்டூசி காந்த்ததில் ஒட்டி கொள்ளும். பின்பு குண்டூசியினை காந்தத்தில் இருந்து
பிரித்து எடுக்கவும்


No comments:
Post a Comment